Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஃபுட் போட்டோகிராபியில் புதுமை செய்யும் பெண் நித்யா!
Page 1 of 1

நித்யா வயதில் இருக்கும் பெண்களுக்கு வீட்டில் சமையலறை இருக்கும் இடம்
தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம். அதிலும் கொஞ்சம் அதிகம் படித்த
பெண்களுக்கோ சமையல் என்பது தகுதிக்குறைவான விஷயம். சமையலை சாபமாக நினைக்கிற
இளம்பெண்களின் மனப்பான்மை, நித்யாவைப் பார்த்தால் மாறிப் போகும்!
எம்.எஸ்சி. ஐ.டி. படித்திருக்கிற நித்யா என்கிற நித்ய மங்களா, இளம் வயது
சமையல்கலை நிபுணி. ஆனால், அதுவல்ல விஷயம்! ஃபுட் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஃபுட்
போட்டோகிராபர் என கூடுதல் அடையாளங்களுடன் அசத்திக் கொண்டிருப்பவர்.
நாவுக்கு ருசியாக சமைப்பது மட்டுமின்றி, அதை பார்வைக்கு ருசியாக அழகாக
அலங்கரிப்பதே ஃபுட் ஸ்டைலிஸ்ட்டின் வேலை. அலங்கரித்த உணவை அட்டகாசமாக
புகைப்படம் எடுப்பவர் ஃபுட் போட்டோகிராபர்!
‘‘என்னதான் ஐ.டி. படிச்சாலும், ‘சமையல் கத்துக்கோ’ங்கிற அம்மாவோட அட்வைஸ்
எனக்கும் இருந்தது. ரொம்ப சின்ன வயசுலேருந்தே நான் சாப்பிடற தட்டுல
சாப்பாட்டை அழகா அலங்கரிச்சு ரசிச்சு சாப்பிடுவேன். அம்மாவோட
வார்த்தைகளும், என்னோட ரசனையும்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. எங்கம்மா
ரொம்ப அருமையா சமைப்பாங்க. ரெசிபி கேட்டு, சும்மா நோட்புக்ல எழுதி
வைக்கிறதுக்கு பதிலா, என்னோட ஐடி பின்னணியை வச்சு ஒரு வெப்சைட் தொடங்கி,
அதுல பதிவு பண்ணினா என்னன்னு தோணினது.
சமைச்ச உணவை அழகுபடுத்திப் பார்க்கறதும், அதை போட்டோ எடுக்கிறதும்
எனக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்ல சமைக்கிற எல்லா உணவுகளையும் அப்படித்தான்
செய்வேன். வெறுமனே ரெசிபி மட்டும் கொடுக்காம, நான் எடுத்த படங்களோட
சேர்த்து நாலு வருஷங்களுக்கு முன்னாடிஆரம்பிச்சதுதான் என்னோட ‘ஃபோர்த்
சென்ஸ் குக்கிங்’ வலைப்பதிவு. நம்ம உணர்வுகள்ல நாலாவது உணர்வுதான் சுவை
உணர்வு.
அதனால அதையே பேரா வச்சேன்’’ என்கிறவரின் வலைப்பதிவுக்கு தினமும்
ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகிறார்கள். அதில் இடம்பெற்றிருக்கிற ஒவ்வொரு
உணவும், அப்படியே, அந்த நொடியே எடுத்து சாப்பிடத் தூண்டுகிறது. ஒவ்வொரு
உணவலங்காரத்திலும் அப்படியோர் நேர்த்தி. பிரபல உணவகங்களும், உணவுப்பொருள்
தயாரிப்பு நிறுவனங்களும், சமையலறை சாதனத் தயாரிப்பு நிறுவனங்களும் ஃபுட்
ஸ்டைலிஸ்ட் மற்றும் ஃபுட் போட்டோகிராபர் நித்யாவைத் தேட இதுதான் காரணம்.
‘‘ஆரம்பத்துல சாதாரண மொபைல் கேமராவுல போட்டோ எடுத்திட்டிருந்த நான், ஒரு
கட்டத்துக்குப் பிறகு டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கி புரொஃபஷனலா எடுக்க
ஆரம்பிச்சேன். ஃபுட் ஸ்டைலிங்கும் சரி, போட்டோகிராபியும் சரி, நான்
யார்கிட்டயும் கத்துக்கலை. சொந்த ஆர்வத்துல நானா முயற்சி பண்ணிப்
பழகினதுதான். என்னோட வெப்சைட் பார்த்துட்டு, முதல் முதல்ல பட்டர்ஃபிளை
கம்பெனிக்கு போட்டோ எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டாங்க. அடுத்தடுத்து பெரிய
ரெஸ்டாரன்ட், கம்பெனிகள்னு இப்ப வரைக்கும் பிசியா இருக்கேன்’’ என்கிறவர்,
தினம் ஒரு புதிய ரெசிபியை சமைப்பதையும், அதைப் படம் எடுத்துப் பதிவதையும்
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
‘‘சமைக்க ஒரு மணி நேரமாகும்னா, அதை அலங்கரிச்சு, படம் எடுத்து, நான்
பரிமாற 2 மணி நேரமாகும். சில உணவுகளை சமைக்கிறதுக்கு முன்னாடியே, அதை
எப்படி டெகரேட் பண்ணலாம், அது போட்டோ வுக்கு அழகா வருமாங்கிறதையெல்லாம்
யூகிச்சிடுவேன். சிலதை சமைச்சு முடிச்ச பிறகு எனக்குத் தோணின மாதிரி
அலங்கரிச்சு, படம் எடுப்பேன். வீட்ல போட்டோ எடுக்கும்போது, முழுக்க சமைச்ச
பிறகுதான் எடுப்பேன். கம்பெனிகளுக்கு எடுக்கும்போது, எல்லா நேரமும் அது
சாத்தியமில்லை.
போட்டோவுக்கு அழகா இருக்கணும்கிறதால, சிலதை பாதி சமைச்சதும்
சமைக்காததுமா எடுக்க வேண்டியிருக்கும். அது மட்டுமில்லை… சப்பாத்தி ரொம்ப
நேரம் ஃப்ரெஷ்ஷா, சாஃப்டா தெரிய அது மேல ஆலிவ் ஆயில் தடவி வைக்கிறது,
பாலுக்குப் பதிலா ஃபெவிகால்ல தண்ணி கலந்து உபயோகிக்கிறதுன்னு, சில
டெக்னிக்ஸ் கையாள வேண்டியிருக்கும்’’ என ஆச்சரியம் தருகிறார்.‘‘சாம்பார்,
குழம்பு, ரசம்னு சில உணவுகளை எப்படி அலங்கரிச்சாலும் போட்டோவுக்கு பெரிசா
பிரமாதப்படுத்த முடியாது. படம் அழகா வரணும்… பார்க்கிறவங்களை சாப்பிடத்
தூண்டணும்.
அதனால அந்த மாதிரிப் பதார்த்தங்களை வைக்கிற பாத்திரங்கள், பக்கத்துல
வைக்கிற டவல், கரண்டி, ஸ்பூன்… இப்படி வேற விஷயங்களை ரசனையோட செலக்ட் பண்ணி
வச்சு எடுப்பேன். காபி, டீ, கூல்ட்ரிங்க்ஸ், பூரி, தோசை, வறுத்த உணவுகளை
எல்லாம் உடனுக்குடனே போட்டோ எடுத்தாதான் நேச்சுரலா தெரியும். ஒவ்வொரு
நிமிஷத்தையும் கடத்தக் கடத்த உணவோட அழகு போயிட்டே இருக்கும்’’ என்கிறவர்,
‘ஃபோர்த் சென்ஸ் குக்கிங்’ என்கிற பெயரில் தனது ரெசிபிகளை தொகுத்து
வருடந்தோறும் புத்தகமாக வெளியிடுகிறார்.
நித்யாவுக்குக் கடந்த வருடம்தான் திருமணம் முடிந்திருக்கிறது.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக்
கொடுத்தாராம் நித்யா. ‘‘இன்னும் நிறைய போட்டோகிராபி, நிறைய புத்தகங்கள்,
புதுப்புது ரெசிபின்னு அடுத்த கட்டத்துக்குப் போகணும்…’’ – லட்சியம்
சொல்கிற நித்யா, உங்களுக்காக இங்கே கொஞ்சம் டிப்ஸும் தருகிறார்.
‘‘சமைக்கிறதுக்கு எவ்வளவு மெனக்கெடறீங்களோ, அதுல கொஞ்சம் சமைச்சதை
அலங்கரிக்கவும், அழகா பரிமாறவும் ஒதுக்கிப் பாருங்க. ஸ்டார் ஹோட்டல்
அயிட்டங்களைதான் அழகா அலங்கரிக்க முடியும்னு இல்லை.
சாதாரண கேழ்வரகு கூழைக் கூட, குட்டிக்குட்டி கலர்ஃபுல் பிளாஸ்டிக்
கப்புல நிரப்பி கொடுத்துப் பாருங்க. அதுக்கான வரவேற்பே மாறிப் போகும். பூரி
பண்ணும் போது, மாவுல கொஞ்சம் பீட்ரூட் ஜூஸோ, கேரட் ஜூஸோ சேர்த்துப்
பிசைஞ்சு குழந்தைங்களுக்குக் கொடுங்க. கலர்ஃபுல் பூரி, குழந்தைகளைக்
கவர்ந்திழுக்கும். காய்கறி சாப்பிடாத குறையையும் தீர்க்கும்!’’
Nagoorkani Kader Mohideen Basha

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பாரதி கனவு கண்ட புதுமை பெண் நீ தானோ!!!
» கைகள் இல்லாது கால்களால் மசாஜ் செய்யும் அசாதாரண பெண்!
» அம்மனுக்கு கோவில் எடுத்து பூசை செய்யும் முஸ்லிம் பெண்
» உலகலாவிய ரீதியில் பெண் போராளிகளை தேர்வு செய்யும் அல் கொய்தா - விக்லீக்ஸ்
» புலிகளின் பெண் போராளிகளை அடித்துக் கொலை செய்யும் அதிர்ச்சிக் காடசிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum