Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சோதனைக் கூடமா தமிழகம்? புதியதலைமுறை புலனாய்வு video
2 posters
Page 1 of 1
சோதனைக் கூடமா தமிழகம்? புதியதலைமுறை புலனாய்வு video
சர்வாதிகாரி
ஹிட்லரின் சிறைக் கொட்டடியில் மருந்து சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட
யூதர்கள் தாங்கள் எதிரிகளின் கையில் சிக்கியிருக்கிறோம் என்பதை
அறிந்திருந்தனர். ஆனால் அப்பாவித் தமிழர்களோ தாங்கள் சோதனை எலிகளாக
ஆக்கப்படுகிறோம் என்பதை அறியாமலே அந்தச் சோதனைகளில்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல சோதனைக்கூடங்கள் ரகசியமாக, மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில், மனிதர்களிடம் மருந்து
சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூடங்களின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்
உண்மைதானா என்பதை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறை
செய்திக் குழு அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை ரகசியமாக
கண்காணித்தது.
அந்த ரகசிய புலனாய்வில், கிளினிக்கல்
டிரயலுக்கான (Clinical Trail) எந்த நெறிமுறைகளும் அங்கு
பின்பற்றப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய
நெறிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் லோட்டஸ் லேப்பில் கிளினிக்கல்
டிரயல்கள் நடந்து வருகின்றன என்பதை உறுதி செய்வதற்காக, ரகசியக்
கேமராக்களுடன் புதிய தலைமுறை செய்திக் குழுவினர் லோட்டஸ் லேப் மேற்கொள்ளும்
மருந்து சோதனைக்கான பரிசோதனையில் கலந்துகொண்டனர்.
குறி வைக்கப்படும் இளைஞர்கள்: 19
முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் அங்கு வந்திருந்தனர்.
ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்த பின் அமர வைக்கப்பட்டனர்.
இறுதியாக அந்த பரிசோதனைக்கூடத்தின் பிரதிநிதி ஒவ்வொருவரையும் அழைத்து,
மேற்கொள்ள உள்ள சோதனை குறித்து தெரிவிக்கத் தொடங்கினார்.
அப்படி அவர் பேசுவது ரகசியமாக கேமராவில்
பதிவு செய்யப்பட்டது. சோதனை செய்யவுள்ள மருந்தைப் பற்றியோ, அதனால் ஏற்படும்
விளைவுகள் பற்றியோ ஏதுவும் கூறவில்லை மாறாக எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்
எனவும் அதற்காக எவ்வளவு பணம் கொடுக்ப்படும் என்பதைத்தான் அந்த பிரதிநிதி
தெரிவித்தார்.
கிளினிக்கல் டிரயலில் கடைபிடிக்கவேண்டிய
நெறிமுறைகள் பின்பற்றாதது குறித்தும், பணம் கொடுத்து ஏழை எளிய
மாணவர்களையும் இளைஞர்களையும் இதில் ஈடுபடுத்துவது குறித்தும் விளக்கம் பெற
லோட்டஸ் லேப் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் புதிய
தலைமுறை செய்திக் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.
பின் மின்னஞ்சல் வாயிலாக அவர்களிடம்
கேள்விகளை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுமார் ஒருமாதம் பொறுத்திருந்த
பின்னும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின் மீண்டும் ஒரு
முறை நேரடியாக அவர்களைச் சந்திக்க முயன்று அந்த நிகழ்வும் ஒளிப்பதிவு
செய்யப்பட்டது.
செய்தியாளரை உள்ளே அனுமதிக்காமல்
வெளியிலேயே அமரச் சொல்லிவிட்டு அந்த பரிசோதனைக்கூடத்தின் மேலாளர்
கனேஷ்பிரபு மற்றும் மருத்துவர் சுந்தரவடிவேல் ஆகிய இருவரும் வெளியே வந்து
பேசினர். அவர்களிடம் முன்வைக்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில்
கூற மறுத்துவிட்டனர். அங்கு கிளினிக்கல் டிரயல் சோதனைகள் நடைபெறுகிறதா
என்பதைக்கூட தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அவர்கள் தரப்பு விளக்கங்களை பதிவு செய்ய
பல முறை முயற்சி செய்தும் அவர்கள் மறுத்துவிட்டனர். நிர்வாகிகளின்
முரண்பாடான பேச்சும், பரிசோதனைக் கூடத்தின் முன் பெயர் பலகை இல்லாததும்
அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை உறுதிபடுத்தும்படியாகவே உள்ளது.
பணத்தைக் காட்டி பரிசோதனை:
இதுபோலவே தாம்பரம் சேலையூரில் உள்ள மைக்ரோ தெரஃபிக் ரிசர்ச் லேப் என்ற
சோதனைக் கூடத்திலும் சட்டவிதிகளுக்கு மாறாக இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவதாக
இந்த நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் பங்கேற்ற கல்லூரி மாணவர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து பிழைப்பு தேடி
சென்னைக்கு வந்து ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் சில
மாதங்களுக்கு முன்பு அவசர பணத் தேவை ஏற்படவே தனது நண்பர் ஒருவரிடம் யோசனை
கேட்டுள்ளார்.
உடலில் உள்ள ரத்தத்தை பரிசோதனைக்காக
வழங்கினால் பணம் கிடைக்கும் எனக்கூறி அதற்கான தரகரிடம் அவரை அவரது நண்பர்
அறிமுகப்படுத்தியுள்ளார். இடைத்தரகரின் வழிகாட்டுதலின்படி சென்னை
மயிலாப்பூர் ராதாகிருஷ்னன் சாலையில் உள்ள லோட்டஸ் லேப் என்ற பரிசோதனைக்
கூடத்திற்கு அவர் சென்றுள்ளார்.
அந்த பரிசோதனைக் கூடத்தில் அவரின் உடலில்
சோதனை மருந்து செலுத்தப்பட்டு விளைவுகள் சோதிக்கப்பட்டுள்ளது. அதாவது
கிளினிக்கல் டிரயல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாடு மற்றும்
அழகு சாதனச் சட்டப்படி கிளினிக்கல் டிரயல் செய்யும் போது கடை பிடிக்க
வேண்டிய நெறிகள் எதுவும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
கடைபிடிக்கப்படவில்லை.
இந்த சோதனையின் போது இவருக்கு
வழங்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் காரணமாக கடுமையாக
பாதிக்கப்பட்ட இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் குணப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சோதனையில் இவரோடு சேர்த்து 70க்கும்
அதிமானோர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன என்பது
கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கவனிக்குமா அரசு? பொருளாதாரத்தில்
பின்தங்கியுள்ள மக்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற சோதானைகளைத்
தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், மனிதர்களிடம் மருந்துக்கான சோதனை
சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசை
வலியுறுத்தியுள்ளது.
இருந்தபோதும் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மீது அரசு எவ்வகை அக்கறை கெண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன.
வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும்
மருந்துகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள மக்கள் மீது சோதனை செய்து
அம்மக்களை பரிசோதனை எலியாக்கி பலமடங்கு லாபமடைகின்றன பன்னாட்டு
நிறுவனங்கள். இதனை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் இவரைப்பபோன்ற
அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக தான் இருக்கும்.
தமிழகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சட்டவிரோதமான மருந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்றுவரும் நெறியற்ற, முறையற்ற கிளினிக்கல் டிரயல் சோதனைகளைப் பற்றி சமூக அக்கறையுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது புதியதலைமுறை.
காணொளி:

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சோதனைக் கூடங்களில் இனி உயிருள்ள விலங்குகள் கிடையாது...
» சோதனைக் குழாய் குழந்தை பிரச்சினைக்கு தீர்வு வந்தாச்சு!
» புதியதலைமுறை விரைவில் டிஷ் டிவி லிருந்து நீக்கம்.
» ராஜீவ்காந்தி கொலையில் உள்ள ரகசியங்களை விவரிக்கிறார்மாலை 3மணிக்கு புதியதலைமுறை தொலைக்காட்சியில்
» புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு -காணொளி-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum