Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுரங்க 'மாபியா'க்களின் தொழில்: பாலைவனமான விளைநிலங்கள்
Page 1 of 1
சுரங்க 'மாபியா'க்களின் தொழில்: பாலைவனமான விளைநிலங்கள்
பெல்லாரி
:கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், 4,500
எக்டேர் பரப்பளவிலான விளைநிலம், பாலைவனமாக மாறிப் போய் விட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் பெல்லாரி, ஆந்திராவின் அனந்தபூர்
மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சுரங்க மாபியாக்களின்
சுரண்டலால் முழுவதும் பாழ் பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் இம்மாநில
எல்லையில் உள்ள ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களில் ஏராளமான கனிமச்
சுரங்கங்கள் உள் ளன. இங்கு எடுக்கப்படும் மணல்களில் இரும்புத் தாதுப்
பொருட்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி
நிலவுகிறது.இந்த பகுதியில் தான் கர்நாடக அமைச்சர்களும், சுரங்கத் தொழில்
அதிபர்களுமான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோரின் சுரங்கத்
தொழில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள்
மற்றும் விளை நிலங்களில், சுரங்கத் தொழில் ஏகோபித்த செல்வாக்குடன்
நடக்கிறது. ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு,
குறுக்கு வழியில் இங்குள்ள கனிம வளம் சுரண்டப் பட்டு வருகிறது.
கடந்த 2008ல் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள்
நடந்தன. இதற்கான ஏற்பாட்டுக்காக, அங்கு பெருமளவில் இரும்புத் தாதுப்
பொருட்கள் தேவைப்பட்டன. இதனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே,
இரும்புத் தாதுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில்
அதிகரித்தது.டன்னுக்கு 100 ரூபாய் என்ற அளவில் இருந்த இதன் விலை, 5,000
ரூபாயாக அதிகரித்தது. இதனால், சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட மாபியாக்கள், டன்
கணக்கில் இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்து, கொள்ளை லாபம் பார்த்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த சுரங்கத் தொழில், உச்சகட்ட வளர்ச்சியை
எட்டியுள்ளது.ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், இயற்கை
வளம் மிக்க இப்பகுதியின் சுற்றுச்சூழல், மிகப் பெரிய அளவில் மாசடைந்து
விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விளை நிலங்கள் பாழ்:இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:ரெட்டி
சகோதரர்களின் சுரங்கத் தொழிலால், 120 மலைக் குன்றுகள், ஐந்து லட்சம்
மரங்கள், 2,500 எக்டேர் வனம், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாழ்பட்டு
போய் விட்டன. மேலும், நான்கு நீரோடைகள், 17 ஏரிகள், 28 நீர்க்குட்டைகளும்
அழிக்கப்பட்டு விட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடந்து வரும்
சுரங்கத் தொழிலுக்கு, இந்த இயற்கை வளங்களை பலி கொடுக்க வேண்டியதாகி
விட்டது. சுரங்கங்களைச் சுற்றி அமைந்துள்ள 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான
விளைநிலம், வறட்சி பகுதியாகி விட்டது.இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையாக மாறிய வனம்:சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.ஆர்.ஹிராமத் கூறியதாவது:சுரங்கத்
தொழிலுக்காக பாறைகள், தொடர்ந்து வெடி வைத்து தகர்க்கப்படுகின்றன. இதனால்,
பூமிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் நிலையற்ற
தன்மையும் உருவாகிறது. அந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் அழிந்து போய்
விட்டன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு காலத்தில் பசுமையாக
காட்சியளித்த அந்த பகுதி, தற்போது ஜெலட்டின் குச்சிகள் ஏற்படுத்தும்
தூசியால், செம்மண் வடிவில் வறண்டு போய் காணப்படுகிறது. சுரங்கத்
தொழிலுக்காக ஈடுபடுத்தப்படும் கனரக இயந்திரங்களால், அமைதியான அந்த பகுதி,
தற்போது தொழிற்சாலையாகவே மாறிப் போய்விட்டது.இவ்வாறு ஹிராமத் கூறினார்.
தினமும் 5,000 லாரியில் ஏற்றுமதி:ஒரு
லாரி இரும்புத் தாது விலை 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தினமும் 5,000 லாரிகளில் இரும்புத் தாது மற்றும் இதர கனிம
வளங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சுரங்கத் தொழிலில் பெரிய அளவில்
ஈடுபடுவோருக்கு, இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் வருவாய்
கிடைக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் அரசுக்கு ராயல்டியாக வெறும் 80 கோடி
ரூபாய் மட்டுமே செலுத்துகின்றனர்.
மோசடி எப்படி?சட்டவிரோத
சுரங்கத் தொழில், மிகவும் நேர்த்தியாக நடக்கிறது. முதலில், சுரங்கத்
தொழில் நடத்த அனுமதியில்லாத வனப் பகுதியில், மணலை தோண்டி எடுக்கின்றனர்.
பின்னர், ஏற்கனவே செயல்படும் சுரங்கங்களின் பெயருக்கு, அவற்றின் உரிமையை
மாற்றி, தோண்டி எடுத்த தாதுப் பொருட்களை, வாகனங்களில் அங்கிருந்து
பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்து விடுகின்றனர்.இதன் பின், பெரிய
வர்த்தகர்களிடம் இவற்றை ஒரு டன் 200 ரூபாய் என்ற அளவுக்கு விற்று
விடுகின்றனர். ஆனால், இதே தாதுப் பொருட்கள் மூலம் அந்த பெரிய
வர்த்தகர்கள், ஒரு டன்னுக்கு 1,800 ரூபாய் வரை வருமானம் பார்த்து
விடுகின்றனர்.
இதுகுறித்து கர்நாடகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த புத்தனைய்யா என்பவர் கூறுகையில்,
'சண்டூர் என்ற ஒரு பகுதியில் மட்டும் 80 ஆயிரம் டன் இரும்புத் தாதுப்
பொருட்கள் எடுக்கப்படுகின்றன. உலகின் எந்த ஒரு பகுதியிலும், இத்தனை பெரிய
அளவுக்கு இரும்புத் தாது பொருட்கள் எடுக்கப்படுவது இல்லை' என்றார்.சட்ட
விரோத சுரங்கத் தொழிலை, எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தேவையான
ஏற்பாடுகளை, சுரங்க மாபியாக்கள் செய்துள் ளனர். தங்களுக்கு சொந்தமான
சுரங்கப் பகுதிக்குள், யாரும் எளிதில் நுழைந்து விடாமல் இருப்பதற்காக,
ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை அவர்கள் நியமித்துள்ளனர்.
ஆயிரம் கோடி ரூபாய் சொத்து?கடந்தாண்டு,
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜனார்த்தன் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறுகையில், 'எனக்கும், என் மனைவிக்கும் 115 கோடி ரூபாய் அளவுக்கு
சொத்து உள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. இதை 15 கோடி
ரூபாய்க்கு வாங்கினேன். இதுதவிர, நான்கு கோடி ரூபாய்க்கு டீலக்ஸ் பஸ்,
ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள காரும் உள்ளது' என்றார்.சட்டசபையில் ஒருமுறை
அவர் கூறுகையில், 'எங்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துள்ளதாக
சிலர் கூறி வருகின்றனர்; இது தவறு. எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி
ரூபாய்' என்றார். ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரெட்டி
சகோதரர்கள், தற்போது, தங்கள் சுரங்கம் அமைந்துள்ள இடங்களுக்கு கூட
ஹெலிகாப்டரில் தான் செல்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு :
சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு, சுப்ரீம்
கோர்ட்டின் சமீபத்திய உத்தரவால், பெரும் அடி விழுந்துள்ளது. சுப்ரீம்
கோர்ட் தனது உத்தரவில், 'ஆந்திரா - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள
சுரங்கங்களில் இருந்து, இரும்புத் தாதுப் பொருட்கள் வெட்டி எடுப்பதற்கு
இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.ஓபுலாபுரம் பகுதி சுரங்க உரிமையாளர்களால்,
அங்குள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பது குறித்து இந்திய
சர்வே அதிகாரிகள், ஏப்ரல் 6ம் தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்' என
அறிவித்தது. இதனால், ரெட்டி சகோதரர்கள் வட்டாரம் அதிர்ந்து போயிருப்பதாக,
கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» சுரங்க தொழில்; கிருஷ்ணா, குமாரசாமி, தரம்சிங்குக்கு தொடர்பா?
» கான்கிரீட் தளங்களாகுது விளைநிலங்கள் : ரியல் எஸ்டேட்டுக்கு கடிவாளம் வருமா?
» நிலக்கரி சுரங்க முறைகேடு : நிதின் கட்காரியின் உதவியாளருக்கு தொடர்பு
» பெல்லாரியில் சுரங்க பணிகள்: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
» தலைவர் பிரபாகரன் புதுக்குடியிருப்பு சுரங்க வீட்டின் புகைப்படங்கள் photo
» கான்கிரீட் தளங்களாகுது விளைநிலங்கள் : ரியல் எஸ்டேட்டுக்கு கடிவாளம் வருமா?
» நிலக்கரி சுரங்க முறைகேடு : நிதின் கட்காரியின் உதவியாளருக்கு தொடர்பு
» பெல்லாரியில் சுரங்க பணிகள்: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
» தலைவர் பிரபாகரன் புதுக்குடியிருப்பு சுரங்க வீட்டின் புகைப்படங்கள் photo
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum