TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...! மகன் ஐஏஎஸ் அதிகாரி..!

Go down

தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...!  மகன் ஐஏஎஸ் அதிகாரி..! Empty தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...! மகன் ஐஏஎஸ் அதிகாரி..!

Post by Tamil Sat May 25, 2013 9:46 pm

தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...!

மகன் ஐஏஎஸ் அதிகாரி..!

வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது..!

தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...!  மகன் ஐஏஎஸ் அதிகாரி..! 292929_537093289683008_956763648_n
படிப்பறிவும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நாராயண், வாரணாசியில்
சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர். இவருக்கு மூன்று பிள்ளைகள். சாப்பாட்டுக்கே
சிரமமான நிலைமை. இந்த வறுமையான சூழ்நிலையிலும் தன் மகன் கோவிந்த்
ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார். இன்று கோவிந்த் உதவி ஆட்சியர்.

தான் படிக்காவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த நாராயண், தன்
சிரமமான பொருளாதார நிலைமையிலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க
வைத்துள்ளார். அதில் இளைய மகனான கோவிந்த் ஜெய்ஸ்வால்தான் இப்போது ஐஏஎஸ்
அதிகாரி.

நெருக்கடி மிகுந்த வாரணாசி பகுதியில் 12 x 8 என்ற
அளவுகொண்ட ஒரு சிறிய அறைதான் கோவிந்தின் வாடகை வீடு. அந்தச் சிறிய
அறையில்தான் கோவிந்தின் படிப்பு, வீட்டின் சமையல், துணிகளைத் துவைத்தல்
மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரின் இரவு நேர உறக்கமும். வறுமை ஒருபுறம்
வளர்ந்து கொண்டிருக்க, கூடவே கோவிந்தின் ஐஏஎஸ் கனவும் வளர்ந்திருக்கிறது.
வீட்டைச் சுற்றியுள்ள மின்தறி சத்தங்கள், தொழிற்சாலைகளின் புகை, பதினான்கு
மணி நேரம் மின்வெட்டு எனப் பல்வேறு பிரச்சினைகள் அவரது கனவுக்கு
முட்டுக்கட்டை போட்டாலும் அவற்றை வென்று, கனவைக் கைப்பற்றியிருக்கிறார்
கோவிந்த்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல வீதியில்
விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை என எதுவும் இல்லாமல் படிப்பதில் மட்டுமே
கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதனால், மற்ற மாணவர்கள் கோவிந்தை
கூச்ச சுபாவம் மிக்க மாணவராவே கருதினர். ஆனால், உண்மையில் கோவிந்த் தனது
லட்சியத்துக்காக தனது சிறு வயது பால்ய சந்தோஷங்களை தியாகம் செய்துள்ளார்
என்பதே உண்மை.

கணக்குப் பாடத்தில் வல்லவரான கோவிந்த், எட்டாம்
வகுப்பு படிக்கும்போதே மற்ற ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும்
மாலை வேளையில் டியூஷன் சொல்லிக் கொடுத்து அதில்வரும் வருமானத்தில் தன்
அக்காக்களுக்கும், குடும்பத்திற்கும் உதவிகரமாக இருந்துள்ளார். பள்ளியில்
அவர்தான் முதல் மாணவர். பின்பு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது
கல்லூரிப் படிப்பினை முடித்து, ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக்
கொண்டிருந்தார். மேலும், தனது ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்குச்
செல்ல திட்டமிட்டிருந்தார் கோவிந்த். அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக
கோவிந்தின் தந்தைக்கு காலில் அடிபட்டு படுக்கையில் முடங்கினார். ஒரு பக்கம்
தன் கனவு, இன்னொரு பக்கம் தந்தையின் உடல் நிலை என இறுக்கமான சூழ்நிலையில்
இருந்த கோவிந்திற்கு அவரது தந்தை நாராயண் நம்பிக்கை அளித்து, டெல்லிக்குச்
சென்று படிக்க, மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தினை 30,000
ரூபாய்க்கு விற்று, கோவிந்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி கடுமையாகப் படித்த கோவிந்த், 2006ம்
ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் இரண்டு வருட ஐஏஎஸ்
பயிற்சியில் தனக்குக் கிடைத்த உதவித்தொகையை அடிபட்ட தந்தையின் மருத்துவச்
செலவிற்காக அனுப்பியுள்ளார் கோவிந்த்.

வெற்றிபெற்ற அனுபவத்தை
கோவிந்த் கூறும்போது, "சிறு வயதில் பகல் நேரத்தில் தொழிற்சாலைகளின்
சத்தத்தில் நான் கணக்குப் பாடங்களின் சூத்திரங்களை மட்டுமே போட்டுப்
பார்ப்பேன். ஏனென்றால், அந்தச் சத்தத்தில் மற்ற பாடங்கள் சரியான முறையில்
மனதில் ஏறாது. சத்தங்கள் மாலை நேரங்களில் குறைந்ததும் மற்ற பாடங்களைப்
படிப்பேன். அப்துல் கலாம் தான் என்னுடைய ஹீரோ. என்னுடைய ஐஏஎஸ் கனவு நிஜமாக
என்னுடன் இருந்து நம்பிக்கையூட்டியது அவர் எழுதிய, ‘அக்னி சிறகுகள்’
புத்தகம். மேலும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்த
சகோதரிகளுக்கும், என் கனவின் மேல் நம்பிக்கை வைத்து என்னை டெல்லிக்கு
அனுப்பி வைத்த என் தந்தைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
என்னுடைய சிறுவயது நாட்கள் கஷ்டமானவையாக இல்லாமல் போயிருந்தால் நான் ஐஏஎஸ்
ஆகியிருக்க வாய்ப்பில்லை. அந்த வறுமையும் கஷ்டங்களும்தான் என்
வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமானது" என்கிறார்
கோவிந்த்.

ஐஏஎஸ் பிரதானத் தேர்வில் கணக்கினைத் தவிர்த்து விட்டு
தத்துவம், வரலாற்றுப் பாடங்களைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்து
எழுதியிருக்கிறார் கோவிந்த். "உலகில் எல்லாப் பாடங்களும் எளிதில் படிக்கக்
கூடியவைதான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக கற்றுக் கொள்கிறோம்
என்பதே முக்கியம்" என்கிறார். ஐஏஎஸ் தேர்வில் அனைத்துப் பாடங்களையும்
தாய்மொழி ஹிந்தியிலேயே எழுதியிருக்கிறார் இவர். "தாய்மொழியில் தேர்வு
எழுதுவது பிரச்சினை கிடையாது. நாம் கற்றதை தெளிவான முறையில் எப்படித்
தேர்வில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இத்துடன் தளராத
நம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையையும் உங்களால் வெல்ல முடியும்" என்று
சொல்லும் கோவிந்த் ஜெய்ஸ்வால், இப்போது நாகாலாந்து மாநிலத்திலுள்ள
சூன்ஹிபோடோ (zunheboto) என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிகிறார்.

- என். ஹரிபிரசாத்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா மருமகன் நில மோசடியில் ஈடுபட்டது உண்மையே! - ஐஏஎஸ் அதிகாரி அறிக்கையால் பரபரப்பு.
» 19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி : சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை !
» குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை கொலை; மகன் கைது
» நீதி கிடைக்கும் வரை மகன் உடலை வாங்க மாட்டேன்: இளவரசன் தந்தை உறுதி
» டோனியும், ஹர்பஜனும் என் மகன் வாழ்க்கையை ஒழிக்க முயல்கின்றனர்: ஸ்ரீசாந்த் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum