Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்பின் இந்திய உறவுகளே...இலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ஏன்?
3 posters
Page 1 of 1

இலங்கை அரசின் அநீதிக்கு எதிராகவும் நம் தமிழ் சொந்தங்களுக்காகவும் மக்கள் போராடுவதை
பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. ஆனால் இந்தியாவிலேயே இருக்கும்
காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடக்கும் கொடுமைகளுக்கு இன்னும் ஏன்
குரல்கொடுக்கவில்லை.
நம்முடைய அரசாங்கமும் இராணுவமும் கஷ்மீரில் செய்யும் கொடுமைக்கு எதிராக என்னைக்காவது குரல்கொடுத்து இருக்கிறோமா?
குறைந்தபட்சம் அந்த பாவப்பட்ட மக்களுக்காக அனுதாபபட்டு இருக்கிறோமா??
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின்
துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை
காட்டுகின்றனர்
திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர்
வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச்
சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள்.
அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள்.
போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து
கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின்
ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?
ராணுவத்தினர் எல்லா
அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும்,
பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்?
அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து
விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ
இரவுகள் கழிகிறது.
ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும்
துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது
தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு
வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி
பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள
பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது
இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
நீங்கள் காஷ்மீரில்
தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள்.
உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?
ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை.
அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும்.
அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி
அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின்
பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும்
பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று
சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற
அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.
இவ்வளவு அநீதிகளையும்,
துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின்
நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும்
அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு
ஆறுதலாக பேசுகிறார்கள்.
1931& லிருந்து இப்பிரச்னை
தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள்
நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே
தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989
லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள்
உருவாகின.
அதுமுதல் 22 ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள்
கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.1989லிருந்து
இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில்
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின்
வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை
20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச்
சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள்
என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10
ஆயிரத்தை தாண்டுகிறது.
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார்
என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள்
வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை
ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள்
ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான்
ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன.
உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல்
விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம்
அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை
காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும்
புரிந்திருக்கிறார்கள்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: அன்பின் இந்திய உறவுகளே...இலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ஏன்?
ஆனாலும் நாம் ஏன் போராடவில்லை என்றால், எரிகிற வீட்டில் எதையோ எடுத்தது போல்,இலங்கையில் உறவுகளை இழந்து உடமைகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களிடம் இருந்து, சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமையில், தமிழர் நிலங்களை அபகரிக்கிரார்களே, சிங்களத்தினாலும் முஸ்லீம்கள் சிலரின் நடவடிக்கைகளாலும் அல்லல்பட்டு நாதியற்று நிற்கும்இலங்கைத் தமிழர்களுக்காக போராட அவசியம் உண்டு. உண்மையில் அந்த நில அபகரிப்பை எந்த முஸ்லிம் இயக்கங்களும் தட்டிக் கேட்கவில்லை,அந்த அப்பாவித் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. உறவுகளை உடமைகளை இழந்து சிங்களத்தால் மீண்டும் இன அழிப்புக்கு உள்ளாகும் அவர்களின் நிலங்கள் உடமைகள் வேண்டாம் என்று எந்த ஒரு முஸ்லீமும் சொல்லவில்லையே.மாறாக அரசுடன் இணைந்து இயங்கும் இஸ்லாமிய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தட்டிப் பறிக்கிறார்களே. அதனால் தான் நாம் நாதியற்ற நிற்கும் அந்த உறவுகளுக்காகப் போராடுகிறோம்.இதே நிலை காஷ்மீரில் இருக்கும் சிறுபான்மையினருக்கும் நாளை ஏற்படாது என்று சொல்ல முடியுமா?
காஷ்மீர் மக்களின் இன்னல்களை கண்டு கவலைப் படுகிறோம். வேதனைப் படுகிறோம்.ஆனாலும் முதலில் குற்றுயிராய் கிடக்கும் உறவுகளுக்கே முதலிடம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: அன்பின் இந்திய உறவுகளே...இலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ஏன்?
காஷ்மீர் மக்களின் இன்னல்களை கண்டு கவலைப் படுகிறோம். வேதனைப்
படுகிறோம்.ஆனாலும் முதலில் குற்றுயிராய் கிடக்கும் உறவுகளுக்கே முதலிடம்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மற்ற நாடுகளின் விடயங்களில் தலையிடும் போலீஸ்காரன் வேலையை நாம் செய்ய மாட்டோம்--இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உளறல்!
» இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! - ஈழவேந்தன்
» இந்திய வரும் மகிந்தவை அடித்து விரட்ட தயாராக இருங்கள் எமது உறவுகளே .
» நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்
» 'ஒரு மூன்று மாதம்" இந்திய தயாரிப்பை மட்டும் நாம் வாங்கினால் நம் நாட்டின் பொருளாதாரத்தையே சீர் செய்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்-பிரதமர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum