Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இடுப்பு நோகாமல் பிரசவமா?
2 posters
Page 1 of 1
இடுப்பு நோகாமல் பிரசவமா?
இந்திய
நாகரிகத்தின் தனிச்சிறப்பே வாழ்க்கை இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதுதான்.
இயற்கைக்கு ஒவ்வாத எதையுமே பண்டைக்கால இந்தியர்கள், அதிலும் குறிப்பாக,
இந்தியாவின் மிக மூத்த குடி என்று ஆய்வுகள் நிரூபிக்கும் தமிழர்கள்
கடைப்பிடித்ததில்லை என்பதை சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. ஆனால், கடந்த
இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மெல்ல மெல்ல நம்மை
இயற்கையைப் புறந்தள்ளி, நமது நடைமுறை வாழ்க்கையில் எல்லாமே
செயற்கையாகிவிட்ட நிலைமையைத் தோற்றுவித்து வருகிறது.
மனிதனின் அடிப்படை
என்பதே தாய்மையிலிருந்துதான் தொடங்குகிறது. தாய், தாய்ப்பாசம், தாய்மை
உணர்வு போன்றவை காலங்கள் மாறினாலும், சூழ்நிலைகள் மாறினாலும் மாறாதவை
என்கிற உண்மையை யாரும் மறுக்க இயலாது. தாய்மையேகூட
கொச்சைப்படுத்தப்படுவதும், தேவையற்ற பாரம் என்று கருதப்படுவதும், தாய்மைப்
பேறு என்பதை செயற்கையாக்க முயல்வதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
சமீபகாலமாக
நடைபெற்றுவரும் உலக சுகாதார நிறுவனத்தில் ஆய்வுகள், ஒருபுறம் மகப்பேறு
முறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒரு விபரீதமான
போக்கையும் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில்,
அதிலும் குறிப்பாக, படித்த, பட்டணத்து மகளிர் மத்தியில், அறுவைச் சிகிச்சை
மூலம் பிரசவம் பார்ப்பது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன அந்த
ஆய்வுகள். இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறைகளும், ஆயுத உதவியுடன் பிரசவம்
பார்க்கும் உத்திகளும் தாய்க்கும் சேய்க்கும் அதிகமான ஆபத்துகளை
ஏற்படுத்தக்கூடியவை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று.
லான்செட்
என்கிற மருத்துவ இதழில் இந்தியாவில் நடைபெறும் மகப்பேறு பற்றிய ஆய்வுக்
கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்போது இந்தியாவில்
நடைபெறும் பிரசவங்களில் ஐந்தில் ஒன்று அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத
உதவியுடன் நடத்தப்படுவதாகக் குறிப்பிடும் அந்தக் கட்டுரை, இது தாய்க்குப்
பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் ஊறு
விளைவிக்கும் தன்மையன என்று குறிப்பிடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின்
வழிகாட்டுதல்படி, ஆண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு பிரசவங்கள் அறுவைச்
சிகிச்சை முறையில் நடைபெறுவது தவிர்க்க முடியாது என்றாலும், இந்திய சராசரி
அதைவிட 3 விழுக்காடு அதிகமாக 18 சதவிகிதம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது
அந்தக் கட்டுரை. மேலும், இந்த 18 விழுக்காடு அறுவைச் சிகிச்சை முறையிலான
பிரசவங்களில் ஏறத்தாழ 80 சதவிகிதம் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்றன
என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
நமக்கு மிகவும் கவலையளிக்கும்
நடைமுறை தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள். முடிந்தவரை இயற்கையாகப்
பிரசவம் பார்ப்பது என்கிற கடமை உணர்வு முற்றிலுமாக மாறி, தனியார்
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் முன்பு 5 சதவிகிதமாக இருந்தது
இப்போது 65 சதவிகிதம் வரை அறுவைச் சிகிச்சை மூலம், எந்தவித மருத்துவக்
கட்டாயம் இல்லாமலேயே நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு இந்திய
நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறது. மருத்துவமனைக்கு லாபம் சேர்க்கும் ஒரே
குறிக்கோளுடன் மருத்துவர்கள் தாய்மார்களிடம் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை
முறைக்குப் பரிந்துரைப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.
வேதனையில்லாமல்
பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் கருதத்
தொடங்கியிருப்பதும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத உதவியுடன் மகப்பேறு என்பது ஆபத்துகளை
உள்ளடக்கியது என்று தாய்மார்களிடம் மருத்துவர்களோ, அவர்களது பெற்றோர்களோ,
சமூக ஆர்வலர்களோ சொல்லிக் கொடுப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய
ஒன்று. இயற்கையான பிரசவத்தைவிட, இதுபோல அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறும்
பிரசவங்கள் பத்து மடங்கு அதிக ஆபத்தானவை என்பது தாய்மார்களுக்குத்
தெரிவதில்லை.
மேலைநாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளாக இயற்கையான
பிரசவத்தை வலியுறுத்தி இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த பத்து
ஆண்டுகளாக அறுவைச் சிகிச்சை முறை மற்றும் ஆயுத உதவியின்றி மட்டுமே பிரசவம்
அமைய வேண்டும் என்றும் அப்போதுதான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில்
உள்ள பாசம் நிரந்தரமாக இருக்கும் என்றும் பல தாய்மார்கள் மேலைநாடுகளில்
வலியுறுத்துகின்றனர். பிரசவ வலியைப் பெண்மையின் தனித்துவம் என்று
விளம்பரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையைப்
பரிந்துரைத்தால் கேள்வி கேட்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை நமது
நாட்டிலும் ஏற்பட வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.
தேவையற்ற
அறுவைச் சிகிச்சை மற்றும் ஆயுத உதவியுடன் சிகிச்சை போன்றவை தேசிய அளவில்
நமது நிதியாதாரத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கான பல நோயாளிகளின்
உடனடித் தேவைகளையும்கூடப் பாதிக்கின்றன. கிராமப்புறங்களிலும் இதே நிலை
ஏற்படுமானால், மகப்பேறுக்கான நிதி ஒதுக்கீடு தேவையில்லாமல் அதிகரிக்கக்
கூடும். தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்களின் தலையீடு
உண்மையாகவே தேவைப்படும் தாய்மார்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலைமையைக்கூட
ஏற்படுத்த வாய்ப்புண்டு.
மருத்துவர்களும், பெற்றோர்களும்,
தாய்மார்களும், இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து முடியும்வரை மகப்பேறு
என்பது ஆரோக்கியமான நன்மக்கள் பேறாக இருக்க உறுதிபூண வேண்டும். அதுதான்
தாய்சேய் நலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். லாப நோக்கில் செயல்படும்
மருத்துவர்களும், சுலபமாகப் பிரசவித்துவிட வேண்டும் என்று நினைக்கும்
தாய்மார்களும் ஆரோக்கியமாக வளர வேண்டிய குழந்தையின் எதிரிகள்...
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இடுப்பு நோகாமல் பிரசவம் என்பது இயற்கைக்கு எதிரல்லவா?
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இடுப்பு சதை குறைய
» இடுப்பு வரைதான் உடம்பு அசத்துகிறார் சீன முதியவர்
» இடுப்பு, எலும்பு வலி
» இடுப்பு மூட்டு வலி குணமாக பாட்டிவைத்தியம்
» இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்
» இடுப்பு வரைதான் உடம்பு அசத்துகிறார் சீன முதியவர்
» இடுப்பு, எலும்பு வலி
» இடுப்பு மூட்டு வலி குணமாக பாட்டிவைத்தியம்
» இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum