Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரகாசமான வாய்ப்புகளை வழங்கும் கண் மருத்துவப் படிப்புகள்!
2 posters
TamilYes :: செய்திக் களம் :: கல்வி களம்
Page 1 of 1
பிரகாசமான வாய்ப்புகளை வழங்கும் கண் மருத்துவப் படிப்புகள்!
[You must be registered and logged in to see this image.]உலகில்
பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக் கொண்டிருக்கிறது
நமது தேசம். சுமார் 120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில்
பார்வைக்குறைபாடு உடைய மக்கள் சுமார் 42 சதவீதம். இவர்களில் பலரும்
தங்களுக்கு அப்படி ஒரு குறைபாடு இருப்பதையே தெரியாதவர்களாக, இருக்கிறார்கள்
என்பதுதான் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மை.
அதேநேரத்தில், இந்தக் குறையை கண்டறிந்து தேவையான சேவையை வழங்கி, கண்
பார்வையை மீட்டுத்தரக் கூடிய அல்லது கண் பார்வையை திருத்தியமைத்துக்
கொள்ளக்கூடிய, அல்லது இருக்கின்ற பார்வையை தக்க்வைத்துக் கொள்ள்க்கூடிய
சேவையை வழங்கும் மனித வளம் தேவையான அளவு இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் மனிதனின் கண் பார்வையைக் காத்திடும் பணியில் கண்
மருத்துவத்துறையில் கல்வி பயில்வதன் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை
அமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை மருத்துவத் துறையில் வாய்ப்பு எப்போதும்
இருந்து கொண்டேதான் இருக்கும். அதுபோல கடைசி மனிதனுக்கு கண் உள்ளவரை கண்
மருத்துவத்துறையில் வாய்ப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதிலும்
அறிவியல், தகவல், தொழில் நுட்பம் என்று மனிதனின் கற்றுக்கொள்ளும்
செயல்பாட்டிலும், மனிதனின் கண்கள் சுமார் 80 சதவீதம் முக்கிய பங்கு
வகிக்கிறது.
அந்த வகையில், கண் மருத்துவத்தில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றது
என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பாக, கேப்பிட்டேஷன் ஃபீ அதாவது நன்கொடை
ஏதுமேயில்லாமல், நமது மதிப்பெண்களை மட்டுமே ஒரு விசிட்டிங் கார்டாகக்
கொண்டு, அதனை முக்கியமான அடையாளமாகக் கொண்டு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகம், ராஜஸ்தானின், பிலானியில் உள்ள உலகப்புகழ் பெற்ற
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் வழங்கும் டிப்ளமோ,
டிகிரி, போஸ்ட் கிராஜுவேஷன் படிப்பதற்கான வாய்ப்புகள் இந்த தமிழகத்தில்
கிடைக்கின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே ஆகும்.
சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு
அங்கமான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி மற்றும் தி சங்கர நேத்ராலயா அகாடெமி
கண் மருத்துவத்துறையில் பல்வேறு டிப்ளமோ, டிகிரி மற்றும்
பட்டமேற்படிப்புகளை வழங்குகிறது.
பி.எஸ். ஆப்டோமெட்ரி (B S - OPTOMETRY):
இது 4 வருட பட்டப்படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல் / கணினி அறிவியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு
மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தப் படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில்
ஆப்டோமெட்ரிஸ்ட்களாகவும், ரெஃப்ராக்ஷனிஸ்ட்களாகவும்,கண் மருத்துவமனைகளில்
பல்வேறு உட்பிரிவுகளில் வல்லுநர்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும்,
எம்.ஃபில் மற்றும் பி.எச்டி முடித்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில்
வல்லுநர்களாகவும், கல்விப்பணியிலும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள்.
பலர் சொந்தமாக ஆப்டிகல்ஸ் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் மையங்கள் நடத்தி
வருகின்றார்கள். இதற்க்கான மாணவர்கள் அனுமதியை பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப்
டெக்னாலஜியே நடத்துகிறது.
மேலும் விவரங்களை அறிய நாடவேண்டிய வலைத்தளம் [You must be registered and logged in to see this link.]
அட்மிஷன் மற்றும் விண்ணப்பங்களுக்கு [You must be registered and logged in to see this link.] வலைத்தளத்தை நாடலாம். முக்கிய குறிப்பு, [You must be registered and logged in to see this image.]இந்தப் படிப்புக்கு நீங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
பி.எஸ்சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி (BSc MEDICAL LAB TECHNOLOGY)
இது தி தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் மூன்று
வருட பட்ட படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தப் படிப்பினை படித்தவர்கள் மருத்துவமனைகளில் மெடிக்கல் லேப்
டெக்னீஷியன்களாகவும், மருந்து கம்பெனிகளில் மெடிக்கல் லேப்
டெக்னீஷியன்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும், பிஎஸ்.சி. முடித்தவர்கள்
எம்.எஸ்.எல்.டி மற்றும் பி.எச்டி படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அவற்றை முடித்தவர்கள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில்
அறிவியலறிஞர்களாகவும், வல்லுநர்களாகவும், பல்கலைக்கழகங்களில் கல்விப்பணி
மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள்.
டிப்ளமோ இன் ஆப்தால்மிக் நர்சிங் அஸிஸ்டெண்ட் (DIPLOMA IN OPHTHALMIC NURSING ASSISTANCE):
தி தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் இரண்டு வருட
பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்
படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பினை படித்தவர்கள்
கண் மருத்துவமனைகளில் கண் மருத்துவ உதவியாளர்களாகவும், வார்டுகளிலும்
ஆபரேஷன் தியேட்டர்களிலும் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாகவும்
பணியாற்றுகிறார்கள். இந்தப் படிப்பினை முடித்தவர்கள் இந்தியா முழுவதிலும்
உள்ள கண் மருத்துவ மனைகளிலும், சிலர் வெளிநாடுகளில் உள்ள கண்
மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி மற்றும் அனஸ்தீசியா (DIPLOMA IN OPERATION THEATRE TECHNOLOGY AND ANESTHESIA):

பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்

இந்தப் படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது பொதுவாக
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆபரேஷன் தியேட்டர்களில் ஆபரேஷன் தியேட்டர்
உதவியாளர்களாகவும், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்களாகவும், மயக்க
மருந்தியல் நிபுணர்களுக்கு உதவியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்த
படிப்பினை முடித்தவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கண் மருத்துவ
மனைகளிலும், சிலர் வெளிநாடுகளில் உள்ள கண் மருத்துவமனைகளிலும் பணியாற்றி
வருகிறார்கள்.
டிப்ளமோ இன் ரெஃப்ராக்ஷன் அண்ட் டிஸ்பென்சிங் (DIPLOMA IN REFRACTION AND DISPENSING):

பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்

அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துக்காக
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில்
ரெஃப்ராக்ஷனிஸ்ட்களாகவும், கண் மருத்துவமனைகளில் பல்வேறு உட்பிரிவுகளில்
உதவியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். சங்கர நேத்ராலயாவில் இந்த படிப்பினை
படிப்பவர்கள் மேலும் இரண்டு வருடங்கள் படித்து ஆப்டோமெட்ரிஸ்ட்களாக
முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. கண்ணாடிக்கடைகளில்
உதவியாளர்களாகவும், கஸ்டமர் ரிலேஷன் அதிகாரிகளாகவும் பணியாற்ற வாய்ப்பு
இருக்கிறது.
மேற்குறித்த அனைத்து படிப்புகளுக்கும் ப்ளஸ் 2 படித்து விட்டு எதிர்காலம்
குறித்த கேள்விகளோடு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற வலைத்தளத்தையோ அல்லது [You must be registered and logged in to see this link.] என்கிற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.
சங்கர நேத்ராலயா அகாடெமியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டு வருட பட்ட
மேற்படிப்பான எம்.பி.ஏ ஹாஸ்பிடல் அண்ட் ஹெல்த் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட்
(MBA HOSPITAL AND HEALTH SYSTEMS MANAGEMENT) படித்து விட்டு
மருத்துவமனைகளில் நிர்வாகதுறைகளில் பணியாற்றுவதற்க்கான வாய்ப்புகளும்
இருக்கிறது.
மேலும், மருத்துவ மனைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்
கொள்வதற்க்காகவும், தற்போதைய வளர்ச்சிக்கேற்றவாறு தங்களது வேலை மற்றும்
தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கென வார இறுதி நாட்களில் வகுப்புகளில் கலந்து
கொள்ளும் வகையில் மூன்று மாத சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஹாஸ்பிடல்
மேனேஜ்மெண்ட் Certificate Course in Hospital Management (சனிக்கிழமை
பிற்பகல் வகுப்புகள்), மற்றும் ஒரு வருட எக்ஸிக்யூட்டிவ் டிப்ளமோ இன்
ஹெல்த் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட் Executive Diploma in Health Systems
Management (ஞாயிற்றுக்கிழமை முழு நாள் வகுப்புகள்)மிகச்சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.
இந்த வகுப்புகளில் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தும் டாக்டர்கள் மற்றும்
மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்று
பலனடைந்துள்ளனர். இது வரை மூன்று குழுக்கள் இந்த படிப்புகளை
முடித்துள்ளனர்.
நம் நாட்டில் கண் மருத்துவம் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாமல்,
கண்ணாடிக்கடைகளில் பணியாற்றுகிறவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும்
இருக்கிறார்கள். அவர்கள் தங்களது சேவையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்
"டிஸ்டன்ஸ் லெர்னிங் ப்ரோக்ராம் இன் ஆப்டிக்கல் டிஸ்பென்சிங்" Distance
Learning Program in Optical Dispensing என்ற கோர்ஸ் கடந்த ஐந்து
வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக நடைபெறுகிறது.
அந்த வகையில் பார்வையிழப்பு என்னும் பிரச்னைக்கு எதிராகச்
செயல்படுவதற்க்கான ஒரு படையினை தயார் செய்யும் வகையில் கண் மருத்துவம்
சார்ந்த படிப்புகள் ஒரு வலிமையான பாரதத்தினை உருவாக்க முனைந்துள்ளது என்பது
மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு மட்டுமல்லாது சுய தொழில் வாய்ப்புக்கும் வழி
வகுத்துத் தருகிறது என்பது உண்மை.
தி சங்கர நேத்ராலயா அகாடெமி வரும் மே 18, 2013 (சனிக்கிழமை) அன்று காலை
9.30 மணி முதல் 12.30 வரை இலவச கல்வி ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
முகாம் நடைபெறும் இடம்: தி சங்கர நேத்ராலயா அகாடெமி, 9 வானகரம் -
அம்பத்தூர் ரோடு, அயனம்பாக்கம், சென்னை 600 095. - தொடர்புகொள்ள - 97104
85295 / 98406 55405 . முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
- அ.போ.இருங்கோவேள், மருத்துவ சமூகவியலாளர்.
kalvi.vikatan

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: பிரகாசமான வாய்ப்புகளை வழங்கும் கண் மருத்துவப் படிப்புகள்!
[You must be registered and logged in to see this image.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பிரகாசமான ஒளியுடன் பூமியின் வடமுனையை தாக்கிய சூரியப் புயல்!!
» சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம்!
» நிச்சய வேலைக்கு உத்தரவாதம் தரும் படிப்புகள்!
» தடய அறிவியல் துறையில் தடம் பதிக்கும் படிப்புகள்
» ரேடியோ, வீடியோ, டிஸ்க் ஜாக்கி தொழிற் படிப்புகள்
» சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம்!
» நிச்சய வேலைக்கு உத்தரவாதம் தரும் படிப்புகள்!
» தடய அறிவியல் துறையில் தடம் பதிக்கும் படிப்புகள்
» ரேடியோ, வீடியோ, டிஸ்க் ஜாக்கி தொழிற் படிப்புகள்
TamilYes :: செய்திக் களம் :: கல்வி களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum