Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கையில் தமிழர்கள் - பலியாக்கப்பட்ட ஒரு மக்கள்...! பிரான்சு பத்திரிகை
Page 1 of 1

26 05 2013
பிரான்சில் வெளியாகும் LE CERCLE Les Echos என்ற இதழில் Gilles Djeyaramane என்பவர் எழுதிய கட்டுரையில் இருந்து...
இலங்கையில் 30 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த கோரமான யுத்தத்தின் பின்னர்,
2009ம் ஆண்டில் தமிழ்ப் போராளிகள் இராணுவ ரீதியாகத்
தோற்கடிக்கப்பட்டார்கள்.
மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான பல சர்வதேச அமைப்புக்கள் இந்த யுத்தத்தின்
இறுதி மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிறீலங்கா அரச
படைகளால் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
இந்த இரத்தம் தோய்ந்த
கோர யுத்தம் கூட சிறீலங்காவில் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறையை
துரதிஷ்டவசமாக முடிவிற்குக் கொண்டு வரவில்லை. ஆனால் தமிழ்ப் போராளிகள்
மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.
செவிட்டுத்தனமான அமைதியை
சர்வதேசம் கடைப்பிடித்தபோது, லு மொந்த் (Le Monde) பத்திரிகையில்
‘உள்நாட்டுப்போரில் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் கொடூர நிலைகளுக்கு
முன்னால் கூட சர்வதேசத்தால் சமமாகப் பார்க்கப்படுவதில்லை’ என்று
குறிப்பிட்டிருந்தது. இதையே சர்வதேசத்தின் மௌனம் எமக்குக் காட்டி நின்றது.
2013ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் வடக்குக் கிழக்கிலிருந்து 130
கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மதகுருக்கள் ஐ.நா. சபையை நோக்கி
‘தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு விடுவதற்குள் நடவடிக்கை எடுங்கள்’ என ஒரு
கோரிக்கையை எழுப்பினார்கள்.
இலங்கையின் நிலைமை
இலங்கையின் இனப்பிரச்சினை மிக ஆழமான வரலாற்றை உடையது. முன்னைய பிரெஞ்சுப்
பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்த, வரலாற்றியலில் கலாநிதிப் பட்டம்
பெற்றவரும் பிரெஞ்சு மொழி ஆசிரியருமான ஜோன் மரி ஜுலியா அவர்கள் 2000ம்
ஆண்டில் எழுதிய தனது சிறீலங்காவில் தமிழினப் படுகொலை (‘Le génocide des
Tamouls à Sri Lanka’) என்ற புத்தகத்தில் ‘வடக்குக் கிழக்குப் பகுதிகள்
தமிழர்களின் கல்லறை பூமிகளாவதாக’ மிகவும் உருக்கமாகவும் விளக்கமாகவும்
எழுதியிருந்தார்.
பல்லாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழினம் தம்மைக்
காத்துக்கொள்ள இறுதியில் ஆயுதம் ஏந்தியது. அது ஒரு கொடூர உள்நாட்டு
யுத்தமாக மாறியது. பல தசாப்த மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள்
சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். இது இந்த யுத்தத்தின்
அடிப்படையை அப்படியே மாற்றிப்போடத் தொடங்கியது.
வான்படை,
நீர்மூழ்கிப்படைகள் கொண்டதாக அறியப்படும் விடுதலைப் புலிகள் உலகத்திலேயே
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். உலகிலேயே
மிகவும் நல்லொழுக்கம் கொண்ட அமைப்பாகும்.
ஆனாலும் இந்த மிகவும்
ஒழுக்கம் வாய்ந்த அமைப்பு சர்வதேச அரசுகளின் உதவியுடன்
தோற்கடிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு இவர்கள் பற்றி மிகவும் மோசமான
தப்பபிப்பிராயத்தை சிறீலங்கா ஏற்படுத்தியது. கடாஃபியின் நண்பர்கள் என்றும்
சோமாலியாக் கடற்கொள்ளைக்காரர்களின் கூட்டு என்றும் காட்டப்பட்டது.
ஒரு மக்கள் சமூகம் சர்வதேச சமூகத்தினால் கைவிடப்பட்டது.
தமிழர்களுக்கெதிரான யுத்தம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னால், கடந்த
நவம்பர் 2012 இல், ‘2009 இல் படுகொலையின் போது மக்களைக் காக்கும் தகைமை
தங்களிடம் இருந்திருக்கவில்லை’ என முதன்முறையாக ஐ.நா. தமது மனச்சாட்சியை
வெளிப்படுத்தி உள்ளது. ‘யுத்தத்தின் ஆரம்ப எச்சரிகைகளிற்குப் பதில் அளிக்க
முடியாத, பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளைத் தடுக்க முடியாத ஐ.நாவின்
பாரிய தோல்வி, மற்றும் சிக்கலான முறைமைகளில் செயற்பாடின்மையால்
படுகொலைகளைத் தடுக்க முடியாத தகுதி இன்மை’ போன்றவற்றை ஆராய ஓர் ஆணையத்தைப்
பான் கீ மூன் ஏற்படுத்தி உள்ளார்.
சிறீலங்காவின் இறுதித்
தமிழினப் படுகொலையின் போது ஐ.நா அதிகாரிகள் பலர் இனப்படுகொலைகளைத் தடுப்பது
தங்களது வேலையல்ல என்ற மனப்பாங்கிலேயே இருந்ததை அதிகாரபூர்வ அறிக்கைகளை
ஆதாரம் காட்டி ‘லு மொந்த்’ பத்திரிகை வெளியிட்டிருந்தது.
இறுதிக்கட்ட தமிழினப் படுகொலை நடந்தவேளை ஐ.நா சிறீலங்கா அரசாங்கத்தின்
பொறுப்புகளையோ அவர்களின் படுகொலைகளையோ முற்றிலுமாக மறைத்துக் கொண்டு
தீவிரமான குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீது மட்டுமே சுமத்திய வண்ணம்
இருந்தனர். நாம் தொடர்பு கொண்டு பேசிய ஐ.நா அதிகாரி, தாம் சிறீலங்காவில்
செயற்பட அனுமதிப்பதற்காக சிறீலங்காவின் படுகொலைகளைப் பற்றி எதுவும்
சொல்லாது இருந்ததாகக் கூறினார்.
ஆனாலும் ஐ.நாவிற்கு என்றைக்குமே
யுத்தப் பகுதிக்குள்ளோ அல்லது மக்கள் பாதிக்கப்பட்ட பிரச்சனைப்
பகுதிக்குள்ளோ செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது சர்வதேச சமூகத்திற்கு ஒரு
பாரிய தோல்வி!.
இந்திய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஊடாக
2009ம் ஆண்டில் நடந்த சிறீலங்காவின் போர்க் குற்றங்களை விசாரிக்க
ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த விசாரணைகளிற்கான ஆரம்பம் 21ம்
நு£ற்றாண்டின் வரலாற்று மாற்றமாக மனிதத்திற்கெதிரான குற்றவாளிகளும்
போர்க்குற்றவாளிகளும் தண்டிக்கபடக் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்கும் எனத்
தெரிகின்றது.
இந்த நடைமுறை இடைவிடாது தொடரப்பட்டு நீதி பெறப்படல்
வேண்டும். பொது மக்களுக்கெதிரான அண்மைக்காலப் படுகொலைகளும் அராஜகங்களும்
விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படல்
வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மிக மிக அவசரமாக இலங்கையில் உள்ள தமிழ்
மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
நன்றி

Similar topics
» இலங்கையில் இசை நிகழ்ச்சி ரத்து: வைகோவுக்கு தமிழர்கள் நன்றி...
» இலங்கையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்: தமிழர்கள் கொந்தளிப்பு ...
» 11/01/2010(நாளை-திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????
» இலங்கையில் 15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் மாயம்: செஞ்சிலுவைச் சங்கம்
» இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum