Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்"............... !
2 posters
Page 1 of 1

இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை
முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட
அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு
கூறுகிறது.
பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய
காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது.இந்தியாவில்
இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட
அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில்தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள்
அழியாமல் உள்ளன.
ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற
வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது..கி.பி.895 இல்
ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை
எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by ..நீலகண்ட சாஸ்திரி)அனுராதபுரத்தை
கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை
சூடினான்.
சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது
பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும்
விரும்பவில்லை..ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க
நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும்
அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே
தரைமட்டமாக்கினான்.
ராசேந்திரச் சோழன்,இலங்கையின் தலைநகரம்
என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று
பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான்
ராசேந்திரச் சோழன்.
நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம்
என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும்.
அதுமட்டுமன்றி.பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து
வழிபட்டான் இப்பெரு மன்னன்.
இன்றும் அந்தச் சிவன் கோயில்
அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின்
இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.
ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும்
யானைப்படை,குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள்மூலம் கொண்டுவந்து தரை
இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி
கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன்
என்பது ஆகும்.
எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று
என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப்
பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப
மக்கள் நிலத்தை தோண்டியபோது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன்
சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து
எடுக்கப்பட்டன.
செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான
நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது
குறிப்பிடத் தக்கது.
ஒருமுறை பரப்புரைக்கு நான் அங்கே சென்றவேளை
அப்படியான சோழர்களின் காசுகளில் சில என் கையிலும் கிடைத்தன. ராசேந்திரச்
சோழன் கட்டைக்காட்டின் ஊடாக படைகளை நகர்த்தி சென்ற வழித்தடத்தின் சில
சுவடுகள் கட்டைக் காட்டுக்கும் உடுத்துறைக்கும் இடையில் இருப்பதையும் நான்
கண்டிருக்கிறேன்.
இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சோழர்களின் கப்பல்களில் பயன்படுத்திய நங்கூரம்! பூம்புகார் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது!
» ஒரு போரளியின் குருதிச் சுவடுகள்
» காலத்தால் அழியாத இலட்சியத்தின் சுவடுகள் ||
» புனிதச் சுவடுகள் வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்
» ஈழத்தில் நடந்தது படுகொலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum