Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 5
+2
KAPILS
mmani
6 posters
Page 1 of 1
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 5
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 5
------------------------------------
சிறிது ஆர்வம்,அக்கறை இருந்தால் போதும் எந்த பழைய பொருளையும் உபயோகமானதாக மாற்றலாம்.
தோட்டம் போட இடம் இல்லை என்பவர்கள் ...தேவையில்லாம பழைய பொருட்கள்
வீட்டில் அடைஞ்சு கிடக்கு என்பவர்கள்...இனி இவை இரண்டையும் ஒன்று சேருங்கள்
...அழகான தோட்டம் ரெடி !
------------------------------------
சிறிது ஆர்வம்,அக்கறை இருந்தால் போதும் எந்த பழைய பொருளையும் உபயோகமானதாக மாற்றலாம்.
தோட்டம் போட இடம் இல்லை என்பவர்கள் ...தேவையில்லாம பழைய பொருட்கள்
வீட்டில் அடைஞ்சு கிடக்கு என்பவர்கள்...இனி இவை இரண்டையும் ஒன்று சேருங்கள்
...அழகான தோட்டம் ரெடி !
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 5
வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த்தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலையாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உருவாக்கலாம். சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும். பெரிய இடத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு வகையில் ஒரு புதிர் தான். நடக்கும் தவறு எதனால் ஏற்படுகிறது என்ற குழப்பம் நிலவும். ஆனால் சிறிய இடத்தில் போடும் தோட்டத்தில் எந்த வகையான தவறும் நடக்க வாய்ப்பில்லை. தவறாக நட்ட செடி கூட, சிறு தோட்டத்தில் பார்க்க அழகாகத் தான் தெரியும். அதற்கு முதலில் யோசிக்க வேண்டியது கிடைத்த சிறு இடத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தான். மிகவும் சின்ன இடம் என்பதால் ஒரு மேஜையும், கொஞ்சம் நாற்காலிகளும் போடுமளவுக்குத் தான் இடம் இருக்கும். அப்படி தேவையில்லாமல் இருக்கும் சிறு இடங்களை, வீட்டினுள் இருந்து பார்க்கும் போது ஒரு ஓவியத்தைப் போல் அழகாக தெரிந்தால் எப்படி இருக்கும்? பெரும்பாலும் சிறு தோட்டம் அமைக்கும் போது சவாலான விஷயமாக இருப்பது, தோட்ட எல்லைகளின் நெருக்கம். இது பெரும்பாலும் அசிங்கமாகவே அமையும். இந்த குறையையே நிறையாக மாற்றலாம் தெரியுமா? எப்படியெனில், இந்த எல்லைகளை சுற்றி கொடிகளை படர விடலாம். தோட்டத்தில் உள்ள செடிகளின் பெரிய இலைகளுக்கு முன் இருக்கும், இந்த கொடிகளின் சிறு இலைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். இல்லையெனில், தோட்டத்தில் உள்ள வேலிக்கு கருப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேண்டுமெனில், கிரீன் வால் என்ற வேலி வகையையும் அமைக்கலாம். இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் செடிகள் நன்கு வளர உதவி புரியும். சரி இப்போது இணைப்பைப் பற்றி யோசிக்கலாமா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சள் நிற இலைகளைக் கொண்ட மரங்களை வளர்த்துள்ளாரா? அப்படியானால் நீங்களும் மஞ்சள் நிற இலைகளை கொண்ட செடிகளை தோட்டத்தில் வளர்த்து வரலாம். அப்படிச் செய்தால், வீட்டிற்குள் இருந்து பார்க்கும் போது உங்கள் சிறிய தோட்டம் கூட பெரியதாக தெரியும். தோட்டம் அமைக்கும் திட்டம் எளிமையாக இருக்க வேண்டும். இந்த எளிமை குறைய குறைய, சிக்கல்கள் அதிகமாகும். அழகும் குறைந்து கொண்டே போகும். தோட்டத்துக்கு தேவையான பொருட்களையும், செடிகளையும் குறைந்த அளவிலேயே தேர்ந்தேடுக்க வேண்டும். வீட்டையும், தோட்டத்தையும் இணைக்க ஒரு பாதையை உருவாக்கி, அந்த பாதையில் வீட்டில் உள்ள தரையை போலவே மரப்பாதை, சிமெண்ட் அல்லது டைல்ஸ் போட்டு அழகை கூட்டலாம். இப்படி செய்தால் இந்த இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், மேலும் தோட்டத்து எல்லைகள் தெளிவில்லாமலும் போய்விடும். வேண்டுமானால் இந்த இடத்தை பெரிய பொருட்களால் நிரப்பி, மேலும் அழகைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெரிய சிலையையோ அல்லது மேஜை நாற்காலிகளையோ போடலாம். இது இன்னும் மெருகேற்றும் வகையில் அமையும். இருப்பினும், செடிகளை கவனமாக தேர்ந்தேடுங்கள். ஏனெனில் இருப்பதிலேயே சின்ன மரம் தான் வெகு விரைவில் 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் வளரும். அதனால் பராமரிப்பது கடினமாகும். எனவே செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி
வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?
பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக, நம் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வீடுகள், குடியிருப்புகள் கட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக தனி இடம் ஒதுக்குவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது. சிறிய இடம் இருந்தாலும், அதிலும் ஒரு குடிசையைப் போட்டு வாடகைக்கு விடும் மனநிலையில் தான் அனைவரும் இருக்கின்றனர்.
மாடித் தோட்டம்
இதற்கு மாற்றாகத்தான் வீட்டின் மாடிப்பகுதியில் காய்கறி மற்றும் அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் வளர்க்கும் முறையான மாடித் தோட்ட வளர்ப்பு முறை பரவலாக பெருகி வருகிறது. இதனை ‘கூரைத் தோட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த முறையின் மூலம் இரு வழிகளில் நாம் பலன் அடையலாம். ஒன்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மற்றொன்று வீட்டின் மாடிப் பகுதியில் அமைக்கப்படும் தோட்டமானது வீட்டின் மேற்பரப்புக்கு ஒரு தனி அழகையும், இயற்கை சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
மாடித் தோட்டம் அமைப்பது என்றால், முதலில் என்ன செய்ய வேண்டும்? எப்படி தோட்டம் அமைக்க வேண்டும்? செடி, கொடிகளை எப்படி பராமரிப்பது? போன்ற குழப்பங்கள் தேவையில்லை. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் பெ.சாந்தியை தொடர்பு கொண்டு, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
மாடித் தோட்டம் அமைப்பது பற்றி தோட்டக்கலை உதவி பேராசிரியர் கீ.ஆ.சண்முகசுந்தரத்திடம் கேட்டோம். அவர் கூறிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
செடிகள் தேர்வு
மாடித் தோட்டம் அமைக்கும் போது செடிகளை தேர்வு செய்வதில் கவனம் அவசியம். பொதுவாக செடிகள் ஆணி வேர் மற்றும் சல்லி வேர் தொகுப்பை கொண்டதாக இருக்கும். இதில் ஆணிவேர் தொகுப்பை கொண்ட செடிகளை நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நடவு செய்த 4 முதல் 5 ஆண்டுகளில் வேர் தொகுப்பானது வீட்டு கூரையின் கான்கிரீட் பகுதிக்குள் நுழைந்து சென்று விடும். இதனால் வீட்டிற்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக் கிறது. எனவே சல்லி வேர் தொகுப்பு கொண்ட செடிகளை தேர்வு செய்வதே நல்லது.
வீட்டு மாடியில் அமைக்கப்படும் காய்கறி தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறி பயிர்களையும் நடவு செய்யலாம். பழ பயிர்களை வாழையும் நடவு செய்ய முடியும். காற்று வீசும் காலங்களில் வாழையின் வளர்ச்சிக்கேற்ப ஊன்றுகோல் கொடுத்து பாதுகாக்க வேண்டும். அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகளையும் நடவு செய்து பராமரிக்க முடியும்.
தோட்டம் அமைப்பது...
மாடியில் தோட்டம் அமைக்கும் போது கூரைகளில் தளம், தொடர்ந்து வரும் ஈரத்தினால் பாதிப்படையாமல் இருக்க டேம் ரூப் பெயிண்ட்டிங் என்ற ஒரு வகையான பெயிண்ட் அடித்த பின்பு தோட்டம் அமைக்கலாம். மாடிப்பகுதியில் தொட்டி போன்ற அமைப்பை கூரையின் கான்கிரீட் பகுதியில் உருவாக்கி அதனுள் மண் கலவையை நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது தண்ணீர் கூரையின் உட்பகுதியில் புகாதவாறு நீர் தடுப்பான் (வாட்டர் புரூப்) மூலம் பாதுகாக்க வேண்டும்.
மேலும் சிமெண்டு தொட்டிகள், பிளாஸ்டிக் பீப்பாய்கள், மர பீப்பாய்கள், மண் தொட்டிகள், பலவிதமான அளவுகளில் உள்ள டிரம்கள் போன்ற கொள்கலன்களிலும் செடிகளை வளர்க்கலாம். கொள்கலனை சுத்தமாக கழுவிய பின் அடிப்பகுதியில் வடிகாலுக்கான துவாரம் அமைக்க வேண்டும்.
தொட்டிகளிலும் மற்ற கொள்கலன்களிலும் செடிகளை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். செடிகளுக்கு நீர் ஊற்றும் போது, மண்ணில் உள்ள ஈரப்பதம், வெப்பம், பயிர் வகை, பயிர்களின் நிலை, கொள்கலன்களின் அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு போதுமான அளவு நீர் ஊற்ற வேண்டும். கோடைக் காலங்களில் அதிகளவு நீர் தேவைப்படும். ஒரு நாளைக்கு இரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதற்காக அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுவதும் தவறாகி விடும். எனவே மேற்பரப்பு மண்ணை ஒரு அங்குலம் அளவு தோண்டிப் பார்த்து, ஈரம் இல்லை என்றால் மட்டுமே நீர் விட வேண்டும். மண்ணின் கீழ்பரப்பில் தேவையான அளவு ஈரம் இருந்த போதும், ஆவியாதல் காரணமாக மேற்பரப்பு உலர்ந்து விடும். எனவே மேற்கண்ட முறையை கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
களை எடுத்தல்
கலப்பு உரங்களை மேலுரமாக இடுவதன் மூலம் செடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கலாம். டை– அமோனியம் பாஸ்பேட், யூரியா அல்லது அமோனியம் சல்பேட் போன்றவைகளை சிறிய அளவில் இடலாம். அதிக அளவிலான உரமும் செடிகளுக்கு தீங்கை விளைவிக்கும். உரமிட்ட உடனேயே நீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியம். இயற்கை உரங்களான மண் புழு உரம், மக்கிய தென்னை நாற்கழிவு மற்றும் இலை மக்குகளை செடிகளுக்கு இட வேண்டும்.
களை எடுக்கும் போது கைக்களையே மிகவும் சிறந்தது. இதன் மூலமே வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கும். கீரை வகைகளான தண்டுக் கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி போன்றவற்றில் களை எடுக்கும் போது மிகவும் கவனமாக, வேர்களை பாதிக்காத வகையில் களை எடுக்க வேண்டும். மார்க்கெட்டுகளில் அரிதாக கிடைக்கும் வெந்தயம், லீக், சோயா போன்றவற்றை தொட்டிகளில் வளர்த்து பயனடையலாம். கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றையும் பெரிய அளவிலான கொள்கலன்களில் வளர்க்க முடியும்.
அலங்கார செடிகள்
இவ்வகை செடிகளை வளர்க்கும் போது கொள்கலன்களில் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு எருவை கலந்து நிரப்பி, குளிர்ந்த நீரை பாய்ச்ச வேண்டும். தண்டுகள், விதைகள் அல்லது பதியங்கள் மூலம் தான் பெரும்பாலும் செடிகள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகள் படர்ந்து வளர்வதற்கு பற்றுக்கோல் மற்றும் இதர சூழ்நிலையை நெடிகள் நட்டவுடன் அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் செடி, கொடிகளை அவ்வப்போது வெட்டி வளர்த்தால் செடிகள் நன்றாக வளரும். காய்ந்த கொடிகளையும் காய்ந்த இலைகளையும் நீக்கி வந்தால் செடிகள் அழகாக காட்சியளிக்கும்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. வீடுகளிலேயே தோட்டம் அமைத்து பராமரிப்பது போன்ற இந்த வேலைகளை செய்வது பயனுள்ள பொழுது போக்கு அம்சமாக இருக்கும். இயந்திர வாழ்வில் இருந்து சிறு மாறுதலும் கிடைக்கும். மேலும் இயற்கையான சூழ்நிலைக்கும் இவ்வகை தோட்டங்கள் வழிவகுக்கும். காலையிலேயே தோட்ட பராமரிப்பு வேலையில் ஈடுபடும்போது, உடலும் மனமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!
» வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு
» வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாகச் செடி வளர்க்க..!
» வீட்டுக் காய்கறி தோட்டம்-விவசாயக்குறிப்புக்கள்,
» மொட்டைமாடியில் தோட்டம் "ஷிஜி"
» வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு
» வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாகச் செடி வளர்க்க..!
» வீட்டுக் காய்கறி தோட்டம்-விவசாயக்குறிப்புக்கள்,
» மொட்டைமாடியில் தோட்டம் "ஷிஜி"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum