Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தின் முதல் பெண் மரைன் இன்ஜினீயர் லட்சுமிபிரியா
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தின் முதல் பெண் மரைன் இன்ஜினீயர் லட்சுமிபிரியா ‘ஒரு லட்ச ரூபாய்
தருகிறேன். மூன்று மாதங்கள் கடலுக்குள்ளேயே இரு’ என்று சொன்னால்
ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் மட்டுமல்ல...
யாருமே ‘சரி’ என்று சொல்ல மாட்டார்கள். கரையிலிருந்து பார்க்கிறவர்களுக்கு
கடல் அதிசயம், அற்புதம், அழகு. அதிலேயே வாழவேண்டிய நிர்பந்தம்
உள்ளவர்களுக்கோ அது அபாயம், சித்திரவதை. ‘தரைக்கு எப்போது போவோம்’ என்கிற
தவிப்பு தணியாத தாகம் போல அரித்து எடுத்துவிடும். சாகசத்திலும் புதுவித
அனுபவங்களிலும் ஈடுபாடு கொண்டவர்களால்தான் கடலில் நாட்கணக்கில் வாழ
முடியும்.
லட்சுமிபிரியா... வருடத்தில் 8 மாதங்கள் கடலில்
மிதக்கிறார். 4 மாதங்கள் தரையில் வசிக்கிறார். அவர் பார்க்கிற வேலை
அப்படி.... மரைன் இன்ஜினீயர். அதுவும் தமிழகத்தின் முதல் பெண் மரைன்
இன்ஜினீயர்!
‘ஆம்பளைங்களாலயே கடல்லயும் கப்பல்லயும் குப்பை கொட்ட
முடியாது. பொம்பளைங்களால என்ன செய்ய முடியும்?’ என்று ஆரம்பக்
காலத்திலிருந்தே பெண்களுக்கு மறுக்கப்பட்ட, ஆபத்தான துறை என்று கருதப்பட்ட
மரைன் இன்ஜினீயரிங்கில் லட்சுமிபிரியாவுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
“சொந்த ஊரு திருச்சி. சின்ன வயசுல இருந்தே கடல் மேலயும் அதுல மிதக்குற
கப்பல் மேலயும் எனக்கு அப்படி ஒரு ஆர்வம். டிவியில கப்பல் வர்ற சீன்
பார்க்கறப்போ எல்லாம் மனசுக்குள்ள ஜில்லுன்னு இருக்கும். ‘நாமளும் கப்பல்ல
போக மாட்டோமா’ன்னு ஏக்கமா இருக்கும். ‘டைட்டானிக்’ படம் பார்த்ததுல இருந்து
கப்பல் மேல எனக்கிருந்த ஆசை அதிகமாயிடுச்சு. ஸ்கூல்ல படிக்கிறப்பவே மரைன்
இன்ஜினீயரிங் சம்பந்தமான தகவல்களை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ப்ளஸ்
டூல 94 சதவிகிதம் மார்க் வாங்கினேன்.
தமிழ்நாட்டுல இருக்குற சில
கல்லூரிகளுக்கு அப்ளிகேஷன் போட்டேன். சீட் கிடைக்கலை. ‘இது ஆண்களுக்கான
கோர்ஸ். பெண்களுக்கு இடமில்லை’ன்னு சொல்லிட்டாங்க. ‘ஆசை, லட்சியமெல்லாம்
வெறும் கனவாப் போயிடுமோ’ன்னு துடிச்சுப் போயிட்டேன். அந்த நேரத்துலதான்
புனேவில் பிட்ஸ் பிலானி குழுமத்தில் இருக்குற ஒரு காலேஜுல வாய்ப்புக்
கிடைச்சுது. உடனடியா சேந்துட்டேன்!
இந்தத் துறைக்குப் படிக்க வர்ற
பெண்களோட எண்ணிக்கை ரொம்பக் குறைவு. இதுவரை 13 பெண்கள் மட்டும்தான் இந்தப்
படிப்பை முடிச்சிருக்காங்க. தமிழ்நாட்டுல இருந்து மரைன் இன்ஜினீயரிங்
படிக்கப் போன முதல் பெண் நான்தான். அதனால ரொம்ப சின்சியரா படிச்சேன். எல்லா
செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்தேன். 4 வருஷ படிப்பு.
கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் செலவாச்சு.
ஃபைனல் இயர்
படிக்கிறப்போ கேம்பஸ் இன்டர்வியூலயே செலக்ட் ஆனேன். ‘ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப்
மேனேஜ்மென்ட்’ கப்பல் நிறுவனத்துல வேலை கிடைச்சுது. இப்போ நான் வேலை
பாக்குறது கடலுக்குள்ளதான். உலகத்தின் பல நாடுகளையும் பாத்துட்டேன்.
உலகத்துலயே பிரமாண்டமான கப்பல்கள்ல டிராவல் பண்ணிட்டேன். வருஷத்துல 4 மாசம்
ரெஸ்ட். ஆனா, மறுபடியும் எப்படா கடலுக்குள்ள போவோ ம்னு இருக்கும்.
அந்தளவுக்கு இந்த வேலையை நான் நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். இது எனக்கு
மனசுக்குப் பிடிச்ச நிறைவான வேலை!’’ - மூச்சுவிடாமல் பேசி முடித்தார்
லட்சுமிபிரியா.
“கப்பல்ல வேலை பாக்குறது பயமா இல்லியா?” என்று கேட்டால் மென்மையாகச் சிரிக்கிறார்.
‘‘சூறாவளி, கடற்கொள்ளையர் பிரச்னை எல்லாம் பார்க்கும்போது மனசுக்குள்ள
சின்னதா ஒரு பயம் வந்து போகும். சோமாலிய நாட்டு கடல் பகுதியை தாண்டும்
போதெல்லாம் உயிரை கையில பிடிச்சுக்கிட்டுதான் போவோம். ஆனாலும், இந்தத்
துறையைவிட்டுப் போக மனசு மட்டும் வரலை. ஆண்களால மட்டும்தான் செய்ய
முடியும்னு எந்த வேலையும் இல்ல. இந்த கோர்ஸ்ல பெண்களுக்கு நல்ல ஓப்பனிங்ஸ்
இருக்கு. படிச்ச உடனே வேலை கிடைக்கும்கிற உத்தரவாதம். சாதிக்க விரும்புற
பெண்களுக்கு இது சவாலான துறை.
இதிலும் ஒரு வட்டத்துக்குள்ள என்னை
நான் அடைச்சுக்காம பாத்துக்கிட்டேன். அதனாலதான் எனக்குப் பிடிச்ச கப்பல்ல
என் பயணம் தொடர்ந்துகிட்டு இருக்கு. என்னை மாற்றியது நான் படிச்ச
படிப்புதான். விதவிதமான மனிதர்கள், நிறைய அனுபவங்கள் என லைஃப் ரொம்ப
கலர்ஃபுல்லா இருக்கு. இப்போதைக்கு என்னோட லட்சியம் கப்பலின் முதன்மை
இன்ஜினீயர் ஆகணும்!’’அவர் கப்பலின் முதன்மை இன்ஜினீயர் ஆவார் என்கிற
நம்பிக்கை, அவரைப் போலவே நமக்கும் இருக்கிறது!
மரைன் இன்ஜினீயர் ஆக என்ன செய்ய வேண்டும்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் துறை சார்ந்த படிப்புகள் மெர்ச்சன்ட்
நேவி எனப்படும். நாட்டிக்கல் சயின்ஸ், மரைன் இன்ஜினீயரிங் என இருவகைகளில்
கடல்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. கப்பல் கேப்டன் ஆக
விரும்புபவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியது ‘நாட்டிக்கல் சயின்ஸ்.’
கப்பலின் மூளையாகச் செயல்படும் இயந்திரங்களை உருவாக்குதல் மற்றும்
பாதுகாத்தல் போன்றவற்றை விரும்புகிறவர்கள் ‘மரைன் இன்ஜினீயரிங்’
படிக்கலாம்.
பெண்களுக்கு மரைன் இன்ஜினீயரிங் படிப்பு சரியான
சாய்ஸ். பி.எஸ்சி., பி.டெக்., பி.இ., பட்டங்களில் இப்படிப்பு
வழங்கப்படுகிறது. ப்ளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பயின்றவர்கள்
மட்டுமே இப்படிப்புக்குள் நுழைய முடியும். உடற்தகுதியும் அதிக
மதிப்பெண்களும் அவசியம். இது 4 வருட படிப்பு. வருடத்துக்கு ரூ.2 லட்சம் வரை
செலவாகும்.
வேலைவாய்ப்புக்குப் பிரமாதமான வாய்ப்பு உள்ள துறை
இது. படிப்பு காலம் முடியும் முன்பே பல ஷிப்பிங் கம்பெனிகள் இளம்
இன்ஜினீயர்களைத் தேர்வு செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நிறுவனத்தைப் பொறுத்து
ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அரசு மற்றும்
தனியார் துறைகளிலும் ஷிப்பிங் வேலைகளுக்கு அதிகத் தேவை உள்ளது.
கடலுக்குள் செல்ல விரும்பாமல் ஷிப்பிங் தொடர்பான அலுவலக வேலைகள்
செய்வதற்கென எம்.பி.ஏ.(போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்) படிப்பு
இருக்கிறது. இதன் மூலம் துறைமுக அலுவலகத்தில் இருந்துகொண்டே ஏற்றுமதி,
இறக்குமதி வேலைகளைச் செய்யலாம்.

Similar topics
» தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னத்திற்கு பெண் குழந்தை பிறந்தது
» தமிழகத்தின் முதல் நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு
» தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் திறப்பு
» இந்தியாவின் முதல் பெண் விமானி..
» முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum