Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் அற்புதமான பலன்கள் பெறலாம்-நம்மாழ்வார்
3 posters
Page 1 of 1
பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் அற்புதமான பலன்கள் பெறலாம்-நம்மாழ்வார்
""பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் அற்புதமான பலன்கள் பெறலாம். பசு சாணம்,
சிறுநீர், பால், தயிர், கடலை புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம்,
இளநீர், கரும்புசாறு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி பஞ்சகவ்யம்
தயாரிக்க வேண்டும். விதைகளை பஞ்சகவ்யத்தில் நனைத்து அதன் பின் விதைத்தால்
கூடுதல் மகசூல் பெறலாம்,'' என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட இளைஞரணி மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம் சார்பில், "இயற்கை
முறை விவசாய மேம்பாடு' குறித்த கருத்தரங்கம், பொன்னேகவுண்டன்புதூரில்
நடந்தது. சுற்றுச்சூழல் இயக்க தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.
இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிலம் கெடும்.
முதலில் அதிக விளைச்சல் தரும். பின்னர் நிலவளம் குறைந்து, விளைச்சலும்
குறைந்து விடும். ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், விளைபொருள் விஷமாகி,
சாப்பிடும் மக்களும் நோய் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வேம்பு உள்ளிட்ட
இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால், முதலில் விளைச்சல் குறைவாக
இருக்கும். பின்னர் ஆண்டுக்கு ஆண்டு நிலவளம் கூடும். அதன்பின் மகசூல்
அதிகரிக்கும். உர செலவு குறையும். விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற,
தோட்டத்தில் விழும் இலை, தழை, செடிகளை அப்புறப்படுத்தக்கூடாது. அவற்றை
பயிர், செடி மற்றும் மரங்களை சுற்றி போட வேண்டும். இப்படி போடுவதால், அந்த
இடத்தில் மண்ணில் ஈரப்பதம் நீடிக்கும். வெளியில் இருப்பதை விட வெப்பம்
அங்கே குறைவாக இருக்கும். நாளடைவில் இலை, தழைகள் மக்கி, மண்ணுக்கு வளம்
சேர்க்கும்.
குஜராத்தில் இந்த முறையை பின்பற்றி அதிக
விளைச்சல் எடுக்கின்றனர்.கரும்பு வெட்டும்போது ஒரு ஏக்கருக்கு ஐந்து டன்
வரை தோகை கிடைக்கிறது. பலர் அதை எரிக்கின்றனர். அந்த தோகையை எரிக்காமல்
மண்ணுடன் மக்க விட்டுவிட வேண்டும். தோட்டத்திற்குள் விழுபவைகளில்,
பிளாஸ்டிக், ரப்பர், இரும்பு, அலுமினியம் தவிர மற்றவற்றை
அப்புறப்படுத்தாமல், அப்படியே மக்க விட வேண்டும்.
பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான பலன்கள்
பெறலாம். பசு சாணம், சிறுநீர், பால், தயிர், கடலை புண்ணாக்கு ஆகியவற்றுடன்,
வாழைப்பழம், இளநீர், கரும்புசாறு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில்
கலக்கி பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். விதைகளை பஞ்சகவ்யத்தில் நனைத்து அதன்
பின் விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.
கிராமங்களில் இருந்து பல லட்சம் பேர் நகரத்தை நோக்கிச் செல்கின்றனர்.
நகரில் சுத்தமான காற்று இல்லை. மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேறுவதை
தடுக்க அரசும், மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் போதுமான
வசதிகள் செய்து தரப்பட்டால், நகரங்களை நோக்கிச் செல்வது குறையும்.
ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள் நட வேண்டும். குளியல் நீர்
செல்லும் இடத்தில் வாழை, பாத்திரம் கழுவும் இடத்தில் தென்னை, வேலியில்,
சவுண்டால், மொசு மொசு, அகத்தி, சீதா பழம் ஆகிய மரங்களை நடலாம். பல
ஆண்டுகளாக, பலரும் இயற்கை வேளாண்மையை பற்றி பேசியதால், தமிழ்நாடு வேளாண்
பல்கலை, இயற்கை வேளாண்மைக்கு என தனி துறை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.
நன்றி : தினமலர்
Similar topics
» இயற்கை விவசாயத்தில் எலி கட்டுப்பாடு
» நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2
» இனி ‘ஆன்லைன்’ மூலம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரம் பெறலாம்
» வங்கி கணக்கு இல்லாதவர்களும், பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறலாம்: ரிசர்வ் வங்கி.
» முட்டை கவ்யம். Via Binuraj Purushothaman (Organic Terrace Garden)
» நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2
» இனி ‘ஆன்லைன்’ மூலம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரம் பெறலாம்
» வங்கி கணக்கு இல்லாதவர்களும், பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறலாம்: ரிசர்வ் வங்கி.
» முட்டை கவ்யம். Via Binuraj Purushothaman (Organic Terrace Garden)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum