TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

2 posters

Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 05, 2013 5:02 pm

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 05, 2013 5:03 pm

அட்டூழியம்-1

“தெய்வம் பலப்பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்:
உய்வதனைத்திலும் ஒன்றாய் – எங்கும் ஓர் பொருளானது தெய்வம்”
- சொன்னவன் முண்டாசுக்கவிஞன்.

சில கால்டாக்சி ஆபிஸ்களில் நடக்கும் கூத்தைக் கேளுங்கள்.

இந்த நிறுவனங்களில், உங்கள் காரை சேர்த்துக் கொண்டீர்களானால், உங்கள் டாஷ்போர்டில் இந்து சமயக்கடவுள் சிலையை வைத்திருந்தால் உடனே அகற்றச் சொல்வார்களாம். பெரும்பாலும் பிள்ளையார் சிலைதான் வைத்திருப்பார்கள். அதேபோல் கார் பின்பக்க கண்ணாடியில் ‘அன்பே சிவம்’ போன்ற இந்து மத வாசகங்கள் இருந்தால் அகற்றச் சொல்கிறார்களாம். நம்ம டிரைவர் கம் ஓனர்களில் சிலர், வேறுவழியில்லாமல், பிழைப்புக்காக, காரில் இருந்து பிய்த்து போடும் சிலைகள் மானாவாரியாக கால்டாக்ஸி ஆபிஸுகளில் குவிந்து கிடக்கிறதாம்.

காரணம் என்ன தெரியுமா?

கிறித்தவர்கள், இந்துக்கடவுள் இருக்கும் கார்களில் ஏறமாட்டேன் என்று கண்டிசன் போடுகிறார்களாம். கால் புக் பண்ணும்போதே இந்த கண்டிசனை சொல்லி விடுகிறார்களாம்.

இது என்னய்யா கொடுமை? கார், மதநல்லிணக்கம் உள்ள இந்தியா அதுவும் அமைதிக்குப் பெயரெடுத்த தமிழ்நாட்டில்தானே ஓடுகிறது. வாடிகன் சிட்டியில் இல்லையே.

இந்த சிலை வைத்திருப்பவர்களில் காரில், இவர்கள் ஏறிவிட்டால் சிலையைப் பார்த்து முகம் சுளிப்பார்களாம் (இந்து தெய்வங்கள் சாத்தான் போல அவர்களுக்கு). சிலை வைத்திருப்பவன் சும்மா இருப்பானா? ஊதுபத்தி கொளுத்துவான் இல்லையா? அவ்வளவுதான்... அதை அணைத்துவிடு. இல்லாவிட்டால் இறங்கிக் கொள்கிறேன் என்று கலாட்டா செய்கிறார்களாம்.

ஊதுபத்தி கொளுத்தாமல் ... மாரியாத்தா பாட்டு போடுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களிடமுள்ள பிளேயரில் அல்லது செல்போனில் உள்ள கிறித்துவ பாட்டுக்களை காதே பிய்த்துக் கொள்ளும் சத்தத்துடன் ஒலிக்கச் செய்து மாரியாத்தாவை ஒடுக்கி விடுவார்களாம்?!?!?!. ஒரு கால்டாக்ஸி டிரைவர் சொன்னார், “இப்படிச் செய்யும்போது அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம் வரும் சார். ஏதோ நம்ம மதத்தை வேரோடு அழித்து விட்டதைப்போல....”

இப்படியெல்லாம் செஞ்சா நாளடைவில கால்டாக்சி நடத்துறவன், ஓட்டறவன் எல்லாம் பிழைப்புக்காக கிறித்தவ மதத்தில சேர்ந்துடுவானுங்களாம்.?!?!?! என்ன டகால்டி வேலை இது!

இதைப்போல செய்த ஒரு கிறித்துவ பெண்மணியிடம் ஒரு கால்டாக்ஸி டிரைவர் இப்படி சொன்னாராம். “ஏம்மா நீ அஞ்சு கிலோமீட்டரிலே இறங்கிடுவே. ஆனா ஆயுசு முழுக்க என் கூட வருவது என் சாமிதான். உனக்கு இது பிடிக்கலேன்னா வண்டியை விட்டு இறங்கிடுன்னு”.

எத்தனை பேர் இப்படி சொல்வார்கள்? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அதைப் பார்க்க வேண்டாமா?

இந்த விஷயங்களைக் கேளிவிப்பட்டதும் எனக்கு இயேசுகிறித்துவின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது. :-

“வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப்பொருட்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்ற்மளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.

அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்”

(மனிதம் வளரும்)

நன்றி - ஆரூரன் - ஈகரை தமிழ் களஞ்சியம்


Last edited by சாமி on Sun Apr 07, 2013 9:30 am; edited 1 time in total
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by ஜனனி Fri Apr 05, 2013 8:17 pm

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! 28284 உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Sun Apr 07, 2013 9:32 am

அட்டூழியம்-2

நடந்த கதை: - 1
எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர், பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். சீட் காலியாக இருந்ததால் ஒரு பெண்மணிக்கு அருகில் அமர்ந்தார். இவர் கையில் திருவாசகம் புத்தகம் இருந்திருக்கிறது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கத்தில் இருந்த பெண்மணி “என்ன படிக்கிறீங்க” என்று கேட்டிருக்கிறார். இவர் திருவாசகம் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் தீயைத்தொட்டது போல் விலகி, “நான் இதைக்கேட்கலே... படிக்கிறீங்களா? வேலைக்குப் போறீங்களான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றிருக்கிறார்.

இவர் வேலைக்குப் போகிறேன் என்றதும், “ஃப்ரீயா இருந்தா ஒருமுறை சர்ச்சுக்கு போங்க” என்று சொல்லியிருக்கிறார்.
“ஏன்? சர்ச்சுக்கு போகணும்!”
“நீங்க சும்மா போய்ப் பாருங்க! உங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பிரச்சாரத் தாள்களைக் கொடுத்திருக்கிறார்.
“இல்லைங்க.. எங்க கடவுள் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. இது தேவையில்லை” என்றாராம் இந்தப் பெண்மணி.
“சர்ச்சு பெண்மணி முகத்தை திருப்பிக் கொண்டு அதற்குப்பின் சர்ச்சைக்கு வரவேயில்லையாம்!

நடந்த கதை: - 2
கடந்த வாரம் ஞாயிறு, வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக, கொளத்தூர் பக்கம் போயிருந்தோம் நானும் என் நண்பரும். மதியம் இரண்டு மணியிருக்கும். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள், அவர்களின் கூட 10 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத்தாண்டிச் சென்றுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த பக்கம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இன்னும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவர்கள் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் என்று.

ஆர்வக்கோளாறினால், பக்கத்தில் சென்றோம். குங்குமப் பொட்டு வைத்திருந்த வீட்டுக்காரரிடம், “என்ன சார் ஏதாவது பிரச்சினையா” என்று கேட்டோம். கூட்டம் கூடியதும் இவரை விட்டு விலகி அடுத்தவீட்டு கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.

நம்மைப்பார்த்த அவர் “இவனுங்க தொல்லை தாங்க முடியலீங்க. இந்த பேப்பரைக் கையிலே கொடுத்துட்டு பேசிக்கிட்டே இருக்கானுங்க! போய்த் தொலய மாட்டேங்குறானுங்க. கிட்டத்தட்ட அரைமணி நேரமா கர்த்தர், ஜீஸஸ், கிறித்து, சிலுவை அப்படீப்படின்னு பேசிக்கிட்டேயிருக்கானுங்க தம்பி! என்ன சொன்னாலும் போகலை. ஆளுங்க வந்ததும் போயிட்டானுங்க” என்றார்.

எனக்கு ஒரு டவுட்டு! என்று என் நண்பனிடம் சொன்னேன். “இரண்டு இளைஞர்கள் சரி! எதுக்கு அந்த சின்னப்பையன் ?” என்றேன். இதைக்கேட்ட அந்த வீட்டுக்காரர் சொன்னார் “என்ன தம்பி பச்சைப் புள்ளையா இருக்கீங்க. இது ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக். தனியா வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டாங்க இல்லை. குழந்தையோட வந்தா குடும்ப அட்மாஸ்பியர் வரும் இல்ல. அதுக்குத்தான்!”

என் நண்பன் சொன்னான், “அட லூஸு, ரோட்டுல சிக்னல்ல பிச்சை எடுக்குற பொம்பள கையில குழந்தை வச்சிருக்காள்ளே எதுக்கு? SYMPATHIY கிரியேட் பண்ணத்தானே. அப்பதானே நீ இரக்கப்பட்டு பிச்சைப்போடுவே. அது மாதிரிதான் இதுவும்”

“உட்காந்து யோசிப்பாய்ங்களோ!”

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய இந்நாள் கிறித்தவ சகோதரனை சகோதரியைப் பார்த்து சில கேள்விகள் கேட்கத்த் தோன்றுகின்றன.

1. சகோதரனே முன்பின் தெரியாதவரிடம் மத மார்க்கெட்டிங்க் வேலை செய்யலாமா? இது அடிப்படை நாகரீகம் இல்லாத செயல் அல்லவா? இந்த அநாகரீகத்தைத்தான் உனக்கு புகுந்த மதம் சொல்லிக் கொடுத்ததா?

2. பொருட்களை மார்க்கெட்டிங்க் செய்யலாம். மதத்தை மார்க்கெட்டிங்க் செய்யலாமா? அப்படியென்றால் நீ புகுந்த மதம் ஒரு பொருளா?

3. சரி புகுந்த மதம் கடவுளை காட்டுகிறது என்றே வைத்துக் கொள்வோம். நீ அந்தக் கடவுளை பார்த்து விட்டாயா? பார்த்து அனுபவித்தபின் தானே அதை மற்றவர்களிடம் சொல்லி மாறச் சொல்ல வேண்டும்?

4. இப்போது கையில் பைபிள் வைத்திருக்கிறாயே! இதற்கு முன் நீ இருந்த இந்து மதத்தின் புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு அதில் ஒன்றுமேயில்லை என்று சலித்துப்போய்தான் பைபிளுக்கு வந்திருக்கிறாயா?

5. சரி பைபிளை முழுவதுமாக படித்து விட்டாயானால் பைபிளுக்கும் இந்து மத புத்தகங்கள் சொல்லும் கடவுள் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறிவுப் பூர்வமாய், தர்க்க ரீதியாய் உன்னால் பேச முடியுமா?

6. சரி! நீ இந்த பிரச்சாரத்தை இந்து சமயத்தாரிடம்தானே செய்கிறாய்? உன்னால் ஒரு முஸ்லீம் சகோதரனிடம் இந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? ஏன் செய்வதில்லை?

7. நீ இவ்வளவு ஃப்ரீயாக என்னுடன் என் சமயத்தைக் (உன்னுடைய முன்னாள் சமயம்) கேலி செய்து பிரச்சாரம் செய்கிறாயே! இதைப்போல் நான் உன் வீட்டிற்கு வந்து என் மதத்தைப் பற்றி பேச அனுமதிப்பாயா?

8. சகோதரனே! நீ இப்படி பேசுவது சட்டப்படி குற்றம் என்று உனக்குத் தெரியுமா?

9. நம் இந்தியத் திருநாடு வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பது. இங்கு பல சாதி, பல மதம், பல மொழி, பல இனம் இப்படி எல்லாமே பலப்பல. அதற்கு குந்தகம் விளைவிக்கிறாயே, இது சரியா?

10. இப்படி செய்வதற்கு நீ ‘புரோக்ராம்’ செய்யப்பட்டிருக்கிறாயே? உன்னுடைய முன்னால் மதத்தில் இப்படியெல்லாம் ஆள்பிடிக்கச் சொல்லியிருக்கிறதா?

11. எதிராளியின் பலவீனத்தைப் (பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை) பயன்படுத்தித்தானே நீ ஆள் பிடிக்கிறாய்? இது பாவச் செயல் இல்லையா? பாவச் செயல் செய்யச் சொல்லித்தான் இயேசுநாதர் சொன்னாரா?

என் சகோதரனே! இப்படி நிறைய கேள்வி கேட்கலாம் உன்னிடம்! ஆனால் உன்னிடம் இருந்து ஒரு பதில்தான் வரும்.
என்ன தெரியுமா அது?
என்னை சாத்தான் என்பாய்!
பாவம் நீ புரோக்ராம் செய்யப்பட்டுவிட்டாய்? அதை மீறி உன்னால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது.

‘வால் அறுந்த நரி’ கதை கேள்விப்பட்டிருக்கிறாயா? கேள்!

அது ஒரு செழிப்பான கிராமம். அங்கே பக்கத்தில் இருந்த காட்டில் ஒரு நரி இருந்தது. அது அந்த கிராமத்தில் இரவில் நுழைந்து, பயிரிட்டிருந்த வெள்ளரிக்காய்களை திருடி தின்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது. திருடி தின்றதோடல்லாமல் மலம் கழித்துவிட்டு தன்னுடைய பின்புறத்தை வெள்ளரிக்காய்களில் தேய்த்து, துடைத்துக் கொள்ளுமாம்.

பார்த்துப்பார்த்து கடுப்பாகிப்போன விவசாயி, சில வெள்ளரிக்காய்களில் பிளேடை சொருகி வைத்தான். வழக்கம் போல, காய்களை தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைக்கும் போது வால் துண்டாகி விழுந்து விட்டது. வருத்தப்பட்ட நரி, காயம் ஆறியவுடன் சில நாட்கள் கழிந்து காட்டுக்குள் போனது.

மற்ற நரிகள் எல்லாம் வாலில்லாத நரியைப்பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டது. அவமானப்பட்டதை மறைக்க நினைத்த நரி, வேறு ஒரு திட்டமும் தீட்டியது.

“நண்பர்களே, அந்த கிராமத்திலே ஒரு அதிசயத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கே உள்ள வெள்ளரிக்காயைத் தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைத்துக் கொண்டால் வால் தானாக உதிர்ந்து விடுகிறது. அதற்குப்பின் உடல் பலம் கூடிவிடும். பசியே இருக்காது. என்னைப்பார். நான் சாப்பிட்டு பத்து நாள் ஆகிவிட்டது. சுத்தமாக பசியே இல்லை. சோர்வும் இல்லை...” என்று பலப்பல பொய்களை அவிழ்த்து விட்டது நரி.

இதை நம்பிய சில நரிகள் இந்த நரியைப்பின்பற்றி வாலை இழந்தனவாம். இப்படி ஒரு கதை சின்னவயதில் சொல்லக் கேள்வி.

(மனிதம் வளரும்)
நன்றி - ஆரூரன் - ஈகரை தமிழ் களஞ்சியம்
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Sun Apr 07, 2013 9:34 am

அட்டூழியம்-3

நிகழ்வு – 1
என்னுடைய நண்பர் தனது மகளை கிறித்துவ சகோதரர்களால் நடத்தப்படும் பள்ளியில் சேர்த்திருந்தார். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பெண்குழந்தை அப்பா நான் கிறித்துவ மதத்திற்கு மாறிடறேன் அப்பா என்றாளாம். நம்ப மாட்டீர்கள்! பெண் 7 வதுதான் படிக்கிறாள்.

அதிர்ந்த நண்பர் என்னம்மா சொல்றே? என்றார். இல்லப்பா கிறித்துவ மதத்தில்தான் ஒழுக்கம் இருக்கிறது. நண்பர் சுதாரித்துக் கொண்டு “எப்படிம்மா சொல்றே” என்றார்.

பாருங்க! எங்க மிஸ் சொன்னாங்க. காலை எழுந்தவுடன், மதியம் சாப்பிடும்போது, தூங்குவதற்கு முன் என மூணு வேளையும் ஆண்டவனை தொழுகணும். நாங்கல்லாம் அப்படித்தான் பண்றோம் அப்படின்னாங்க. நாமெல்லாம் இப்படியெல்லாம் பண்றோமா அப்பா. இல்லையே அதான் சொல்றேன் என்றிருக்கிறாள்.

இதை கவனமாகக் கையாள நினைத்த நண்பர், பெண்ணைக் கூப்பிட்டு நமது தெய்வ வழிபாட்டு முறைகளை சிறுது சிறிதாகச் சொல்லி அந்தப் பெண்ணை கன்வின்ஸ் செய்தார்.

“ஏங்க! ஸ்கூலிலே போய் கேட்கவேண்டியதுதானே”, என்றேன் நான். “நமக்கு எதுக்குங்க வம்பு. நம்ம ஆளுங்களால நடத்தப்படாத ஒரு ஸ்கூலிலே என் பெண்ணை சேர்த்தது என் தப்புதானே! அதனால நான் ஒரு முடிவெடுத்துட்டேன் அடுத்த வருடம் என் பெண்ணை கிறித்தவர்களால் நடத்தப்படாத வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்போகிறேன்” என்றார்.

நிகழ்வு – 2
இன்னொரு நண்பரின் நான்காவது படிக்கும் பெண்ணின் கதை இது. ஒரு நாள் ராத்திரி தூங்கப்போவதற்கு முன் அந்தப் பெண் கிறித்தவ ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டாள். அதிர்ந்து போன நண்பர் என்னம்மா பண்றே? என்று கேட்டிருக்கிறார்.

அந்தப்பிஞ்சுக் குழந்தை சொன்னதாம். “அப்பா தினமும் லன்ச்சுல நாங்க எல்லாம் பிரே பண்ணிட்டுத்தான் சாப்பிடுவோம். மிஸ் சொல்லிக் கொடுத்தாங்க. இனிமேல் காலையில எழுந்தரிச்சதும் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் ஜெபம் பண்ணச் சொன்னாங்க” என்றாளாம்.

நிகழ்வு -3
மற்றொரு நண்பர் தனது குழந்தையை பாட்டு கிளாசுக்கெல்லாம் அனுப்பியிருந்தார். அந்த கிறித்தவப் பள்ளியில் நடந்த பாட்டுப்போட்டியில் இந்தக் குழந்தை ‘கலைமகள்’ பாட்டுப்பாடி அசத்தியிருக்கிறாள். சில நாட்கள் கழித்து அந்தக் குழந்தை அவளின் அம்மாவிடம் பெருமையாகச் சொல்லி உள்ளது. “அம்மா! நாளைலேயிருந்து காலையில் பிரேயரில் என்னைப் பாடச் சொல்லிட்டாங்க! என் குரல் மத்த எல்லாத்தை விடவும் நல்லாயிருக்காம். அம்மாவுக்கு பெருமை தாங்கவில்லை. சரி எனக்கு பாடிக் காட்டும்மா என்றார்களாம். குழந்தை பாடியது “ஏசப்பா பாடல்களை”. நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர் பெற்றோர்.

"என்னம்மா இந்தப்பாட்டுப்பாடறே?” - அப்பா
“ஏன்ப்பா நல்லாயில்லையா” – மகள்
“இல்ல ஏசுப்பாட்டு பாடறியே” – அப்பா
“நீதானப்பா சொன்னே! எல்லா மதமும் ஒண்ணுதான். அப்ப இந்தப்பாட்டு பாடறதுல என்ன தப்பு” – மகள்.

நிகழ்வு – 4
சில கிறித்துவ பள்ளிகளில் பாடம் நடத்தும் மற்ற மத டீச்சர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. இப்படித்தான் ஒரு பள்ளியில் வேற்றுமத டீச்சர் ஒருவர், பள்ளியில் நடந்த ஒரு விழாவில் அப்பிரானியாக மாணவர்களை வைத்து கலைமகளைப்பற்றிய பாட்டு ஒன்றை வாழ்த்துப்பாடலாக பாடவைத்துள்ளார்.

பின் என்ன? அவருக்கு புரொமோசன்தான்.

அதாங்க! டெர்மினேசன்!

நிகழ்வு – 5
கல்விச் சுற்றுலா கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? ‘சர்ச் சுற்றுலா’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சில கிறித்தவப் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் பரீட்சை நடத்துவதற்கு முன் ஒரே நாளில் பல சர்ச்சுகளுக்கு கூட்டிப் போவார்கள். எல்லா மாணவர்களையும் ஜெபம் செய்யச் சொல்வார்கள்.

பரீட்சை ரிசல்ட் வந்ததும் அதிக மார்க் வாங்கிய குழந்தைகளிடம், நீ சர்ச்சில் வழிபாடு செய்ததினால்தான் அதிக மார்க் வாங்கினாய் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

பள்ளிகள் நடத்தும் இந்நாள் கிறித்துவ சகோதரர்களுக்கு சில கேள்விகள்:-

1. “நீதானப்பா சொன்னே! எல்லா மதமும் ஒண்ணுதான். அப்ப இந்தப்பாட்டு பாடறதுல என்ன தப்பு” – என்று ஒரு பச்சைக் குழந்தை சொன்னதே அந்த குழந்தையின் பக்குவம் எங்கே? இவ்வளவு வயதாகி பள்ளி நடத்தும் அளவிற்கு செல்வச் செழிப்பாக இருக்கும் உங்கள் சூது எங்கே?

கிறித்து சொன்னது:
“விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று சீடர்கள் கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார். “ நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகா விட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

2. மத போதனைகளைச் செய்ய பள்ளிகளை ஒரு களமாக பயன்படுத்துகிறீர்களே? இதற்கு உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த போதனைகள் செய்யவேண்டும் என்று METRIC படிப்பில் உள்ளதா? CBSE படிப்பில் உள்ளதா? STATE BOARD படிப்பில் உள்ளதா? அல்லது சமச்சீர் பாடதிட்டத்தில் உள்ளதா? எதில் உள்ளது?

3. சகோதரனே! நீ சிறிய வயதில் தமிழ் பாடத்தில் உள்ள புத்தகங்களைப் படித்திருப்பாயே? ஞாபகம் உள்ளதா?

எம்மதமும் சம்மதம் என்ற எம்தமிழன் வைத்துள்ள பாடங்கள் என்ன தெரியுமா? உலகப்பொதுமறை திருக்குறள், கண்ணன் பாட்டு, நபிகள் புகழ் பாடும் சீறாப்புராணம், இயேசுவைப் பற்றிய இரட்சண்ய யாத்தீரிகம், புத்தமத சிலப்பதிகாரம், சமண சமய மணிமேகலை இப்படிப்பலப்பல.

இதை நீ சாய்ஸில் விட்டுவிட்டாயா? அல்லது பிட் அடித்து பாஸ் செய்தாயா?

4. முன்னர் பள்ளிகள் நடத்திய எம்மன்ணின் மைந்தர்கள் பிள்ளை, முதலியார், செட்டியார் போன்ற சமூகத்தினர் வேறு வேறு சாமிகளைக் கும்பிட்டிருந்தாலும் பள்ளிகளில் அவர்கள் சார்ந்த சமயத்தைப் பற்றி ஒரு வார்த்தைப் பேசியிருப்பார்களா? அவர்கள் தங்கள் சொத்தை, பணத்தை இதை பற்றிய தர்ம காரியங்களுங்கு பயன்படுத்தினாரே ஒழிய உன்னைப்போல சூது செய்யவில்லை.

5. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இறைவன் நிலையில் இருக்க வேண்டிய நீ சாத்தான் நிலைக்கு மாறி விடுகிறாயே? ஏன்?

6. எங்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்து பாடம் படிக்க அனுப்புகிறோமா அல்லது உன்னிடம் மத போதனை கேட்க அனுப்புகிறோமா?

7. சகோதரனே! அறத்தைப்பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு நீ கற்றுத்தர வேண்டியதில்லை. இயேசுவுக்கு முன்னாலேயே “அறம் செய்ய விரும்பு” என்று எங்கள் பாட்டி சொல்லியிருக்கிறாள். “அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை” என எங்கள் தாத்தன் சொல்லியிருக்கிறான். அறம் எங்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று.

8. படிப்பு என்ற உயிர்காக்கும் உணவில் சிறிது சிறிதாக மதம் என்ற நஞ்சைக் கலக்குகிறாயே. இந்தப் பாவத்தை செய்து நீ அடையப் போவது என்ன?

என் சகோதரனே மனந்திரும்பி/திருந்தி வஞ்சம் சூது அனைத்தும் ஒழித்து சிறு பிள்ளைகளைப் போல ஆகு!

(மனிதம் வளரும்)
நன்றி - ஆரூரன் - ஈகரை தமிழ் களஞ்சியம்
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 12, 2013 3:58 pm

பின்னூட்டம்: பத்மநாபன்
எனது சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவிற்கு போயிருந்தேன். பள்ளிக்கூடத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி.
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.

பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ..
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 12, 2013 3:59 pm

அட்டூழியம்-4

அன்றாட நிகழ்வு :
மதம் மாற்றம் செய்யும் இடங்களில் சொல்லும் வசனம் இது:-
உங்களுடைய மதத்தில் உங்களுக்கு சம உரிமை , மரியாதை தருவதில்லை. நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்படுகிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. உங்களை எங்கள் சகோதரனாக ஆக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் உங்களுக்கு சம அந்தஸ்து தருகிறோம்.

இந்த வசனத்தை பொதுவானவர்கள் கூட, “ஆமாமாம்... இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என சிலரை சமூகத்தில் இருந்து விலக்கி விடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த கிறித்துவ மாற்றம்.” என்பர்.

சில ஐயங்கள்:-
1. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் மட்டும் உங்கள் மதம் என்றால் ஏன் மற்ற சாதிக்காரன் பக்கம் போகிறீர்கள்?

2. மாற்றப்பட்டபின் இப்போது உங்கள் மதத்திற்குள் வேற்றுமை பார்ப்பதில்லையா? நாடார் கிறிஸ்டின், முதலியார் கிறிஸ்டின் இப்படி உங்களுக்குள் பேதம் இல்லையா?

3. தமிழன் சாதிப்பெயரை தெருக்களில் இருந்தும், தன் பெயர்களின் பின்னாலும் போடுவதை எடுத்துவிட்டான். ஆனால் தற்போது சுவரொட்டிகளில் சாதிப்பெயரைப் போட்டு நீங்கள் போடுகிறீர்களா இல்லையா?

ஒரு பெண்பிரச்சாரகரின் பெயர் சகோதரி ப............. முதலியார். இவரின் போஸ்டர்கள் அன்றாடம் நம் கண்களில் படுகிறது. ஏன் இந்த தகிடுதத்தம். இதற்கு அர்த்தம் என்ன? முதலியார் சமூகத்து ஆட்களை இழுத்துப் போடத்தானே?

4. திருநாவுக்கரசு என்பவர் உங்களுடன் சேர்ந்தால் அவர் பெயருக்கு முன்னால் மெர்வின் என்ற பேரைச் சேர்த்து விடுவீர்கள். கணேசன் என்பவர் சேர்ந்தால் இனிமேல் நீ ஐசாக் கணேசன் என அழைக்கப்படுவாய் என்பீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?

5. சரி உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் கிறித்தவத்துக்குள். EASTERN ORTHODOXY, ORIENTAL ORTHODOXY (such as Catholic, Coptic, East Orthodox) AND ASSYRIAN CHURCHES, PROTESTANTISM (such as Lutheran, ect..) RESTORATIONISTS, ANGELICAN COMMUNION, PENTECOSTALS இப்படிப்பலப்பல. எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிறித்தவ சமூகம் என்று ஒன்றே ஒன்றாக்கி விடுவதுதானே?

6. இன்றும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என இனபேதம் இருக்கிறதே! அங்கு உள்ள கறுப்பரும் வெள்ளையரும் கிறித்துவர்கள்தானே?

7. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய போப் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? இல்லையே. மூன்றுமுறை புகைப் போக்கியில் கரும்புகைதானே வந்தது? நான்காவது தடவைதானே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முதல் தடவையே ஒற்றுமையாக அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?

8. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் தமிழன். அயலான் நுழைந்து ஏற்படுத்தியதுதானே இந்த சாதிப்பேதம்.

9. DIVIDE AND RULE இதுதான் வெள்ளையர்களின் கொள்கையே. அவர்களின் மதம் ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசும்?

10. இந்து சகோதரர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குள்ளும் எவ்வளவு பிரிவினையை ஏற்படுத்தினார்கள் இந்த வெள்ளையர்கள். மறந்துவிட்டதா?

“ஆங்கிலோ இந்தியர்கள்’ கதை தெரியுமா...கேள்!
பிரிட்டிஷ் தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் பிறந்து வளர்ந்த மக்கள்தான் “ஆங்கிலோ இந்தியர்கள்”. கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டிஷ் ஆளுனர்களுக்குச் சொன்னது:- “நம் படை வீரர்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான திருமணங்கள் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வை நிர்ணயிப்பவையாக இருப்பதால், அத்தகைய திருமணங்களைப் பொருட்செலவு செய்து ஊக்கப்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம்”. இப்படிச் சொல்லி இந்த திருமணங்களை ஆதரித்து வளர்த்தார்கள்.

ஆனால் இறுதியில் நடந்தது என்ன?

இந்த ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகளை, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு இணையாக மதிக்கவில்லை. வெறும் குமாஸ்தா வேலைகள்தான் அளித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இன்று அவர்களின் நிலை “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கிளாஸ் எடுப்பவர்கள். அதுமட்டுமில்லாமல் “இந்தியாவை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள், இவர்களை அழைத்துச் செல்ல முடியாமல் இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர்” என்ற கேலிப்பேச்சுக்கும் ஆளாகின்றனர்.

மதம் மாறிய சகோதரா! மதம் மாறச் சொல்லும் சகோதரா! நீ ஓவர்நைட்ல மட்டும் இல்ல… ஓவர்டைம் பண்ணாலும் ஒபாமா ஆகமுடியாது. ஏனெனில் நீ என்னதான் வெள்ளையாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை நீ “கறுப்பன்” தான்.

(மனிதம் வளரும்)
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 12, 2013 4:00 pm

அட்டூழியம்-5

உண்மைச் சம்பவம்-1
சென்னை, அண்ணாநகர். இரவு 10 மணியிருக்கும். நானும் எனது நண்பரும் மோடார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் சென்ற மோடார் வண்டியில் கணவன் மனைவியும் கூட அவர்களது சிறு வயது குழந்தைகள் இருவரும் சென்று கொண்டிருந்தனர். குழந்தைகள் இருவரும் தூங்கி தூங்கி விழ அந்த தம்பதிகள் வண்டியை ஓட்ட முடியாமல் நிறுத்தி குழந்தைகளை எழுப்ப முயற்சித்தனர்.

எங்களை கடந்து சென்றது ஒரு கார். காரின் பின்பக்க கண்ணாடியில் மத அட்வர்டைஸ்மென்ட் (லேட்டஸ்ட் அட்வர்டைஸ்மென்ட் டெக்னிக் - அதாங்க வாசகம்! ) எழுதியிருந்தது. தம்பதியின் பக்கத்தில் போய் நின்றது கார். காரில் இருந்து இருவர் இறங்கினர். அதில் ஒருவர் அந்த தம்பதிகளிடம் “குழந்தைகளும் நீங்களும் பக்கத்து பக்கத்துல நில்லுங்க. நாங்க ஓதறோம். குழந்தை எழுந்து விடும்” என்று நடு ரோட்டில் கடை விரித்தனர்.

அந்த தம்பதிகள் மறுத்துவிட அவர்கள் கிளம்பி விட்டனர். அதற்குள் நாங்கள் சென்று ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வந்தோம்.

உண்மைச் சம்பவம்-2
எங்களின் எதிர்த்த வீடு. இந்துக் குடும்பம். அடிக்கடி அந்த குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை நடக்கும். காது பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு சண்டையிடுவார்கள். ஆனால் அடுத்த நாளே கணவன் மனைவி கூடிக் குலாவிக் கொள்வர். இது அவர்களுக்கு சகஜம்.

ஒரு நாள் சாயந்தரம் பார்த்தால் ஒரு ஏழெட்டு கிறித்துவ சகோதரர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அதற்கப்புறம் என்ன? ஒரே ஓதல் மயம்தான். சண்டைச் சத்தத்தை விட இந்தச் சத்தம் பெரிதாக இருந்தது. வான மண்டலத்தில் இருக்கும் பிதாவுக்கே கேட்டிருக்கும்!

சத்தம் ஓய்ந்து முடிந்து எல்லோரும் கிளம்பியதும் வெளியில் வந்த அந்த கணவர் என்னைப்பார்த்தார். என்னுடன் காலையில் வாக்கிங் வருபவர் அவர். “என்ன சார் மாறிட்டீங்களா” என்றேன். “அட நீ வேறப்பா. என் பொண்டாட்டி வேலைப் பார்க்குற ஆபிஸுல அவளோட பக்கத்து ஸீட் பொம்பள கிறிஸ்டியனாம். எங்க வீட்டில நடக்குற சண்டைய அவகிட்ட இவ சொல்லி இருக்கிறா. எவன் வீட்டில சண்டை இல்ல. நாங்க சத்தமா போடறோம். மத்தவங்க சத்தம் வெளியே வராம பார்த்துக்கறாங்க. இதுதான் சான்ஸுன்னு அந்த பொம்பள, பட்டாளத்தோடு கிளம்பி வந்துட்டா! இதை வேணாம்னு சொன்னா இதுக்கு ஒரு சண்டை நடக்கும்” என்றார் விரக்தியாக.

சில ஐயங்கள்:-
1. என் சகோதரா! ஓதினால் சண்டை நீங்கி விடுமா? வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறதே. நீங்கள் கும்பலாகச் சென்று ஓதினால் ஒரு போரைத் தவிர்க்கலாமல்லவா?

2. ஒதினால் உடல்நலக்குறைவு சரியாகி விடுமா? அப்படியானால் மருந்து மாத்திரையே தேவையேயில்லையே. சரி! உடல்நிலை ஒத்துவரவில்லை என்றுதானே மரியாதைக்குரிய முன்னால் போப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஓதியிருக்கலாம் அல்லவா?

3. நாட்டில் உள்ள மருத்துவமனைகள் தோறும் நீங்கள் சென்று ஓதலாம் அல்லவா? டாக்டர் பீஸ் மிச்சமாகுமே எங்களுக்கு!

4. சரி நீங்கள் இதுவரை எத்தனை பேருக்கு ஓதியுள்ளீர்கள்? எத்தனை பேர் குணமாகி உள்ளனர்? புள்ளிவிவரம் தர முடியுமா?

5. நீ ஒதுவது எதற்காக? உனக்கு ஒரு என்ட்ரி பாஸ் வேண்டும். முதலில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் போல் நுழைந்து அதற்குப்பின் உன் காரியத்தைச் சாதிக்க வேண்டும். உன் காரியம் என்பது மதமாற்றம் செய்வது! இதைச் சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறதே! உன்னால் எப்படி இப்படிச் செய்ய முடிகிறது?

6.. “எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்” என்ற பழமொழிப்படி, மற்றவர்களின் துன்பத்தையே நீ ஒரு மூலதனமாகக் கொள்கிறாயே இது முறையா? தகுமா?

சரி கதை ஒன்று கேள்!
முன்னொரு காலத்தில் காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு நாள் நகரத்திற்கு உணவு தேடிச் சென்றது. ஒரு சாயத் தொழிலாளியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நீல நிற சாயத் தொட்டியில் விழுந்து விட்டது. அதன் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை நீல நிறமாகிவிட்டது.

அது காட்டிற்கு திரும்பிய போது மற்ற விலங்குகள் அதை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தன. இதனை பயன்படுத்திக் கொண்ட நரியானது, தான் கடவுளால் காட்டை காப்பதற்காக அனுப்பப்பட்டவன் எனக் கூறியது.

சில விலங்குகள் நரி கூறியதை பயத்துடன் கேட்டன. சில சந்தேகத்துடன் பார்த்தன. இதைப் பயன்படுத்திய நரி சிங்கத்தை முதல் அமைச்சராகவும், புலியை தன்னுடைய படுக்கையறை காவலாளியாகவும், யானையை வாயில் காப்போனாகவும் அறிவித்தது. தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொண்ட நரி பிற விலங்குகள் தனக்காக உழைத்து உணவுப் பொருட்களை கொண்டு வரவேண்டும் என அறிவித்தது.

இப்படி பல திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே காட்டில் பெருமழை பெய்யத் தொடங்கியது.

அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உனக்கேத் தெரியுமே!

(மனிதம் வளரும்)
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 12, 2013 4:01 pm

அட்டூழியம்-6

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-1
அந்த ஊர் ஒரு அத்துவானக் காடு. ஊர் பெயர் சொல்லவிரும்பவில்லை. அங்கே பார்த்தால் திடீரென ஒரு கிறித்தவக் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார்கள். அங்கே ஒரு கிறித்தவ சகோதரர் கூட கிடையாது.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-2
தெருக்குத் தெரு அல்லது தெருமுனையில் பிள்ளையார் கோயில் பார்த்திருப்போம். இப்போது தெருக்குத் தெரு கிறித்தவர்களின் சிறிய கோயில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்டப்பட்டு வருகிறது.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-3
வழக்கமாக இந்துக் கோயில்களில் கொடிமரம் வைக்கப்பட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். இப்போது சில கிறித்தவக் கோயில்களில் கொடிமரம் போலவே “ஸ்தூபி” வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-4
பல காலி மனைகள், இடங்கள் கிறித்தவ சகோதரர்களாலும் கிறித்தவ அமைப்புகளாலும் வாங்கப்பட்டு வருகிறது.

இதைப்பற்றியெல்லாம் அவர்களிடமும் மற்றவர்களிடமும் கேட்டு அறிந்த தகவல்:

யாருமே இல்லாத ஊரில், அத்துவானக்காட்டில் கிறித்தவக்கோயில் கட்டுகிறார்களே. எதுக்கு? என்று அந்த ஊர்க்காரர் ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார்.

“வியாபாரம் பண்ணனும்னு முடிவு பண்ணா கடை அல்லது ஆபிஸ் வெச்சாதானே முடியும். இப்ப கடை கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. வியாபாரம் கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பிச்சுருவாங்க” என்றார்.

தெருவுக்கு தெரு சிறிய கோயிலைக் கட்டி கிறித்தவக் கோயில்களை மற்றவர்களின் மனதில் கிறித்தவக் கோயில்களை சகஜமாக ஆக்க வேன்டியது.

புதுக்குடித்தனம் வந்த இந்து மதத்தார்களுக்கும் வரப்போகிறவர்களுக்கும் “உங்க பழைய கோயிலுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது” என்று காட்டுவதற்காக கொடிமரம் போன்ற ஸ்தூபி வைக்கப்படுகிறது.

சரி இதனால என்ன நடந்திடப்போகுது என்று கேட்கும் நம்ம பயபுள்ளைகளுக்கு.
நடந்த சம்பவத்தை சொல்றேன். கேளுங்கள்!

நடந்த சம்பவம்
ஆப்பிரிக்க பழங்குடியில் நடந்த சம்பவம் இது. அவங்களும் ரொம்ப அப்பாவியா இருந்திருக்கானுங்க. எல்லாம் முடிஞ்ச பின்னால் ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்திருக்கிறார். அவங்க சொன்ன ஸ்டேட்மென்ட்.

“வெள்ளைக்காரங்க ரொம்ப பேர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க வந்திருந்தாங்க. உங்களுக்கு நாகரீகம், வாழ்க்கை முறை எல்லாம் கத்துக் கொடுக்கிறோம். இங்க வாங்க”ன்னு சொன்னாங்க. நாங்களும் போனோம்.

“எல்லோர் கையிலேயும் பைபிளைக் கொடுத்தாங்க. கண்ணை மூடிக்கிட்டு நாங்க சொல்றதை அப்படியே ஓதுங்க”ன்னு சொன்னாங்க. நாங்களும் அதே மாதிரி பல நாள் செஞ்சோம்.

“ஓதி ஓதி ஒரு நாள் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்க கையில பைபிள் இருந்தது. அவங்க கையிலே எங்கள் நிலங்கள் எல்லாம் இருந்தன”.

(மனிதம் வளரும்)
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by சாமி Fri Apr 12, 2013 4:01 pm

சில விளக்கங்கள்:

மதம் என்பது ஒரு மனிதனின் அல்லது ஒரு குழுவின் நம்பிக்கை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியை அடைவதின் வழி அல்லது இறைவனை அடையும் பல வழிகளில் ஒன்று.

உலகம் தோன்றியதில் இருந்து பல அருளாளர்கள் இறைவனை அடையும் வழிகளை அவரவர்கள் வழியில் கண்டு பிறருக்கும் அறிவுறுத்தினர்.

கிறித்து, அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்னார். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவரைப் போன்று தோன்றிய அருளாளர்கள் அவரவர் சார்ந்த கூட்டத்திற்குச் சொன்னார்கள்.

கிறித்து, அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்ன ஒன்றை வைத்து இந்த உலகத்தையே அவரின் கூட்டமாக மாற்றப்போகிறோம் என்பது எப்படிச் சரி? அல்லது விவேகானந்தர், அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்ன ஒன்றை வைத்து இந்த உலகத்தையே விவேகானந்தரின் கூட்டமாக மாற்றப்போகிறோம் என்றால் எப்படிச் சரியாகும்?

அவரவரை அவர்அவர் வழியில் விடுவதுதானே ஜனநாயகம், பண்பாடு, மனிதத்தனம்…. அடுத்தவரை வஞ்சகத்தால் தம் வலைக்குள் விழவைப்பது கேவலமான செயல் அல்லவா? அந்த கேவலத்தைத்தான் இந்த திரியில் நான் விமர்சிக்கிறேன். மற்றபடி நல்ல மனிதராக இருக்கும் நல்ல கிறித்தவர்களை அல்ல.

பென்னிகுயிக்:
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்த ராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அதன்பின், இந்தியாவுக்கு ராணுவப் பொறியாளராக வந்தார் கிறித்தவரான கர்னல் ஜான் பென்னிகுயிக். அணை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து ஆங்கில அரசின் அனுமதியையும் பெற்றார். ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப் பட்டது.அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக் கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார். கிறித்தவராக இந்தியாவிற்கு வந்த பென்னிகுயிக் இந்தச் செயலால் மனிதனாக உயர்ந்தார். மனிதனாக பார்க்க வேண்டியவரை ஒரு மதத்திற்குள் அடக்கக்கூடாது.

அன்னை தெரசா:
கடவுளின் காலடியில் "பட்டு துணியாய் "இருப்பதை விட ஏழையின் கண்ணீர் துடைக்கும் "கை குட்டையாக" இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் அன்னை தெரசாவை கிறித்தவராக பார்க்கமுடியாது; மனிதராகத்தான் பார்க்கமுடியும்.

இதைப்போலவே ஒவ்வொரு மதத்திலும், சாதியிலும், நாட்டிலும், குலத்திலும், குடியிலும் மனிதர்கள் இருந்தார்கள்; இருப்பார்கள். இவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது.

இதைத்தான் நம் அய்யன் சொன்னார் “உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப் படுவான் என்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வருணாச்சிரம் தமிழன் ஏற்படுத்தியது அல்ல. தமிழனுக்குச் சாதியில்லை. மதமுமில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் அறம்தான். இல்வாழ்க்கையில் அறம், பொருளை சம்பாதிப்பதில் அறம், களவியலிலும் அறம், கற்பியலிலும் அறம், கடவுளை அடைவதிலும் அறம்.

ஒன்றும் தெரியாமல் ஜாலிக்காக இந்தக் கட்டுரை எழுதவில்லை. இந்த வஞ்சக வலையில் சிக்கியவர்களில் எனது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உள்ளார்கள். சிக்கியவர்களால் அவர்கள் குடும்பம் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து அனுபவித்தபின்தான் எழுதுகிறேன். இதைப் படித்து, படித்தவர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தி, வஞ்சக வலையில் சிக்காமல் யாராவது ஒருவர் தப்பினாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

(மனிதம் வளரும்)
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Empty Re: உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum