Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
Page 1 of 1
பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
30 வயதைத் தொட்டவர்கள் வைட்டமின் டி- கால்சியம் செறிந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய்
முற்றுபெறும் நிலையில் உள்ள பெண்கள் கால்சியம், அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவுகளை சேர்க்க
வேண்டும்.
மெனோபசுக்குப் பின்னர் சோயாபீன்ஸ் சேர்த்துக கொண்டால் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கும். பெண்களை பொருத்தவரை
மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்சனைகள் வரலாம். எலும்பின் வளர்ச்சி உறுதிப்பாட்டுக்கு சிறுவயது
முதலே கால்சியம் சக்தி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் சிறு வயது முதலே காய்கறிகளையும், பழ
வகைகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் தான் 30 வயதை தொடும் போது ஏற்படும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க
முடியும். சிறிய வயதில் நாம் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் தான் வயதாகும் போது உடலுக்கு சக்தியை கொடுக்கும்.
பசுப்பாலும் பால் சார்ந்த உணவுகளும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். கீரை
வகைகள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் சாப்பிடுவதன் மூலம் மூட்டு பிரச்சனைகளை
தடுக்க முடியும்.
-மலைமலர்-
Re: பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
பிறந்தது முதல் 30 வயது வரை
எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும்
இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள்
சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு
முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த
அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள்
எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது
வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.
பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய்,
இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு
நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி
விவரம்.
இரண்டில்
ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால்
அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம்
பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு
நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந் திருப்பதும்
முக்கிய காரணம்.
35 வயது
வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக
உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது.
அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு
ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு
ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5
சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30
முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள்.
இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.
எலும்புகள்
கல் போன்று உறுதி கொண் டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து.
பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து
உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி
விடுகிறது.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச்
சத்து சமநிலையில் எலும்ப ரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க
இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம்
வரையிலும்.
மேலும்
ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால்
கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.
நோயைத் தடுக்கும் முறைகள் :
நடைப்பயிற்சி
ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’
அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.
மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.
ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான
அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை.
மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு
உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும்
பண்களுக்கு எலும் பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.
மாதவிலக்கு
நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த
சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

மனித உடலுக்கு உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும்
அனுப்பப்படுகின்றன. இந்த தாதுப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவற்றில்
ஏதேனும் ஒன்றில் பற்றாக்குறை உண்டாகும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
சீர்கேடடைகின்றன. மேலும் எலும்புகளின் வளர்ச்சிக்கும்
உறுதிப்பாட்டிற்கும் உடல் உறுப்புகளின் பலத்திற்கும் இவையே பயன் படுகின்றன.
உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், போன்ற தாதுப் பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.
இவற்றில் கால்சியத்தின் பயன்பாடுகள் பற்றியும் அவை எதில் அதிகம் நிறைந்துள்ளன என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.
கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம்
சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். வளர்ச்சி குன்றி
காணப்படும்.
இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றின் சுருங்கி விரியும் தன்மைக்கு கால்சியம்
மிகவும் உதவுகிறது. இதனால் உடலின் பாகங்களுக்குத் தேவையான இரத்தத்தை
இரத்தக்குழாய்கள் இலகுவாக கடத்துகின்றன.
நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு கால்சியம் சிறந்த
பணியாளாக செயல்படுகிறது. மேலும் இவற்றின் சுரப்பு நீரான என்ஸைம்
உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம்
சத்து இன்றியமையாதது. இரத்தம் உறைதலிலும் கால்சியம் சத்து முக்கிய பங்கு
வகிக்கிறது.
பற்களின் உறுதிக்கும் கால்சியம் சத்து முக்கியமானது. அதாவது உடலின்
அனைத்து செயல் பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாததாக இருக்கிறது.
உடலில் 99 சதவிகித கால்சிய சத்துக்கள் எலும்புகளிலும், பற்களிலும் சேமித்து
வைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படும்போது
கொடுப்பதுடன் மீதமுள்ளவற்றை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது. இது
வயதிற்குத் தகுந்தவாறு நடைபெறும்.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியத் தேவையாகும்.
கால்சியம் சத்து குறையும்போது முதுமையில் உடல் பலமிழக்கிறது. பெண்களுக்கு
கால்சியத் சத்து அவசியம் தேவையாகும். மாதவிலக்கு முடியும் தருவாயான
மெனோபாஸ் காலத்தில் அதிக அளவு கால்சியம் சத்து குறைவு உண்டாகும்.
தேவையான கால்சியம் சத்து
7 முதல் 12 மாத குழந்தைக்கு – 270 மி.கி.
1 முதல் 3 வயது வரை – 500 மி.கி.
4 முதல் 8 வயது வரை – 800 மி.கி.
9 முதல் 13 வயது வரை – 1300 மி.கி.
14 முதல் 18 வயது வரை – 1300 மி.கி.
19 முதுல் 40 வயது வரை – 1200 மி.கி
40 முதல் – 1100 மி.கி.
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதனால் எலும்புகள் பலமிழக்கின்றன. கருவில் இருக்கும்போதே தாய்க்கு
கால்சியம் சத்து குறைந்திருந்தால் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி
பாதிக்கப்படும்.
கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இதனால் மயக்கம்,
வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி
விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக
இரத்தம் செல்வதில்லை. இதனால் இதயநோய்கள் உண்டாக ஏதுவாகிறது.
தசைகள் சுருங்கும் தன்மை குறைவதால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். தசைகள் இறுகாமல் தொளதொளவென மாறிவிடும்.
கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள்
சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை
குறைகிறது. நகங்கள் வெளுத்துக் காணப்படும். பற்கள் தேய்மானம் அடையும்.
பற்களில் கூச்சம் உண்டாகும் பற்சிதைவு ஏற்படும்.
பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடு
குறைவதால் உடலுக்கு அதிக கால்சியம் தேவைப்படும். இதனால் எலும்புகளில்
சேமிக்கப்ட்ட கால்சியம் சத்துக்கள் உடல் எடுத்துக்கொள்கிறது. இதனால்
கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஓஸ்டியோபொராசிஸ் என்ற நோய் தாக்குகிறது.
இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, கை கால் வலி , எலும்பு
பலமிழப்பு போன்றவை உண்டாகும். இதுபோல் ஆண்களுக்கும் 50 வயதிற்கு மேல்
கால்சியம் குறைபாடு ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டைப் போக்க பல மருந்துகள்
தற்போது மருத்துவச் சந்தைகளில் விற்கப்படுகிறது.
ஆனால் உணவின் மூலம் இப்பற்றாக் குறையைப் போக்கி கால்சியம் இழப்பினால்
உண்டாகும் பாதிப்புகளை நீக்கி ஆயுள் முழுவதும் உறுதியாகவும் பலமாகவும்
வாழலாம்.
கால்சியம் சத்துநிறைந்த பொருட்கள்
பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
தினமும் பால் அருந்துவது நல்லது. அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட
பொருட்கள், பாலாடை, நெய் முதலியவற்றிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகம் உள்ளது.
கீரைகளில் அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்
கண்ணிக் கீரை, அகத்திக்கீரை, லட்சுக் கொட்டைக் கீரை, வெந்தையக் கீரை
போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம்,
திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள் இவற்றில் கால்சியம் அதிகம்
உள்ளது. முளைகட்டிய பயறு வகைகளில் அதிகம் உள்ளது. அதிலும் பச்சைப்
பயிற்றில் அதிக கால்சியம் உள்ளது.
நம் உடலுக்கு அவசியத் தேவையான கால்சியத்தை பெற இன்றிலிருந்தே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் .

Similar topics
» பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை..! ( இதைப் பெண்கள் அவசியம் படிக்கவேண்டும்.
» பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
» கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!
» கால்சியம் குறைவா இருக்கா ஜூஜுபி சாப்பிடுங்க
» How much calcium in milk? பாலில் கால்சியம் எவ்வளவு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum