TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by mmani Fri Apr 26, 2013 6:31 am

விவேகானந்தர் பொன்மொழிகள்!!!
***********************************

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! 562559_359618074159689_134914658_n
* நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றலை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஆன்மிக சக்தியாக மாற்ற வேண்டும்.


* நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும்
கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய
உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.

* மக்கள் என்ன
வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன்
இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து
கிடக்கும்.

* பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில்
நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த
ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ
உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட
சக்தியற்றதாகிவிடும்.

* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்.

* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.

* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.

* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.

* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.

* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.

* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

* நீங்கள் எல்லை இல்லாத வலிமை பெற்றவர்கள். உங்களின் உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.

* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.

* பலவீனத்திற்குப் பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பதே.

* உபநிஷதங்களில் இருந்து கிளம்பி, அறியாமைக் குவியல் மீது குண்டைப் போல
வெடிக்கும் சொல் "அஞ்சாமை' என்பது தான். இந்த ஒற்றைச் சொல்லில் தான்
வேதத்தின் சாரம் அடங்கியிருக்கிறது. இந்தச்சொல் தான் உலகையே மாற்றி
அமைக்கும்.

* கடுமையாக உழைக்க முன்வந்தால் குறிக்கோளை எளிதில் அடையலாம்.

* மனதில் வலிமை இருந்தால் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த நிரந்தரமான வாழ்வு
கிடைக்கும். பலவீனம் இருந்தால் இடையறாத துன்பமும், சித்திரவதையுமாக வாழ்வு
அமையும்.

* மனிதன் வலிமை பெற வேண்டுமானால், உண்மை மிக்கவனாக வாழ வேண்டும்.

* ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

* பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். அதனால், உடல் வலிமை மிக்கவராக ஆகுங்கள்.

* உலகில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்கள் லட்சியத்தை நோக்கி உறுதியுடன் செயல்படுங்கள்.

* தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமே உலகில் மிகப்பெரிய பாவம்.

* சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* மனிதர்கள், விலங்குகளை விட ஒழுக்கமானவர்களாக இல்லை. சமூக பொது அபிப்ராயம் தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது.

* குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.

* ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.

* தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதி படைத்தவன்ஆகிறான்.

* ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடித் தூங்க முடியாது.

* மனமும், உடலும் ஒருமித்து இருக்கும் போது எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.

* பெரிய விஷயங்களை நிறைவேற்றும்போது இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். அதனால் ஆண்மையோடு தொடர்ந்து முயற்சியுங்கள்.

* பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும்.

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.

* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.

* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.

* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.

* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.

* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

- விவேகானந்தர்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum