Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காங்கிரசுக்கு பயம்! லோக்சபாவில் பெண்கள் மசோதா தாக்கலாகுமா?
Page 1 of 1

பெண்கள்
இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே லோக்சபாவிலும்
நிறைவேற்ற வேண்டுமென்று இதற்கு ஆதரவு தந்த முக்கிய எதிர்க்கட்சிகளான
பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் கோரி வருகின்றன. ஆனால், ஆளும் காங்கிரசுக்கு
ஏற்பட்டுள்ள பயம் காரணமாக இந்த மசோதாவை தாக்கல் செய்யுமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை
செய்யும் மசோதா, ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த
மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென
இடதுசாரிகளும், பா.ஜ.,வும் கோரி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளின்
தயவால்தான் ராஜ்யசபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரசால்
நிறைவேற்ற முடிந்தது.பட்ஜெட் கூட்டத்தொடரின் முற்பகுதி முடிந்துவிட்ட
நிலையில், வரும் ஏப்., 15ம் தேதி அன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக
பார்லிமென்ட் கூடுகிறது. அப்போது பெண்கள் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏற்கனவே இம்மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்
என்று காங்கிரஸ் தைரியமாக கூறிவந்தாலும், பல்வேறு பிரச்னைகள் குறித்து
அக்கட்சி பரிசீலனை செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் 125ம் ஆண்டுவிழா
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்கட்சியின் சேவா தள பிரிவு நேற்று
டில்லியில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து
கொள்ளும் சோனியா, பெண்கள் மசோதா குறித்து நிச்சயம் அறிவிப்பு வெளியிடுவார்
என்றும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தனது 10 நிமிட உரையில்
பெண்கள் மசோதா பற்றி ஒருவார்த்தை கூட சோனியா குறிப்பிடவில்லை.
இத்தனைக்கும் சோனியாவுக்கு முன் பேசிய சேவாதள அகில இந்திய நிர்வாகி
மகேந்தர் ஜோஷி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எப்பாடுபட்டாவது
நிறைவேற்றியே தீருவோம் என்று பேசினார்.அதற்கு அரங்கில் பலத்த கைதட்டலும்
எழுந்தது. அடுத்து பேசிய சோனியா இதுபற்றி எதுவுமே குறிப்பிடாமல் பொதுவாகவே
பேசினார்.
அவர் பேசும்போது, 'சேவாதள அமைப்பு அரசியல்
அமைப்பல்ல. கட்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்
ஒரு அமைப்பு. அரசின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வதிலும்
இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது' என்ற அளவில் மட்டுமே
பேசினார்.நிகழ்ச்சியில் சேவாதள மேலிடப்பொறுப்பாளர் அமைச்சர் முகுல்
வாஸ்னிக், அமைச்சர் அம்பிகாசோனி, மோதிலால் ஓரா, அகமது படேல், ஜனார்த்தன்
திவேதி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி
நேரத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் யாரும் பேசவில்லை. முழுக்க
முழுக்க இந்தியில் மட்டுமே பேசினர். இதனால் தமிழகத்தில் இருந்து
வந்திருந்த சேவாதள தொண்டர்கள், 80 பேருக்கும் தலைவர்கள் பேசியது ஏதாவது
புரிந்ததா என்பது தெரியவில்லை.
பெண்கள் மசோதா குறித்து சோனியா பேசாதது ஏன் என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியாவது:ஏற்கனவே
300க்கும் அதிகமான எம்.பி.,க்களின் ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருந்த மத்திய
அரசு, ராஜ்யசபாவில் பெண்கள் மசோதா நிறைவேற்றப் பட்ட பின்னர் ஆதரவு
குறைந்துவிட்டது. குறிப்பாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம்
உள்ளிட்ட கட்சிகளின் 50 எம்.பி.,க்கள் ஆதரவு அரசுக்கு கிடைக்காமல்
உள்ளது.தனிப்பெரும்பான்மைக்கு 274 எம்.பி.,க்கள் தேவை என்ற நிலையில்,
தற்போது 10 முதல் 15 எம்.பி.,க்கள் வரை அரசுக்கு பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ்,
ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டபோது அரசுக்கு ஆதரவு அளித்து
ஓட்டுப்போடாமல் பிரச்னை செய்தது. கூட்டணிக்குள்ளேயே இப்படி பிரச்னை
இருந்து வருகிறது.
பெண்கள் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றுதில்
அரசுக்கு சிரமம் இருக்காது. காரணம் இங்கும் பா.ஜ., - இடதுசாரிகள் அரசை
ஆதரித்து ஓட்டுப்போட்டு மசோதாவை நிறைவேற்ற துணைநிற்பர். ஆனால் விலைவாசி
உயர்ந்துவிட்டதை காரணம் காட்டி அரசை, சபையில் வெட்டுத் தீர்மானம் கொண்டு
வந்து தோற்கடிக்கும் வகையில் இந்த எதிர்க்கட்சிகள் அணி திரளவுள்ளனர் என்ற
வதந்தி பலமாக தலைநகர் டில்லியில் உலா வந்து கொண்டிருக்கிறது.எனவே எந்த
அபாயத்தையும் சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. ஆகவே தான் பெண்கள் மசோதாவை
நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான்
சோனியாவும் தனது பேச்சில் பெண்கள் மசோதா குறித்து எதுவும் பேசவில்லை.

Similar topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» அமோக ஆதரவுடன் பெண்கள் மசோதா வெற்றி : ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு கிடைத்தது
» இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார் ஓப்பனாக
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
» உக்ரேனிய நாட்டு பெண்கள் விபச்சாரம் செய்ய வருகிறார்கள் என்று கூறி இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளிக்க மறுப்பதை எதிர்த்து அந்நாட்டு பெண்கள் திறந்த மார்புடன் போராட்டம் நடத்துகின்றனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum