TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி!

Go down

தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி! Empty தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி!

Post by அருள் Fri May 10, 2013 7:30 pm

சீனாவின் சர்வதேச வானொலி நிலையம் 1963-ம் ஆண்டு முதல் தமிழ் வானொலிப்
பிரிவை நடத்தி வருகிறது. ஐம்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் இந்த வருடத்தில்
தமிழ் நாட்டில் எப்.எம் வானொலி நிலையத்தை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு
உள்ளது.

சென்னையில் உள்ள சில எப்.எம் வானொலி நிலையங்களுடன் இதற்கான
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக, சர்வதேச சீன வானொலியின் தமிழ்
பிரிவின் இணை இயக்குனர் கெய் ஜுன் அக வானி தெரிவித்தார்.

சர்வதேச சீன வானொலி நிலையம் தமிழ் மட்டும் அல்லாமல் இந்தி, பெங்காலி
மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் ஒலிபரப்பு செய்து வருகிறது. சீன மொழியில்
உள்ள நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்து ஒலிபரப்புவதன் மூலம் சீனாவின்
கலாச்சாரத்தை இந்திய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என சீன
அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி! 10-m-China-China-logo
இந்த சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 50 வருடங்கள் ஆகின்றன.இந்த சீன
வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.இங்குள்ள
ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப்
படிப்புகளை முறையாகக் கற்ற பின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.

இது குறித்து பல தகவல்களை நமக்கு கூறிய தங்க ஜெயசக்திவேல்”சீனா ரேடியோ
இண்டர்நேஷனல்’ 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ்
ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது.
சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில்
தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20
மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத்
தொடங்கினர்.

அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து
மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி,
சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர்
வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர். முதலில் தமிழ் கற்ற அந்த
மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன்
தொடங்கப்பட்டது.

தொடக்க காலத்தில் அதன் பெயர் “பீகிங் வானொலி’ என்று இருந்தது. அதன் பின்
“பெய்ஜிங் வானொலி’ எனப் பெயர் மாற்றம் பெற்று இன்று “சீன வானொலி’ என்று
தமிழிலும் “சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை.

தொடக்க காலத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ் சேவை 2004 முதல்
ஒரு மணி நேரச் சேவையாக உலா வந்தது. தினமும் இந்திய நேரம் இரவு 7.30 முதல்
8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு
செய்யப்படுகிறது. மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலையும் 7.30 முதல்
8.30 வரையும், 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப்
பெட்டியில் மட்டுமே கேட்க முடியும்.

இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச்
சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக்
கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை
நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும்
நிகழ்ச்சிகள் ஆகும்.

“தமிழ் மூலம் சீனம்’ என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள்
மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும்
புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில்
ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு
இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக்
கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

நேயர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நேருக்கு
நேர், நேயர் நேரம், நட்புப் பாலம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும்,
நேயர் கடிதம் மற்றும் நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி
வருகிறது. இதுதவிர சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஒவ்வோராண்டும் பொது
அறிவுப் போட்டியை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகளை
வழங்குவதோடு பம்பர் பரிசாக ஒரு நேயரை சீனாவுக்கு இலவசப் பயணமாக அழைத்துச்
செல்கின்றனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தமிழக நேயர்கள் இலவசப் பயணம்
மேற்கொண்டுள்ளனர்.

சீன வானொலி தமிழ்ப் பிரிவினில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது
பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். சுந்தரம்,
கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி போன்ற அறிவிப்பாளர்கள் சீன
வானொலியின் நேயர்கள் மனதினில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர்கள்.
சீன வானொலிக்கு நேயர்கள் கடிதம் எழுதச் சிரமம் இருக்கக் கூடாது
என்பதற்காக, நேயர்களுக்கு இலவச வான் அஞ்சல் கடித உரைகளை அனுப்பி
வைக்கின்றனர். இதன் மூலம் நேயர்கள் விமர்சனக் கருத்துகளை பைசா செலவில்லாமல்
அனுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த வானொலிக்காகவே “அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றம்’
செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வோராண்டும் நேயர்கள் கூடும் நிகழ்வாக
கருத்தரங்கங்களை நடத்துகின்றனர். இணையம் மற்றும் கைப்பேசியிலும் சீன
வானொலியைக் கேட்கலாம். சீன வானொலி தமிழ்ப் பிரிவை மின் அஞ்சல் ஊடாகவும்
தொடர்பு கொள்ளலாம்.என்று கூறினார்.

மேலும் தகவலுக்கு:

வான் அஞ்சல் முகவரி

TAMIL SERVICE CRI-9,
CHINA RADIO INTERNATIONAL
P.O.Box 4216, BEIJING
P.R.CHINA 100040

வெப்சைட் :http://tamil.cri.cn/

Switch it on: China Radio to start Tamil FM channel in India
******************************************************************************
China Radio International’s Tamil service is all set to launch its FM
station in India as part of its 50th anniversary this year.CRI Tamil,
which broadcasts on shortwave in Tamil Nadu, is in talks with some FM
stations in Chennai, said Cai Jun aka Vani, deputy director of the Tamil
department of CRI in Beijing.“We have already been broadcasting on
shortwave in Tamil Nadu. We are in talks with local FM stations in Tamil
Nadu for distribution. This will establish our footing in the FM area
there,” she says.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு
» தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு: ராமதாஸ்
» தமிழகத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு வழங்க புதிய திட்டம்
» எண்ணூரில் ரூ.3,600 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
» பிரபாகரன் இருக்காரு -தமிழகத்தில் வெடித்த புதிய பர பரப்பு video

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum