Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நேரம் - சினிமா விமர்சனம்
2 posters
Page 1 of 1
நேரம் - சினிமா விமர்சனம்
கே
வி ஆனந்த் தின் கனா கண்டேன் படத்தின் கதை முடிச்சை சுவராஸ்யமான புது
திரைக்கதை வடிவில் அமைத்தால் அதுதான் மலையாள டப்பிங்க் படமான நேரம்
படத்தின் கதை. 2 மணி நேர நறுக் சுருக் படம்.
ஹீரோவுக்கு திடீர்னு வேலை போய்டுது.சந்தர்ப்ப சூழ்நிலையால கந்து வட்டிக்கு
பணம் கடன் வாங்க நேரிடுது.கடனை திருப்ப வேண்டிய கெடு நாள் ல நண்பனிடம்
கடன் வாங்கி கொடுக்கப்போகும்போது ஒருத்தன் பிக் பாக்கெட் அடிச்சுடறான். அதே
நாள் தங்கையின் கணவர் பெண்டிங் டவுரிக்காக வசூலிக்க வர்றார். போதாத
குறைக்கு ஒரு காதலி.வீட்டை விட்டு வெளில வந்துடறா.
காதலனுக்காக காத்திருக்கும்போது அவ செயினை ஒருத்தன் அடிச்சுடறான். ஹீரோ
இத்தனை பிரச்சனைல இருந்தும் எப்படி தப்பிச்சார்? என்பதை ஒரு த்ரில்லர்
படத்துக்கே உண்டான சுவராஸ்யத்துடன் சொல்லி இருக்காங்க .
ஹீரோ புது முகம் நிவின் ( வெற்றி ) . ஆள் செம ஸ்மார்ட் . பெண்களை
வசீகரிக்கும் முகம் .புது முகத்துக்கே உண்டான தயக்கங்கள் ஏதும் இல்லமால்
அநாயசமா நடிச்சிருக்கார் . நல்ல எதிர்காலம் உண்டு . காதல் காட்சிகளில்
பட்டும் ரொமான்ஸ் பத்தாது. நம்மளைப்போல கூச்ச சுபாவம் போல
ஹீரோயின் நஸ்ரியா நசீம் செம நைஸ். பிரனீதாவின் முகச்சாயல் , ஹன்சிகாவின்
மனசு , நமீதாவின் தினுசு ,அக்னிநட்சத்திரம் அமலாவின் ரவுசு ,இதயத்தை
திருடாதே( தெலுங்கு கீதாஞ்சலி ) கிரிஜாவின் நகாசு என கலந்து கட்டிய
காக்டெயில் குல்கந்து ஃபிகர் . தாரளமா 75 மார்க்
போடலாம்.பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசமாய் அவரது கண்கள் இரண்டும் அலை
பாயும்போது நம் மனமும் அலை பாயும்,
பீட் ரூட் அல்வாவை தேனில் நனைத்து எடுத்தது மாதிரி அவர் உதடுகள் .
ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஈ மொய்ச்சிருக்கும். அவ்வளவு அழகு . சேலை , சுடிதார்
என எந்த வித உடையிலும் கண்ணியமான தோற்றம் காட்டும் குடும்பப்பாங்கான
கிளாமர் முகம் . தமிழில் அஞ்சலிக்கு சரியான போட்டியாக வருவார்னு தோணுது .
வில்லனாக வரும் சிம்ஹா ஆர்ப்பரிக்க வைக்கும் வில்லத்தனமான நடிப்பு .வைதேகி
காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமியாக வரும் ராதா ரவியின்
கெட்டப் பில் கழுத்து நிறைய தங்கச்சங்கிலியில் வந்து மிரட்டலான நடிப்பை
வழங்கி இருக்கறார். படத்தின் முதுகெலும்பே இவர் நடிப்பை வழங்கி இருக்கார் .
இவரது பாடி லேங்குவேஜ் பிரமாதம் .
ஹீரோயின் அப்பாவாக வரும் தம்பி ராமையா நடிப்பும் கன கச்சிதம் . போலீஸ்
ஸ்டேஷனில் இவரது நடிப்பு சபாஷ் போட வைக்குது . போலீஸ் ஆஃபீசராக வரும் ஜான்
விஜய் வசன உச்சரிப்பில் கலக்கறார் ( வ குவாட்டர் கட்டிங்க்கில் கலக்கியவர் )
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. காதல் உள்ளே வந்த நேரம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு , லொக்கேஷன் அட்டகாசம் .
2. டைட்டில் டிசைன் புதுமை . வித விதமான கடிகாரங்கள் , கால மானிகள் என
டைட்டிலை நினைவு படுத்த இவர் எடுக்கும் முயற்சிகள் அட போட வைக்குது
3. ஹீரோ , ஹீரோயின் , வில்லன் உட்பட படத்தில் பங்கு பெற்ற அனைத்து
நடிகர்களும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்தது . அவர்களிடம்
இயக்குநர் வேலை வாங்கிய விதம்
4. படத்தின் இயக்குநரே எடிட்டர் என்பதால் ஷார்ப்பான எடிட்டிங்க் . ஸ்லோ
மோஷன் காட்சிகள் ஒரு படத்துக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து
செய்திருக்கிறார்
5. வசனகர்த்தாவின் நக்கலான , நையாண்டித்தனமான் நகைச்சுவை உணர்வு படம் பூரா
விளையாடி இருக்கு. கேரக்டர்களுக்கு பெயர் சூட்டுவதில் இருந்து , பழமொழி ,
சின்னச்சின்ன வசனங்களில் கூட மெருகேற்றப்பட்ட யதார்த்தம் கலக்கல்
6. ஹீரோயின் அம்மாவாக வரும் ஆண்ட்டி யாரு? செம கட்டை. த்ரிஷாவின் அம்மா மாதிரி இந்த வயசிலும் ஹி ஹி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வில்லனே டாமினேட் செய்து விடுவதால் ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகளில்
அதிக ஈடுபாடு செலுத்தாதது மிகப்பெரிய மைனஸ். கைவசம் டக்கர் ஃபிகர்
இருந்தும் வெளில பராக்கு பார்க்கும் சராசரித்தமிழனின் இழப்பு மாதிரி
2. படத்தில் வில்லனாக வரும் வட்டிக்கடை ஆளிடம் படத்தின் எல்லா முக்கியக்கேரக்டரும் கடன் வாங்கி இருப்பார்களா? வேற ஆளே ஊர்ல இல்லையா?
3. ஹீரோ வில்லன் வீட்டில் வட்டிக்கு கடன் வாங்க வரும்பொதே அவரது அராஜகத்தை
நேரில் பார்த்து விடுகிறார். அப்போதே வேற இடம் பார்ப்போம் என அவர் ஏன்
சொல்லவில்லை ?
4. ஹீரோயின் நல்ல வசதி ..ஹீரோவுக்கு பணக்கஷ்டம் என்றால் அவர் ஏன்
உதவவில்லை?அவர் கிட்டே தகவல் கூட சொல்லலையே/ எந்த காதலனும் தன்
மனக்கஷ்டத்தை , பணக்கஷ்டத்தை காதலியிடம் சொல்லாமல் இருப்பதில்லை
5. வீட்டை விட்டு வெளியே வர முடிவெடுக்கும் ஹீரோயின் கட்டிய சுடிதாருடன்
வருவதெல்லாம் ஓக்கே , ஆனா அவரது செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராதது ஏன்?
6. நட்ட நடு வீதியில் ஹீரோயின் செயினை ஒருத்தன் அத்துட்டு ஓடறான் .
ஹீரோயின் கூக்குரல்க் இடலை , யாரிடமும் உதவி கேட்கலை . சும்மா அழுத்துட்டு
இருக்கு. இந்தக்கால ஃபிகருங்க கொலுசு திருகாணி காணாம போனாலே அழுது
ஆர்ப்பாட்டம் பண்னிடமாட்டாங்க ?
7. ஹீரோயின் ஒரு ஆள்ட்ட ஓ சி ஃபோன் வாங்கி கால் பண்றா. அப்போ பேசும்போது
பர்சனல் மேட்டரை அவன் முன்னாலயே பேசுவாளா? கொஞ்சம் தள்ளி நின்னு பேச
மாட்டாளா? அவன் பின்னாலயே ஃபாலோ பண்ணி தொந்தரவு தரும்போது அவ ஏன் பம்மனும்?
ஈசியா அவனை கட் பண்ணலாமே? இந்தக்கால ஃபிகருங்களுக்கு பசங்களை கட் பண்ண
சொல்லியா தரனும் ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஹவுஸ் ஒயிப் எல்லாம் நிறையப்பேசலாம்.ஆனா டெசிஷன் எடுக்கற ஏரியாவுக்கு வரக்கூடாது.புரியுதா ?
------------------------------
2. ஏய். டோன்ட் மிஸ்டேக்கன் மீ.அந்தப்பொண்ணுக்கு மூஞ்சியே சரி இல்லடி.
டேய் நீ மூஞ்சியையா பார்த்தே?
-------------------------
3.என்னை கட்டிக்கப்போற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவா-னு என் ஜாதகத்துல இருக்கு.என்ன? கஷ்டப்பட வர்றியா ?
---------------------
4. ஆமா, உனக்கு ஒயிஃப் இருக்கா?
இல்லை
ஏன்?
ஏன்னா? எனக்கு இன்னும் மேரேஜே ஆகலையே?
-----------------------------------
5. கொடுத்த வாக்கைக்காப்பாத்தறவனைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்
--------------------
6. உங்க பொண்ணு கிட்டே நான் வாக்கு குடுத்திருக்கேன் . அவ எனக்கு வாக்கு
கொடுத்திருக்கா. நீங்க இப்படி அடம் பிடிச்சா நாங்க வேற முடிவு எடுக்க
வேண்டி வரும்
--------------------
7. இந்த ஜானி ஜானி எஸ் பாப்பா வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம்
--------------------
8. போலீஸ் ஸ்டேஷன் வாசலில்
சார் . உள்ளே போறது எப்படி?
அவனைப்போட்டுத்தள்ளிடு , ஆட்டோமேடிக்கா உள்ளே போயிடுவே
----------------------
9. என்னது? உங்க பேரு சரவணர்? எப்டி?
சின்னப்பையனா இருக்கும்போது அவன் இவன்னாங்க, பெரிய ஆள் ஆனதும் அவர் இவர்ங்களையா?
------------------
10. தியாகராஜ பாகவதருக்கே பாட்டு கத்துத்தர்றியா?
---------------
11. மிஸ் ! ஐ லவ் யூ!
ஸாரி , நான் ஆல்ரெடி கமிட் ஆகிட்டேன்
நான் என்ன சரக்கு அடிக்கவா கூப்பிட்டேன், காபி சாப்பிடத்தானே கூப்பிடறேன்?
--------------------
12. மச்சி , நான் புதுசா ஒரு பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் .
ஆமா,
ஆல்ரெடி பண்ணிட்டு இருந்த பிஸ்னெஸ் என்னாச்சு? லாஸ் ஆகிடுச்சு,ஹிஹி
--------------------------
13. அட, புது ஃபோனா? எவ்ளவ்?
10,000 ரூபா. இந்த நெம்பரை அடி. என்னடா, பட்டனே இல்லை. என்ன ஃபோன் போ .
அண்ணே , இது டச் ஸ்க்ரீன்
-------------------
14. இந்த உலகத்துல முன் அனுபவம் இருக்கா?ன்னு கேட்காத ரெண்டே தொழில் 1. பிச்சை எடுக்கறது 2 திருடறது
----------------------------
15. இவனை அடிச்சு செல்லுல போடுங்க
சார், நீங்களே அந்த செல்லுல தான் இருக்கீங்க, நீங்க வெளீல வந்தாத்தான் போட முடியும்
---------------------
16. எனக்கு குழந்தை பிறந்தப்ப எங்கப்பனுக்குப்பிறந்த பையன் இவன்
------------------
17. நாற வாயன் வீட்டுல பொண்ணு எடுத்தவனும் கெட்டான், நச்சு வாயன் வீட்டுல பொண்ணு கட்டுனவனும் கெட்டான்
-------------------------
18. சாரி டூ சே திஸ் ஹீ ஈஸ் நோ மோர் .
டாக்டர் , மோர் குடிச்சுட்டு அவன்
சாகலைங்கறீங்களா? மார்ச்சுவரில இருக்கற டெட் பாடிக்கு நாடி பார்த்த ஆள்
நீங்க மட்டும் தான்
-----------------
19 அந்த ஸ்டேஷன் எஸ் ஐ யார் தெரியும் இல்ல? கட்டை
உருட்டுக்கட்டையா இருந்தாலும் பரவாயில்லை
---------------------
20.நம்ம பொண்ணை அவ ஆசைப்பட்ட பையனுக்கு கட்டி வைக்கலைன்னா என்ன ஆகும் தெரியுமா?
அந்தப்பையனோட வாழ்க்கை நல்லா இருக்கும்
----------------------
21. டேய் , இப்போ யார்டா தமிழ் நாட்டின் சி எம்?
நிச்சயமா நான் இல்ல
------------------
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43 ( இது ஒரு டப்பிங்க்படம் என்பதால் விகடன் விமர்சனம் வராது )
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
ரேட்டிங்க் - 3.25 / 5
சி பி கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் , காதலர்கள் , பெண்கள் என
அனைத்து தரப்பினரும் படம் பார்க்கலாம் . மிக கண்ணியமான இயக்கம் , நகைச்சுவை
இழையோடும் திரைக்கதை . 2013 ஆம் ஆண்டின் முக்கியமான படம் . ஈரோடு வி எஸ்
பி யில் படம் பார்த்தேன்
Re: நேரம் - சினிமா விமர்சனம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..”
கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் :
“வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து
விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள்.
வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று
பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன்
கொடுத்தவன் கொடுத்த கடனுக்கு பதில் சொல்லு அவன் வேட்டியை
பிடித்திழுக்கிறான். அவனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக சாவு
செய்தி வருகிறது.. சம்பந்தி வீட்டில் இருந்து வீட்டுக்கு திடீரென்று ஆட்கள்
வந்திருக்கிறார்கள். கடன்காரர்களை மல்லுக்கட்டி அகற்றிவிட்டு வயலுக்குள்
ஓடியவனை பாம்பு கொத்துகிறது.. பாம்புக் கடிக்கு முதலுதவியைச் செய்துவிட்டு
வயலுக்குள் ஓடியவனை அரசு அதிகாரிகள் வரி எங்கே என்று கேட்டு
மடக்குகிறார்கள். அதே நேரம் ஊர்க் கோவிலின் அன்றைய கொடை அவனது குடும்பம்
என்பதால் அதைக் கேட்டு குருக்கள் வீட்டுக்கு வந்து நிற்கிறார்..”
- இத்தனை பிரச்சினைகளும் ஒருவனுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர்ந்து
நடந்தால் அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாகிவிட மாட்டானா.. என்கிறார்
கவிராயர்.
இதற்கெல்லாம் அடிப்படையான விஷயம் நேரம்தான்.. நல்ல விஷயங்கள் தொடர்ந்து
நடந்தால் அது நல்ல நேரம்.. கெட்ட விஷயங்களே தொடர்ந்து நடந்தால் அது கெட்ட
நேரம்.. ஒவ்வொரு நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும், கெட்ட நேரம்
முடிவுக்கு வந்து நல்ல நேரமும் தொடங்கும் என்பது நமது வாழ்க்கையின் நியதி..
இதைப் புரிந்து கொண்டால் நமக்கு எப்போதுமே நல்ல நேரம்தான் என்கிறார்
இந்தப் படத்தின் இயக்குநர். கதையும் அதுதான்..!
மல்டி நேஷனல் கம்பெனியில் பணியாற்றும் ஹீரோ வெற்றிக்கு அமெரிக்காவில்
நடக்கும் ஒரு அசம்பாவித பாதிப்பினால் தொடர் பாதிப்பாகி வேலை பறி போகிறது.
இதனால் காதலியுடன் நடக்கவிருக்கும் திருமணம் நிற்கிறது.. தங்கையின்
திருமணத்திற்கு பணமில்லாமல் வட்டிராஜா என்னும் கொடுமைக்கார வட்டிக்காரனிடம்
கடன் வாங்க நேரிடுகிறது.. வட்டிப் பணத்தை குறித்த நேரத்தில் கட்டமுடியாமல்
போகும் ஒரு நாளில் வெற்றிக்கு என்னென்ன தோல்விகள் பரிசாகக் கிடைக்கின்றன
என்பதையும், அது எப்படி அதே நாளில் சால்வ் ஆகிறது என்பதையும் அருமையான
திரைக்கதையால் அழகாக உருவாக்கியிருக்கிறார்கள்.
வட்டிராஜா.. அவனது கூட்டாளிகள்.. வெற்றி... ஹீரோயின் வேணி.. அவளது
அப்பா, அம்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணிக்கம், அவரது அண்ணன்..
பிக்பாக்கெட் திருடர்கள்.. அவர்களது ஒற்றுமை.. அவர்கள் எடுக்கும் திடீர்
முடிவு.. மாணிக்கம்-வேணி சந்திப்பு.. வெற்றி-மாணிக்கம் சந்திப்பு.. இடையில்
குறுக்கிடும் வெற்றியின் மச்சான், வட்டிராஜா- ஆட்டோ டிரைவர் சந்திப்பு..
சார்லியின் அந்த வெறித்தனமான சிரிப்பு..! வாவ்.. வாவ்.. என்று சொல்ல
வைக்கிறது திரைக்கதை..! நூல் பிடித்தாற்போல் அனைத்து கேரக்டர்களையும்
அழகாகக் கொண்டு சென்று அனைவருக்கும் காட்சிகளை அடுத்தடுத்து வைத்து,
வட்டிராஜாவின் திடீர் முடிவை சஸ்பென்ஸாக வைத்து அதன் பின் அதனை
காண்பித்திருக்கும் அந்த உத்தி.. இயக்குநர் மூளையை கசக்கிப்
பிழிந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!
புதுமுகம் நிவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.. புதுமுகம் என்றே சொல்ல
முடியவில்லை.. அந்த வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் உணர்ந்து
நடித்திருக்கிறார்..! இந்த கேரக்டரில் வேறு தமிழ் பிரபலங்கள்
நடித்திருந்தால் படம் இந்நேரம் ஹிட் என்றே செய்திகள் வந்திருக்கும்..!
முதல் டூயட் பாடலின் மாண்டேஜ் ஷாட்டுகளில் ஹீரோவும், ஹீரோயினும் பேசாமலேயே
நடித்திருக்கிறார்கள்.. அசத்தல் இயக்கம்..!
ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம்
தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில்
இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட
விழிகளும் சொக்க வைக்கின்றன..! சின்னச் சின்ன ரொமான்ஸ்களிலும், “முகத்தையா
பார்த்த..?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் அந்தச் சின்ன
க்யூட் ஷாட்டிலும் மின்னுகிறார்.. இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக்
கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்..! நடனம் எப்படி என்றுதான்
தெரியவில்லை.. அடுத்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்..!
வட்டிராஜாதான் வாழ்ந்திருக்கிறார். என்ன மாடுலேஷன்..? பார்த்து பார்த்து
சலித்துப் போன வில்லன் கேரக்டர்தான் என்றாலும் சின்னச் சின்ன ஆக்சன்களில்
நம்மை கவர்கிறார். சாப்பிட்டுக் கொண்டே சார்லியை மிரட்டும் காட்சியில்
அவரது அலட்சிய நடிப்பில் நம்மை உள்ளே இழுத்துவிட்டார்.. 'சூது கவ்வும்'
படத்தில் அப்பாவியான கேரக்டரில் நடித்த சிம்ஹா, இந்த கேரக்டரில்
கொடுத்திருக்கும் நடிப்பை நம்பவே முடியவில்லை..! இந்தப் பட வெற்றியின்
முதல் ஓட்டு, இவருக்குத்தான்..! பீடியை குடித்துக் கொண்டே அன்னார் செய்து
வரும் தொண்டினை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். இவர் சம்பந்தப்பட்ட
எந்தக் காட்சியிலும் லாஜிக் மீறாமல் பார்த்துக் கொண்டதற்காகவும் இயக்குநரை
பாராட்ட வேண்டும்..! இந்த மாதிரியான தாதாக்களிடம் முட்டாள் அடியாட்கள்தான்
இருப்பார்கள் என்பதை இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில்
அந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அந்த வாக்குவாதமே ஒரு அபத்தக்
காமெடி.. ஆனாலும் ரசிக்க முடிகிறது..!
பிக்பாக்கெட்காரர்களின் திடீர் முடிவும், அதைத் தொடர்ந்த வட்டிராஜாவின்
விரட்டலும் படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் வேகத்தைக்
கூட்டியிருக்கிறது..! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாக
பிக்பாக்கெட்டுகளில் ஒருவன் தேமே என்று போய்க் கொண்டிருக்கும் ஹீரோவை
வழிச்சண்டைக்கு கூப்பிடும் அந்தக் காட்சி மகத்தான காமெடி.. ச்சும்மாவே
முகத்தைக் காட்டியே காமெடியை வரவழைத்துவிட்டார் இயக்குநர்..! 'சூது
கவ்வும்' படத்தில் தண்ணி பார்ட்டியாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கும்
இதில் ஒரு பிக்பாக்கெட்..! வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ச்சியாக
படங்களில் வலம் வருகிறார்கள்.. வாழ்த்துகள்..!
இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் மூவர். இன்ஸ்பெக்டரான
ஜான் விஜய்.. ஹீரோயின் அப்பாவான தம்பி இராமையா.. மாணிக்கத்தான் அண்ணனான
நாசர்.. சளைக்காமல் மூவரும் விளையாடியிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில்
வெள்ளையடிக்கச் சொல்லிவிட்டு எப்போதுதான் முடியும் என்று அவ்வப்போது போலீஸ்
அதட்டலோடு கேட்கும் ஜான் விஜய்யின் நடிப்பை ரசிக்க முடிகிறது..! தொப்பியை
மாட்டிக் கொண்டு ஸ்டைலாக கிளம்புங்க என்று சைகை காட்டியபடியே வரும் அந்த
ஷாட்டை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..!
தம்பியின் தூக்கத்துக்காக பாட முனைந்து பாடல் வராமல் தவிக்கும் நாசர்..
தண்டம் டெக்னாலஜிஸ் என்ற பெயருக்கு அவர் சொல்லும் விளக்கம்.. வட்டிராஜா
விஷயத்தில் தன் பெயரை கோர்த்துவிடும் டெக்னிக்.. தன்னிடமே கதை அளக்கும்
இன்ஸ்பெக்டர் ஜான்விஜயிடம் பஞ்ச் டயலாக் சொல்லும் அழகு.. எல்லாமே நாசரால்
பின்னப்பட்டிருக்கிறது.. வெல்டன் ஸார்..!
இப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.. மிக இளம் வயதில்
சினிமாவுக்குள் நுழைந்து பார்க்காத வேலையே இல்லை என்கிற அளவுக்கு
பலதரப்பட்ட வேலைகளையும் பார்த்துவிட்டு பின்பு கடைசியாகத்தான்
இயக்கத்திற்கு வந்திருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த கோரல் விஸ்வநாதன்
என்ற இப்படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்..
இயக்குநர் கேரளா என்பதால் மலையாளத்திலும் அப்படியே எடுத்துவிடலாம் என்ற
கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டு படமெடுக்க அனுமதித்திருக்கிறார்.படம் ஒரு
வாரத்திற்கு முன்பே கேரளாவில் ரிலீஸா சூப்பர்ஹிட்டாகிவிட்டது..!
கடவுள், நேரம், ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால் என்று ஆரம்பித்து
கடைசியில் தியேட்டர் ஆபரேட்டர் வரையிலும் அனைவருக்கும் நன்றி கார்டு போட்டு
தனது நன்றியினைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர். இதுக்கே நாம தனியா ஒரு
வாழ்த்து சொல்லணும் இயக்குநருக்கு.. படத்தின் எடிட்டரும் இயக்குநர்தான்
என்பதால் எந்த இடத்திலும் தொய்வு வராமல், படத்தின் டெம்போ குறையாமல் கொண்டு
சென்றிருக்கிறார்..! சிறந்த எடிட்டராகவும் வருவார் போலும்..!
இந்தப் படத்தில் எனக்கு இருக்கும் ஒரு குறை.. பின்னணி இசைதான்.. கதை,
திரைக்கதை, வசனம், நடிப்பு இதைத்தாண்டி ஐந்தாவதாக நடிப்பைக் காட்ட
உதவியிருக்க வேண்டிய பின்னணி இசை, இதில் பல இடங்களில் அனைவருக்கும்
முந்திக் கொண்டு முகத்தைக் காட்டியிருப்பது பெரும் இரைச்சலைத்தான்
தந்திருக்கிறது..! முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயம் இது..!
புதிய இயக்குநர்கள் புதுமையாக சிந்திக்கிறார்கள்.. பட்ஜெட்டுக்குள்
படமெடுக்கிறார்கள். சொன்ன சொல் தவறாது இருக்கிறார்கள். நல்ல திறமையோடு
இயக்குகிறார்கள் என்றெல்லாம் பல பெரியவர்கள் மேடைதோறும் சொல்லிக் கொண்டே
வருகிறார்கள். அந்த இளைய, புதிய இயக்குநர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு
இப்படி கூடிக் கொண்டே போவது தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு பெருமையளிக்கக்
கூடிய விஷயம்..! பாராட்டுக்கள் வாழ்த்துகள் இயக்குநருக்கும்,
தயாரிப்பாளருக்கும்..!
நேரம் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

Similar topics
» நேரம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )
» ஆள் - சினிமா விமர்சனம்
» வீரம் -சினிமா விமர்சனம்
» ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்
» ராமானுஜன் – சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» வீரம் -சினிமா விமர்சனம்
» ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்
» ராமானுஜன் – சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum