Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெண்கள் ட்விட்டரில் குப்பை கொட்டுவது எப்படி?
Page 1 of 1

சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி
பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை,
ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.
இவற்றில்
எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை
இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது, சில
நேரங்களில், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி பிரச்னையில் சிக்கித் தவிக்காமல், ட்விட்டரை முறையாக பயன்படுத்த, இதோ சில டிப்ஸ்...
ட்விட்டரில்,
ஒருவர் பகிர்ந்து கொள்ளும் சீர்த்திருத்தக் கருத்துகளைக் கொண்டு, அவரது
குணாதிசயங்களை எடை போட வேண்டாம்; இங்கே பாதி பேருக்கு பொய் முகம்.
ட்விட்டர்
டைம் லைனில், சமூகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களும் அலசப்படும். அவை
அனைத்திற்கும், நாமும் நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை. காரணம், நம் தனிப்பட்ட விஷயத்தைக் குறித்து கூட வாயைப் பிடுங்க,
காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ட்விட்டர் பழக்கம், நாளடைவில் நட்பாக
மாறுவதைத் தவிர்க்க இயலாது. அந்த நட்பு வளையத்தை உருவாக்க, அவசரப்படக்
கூடாது. குறைந்தது, ஓர் ஆண்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான்,
எதிராளியின் மனப்பாங்கு, சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஓரளவு
கணிக்க முடியும்.
இவற்றில், நிஜப் பெயருக்கு பதில், புனைப் பெயர்
வெளியிடுவதே நல்லது. நிஜப் பெயரில் இருந்தாலும், அதை மாற்றி விட
வேண்டும். இல்லையென்றால், ஏதேனும் கருத்து மோதல் வந்தால், பெயரை
குறிப்பிட்டு விமர்சனம் செ#வர். புனைப் பெயரில் விமர்சனம் செய்தால்,
அவ்வளவாக வலிக்காது.
தனிப்பட்ட முறையில், ஒருவரை அவதூறாக பேசும் போக்கு,
ஊடகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இது, ஏற்கத்தக்கதல்ல. எனவே,
பொதுவான கருத்துகளை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். தனிப்பட்ட
விமர்சனங்களுக்கு, பதில் சொல்ல வேண்டாம்.
இவற்றில், கருத்துக்கு தான்
முதலிடம். யார் சொல்கின்றனர் என்பது இரண்டாம் பட்சம் தான். எனவே, தங்களைப்
பற்றிய சொந்த விஷயங்களை, பகிர்ந்து கொள்ள வேண்டாம். உதாரணத்துக்கு, நாம்
எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லாம், இங்கு தேவை இல்லாத ஒன்று.
ஓரளவு
நட்பு வளர்ந்து, நம்பிக்கை வந்தால் மட்டுமே, தங்களைப் பற்றிய விஷயங்களை
பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவும், தேவைப்பட்டால் மாத்திரமே. பர்சனல் லைப்,
சோஷியல் லைப் இரண்டிற்கும் இடையே, எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்க
வேண்டும். இல்லையென்றால், அது அனாவசிய குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
ட்விட்டர்
மாதிரி, யாரும் நேரில் அழைத்தால், போக வேண்டாம். இங்கு, எழுத்துக்குத்
தான் வலிமை; நேர்முக அறிமுகத்துக்கு இல்லை. நேரில் பார்த்து அளவளாவும்
வழக்கம், எழுத்தாளர் உலகத்தில் உண்டு. சின்ன சின்ன கருத்தோ, நகைச்சுவை
துணுக்கோ பகிர்ந்து கொள்வதற்கு, நேரில் பார்த்து பழக வேண்டும் என்ற அவசியம்
இல்லை. அவசியம் என்று பட்டால், குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.
முக்கியமாக,
இதற்காக ஒதுக்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்,
ட்விட்டர் அடிமையாக்கி விடும். ட்விட்டரே கதி எனக் கிடப்பவர்கள், நமக்கு
சொல்கிற செய்தி இது தான்... "நாலு விஷயம் தெரிந்து கொள்கிறோம்; சில
ஆலோசனைகளை பெறுகிறோம்...' என்பது தவிர, இந்த ஊடகத்தால், தனிப்பட்ட
பாதுகாப்பு குறைகிறது என்பது தான் உண்மை. பல அலுவலகங்களில் இதைத் தடை
செய்வதற்குக் காரணமும் அது தான்.
மனதில் உள்ளதை எல்லாம் பேசும் சுதந்திரம், ட்விட்டரில் இருக்கிறது. அது தான் இதில் உள்ள வசதி. அதுவே,
அடிமையும்படுத்தும். கட்டற்ற சுதந்திரம், எப்போது வேண்டுமானாலும், ஆபத்தாக
மாறும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து, அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
போலி முகவரிகளிடம் (பேக் ஐ.டி.,) கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக, எல்லாரையும், பேக் ஐ.டி.,யாக, இருக்குமோ என்று நினைத்து அணுகுவதே
நல்லது. உதாரணமாக, சாலையில் போகும் போது, ஒரு டர்னிங் வருகிறது என்றால்,
அங்கு வாகனம் ஏதும் வரும் என்று, எதிர்பார்த்து போகச் சொல்வர் இல்லையா...
அது போலத் தான். சிறிது நாள் சென்றதும், பேக் ஐ.டி., இல்லை என்று
தெரிந்தால், சின்னதாக ஒரு, "சாரி' சொல்லி சமாளித்து விடலாம்.
ஆபாச
வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல், அவற்றை புறக்கணித்து விட வேண்டும்.
கைமீறி போகும் பட்சத்தில், ப்ளாக் செய்து விட வேண்டும். ஆண்கள்
உபயோகப்படுத்தும், இரட்டை அர்த்தமுள்ள பல, பேச்சு”வழக்கு வார்த்தைகள்,
பெரும்பாலும், பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற ட்விட்ஸ்க்கு
பதிலளித்து, பெண்கள் சிலர், சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே,
அர்த்தம் புரியவில்லை என்றால், "அது சிங்கிள் மீனிங் தான்' என்று எடுத்துக்
கொள்ள வேண்டாம்.
யாராவது ஆபாசமாகக் கிறுக்கினால், அவர்களை திருத்த முயல
வேண்டாம். அது நம் வேலை இல்லை. இதை, எந்த ஊடகத்திலும் தவிர்க்க இயலாது.
பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கிப் போவதே நல்லது.
பேஸ்புக், ஜி-மெயில்,
ஸ்கைப், வாட்ஸப் போன்றவற்றிற்கு, தகவல் கொடுக்கும் முன், பல முறை யோசிப்பது
நல்லது. இல்லையென்றால், அதில் தொடர்பு கொள்கிறவர்களுக்கு பதில் சொல்லி,
நம் நேரம் விரயமாகும்.
கடைசியாக, முக்கியமாக ஒன்று... சொந்த
வாழ்க்கையில், சிரமம் ஏற்படுத்துமானால், ட்விட்டருக்கு, "குட்-பை'
சொல்லுங்கள். இவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துகளுக்கு, அதீத
முக்கியத்துவம் தராமல், "லைட்'டாக எடுத்துக் கொள்ளப் பாருங்கள்.
வலைதள
ஊடகங்களால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருக்கத்தான்
செய்கிறது. அன்னபட்சி போன்று நல்லதை மட்டும் எடுத்து கொள்ளலாமே!
***
நன்றி - உமா யசோ, கட்டோரா (
@umayasho , தினமலர்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» விமானத்தை அடித்து நொருக்கி குப்பை தொட்டியில் போடுவது எப்படி?
» விமானத்தை அடித்து நொருக்கி குப்பை தொட்டியில் போடுவது எப்படி? (நேரடி வீடியோ)
» மனிதனின் குப்பை கிடங்காகும் பூமிப்பந்து-குப்பை குறைய ஒரு எளிய உத்தி
» பெண்கள் மேக் அப் போடாமலேயே அழகாவது எப்படி?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum