TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மூலச் சூரணம்

2 posters

Go down

மூலச் சூரணம் Empty மூலச் சூரணம்

Post by msv6000 Wed May 22, 2013 3:45 pm

மூலச் சூரணம்

மூலம்  மற்றும் பவுத்திரம் உள்ள நோயாளர்கள் பலர் இப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன்  .  ” உலகத்தில் உள்ள வியாதிகளில் கொடும் வியாதி இது .உட்கார முடிவதில்லை.படுக்க முடிவதில்லை.தூங்க முடியவில்லை .சாப்பிட முடியவில்லை.சாப்பிட்டால் மலம் கழிக்க வேண்டுமே.மலம் கழிக்க வேண்டிய நேரத்தை நினைத்தால் சாப்பிடவே முடியவில்லை.மலம் கழிக்கும் நேரம் அவ்வளவு நரகம் போல இருக்கிறது.”
உண்மைதான்.ஆனால் இந்த வியாதியை சஸ்திர சிகிச்சையினால் (ஆப்பரேஷன் ) சிகிச்சை செய்துவிடலாம் என்று எண்ணினால் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்து வந்து கொண்டே இருக்கும். ஒரு இடம் மீண்டும் ,மீண்டும் உறுத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் கடைசியில் புற்று நோய் ஆக மாறிவிடும்.ஆனால் இந்த வியாதியை சஸ்திர சிகிச்சையின்றி (ஆப்பரேஷன் ) மிக எளிதாக சமாளித்து குணமாக்கலாம்.
முதலில் உடனே மல வாய் எரிச்சலில் இருந்தும் மலச் சிக்கலில் இருந்தும், மலம் கழியும் போது இரத்தம் கழிதலிலும் இருந்து  விடுபட அகிம்சை இனிமா மிகச் சிறந்தது.
முதலில் மூலம் எதனால் உண்டாகிறதென்றால்,மூலாக்கினி கிளர்ந்து எழுவதால் உண்டாகிறது.நாம் மலவாயில் மூன்று மொட்டுக்கள் உள்ளன.அவற்றில் அடைப்பு ஏற்பட்டாலோ கிருமித் தொற்று ஏற்பட்டாலோ உடனே இந்தத் தொல்லை ஏற்பட ஆரமிபிக்கிறது. மூலாக்கினி அபானனை சூடாக்கி மலத்துடன் இணையும்போது மலம் இறுகி வெளியேறும் போது, இறுகிய  மலம் கத்தி போல மல வாயை அறுக்கும் போது இரத்தப் போக்கு ஆரம்பிக்கிறது.பவுத்திரமும் இதே போன்றதுதான் .ஆனால் பவுத்திரம் இதை விட கொடியது.இதில் கொடி பவுத்திரம் என்பது பூமியில் நரகமே.மல வாயிலும்,மல வாயைச் சுற்றிலும் பல ஓட்டைகள் விழுந்து , எல்லா ஓட்டைகளிலும் இருந்து சீழ் ஒழுகும்.
எல்லாவற்றிற்கும் மிக எளிதான தீர்வு இருக்கிறது.கிருமிக் கூட்டமே மூலம்,பவுத்திரத்திற்குக் காரணம்.உடலில்  மிக அதிகமாக பெருகிய கிருமிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் இவை குணமாய்விடும். அதற்கு கீழ்க்கண்ட முறைகளைக் கையாண்டால் நலம் உறுதியாக கிடைக்கும்.
மேலும் இந்த மூலத்தை இப்படியே விட்டுவிட்டால் , சூடாகி விரிந்து பெருக்கும் அபான வாயு மேலேறி,தமரக வாயுவாக மாறினால் , இதயத்  தாக்காக மாறி உயிருக்கு உலை வைத்துவிடும்.எனவே இதில் மிக  கவனம் அவசியம்.மூல ரோகம் தானே என்ற அலட்சியம் வேண்டாம். மலமிருக்க முக்கி இருக்க அவசியம் நேராமல் , மலம்  வெகு எளிதாகக் கழிய வேண்டும்.மலத்தை “முக்கி இருந்தக்கால் முழுவதும் போச்சப்பா” என்பார்கள் .
மலம் தண்ணீரில் மிதக்கும் தன்மையில் இருக்க வேண்டும்.கட்டியாக இருக்கக் கூடாது.மிக மெதுவானதாக இருக்க வேண்டும் .காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் சக்தி நாளம் இயங்கும் நேரம்.இந்த நேரத்திற்குள் மலம் மிக எளிதாக கழிந்துவிட வேண்டும்.மல இறுக்கம் சரியாக ’’இத்ரிபல் ஜமானி’’ என்ற யூனானி மருந்து மிக நன்றாக வேலை செய்யும்.இது வேறொன்றுமல்ல நம்ம கடுக்காய் லேகியம்தான்.இதில் ஐந்து  நாட்டு  வகை கடுக்காய்கள் சேர்ந்து இருப்பதால்தான் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.
ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்பதை அவன் எனக்கு கடுக்காய் கொடுத்துவிட்டான் என்பார்கள்.வேறொன்றுமல்ல கடுக்காய் சாப்பிட்டால் மல இளக்கம் வருமல்லவா, அதைத்தான் இப்படி பேதிக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.
இந்தக் கட்டுரைக்குள் போகும் முன்னர் கீழ்க் கண்டவற்றையும் படித்துவிடுங்கள். மூலம்,பவுத்திரம் குணமாக்கல் பற்றி கேட்ட கேள்விக்கு நாம் கொடுத்த பதில் இது .
விந்து என்பது மிக முக்கியமானது. இறைக்க , இறைக்க ஊறுவதற்கு அது கிணறல்ல!!!!விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது வைத்திய மொழி. விந்தை அதிகமாக வீணாக்க வீணாக்க, மூலாக்கினி கிளர்ந்து எழுந்து மூலச்சூட்டை உண்டாக்கி , மூலத்தையும் ,பவுத்திரத்தையும் உண்டாக்கும்.சப்த தாதுக்களும் சூடாகி நாசமடையும்.எனவே சுய இன்பம் செய்வது நல்லதல்ல.அது நம் உடலில் உள்ள டு மற்றும் ரென் (DU AND REN MERIDIAN, GOVERNING VESSELS)சிறப்பு ஆளுமைச் சக்திப் பாதைகள் குறுக்குச் சுற்றில்(SHORT CIRCUIT) இணைக்கப்படுவது போல ஆவதால் குறுக்குச் சுற்றில் இணைக்கப்பட்ட பேட்டரி (BATTERY) போல விரைவில் சக்தி இழந்து போவீர்கள். மேலும் மூலச்சூடு அதிகரிப்பதால் கண் பார்வைக் குறைவு ,கை ,கால் மூட்டுக்களில் பசையின்றிப் போய் வெட்டைச் சூடால் உடல் முழுதும் உள்ள தண்ணீர் சக்தி குன்றிப் போய்விடும் . விளைவு வெட்டை முற்றினால் கட்டை.உடல் கட்டை போலாகி மடக்க நீட்ட முடியாமல் துயருறும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
தீய பழக்க வழக்கங்கள் என்றும் துன்பத்தைத்தான் தரும். முதலில் இன்பம் தருவது போலத் தோன்றினலும் பின்னால் துன்பத்தைத்தான் தரும். இருபத்தோரு நாட்களுக்கு மேற்பட்ட விந்து நோய் செய்யும்.அதனால் இருபது நாட்களுக்கு ஒரு முறை இன்பம் அனுபவிப்பதில் தவறில்லை என்றாலும் சுய இன்பத்தின் போது நமது சக்தி ஓட்டப் பாதைகளில் உள்ள சக்தி உடலுறவின் போது செலவாகும் சக்தியைவிட அதிகமாக விரயம் ஆகி விரைவில் உடலில் உள்ள உயிரோட்டம் என்னும் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகி வியாதிகளுக்கு அதிகமான இடம் கொடுத்துவிடும்.இதனால் (சுய இன்பம் பல நாள் செய்துவிட்டு )சுய இன்பம் செய்யாதிருப்பவர்களுக்கு அது தூக்கத்தில் சிலருக்கு சொப்பன ஸ்கலிதம் , என்ற கனவில் விந்து வெளிப்படுதல் என்ற செயல்பாட்டில் வெட்டைச் சூட்டினால் வெளியேறிவிடும்.இறை வழிபாடு , தியானம் , யோகா போன்ற நல்ல பழக்க வழக்கம் உள்ள பிரம்மச்சாரிகளுக்கு விந்துவை திருப்பி அழித்து மறு சுழற்சிக்கு உடலே அனுப்பிவிடும்.
மூலாக்கினி ஞானத்துக்குதவும் அக்கினி , அதை வீணாக இப்படி ஆக்கினால் பிறந்த பயன்தான் என்ன.இறைவன் மிருகங்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே உடலுறவு வேட்கையைக் கொடுத்துள்ளான்(எடுத்துக்காட்டு நாய்களுக்கு புரட்டாசி,ஐப்பசி மாதங்கள் ).மனிதனுக்கு மட்டுமே இறைவன் வருடத்தின் எல்லா நாட்களும் உடலுறவு கொள்ளும் வல்லமையைத் தந்துள்ளான்.அதை மனிதன் இப்படி சீரழித்துக் கொள்ள பயன் படுத்தினால் அது அவரவர் தவறு.
மேலே நீங்கள் சொன்ன இந்த தீய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு கீழ்க்கண்ட மருந்துகளைச் சாப்பிட்டால் நலம் கிடைக்கும் .ஏனெனில் இந்த மருந்துக்கு இச்சா பத்தியம்.அதாவது எந்த வகையிலும் விந்து நீக்கம் கூடாது.
1)அஷ்ட சூரணம் (IMP COPS) – 50 கி
2)சுண்டை வற்றல் சூரணம் (IMP COPS) – 50 கி
3)நாக பற்பம் (IMP COPS) -10 கி
4)நத்தை பற்பம் (IMP COPS) – 10 கி
5)முத்துச் சிப்பி பற்பம் (IMP COPS) – 10 கி
6)பலகரை பற்பம் (IMP COPS) – 10 கி
இவற்றைக் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு உப்புக் கரண்டி(SALT SPOON) அளவு சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.
இத்துடன் SBL கம்பெனியின் ஹோமியோ மருந்துகளில் FP TABS ( FISHER PILES TABS ) கடுமையான நிலையில் 4 மாத்திரைகளும் , சாதாரண நிலையில் 2 அல்லது மூன்று மாத்திரைகளும் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சப்பி உமிழ் நீரொடு கந்து சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.
குப்பை மேனியை , பதினோரு மிளகுடன் அரைத்து எலுமிச்சைக் காயளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூல ரோகம் அழிந்தொழியும்.மூலத்தைக் கிருமிக் கூட்டம் என்று சொல்வார்கள்.எங்கே அதிக உஷ்ணமும் நீரும் ஒன்றாக இருக்கிறதோ அங்கே கிருமிகள் வளர்ந்து பெருகும் .அதைக் குப்பை மேனி அழித்தொழிக்கும்.
என்னதான் மருந்துகள் உங்களுக்கு நாம் சொன்னாலும் எமக்கு உங்கள் மேல் மரியாதை ஏற்படவில்லை.இது போன்ற உங்கள் பழக்கங்கள் வெளியே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்,இது போன்ற பழக்க வழக்கங்கள் உங்கள் மீது மற்றவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தாது.ஏனெனில் ஆண்களுக்கு விந்து சக்தியும் , பெண்களுக்கு நாதமான சிவப்பான சக்தியும்தான் ஆன்மீக பிரகாசத்தை ஏற்படுத்தும்.வீணாக்கினால் கீழ்க்கண்ட பாடலின் படிதான் நடக்கும்.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதி கெட்டு-போன திசை
எல்லார்க்கும் கள்ளனாம் ஏழ்பிறப்பும் தீயனாம்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
ஆன முதல் என்று குறிப்பிடப்படுவது பணமல்ல .நாம் பிறக்கும் போது கொண்டு வந்திருக்கும் ஆன்மீக பலம்.அதை செலவிட உடலுறவு , விந்து நீக்கம் , செய்வினை, பில்லி சூனியம் போன்றவை வைத்து அடுத்தவரைக் கெடுக்கும் மாந்திரீக காரியங்களில் ஈடுபடுதல் ஆகியற்றை செய்வது. கொண்டு வந்த ஆன்மீக பலத்தைவிட அதிகம் செலவு செய்தால் , மானமழியும் , மதி கெடும் , போன திசை எல்லார்க்கும் நீங்கள் கள்ளனாய்த் தென்படுவீர்கள்.சும்மாவானும் ஏண்டா திருட்டு விழி விழிக்கிறாய் என்று கேட்கப்பட்டு , உதைபடுவீர்கள்.எல்லார்க்கும் கள்ளனாய் தென்படுவீர்கள்.ஏழு பிறப்புக்கு தீயவனாய் பிறப்பெடுக்க வேண்டி வரும். நல்லவர்களுக்கெல்லாம் பொல்லாதவனாக தென்படுவீர்கள்.
இதுவெல்லாம் தேவையா என்று கருதி மனத்தை அடக்கி ஆளப் பழகுங்கள்.
இப்போது   காட்டுக்கருணைச் சூரணமான மூலச் சூரணத்திற்கு வருவோம்.
இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் , அம்மா வழி முப்பாட்டனாரும் வைத்தியரே ,ஆனாலும் அவரது நூல்கள் ஒன்று கூட அவர்களுக்கு கிடைக்காமல் போனது துரதிருஷ்டமே!!!ஆனால் குல வித்தை கல்லாமல் பாகம் படும் என்பதற்கேற்ப இந்த மூலிகைக் கலவை வித்தையில் மிகத் தேர்ந்தவராக இருக்கிறார்.மூலிகைகளை இனம் காணுதலிலும் அவரது தனித் திறமை எம்முன்னால் பல முறை கண்டுள்ளேன். அவரது  சிறப்பான சேவையை கொஞ்சம் பொறுமை காத்தே பெற இயலும் என்பதை முன்பே சொல்லிக் கொள்கிறேன். எனவே பொறுமை காத்து பெற்றுக் கொள்ளுங்கள்.
இதில் சேர்ந்துள்ள பொருட்கள்
1)காட்டுக் கருணை:-காட்டுக் கருணை ,காறாக்கருணை,சாதாரண கருணையான காறுங்கருணை (பிடி கருணை என்றும் அழைப்பார்கள்), என சில வகைகள் உண்டு.சித்தர்கள் பாடலில் கிழங்குகளில் கருணை அல்லாது வேறெதுவும் வேண்டேன் என்பார்கள்.
மேகமணு காதுவெகுதீ பனமாகுத்
தேகமதில் மூலமுளை சேராவே- போகாச்
சுரதோஷம் போங்கரப்பான் றோன்றும் வனத்திற்
பரவுகரு ணைக்கிழங்காற் பார்
(பதார்த்த குண  விளக்கம்)
காட்டுக் கருணைக் கிழங்கினால் வாதப் பிரமேகமும் , முளைமூலமும், சுரதோஷமும் , போகும்.இன்னும் இதனால் மிகுபசியும் ,கரப்பானும் உண்டாகும் என்பதாகும்.
மூலத்தில் ஒன்பது வகை உண்டு என்றும் கூறுவர் .எனவே நவ மூலம் என்பர் .அதே போல பவுத்திரமும் சில வகைகள் உண்டு.இரண்டையும் சேர்த்து 21 வகையாக கூறுவர். அத்தனையும்  அடியோடு அகற்றும் இந்த காட்டுக்கருணைச் சூரணமும் மற்றும் அதிலுள்ள பொருட்களும்.
மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூலநோயை பத்து வகைகளாக தேரையர் கூறியுள்ளார்.

அவையாவன:
சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.
புண் மூலம்: மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.
தீ மூலம்: மலவாயிலிருந்து சூட்டுடன் எரிச்சல் கூடி கழிவது.
நீர் மூலம் : மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.
முளை மூலம்: மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.
சதை மூலம்: காய்போல முளை கடுப்போடு வெளியாவது.
வெளுப்பு மூலம்: மோர்போல் வெளுத்து சிறுகச் சிறுக வெளியாவது.
காற்று மூலம்: அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.
பெருமூளை மூலம்: கீழ்க்குடல் கிழங்கின் முளைபோல் ஆடுவது.
என  மேற்கண்டபடியும் வகுத்துள்ளார்கள்.
யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
சனிப்பான மூலத்தின் பெயரேதென்னில்
சமரசமாம் நிர்மூலஞ்செண்டு மூலம்
முனிப்பான முளைமூலம் சிற்று மூலம்
மூர்க்கமாம் வறள்மூலம் ரத்த மூலம்
திணிப்பான சீழ்மூலம் ஆழிமூலம்
திணியான தமரக மாமூலத்தோடு
வனிப்பான வாதமோடு பித்த மூலம்
வகையான சேட்டுமத்தின் மூலமாமே

வகையாகும் தொந்தமாம் மூலத்தோடு
வளர்கின்ற வினைமூலம் மேக மூலம்
பகையாகும் பவுத்திரம் மாமூலத்தோடு
படர்கிரந்தி மூலமொடு குதயாமூலம்
புகையாகும் புறமூலம் சுருக்கு மூலம்
பொருகின்ற சவ்வாகு மூலத்தோடு
தொகையாகு மூலந்தானிருபத் தொன்றும்
சூட்சுமாமாம் இதனோடே ரூபங்காணே!!!
அவையாவனவற்றின் விளக்கம்.
1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)
நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிறிதல், மலவாயில் நுரையுடன்கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.
2 செண்டு முளை மூலம்(செண்டு மூலம்)
செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குப் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டிப்படும். மலவாயில் வலி ஏற்படும்.
3. பெருமுளை மூலம் (முளை மூலம், பெரு மூலம்)
முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல்போலாகும். மலவாய் சுருங்கி அரிப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.
4. சிறுமுளை மூலம் (சிற்று மூலம்)
சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.
5. வறள் முளை மூலம்(வறள் மூலம்)
வறள் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளிதுளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.
6. குருதி முளை மூலம் (ரத்த மூலம்)
ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.
7. சீழ் முளை மூலம் (சீழ் மூலம்)
சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்கு முன்பு சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணுக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.
8. ஆழி முளை மூலம் (ஆழி மூலம்)
ஆழி மூல நோயில் மலவாயில் ஆழி வடிவமாம் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளையாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.
9. தமரகமுளை மூலம் (தமரக மூலம்)
தமரக முளை மூல நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப் போல பெரிதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். தமரக வாயு மேலேறி அடிக்கடி மூச்சு முட்டல் , இதய வலி உண்டாகும்.செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.
10. வளிமுளை மூலம் (வாத மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண்டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும்.
11. அழல் முளை மூலம்  (பித்த மூலம்)
அக்கினியென்னும் ,தீயால் ( தேயு ) தோன்றும் பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.
12. ஐயமுளை மூலம்  (ஐய மூலம்)
ஐயமாகிய தண்ணீரால் (அப்பு ) தோன்றும் ,ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எரிச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற் போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.
13. முக்குற்ற முளை மூலம் (தொந்த மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாதமும் ,அக்கினியென்னும் ,தீயும் ( தேயுவும் ) ,ஐயமாகிய தண்ணீரும் (அப்புவும்  ) சேர்ந்து  தொந்த மூல நோய் உண்டாகிறது. இதில் மலவாய் இறுகி முளை யானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.
14. வினை முளை மூலம்  (வினை மூலம்)
செய்த வினைப்பயனால் வருவதால் இதற்கு இப்பெயர்.வினை மூல நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.
15. மேகமுளை மூலம் (மேக மூலம்)
மேக மூளை நோய் மேக ரோக தொந்தத்தால் உண்டாகிறது.இதில் ஆண் குறியில் வெள்ளை விழும். மூல முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.
16. குழி முளை மூலம் (பவுத்திரம்)
குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம் போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூல நோய்க்கு உரியவையாகும்.
17. கழல் முளை மூலம் (கிரந்தி மூலம்)
கழல்  என்றால் கால்களைக் குறிக்கும்.கால்களுக்கு இடையில்  ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எரிச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறங்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உரியதாகும்.
18. அடித்தள்ளல் முளை மூலம் (குதயா மூலம்)
அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்து போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.
19. வெளிமுளை மூலம்(வெளி (புற)மூலம்)
வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.
20. சுருக்கு முளை மூலம் (சுருக்கு மூலம்)
சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.
21. சவ்வு முளை மூலம்(சவ்வு மூலம்)
சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எரியும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.
இந்த 21 வகையான மூல நோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.
1. நீர் மூளை, 2. பெருமுளை, 3. வறல் முளை, 4. குருதி முளை,5. வளி முளை, 6. தீமுளை, 7. மேக முளை, 8. குழி முளை,9. கழல் முளை, 10. புறமுளை, 11. சுருக்கு முளை, 12. சவ்வு முளை, இவைகள் எளிதில் தீரக்கூடியவை.
1. செண்டுமுளை, 2. சிறு முளை, 3. சீழ் முளை,4. ஆழி முளை, 5. வினை முளை, 6. ஐயமுளை,7. குதமுளை, 8. முக்குற்ற முளை, 9. தமரக முளை போன்றவை எளிதில் தீராதவையாகும்.
 
இந்த மருந்து கலவையில் சேரும் இரண்டாவது பொருளான  சோற்றுக் கற்றாழைக்கே ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும்.அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை இது.
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும்.இந்தக் குமரியின் படத்தை இம்ப்காப்ஸ் ன் சித்த மருந்து செய்முறைகள் புத்தகத்திலும், ஆயுர்வேத மருந்து செய்முறைகள் புத்தகத்திலும்,யூனானி மருந்து செய்முறைகள் புத்தகத்திலும் முதல் பக்கத்தில் போட்டிருப்பதில் இருந்து இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன் .



எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை.இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான  அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழையை உணவே மருந்தாக தயாரிக்கப்படும் சோற்றுக் கற்றாழைப் பாயசம் செய்யும் முறைகளை இங்கே விவரிக்கிறோம்.
சோற்றுக்கற்றாழையின்
உள்ளே இருக்கும் சதை பாகம் – 2 கப்,
பால் – 2 கப்,
பனங்கருப்பட்டி – தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை – ஒவ்வொன்றும் 10 எண்ணம்,
ஏலக்காய் – 2,
நெய் – 1 டீஸ்பூன்.
சோற்றுக் கற்றாழைப் பாயசம் எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும் . அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனங்கருப்பட்டியில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும்.
பால் – கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.கீழ்க் கண்ட பல பிரச்சினைகளை சரியாக்கும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற ரீதியில் கொடுக்கப்பட்ட உணவுக்குறிப்பு இது.
2)சோற்றுக் கற்றாழை:-
சோற்றுக்கற்றாழை குமரி என்றழைக்கப்படுவது ஏனெனில் எந்தக் குமரியையும் காமத்தில் அடக்கும் வல்லமையை இந்தக சோற்றுக் கற்றாழைக்கு உண்டு.விந்து நீக்கம் (சுய இன்பம் செய்வதனாலும், அதீதமான உடலுறவு கொள்வதனாலும்{ஒரு நாளுக்கு பல முறை உடலுறவு கொள்வது }) ஆனதால் ஏற்பட்ட மூலச் சூட்டின் காரணமாகவே மலக்கட்டு ஏற்பட்டு  மூலமும் , பவுத்திரமும் உண்டாகின்றன.ஆனால் இதனால் ஏற்பட்ட  தாது நஷ்டத்தையும் ,அதனால் ஏற்பட்ட சப்த தாதுக்களில் ஏற்பட்ட குறைபாடுகள்,ஆகிய  இவற்றைக் கூண்டோடு தொலைக்கும் வல்லமை உள்ளது இந்த சோற்றுக்கற்றாழை.
சோற்றுக் கற்றாழையில் பல வகைகள் உள்ளன .சிறு கற்றாழை , செங்கற்றாழை , நறுங் கற்றாழை ,யானைக் கற்றாழை ,யானைக் கற்றாழை என பல பெயரிட்டு அழைத்தாலும் இந்த சோறுள்ள வகைக் கற்றாழைகள் அனைத்தும் ஒரே மருந்துத் தன்மை உள்ளதே.அவற்றின் மருந்துத் தன்மைகளில் சிறு சிறு மாறுபாடுகள் இருக்கலாம்.நார்க் கற்றாழை என்ற வகை இவைகளில் இருந்து மாறுபட்டது.நார்க் கற்றாழை சதை சோற்றுக் கற்றாழை சதை போன்று மருந்துக்குப் பயன்படாது.
அதனால் பல தீய பழக்க வழக்கங்களினால் இழந்த தாது நஷ்டத்தை ஈடு   செய்து உடலை குமரனாக்குவதால் இதற்கு ஈடு இணை எந்த மூலிகையையும் சொல்ல முடியாது.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை.மேலும்  மூட்டு வலிகள், வெட்டையினால் உண்டான கைகால் மூட்டுக்கள் அசையாத தன்மைகள் இவற்றையெல்லாம் யாரும் கற்பனை செய்து பார்க்காத அளவில் தொலைத்து நாசமாக்கும்.
நாம் பெருமை கொள்ள  மருந்துகளில் ஏதேனும் உண்டென்றால் அது இந்த   சோற்றுக்கற்றாழையேதான்.அதென்ன இது அவ்வளவு பெருமை உடையதா?? என்று நீங்கள் கேட்டால்  இதைவிட பெருமை உடையது எமக்குத் தெரிந்த வரை வெறொன்றில்லை!!!!!!!!!
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது.எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது.கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு  ஓடும் என்று பொருள்.மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு ,அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை.
சோற்றுக் கற்றாழை இராஜ கருவிகளில் உண்டாகும் பல குறைபாடுகளை நீக்குவதில் இதற்கு இணை இதுதான். அதீத சர்க்கரையா??குறைந்த சர்க்கரையா???உயர் இரத்த அழுத்தமா???குறைந்த இரத்த அழுத்தமா???அதீத உடல் எடையா ???குறைந்த உடல் எடையா??அதிக உடல் எடையா???அதிக கொழுப்பா???குறைந்த உடல் கொழுப்பா???அதீத உடல் எடையா??? குறைந்த உடல் எடையா???அதீத உணர்ச்சிகளால் உடலில் பல தொல்லைகளா????(அல்சர்,ஆஸ்துமா, பைத்தியம், ஹிஸ்டீரியா, அதீத உணர்ச்சி ஆனால் குறி எழும்பாமை, சர்க்கரை வியாதி , இரத்த அழுத்தம் , கை கால்களில் வலிகள், மூட்டு வலிகள், கீழ்முதுகு வலிகள்)ஏன் மதி மயங்கி பைத்தியமாகி உள்ளனரா???அனைத்திற்கும் தீர்வாக இந்த சோற்றுக் கற்றாழை செயல்படும்.

அப்படிப்பட்ட சோற்றுக் கற்றாழையை சூரணமாக்கி இந்த சூரணத்தில் கலந்திருக்கிறோம்.

-மச்சமுனி -
avatar
msv6000
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 14/09/2010

Back to top Go down

மூலச் சூரணம் Empty Re: மூலச் சூரணம்

Post by KAPILS Wed May 22, 2013 8:18 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum