TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர்

Go down

தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர் Empty தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர்

Post by ஜனனி Mon Apr 08, 2013 7:39 am

தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர் ்

தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை
அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே
தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வுதேடித் தப்பிச்
செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும்கூட, இலங்கைத்
தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை
கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம்
கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க
வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும்
மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அகதிகளுக்கு,
மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும்
வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா?


தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள்
முகாம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன்
பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இலங்கை அகதிகளை,
தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொண்ட தமிழக அரசியல்
கட்சிகள், அவர்களது வாழ்வாதாரம் குறித்துப் பெரிதும் பேசியதில்லை என்பதும்
நிலைமை மோசமானதற்கு இன்னொரு காரணம்.

மேலும், அகதிகளை வைத்து
வருவாய்த்துறை அலுவலர்கள் கொழித்தனர் என்பது மற்றுமொரு கசப்பான உண்மை.
இவர்களுக்கான நிதியுதவியில் கையாடல் செய்யப்பட்டது.


தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் இருக்கிறார்கள், முகாமைவிட்டு
வெளியேறித் திரும்பாதவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம்கூட முறையாக
இல்லாத நிலையில்தான் வருவாய்த்துறை இருக்கிறது.

ஒவ்வொரு அகதியும்
முகாமில் உள்ள பதிவேட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால்
அவர் எங்கே சென்றிருந்தார் என்பதற்குச் சரியான விளக்கம் சொல்ல வேண்டும்.
இரண்டு நாள்களுக்கு மேலாக முகாமில் இல்லாமல்போனால் அவர் பெயர் நீக்கப்பட
வேண்டும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

முகாமுக்குத்
திரும்பாதவர் இலங்கை சென்றாரா, அல்லது வேறு மாநிலத்துக்குச் சென்றாரா,
அல்லது வருவாய்த் துறைக்கு பல பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, குடும்ப
அட்டை பெற்று இந்தியக் குடிமகன் போலவே மாறிவிட்டாரா என்பதைக் கண்டறிய
வேண்டும். ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையின் "கியூ' பிராஞ்சும் இதை
அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை.


ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகளை நடுக்கடலில் இருந்து அழைத்து
வந்து, இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இவர்களை என்ன செய்வது
என்று தெரியாமல், நாகையில் ஒரு மண்டபத்திலேயே தங்க வைத்திருக்கும் அரசு
அதிகாரிகளின் நோக்கம் என்ன?

இவர்களில் பல்வேறு முகாம்களைச்
சேர்ந்தவர்கள் 75 பேரை மட்டுமே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். மற்றவர்களை
ஏன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?

காரணம், இவர்கள் தங்கள்
முகாம்களைவிட்டு வெளியேறி பல நாள்களாகியும், இவர்களது பெயர் இன்னும்
நீக்கப்படாமல் இருக்கக்கூடும். ஆகவே அதை சரி செய்வதற்காக நடவடிக்கையைத்
தாமதப்படுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இவர்களில் பலர்
அகதிகள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதாகக்கூட இருக்கலாம்.

"இலங்கை
அகதிகள்' என்ற போர்வையில் ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் அடைந்து
பிறகு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்பட்டவர்களும் சரி, இந்தியாவில்
சொந்தங்களும், சொத்துகளும் உள்ளவர்களாய், முகாம்களுக்கு வெளியே வாழும்
இலங்கைத் தமிழர்களும் சரி, தொழில்செய்து வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும்
போது, ஏழை இலங்கை அகதிகள் மட்டும் சிறைக்கைதிகள் போல வாழும் நிலைமை எந்த
வகையிலும் நியாயமற்றது.

அவர்களுக்கான நிதியுதவி, கல்வி, தொழில்
ஆகியவற்றுக்கு இந்திய அரசு முன்னுரிமை தந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை
வழங்க வேண்டும். அல்லது முகாம்களைக் கலைத்துவிட்டு, முகாம்களிலும்
முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துகொண்டிருக்கிற - பதிவு செய்திருக்கும் -
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும்.

அதன்பிறகு மற்ற இந்தியர்களைப் போல தம் உழைப்பாலும் திறமையாலும் அவர்கள் வாழ்க்கை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும்.

வங்கதேச அகதிகளும், இலங்கை அகதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து
கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி
கலந்துவிடுகின்றனர்.

இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர்
பட்டியலில் இடம்பெறுவது சிரமம் அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம்
மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

அதெல்லாம் போகட்டும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு?
» இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்
» ஒரே ஒரு ஆசிரியர் பணி புரியும் உயர்நிலைப் பள்ளி: ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பள்ளிக்கே விடுமுறை
» சகவாழ்வு வேண்டாம்! தனிவாழ்வு வேண்டும்!! கோரிக்கையை முன்வைக்கும் ஈழத் தமிழர்கள்!! – தினமணி
» தினமணியில் இன்று மதி அவர்களின் கார்ட்டூன்! செவுட்டுல அறையுறது, பொட்டுல தெறிக்குது... நன்றி: தினமணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum