TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:50 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Apr 14, 2024 1:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 13, 2024 5:11 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சென்னை சிங்கங்கள் அசத்தல் : ஐ.பி.எல்., அரங்கில் 50வது வெற்றி : டில்லிக்கு 6வது தோல்வி

Go down

சென்னை சிங்கங்கள் அசத்தல் : ஐ.பி.எல்., அரங்கில் 50வது வெற்றி : டில்லிக்கு 6வது தோல்வி Empty சென்னை சிங்கங்கள் அசத்தல் : ஐ.பி.எல்., அரங்கில் 50வது வெற்றி : டில்லிக்கு 6வது தோல்வி

Post by மாலதி Fri Apr 19, 2013 6:19 am

[You must be registered and logged in to see this image.]











புதுடில்லி: டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. பேட்டிங்கில் அசத்திய மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார். மீண்டும்
சொதப்பிய டில்லி அணி, தொடர்ந்து 6வது தோல்வியை பெற்றது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது.
டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த தொடரின் 24வது
லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

மீண்டும் ஹசி:

சென்னை அணியில் காயம் காரணமாக டிர்க் நானஸ் நீக்கப்பட்டு, மீண்டும்
மைக்கேல் ஹசி இடம் பிடித்தார். அனிருதா ஸ்ரீகாந்துக்கு பதிலாக மோஹித் சர்மா
சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் ஆஷிஸ் நெஹ்ரா, பென் ரோரர் நீக்கப்பட்டு
அஜித் அகார்கர், ஜீவன் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ்' வென்ற
சென்னை அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஹசி அரைசதம்:

முதலில் "பேட்' செய்த சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் ஜோடி
சுமாரான துவக்கம் கொடுத்தது. மார்னே மார்கல் "வேகத்தில்' முரளி விஜய் (18)
அவுட்டானார். பின் இணைந்த மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா ஜோடி பொறுப்பாக
விளையாடியது. ஒன்று, இரண்டாக ரன் எடுத்த இவர்கள் அவ்வப்போது பவுண்டரி
அடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, இர்பான்
பதான் பந்தில் ரெய்னா (30) வெளியேறினார். அகார்கர், நதீம் பந்தை
சிக்சருக்கு பறக்கவிட்ட மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார்.

தோனி அதிரடி:

பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய கேப்டன் தோனி, மார்னே மார்கல்
வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
இதே ஓவரில் மைக்கேல் ஹசி தன்பங்கிற்கு இரண்டு பவுண்டரி அடிக்க, சென்னை
அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய தோனி 22 பந்தில் 44 ரன்கள்
(ஒரு சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த போது, உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் 2வது ரன்னுக்கு ஆசைப்பட்ட டுவைன் பிராவோ (3)
"ரன்-அவுட்' ஆனார்.

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. மைக்கேல்
ஹசி (65) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் இர்பான் பதான்,
மார்னே மார்கல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

வார்னர் ஏமாற்றம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணி, சென்னை கிங்ஸ் "வேகத்தில்'
திணறியது. மோஹித் சர்மா பந்தில் டேவிட் வார்னர் (1), மன்பிரித் ஜுனேஜா (2)
அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனாவை (6), கிறிஸ்
மோரிஸ் வெளியேற்றினார். ஆல்பி மார்கல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சேவக்,
கிறிஸ் மோரிஸ் பந்தில் ஒரே ஒரு பவுண்டரி அடித்தார். இவர், 17 ரன்கள்
எடுத்த போது மோஹித் சர்மாவிடம் சரணடைந்தார்.

பின் இணைந்த ஜீவன் மெண்டிஸ், கேதர் ஜாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. ஒன்று,
இரண்டாக ரன் எடுத்த இவர்கள், ஐந்தாவது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த
போது, ஜீவன் மெண்டிஸ் (12) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த இர்பான் பதான்
(2), அஜித் அகார்கர் (3), மார்னே மார்கல் (2) சொற்ப ரன்களில் பெவிலியன்
திரும்பினர்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேதர் ஜாதவ் (31), ஆல்பி மார்கல் பந்தில்
அவுட்டானார். டுவைன் பிராவோ பந்தில் உமேஷ் யாதவ் (1) சரணடைய, டில்லி அணி
17.3 ஓவரில் 83 ரன்களுக்கு சுருண்டது. நதீம் (2) அவுட்டாகாமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் மோஹித் சர்மா 3, அஷ்வின் 2, ஆல்பி மார்கல், கிறிஸ்
மோரிஸ், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

---

50வது வெற்றி

ஐ.பி.எல்., வரலாற்றில் 50வது வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற புதிய
சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை 86 போட்டியில் விளையாடிய
சென்னை அணி, 50 வெற்றி, 34 தோல்வியை பெற்றது. ஒரு போட்டி "டை' ஆனது. ஒரு
போட்டிக்கு முடிவு இல்லை. இதனை அடுத்து மும்பை (46 வெற்றி), பெங்களூரு
(42), ராஜஸ்தான் (41) அணிகள் அதிக வெற்றிகள் பெற்றன.

---

"மெகா' வெற்றி

நேற்று அபாரமாக ஆடிய சென்னை அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் வித்தியாசத்தில் "மெகா' வெற்றி
பெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்தை பிடித்தது. முதலிடத்தில் 87 ரன்கள்
வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி (எதிர்-மும்பை) உள்ளது.

--

குறைந்தபட்ச ஸ்கோர்

நேற்று 83 ரன்களுக்கு சுருண்ட டில்லி அணி, இம்முறை குறைந்தபட்ச ஸ்கோரை
பதிவு செய்த அணி என்ற சோகமான சாதனை படைத்தது. இதற்கு முன், ராஜஸ்தானுக்கு
எதிராக மும்பை அணி 92 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.

--

உமேஷ் "50'

நேற்றைய போட்டியுடன், டில்லி அணி வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தனது 50வது "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றார்.

.......

ரெய்னா "200'

சென்னை அணியின் ரெய்னா, நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது 201வது பவுண்டரி விளாசி அசத்தினார்.

.....

சென்னையின் அதிக ஸ்கோர்

இந்த ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணி தனது அதிகபட்ச ஸ்கோரை (169)நேற்று
எட்டியது. இதற்கு முன், பெங்களூரு அணிக்கு எதிராக 166 ரன்களை தொட்டது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை சிங்கங்கள் அசத்தல்! * புனேயை வீழ்த்தி அபாரம் * பத்ரிநாத், தோனி விளாசல்
» சென்னை சொதப்பல் கிங்ஸ்!* முதல் போட்டியில் தோல்வி* மும்பை அணியின் லீவி அசத்தல்
» சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி! * வீழ்ந்தது டெக்கான் அணி
» சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்
» சென்னை அணிக்கு டென்ஷன் வெற்றி: ஆல் ரவுண்டராக ஜடேஜா அசத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum