TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள்

Go down

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் Empty விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள்

Post by Tamil Fri Apr 02, 2010 6:47 pm

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா?
விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று
வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன்
நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள்
இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

யாழ்ப்பாணம், ஏப்ரல் 02
விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று
வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன்
நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள்
இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில்
பொதுமக்கள் முன் னிலையில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு
குறிப்பிட்டார்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்
கூட்டம் நேற்று முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சமூக சேவைகள்
மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் 12
வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இந்தக் கூட்டத்தில் இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.
முதலில் சில வரிகளை சிங்களத்தில் பேசிய அவர் பின்னர் தமது உரையைத் தமிழில்
தொடர்ந்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
30 ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு உரிமையைப்
பெற்றுத் தருவதே எனது குறிக்கோள். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு
நீரைக் கொண்டு வருவதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்மூலம் இங்குள்ள மக்களின் விவசாய, குடிதண்ணீர் பிரச்சினைகளுக்குத்
தீர்வு எட்டப்படும். யாழ்ப்பாண மக்கள் தேர்தலில் சுதந்திரமாக
வாக்களிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. வடக்கு,
கிழக்கு, தெற்கு எல்லாம் எனக்கு ஒன்றுதான். நான் எல்லா மக்களையும்
ஒன்றாகவே நோக்குகின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எனக்கு
வழங்கிய ஆதரவுக்கு நன்றி.
குறுகிய அரசியல் பேதம் வேண்டாம்
30 வருட பயங்கரவாதம் இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது
எவரும் பயப்படத் தேவையில்லை. கடற்றொழில், விவசாயம் போன்றவற்றில்
முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்போது அனைத்து மக்களும் எங்கும்
போகலாம். வரலாம். நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம் என்ற இன
வேறுபாடு இப்போது இல்லை. குறுகிய அரசியல் பேதங்கள் இனிமேல் வேண்டாம்.
மக்களாகிய உங்களின் தேவைகளை மக்கள் சபை மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
பல வருடங்களாக இல்லாத அபிவிருத்தி இப்போது இடம்பெறுகின்றது. கல்வி,
சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் அதிகரித்து வருகின்றன.இன்று(நேற்று)
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் உள்ள விடுதலைப் புலி
உறுப்பினர்களில் 164 பேர் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் தமது
பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். வெகு விரைவில் ஏனையவர்களும் விடுதலை
செய்யப்படுவார்கள். அத்துடன் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து 148
பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு
அனுமதிக்கப்படுகின்றார்கள். புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இளைஞர்களின்
கணனிப்பயிற்சிக்காக வவுனியா, பம்பைமடுவில் ஒரு பயிற்சி நிலையம்
அமைக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகம் விரைவில் முழுமைபெறவுள்ளது.
அங்கு விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச ரீதியில்
தமிழ் பிள்ளைகள் நல்ல பெயர் பெற வேண்டும். யாழ்தேவி மீண்டும் வரும். ஏ 9
வீதியால் எவரும் போகலாம், வரலாம். ஆசியாவிலேயே சிறந்த நூலகம் யாழ்.
பொதுநூலகம். அதனை ஐக்கிய தேசியக் கட்சி எரித்தது. அது எதிர்காலச்
சந்ததிக்குச் செய்த பெரிய பாவம். அநியாயம். எனவே மக்களாகிய நீங்கள்
எம்மோடு இணையுங்கள். இனவாத அரசியல் வேண்டாம். குறுகிய எண்ணங்கள் வேண்டாம்.
ஆசியாவின் கேந்திர நிலையமாக எமது நாட்டை மாற்றுவோம் என்றார்.
இந்த நிகழ்வின்போது, மீளக் குடியமர்ந்த மக்களுக்கு இலங்கை இராணுவத்தால்
அமைக்கப்பட்ட வீடுகளின் திறப்புகளையும் ஜனாதிபதி வீட்டு உரிமையாளர்களிடம்
வழங்கினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமதுரையில் தெரிவித்தவை வருமாறு:
இணக்க அரசியலின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு
இணைந்து செயற்பட ஏனைய தமிழ்த் தலைவர்கள் தயாராக இருந்தால், அவர்களுடன்
இணைந்து செயற்பட நானும் தயாராக உள்ளேன். எனினும் ஏனைய தமிழ்த் தலைமைகள்
தமது சுய இலாபங்களுக்காக அவ்வாறு செயற்பட முன்வரமாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் விரைவில் மூன்று ஆடைத் தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 5
ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு
ஜனாதிபதி இங்கு வந்துள்ள முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை
விடுத்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்
சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்குத் தயார் என்றும்
தெரிவித்துள்ளார் என்றார்.
முன்னதாக நேற்றுக்காலை 10.45 மணியளவில் பலாலி படைத்தளத்தில் இருந்து ஹெலி
மூலம் யாழ். கல்வி வளாகத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் வந்திறங்கிய
ஜனாதிபதி அங்கிருந்து நல்லூர் ஆலயத்துக்குச் சென்று விசேட பூசை
வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன் பின்னர் யாழ்.நாகவிகாரைக்குச் சென்று
அவர் வழிபட்டார். பின்பு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற
கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் வவுனியாவுக்குப் புறப்பட்டுச்
சென்றார்.(அ50)

நன்றி - உதயன் இணையம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்ச சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை
» விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்கள் !
» விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்?
»  விடுதலைப் புலிகள் எப்படி சர்வதேச உதவிகள் இல்லாமல்.... தங்கள் வளங்களை வைத்து விமானப் படையை உருவாக்கினார்கள் என்பதைப் பாருங்கள்..! இதில் இருந்து உருவாகியதுதான் விடுதலைப் புலிகளின் வான்படை..!
» புலிகள் செய்த கொடுமைகளை சிலர் மறந்துவிட்டனர்: இலங்கை அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum