Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிங்களவர்கள் எங்களது துன்பங்களைப் பார்க்க மகிழ்வோடு வருகிறார்கள்:
Page 1 of 1

தமிழ்நாட்டின் குமுதம் இதழிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தீபச்செல்வன்.
கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த
செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த
அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு
நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்ற
பயங்கரம் தான் மிகுந்திருக்கிறது.
எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு சகோதரி. அவர்கள் 1990 இல்
இடம்பெயர்ந்திருந்தார்கள். பின்னர் 1996ம் இடம்பெயர்ந்து எங்களுடன்
வந்திருந்திருந்தவர்கள். அந்த சகோதரியின் கணவன் 2001ல் நடைபெற்ற சமர்
ஒன்றில் வீரமரணம் அடைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு பெண் குழந்தை
இருந்தது. பின்னர் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரை
பார்த்த பொழுது பெரு அதிர்ச்சியே ஏற்பட்டது. ஒரு கண்ணை இழந்து உடல்
முழுவதும் பெருங் காயங்களுடன் மரத்தின் கீழாக சமைத்துக்கொண்டிருந்தார்.
கிடைத்த சில மரக்கறிகளையும் நிவாரணமாகத் தரப்பட்ட அரிசியை கழுவி உலையில்
போட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த பெண் குழந்தையும், முதலில்
பிறந்த பெண் குழந்தையும், இரண்டாவது கணவனும், சகோதரனும் இறுதி யுத்ததில்
பலியாகியிருந்தார்கள். அவரது தலையுள்ளும் பீரங்கிச் சிதறு துண்டுகள்
நுழைந்த நிலையில் எடுக்க முடியாதிருக்கின்றன. மறதிகளும் அழுகைகளும் என்று
இன்று தனித்துப்போயிருக்கிறார்.
சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர்
சிதைந்து போன வீட்டை மீள பொறுக்கி கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரையில்
அவர் முகாமிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு
வந்த அவர் மறுநாள் தடுப்பு முகாமுக்கு திரும்ப வேண்டும். தனக்கு கண்கள்
வேண்டாம் என்று கூறிக்கொண்டேயிருந்தார். வாழ்வை தொடங்க வாழ பிடிப்பற்று
பேசிக்கொண்டிருந்தார். தன் குழந்தைகளையும் பறிகொடுத்த வேதனையை சொல்லிக்
கொண்டிருந்தார். நடந்து வரும் பொழுது மூத்த குழந்தை பீரங்கி குண்டு பட்டு
அப்படியே இறந்து விழுந்து விட்டது எனவும் கடைசிக் குழந்தை காயத்துடன்
தூக்கி வைத்திருந்த பொழுது கையிலேயே இறந்து விட்டது எனவும்
சொல்லிக்கொண்டிருந்தார் அவரது தாயார். அந்த குழந்தைகளின் புகைப்படத்தை
எடுத்து பார்த்துக் கொண்டேயிருந்தார்.
எந்த வருமானமும் அற்ற நிலையில் தந்த நிவாரணப் பொருட்களை அவித்து
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தந்த தகரங்களை ஒரு சில தடிகளில்
பொருத்தி விட்டு இருக்கிறார்கள்.
எங்கும் பற்றைகள் தான் வளர்ந்து காடாகியுள்ளது. முகாமிலிருந்து கொண்டு
வந்த சில பொருட்கள் வெளியில் கிடக்கின்றன. வந்திருக்கும் மக்கள் எல்லோருமே
கொண்டு வந்த பொருட்களை மரங்களின் கீழாகவும் தகரத்திற்கு கீழாகவும் போட்டு
விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சமர்கள் நடந்த இடம் என்பதால் மண்மூடைகளும் மண் அரண்களும் எங்கும் கிடக்க
குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது. அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட
முடியும்....? என்னுடன் வந்த கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த நண்பன்
இவற்றையெல்லாம் எப்பொழுது உழுது விதைக்க முடியும் அதற்கு அனுமதி எப்பொழுது
கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு வந்தான்.
வன்னி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள். கையில்
பணம் இல்லை. விவசாய உபகணரங்கள் இல்லை. கைவிடப்பட்ட தொழிலை எப்படி
தொடங்குவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீள திறக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர்
மறைத்து அழித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் உருத்தெரியாமல்
சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவைகளை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு
எடுத்துள்ளனர்.
எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு
எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
முழுக்க முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் வன்னி இருக்கிறது. அவர்களின் முழுப் பாவனையில் இருக்கிறது.
தமிழர்களின் நிலமை இப்படியிருக்க சிங்களவர்கள் நாளுக்கு நாள்
நிமிடத்திற்கு நிமிடம் வடக்கை நோக்கிப் படையெடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்களுக்கு வடக்கு, பார்க்கத் துடிக்கும்
சுற்றாலாத் தளமாக தென்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி என்று
எங்குமே சுற்றுலா வரும் சிங்களவர்களின் மயமாகவே இருக்கிறது. சிங்களவர்கள்
இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்ததில் சிதைந்த நிலத்தையும் அதில்
பாதிக்கப்பட்ட மனிதர்களையும் தான்.
முழுக்க முழுக்க முப்பதாண்டு யுத்த சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள்
பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படைகள் நிகழ்த்திய வீரதீரங்களைப்
பார்க்கிறார்கள். அகதிகளாக அலையும் மக்களைப் பார்க்கிறார்கள். அங்கங்களை
இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள்.
இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதூகலத்துடன் அவர்களின்
படைகள் வரவேற்கின்றனர். சிங்கள மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் படைகளை
சந்திக்கிறார்கள். அவர்கள் ஒரு பௌத்த நிலத்திற்கு வருவதைப்போல
உணருவார்கள். அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள்.
அல்லது ஒரு சிங்கள நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு
சிங்கள நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். வன்னி நிலமெங்கும் புத்த
சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள்
தோறும் நடைபெறுகின்றன.
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி நிலத்தை கைபற்றிய உடனே இந்த புத்த
சிலைகளை நாட்டுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். யாழ்ப்பாணம்
நாகவிகாரை, நயினாதீவு விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள்
சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலாத் தலங்களாக மாறியிருக்கின்றன.
எமது மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. அவர்களுக்கு வீடுகளும்
இல்லை. சிதைந்து உருத்தெரிமல் கிடக்கிறது வாழ்வு. எப்படி எதை வைத்து
தொடங்குவது என்று தெரியாத கையறு நிலையில் இருக்கிறார்கள். கால்வாசி மக்களை
தவிர மீதி மக்கள் வன்னி நிலத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
தெரு ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தகரங்களை நிலத்தில் நட்டு அதற்குள்
வாழ்கிறார்கள். புழுதியும் வெக்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை
பயங்கரமானதாக தொடருகிறது.
[You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» எங்களது திட்டம் எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல: சீனா விளக்கம்
» வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள்
» லண்டனில் தமிழரைத்தாக்க காத்திருந்த சிங்களவர்கள்: எதிர்பாராத பதிலடித் தாக்குதல்
» ஆரம்பமானது டி.டி.ஹெச் புக்கிங் : விஸ்வரூபம் படத்தை தமிழில் பார்க்க 1000/-ரூபாய்!, ஹிந்தியில் பார்க்க 500 ரூபாய்!!
» மூழ்கிய மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்க வீரர்கள் வருகிறார்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum