Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இளங்கோவனின் மிரட்டல் நடைமுறைக்கு வந்தது. புதிய தலைமுறை உரிமையாளர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு.
Page 1 of 1

கடந்த
சில நாட்களுக்கு முன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில்
பேட்டி கொடுக்க வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புதிய தலைமுறை டிவி மீது கூடிய
விரைவில் சி.பி.ஐ. நடவடிக்கை பாயும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
அவர் விடுத்த மிரட்டல் இன்று உண்மையானது. புதிய தலைமுறை உரிமையாளர்
பச்சமுத்து அவரது தந்தை பாரிவேந்தர் மீது தற்போது சி.பி.ஐ. ரெய்டு
நடத்தியுள்ளது. மக்களுக்கு சொன்ன வாக்குறுதியை செய்து காட்டுவார்களோ
இல்லையோ அரசியல்வாதிகள் இதுபோன்ற மிரட்டல்களை உடனுக்குடன் செய்து
காட்டுவதில் வல்லவர்கள் என்பது இதன் மூலம் நிருபணமானது.
லட்சக்கணக்கில்
நன்கொடை வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு மீடியா வெளிச்சத்துக்கு
வந்துள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி
நிறுவனங்களின் நிறுவனருமான பாரிவேந்தர்!
சென்னை
விமான நிலைய சுங்கத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜம்பாலா
என்பவரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.
சொகுசு பங்களா, விலை உயர்ந்த கார்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த ஜம்பாலாவின்
வீட்டில் சோதனை நடத்திய சி.பி.ஐ. வசம் ஒரு துண்டுச் சீட்டு சிக்கியது.
வரவு செலவு டைரியில் இருந்த அந்தத் துண்டுச் சீட்டில், தனது மகள் மானஷாவை
மருத்துவப் படிப்பில் சேர்ப்பதற்கு நன்கொடை கொடுத்த வகையில் 40 லட்சம்
என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய மகள் மானஷா எம்.பி.பி.எஸ். படித்தது
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில். இதையடுத்து, பாரிவேந்தரும்
எஸ்.ஆர்.எம். கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அவருடைய மகன்
ரவி பச்சமுத்துவும் சி.பி.ஐ. விரித்த வலைக்குள் வந்தனர். விசாரணைக்கு
வரும்படி இருவருக்கும் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. தந்தையும் மகனும்
விசாரணைக்கு வராமல், கல்லூரியின் பதிவாளரை அனுப்பிவைத்தனர். அத்துடன்,
முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல்
செய்தனர்.
பாரிவேந்தரின்
மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, அவருக்கும் அவரது மகனுக்கும்
முன்ஜாமின் வழங்கினார். கூடவே, சி.பி.ஐ. விசாரணைக்குக் கண்டிப்பாக நேரில்
ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.
கடந்த
திங்கட்கிழமை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு
பாரிவேந்தரும் அவரது மகன் ரவி பச்சமுத்துவும் காலை 9.20 மணிக்கு வந்தனர்.
அங்கு வந்து குவிந்திருந்த ஐ.ஜே.கே. தொண்டர்கள் இருவரையும் கோஷங்களை
எழுப்பி வரவேற்றனர். அவர்கள் விசாரணை முடிந்து வெளியில் போகும் வரை,
சாஸ்திரி பவன் ஐ.ஜே.கே. கட்சியின் அலுவலகத்தைப் போல் காட்சியளித்தது.
மூன்றரை
மணி நேரம் நடந்த விசாரணை பற்றி சி.பி.ஐ. தரப்பு என்ன சொல்கிறது?
''கல்லூரியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? கட்டாய நன்கொடை
வாங்கியது உண்மையா? போன்ற கேள்விகள்தான் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள்,
'நாங்கள் யாரிடமும் கட்டாய நன்கொடை வாங்குவதில்லை. விருப்பப்பட்டு சிலர்
கொடுக்கின்றனர். அதுவும்கூட பணமாகக் கொடுப்பது இல்லை. கல்லூரிக்குத்
தேவையான வசதிகளாகத்தான் செய்து கொடுக்கின்றனர்’ என்றனர். 'ஜம்பாலா
உங்களிடம் 40 லட்சம் கொடுத்ததாக கூறி இருக்கிறாரே’ என்ற கேள்விக்கு,
'இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பணியில் இருந்தவர்கள்
இப்போது இல்லை. அவர்கள் கல்லூரியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி
வாங்கியிருக்கலாம்’ என்றனர். அடுத்தடுத்த விசாரணையில் முழு உண்மை
தெரியவரும்'' என்கிறது சி.பி.ஐ. தரப்பு.
பாரிவேந்தர்,
ரவி பச்சமுத்து ஆகியோரிடம் இதுபற்றி விவரம் கேட்க முயன்றோம். அவர்கள்
தரப்பில் அவர்களுடைய வழக்கறிஞர் அபுடூகுமார் பேசினார். ''இப்போது உள்ள
அரசியல் சூழ்நிலைகள்தான் இதற்குக் காரணம். இத்தனை பெரிய குற்றச்சாட்டை
சொல்லும் சி.பி.ஐ. அதற்கு ஆதாரமாக இதுவரை எதையும் சமர்ப்பிக்கவில்லை.
ஜம்பாலா என்பவர் டைரியில் எழுதிவைத்து இருந்தார்... அவரிடம் துண்டுச்
சீட்டு இருந்தது என்று கதைவிடும் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நாங்கள்
முன்ஜாமின் கேட்டபோதுகூட, எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதில்
இருந்தே இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிகிறது. எஸ்.ஆர்.எம்.
கல்வி நிறுவனங்களின் பெயரைக் கெடுக்க சிலர் செய்யும் சதி வேலை இது.
சட்டப்படி நாங்கள் இவற்றைச் சந்திப்போம்'' என்றார்.
இதற்குப்
பின்னணியில் அரசியல் உள்ளதா? ''எங்களது ஊடகங்களின் மூலமாக வெளியிடும்
செய்திகளை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி நடவடிக்கை எடுத்து
மிரட்டுகிறார்கள். முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் எங்களை
நேரடியாகவே மிரட்டினார்'' என்றார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாக
உறுப்பினர் ஒருவர்.
சி.பி.ஐ.
தரப்பிலோ, ''அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல
முடியாது. கணக்கு வழக்குகள் ஒழுங்காக இருந்தால், அவற்றை எங்களிடம்
சமர்ப்பிக்க வேண்டியதுதானே?'' என்று திருப்பிக் கேட்கின்றனர்.
தவறு பாரிவேந்தர் மீதா, காங்கிரஸ் மீதா?

Similar topics
» கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!
» ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,
» அனுஷ்கா வீட்டில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு!
» இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைகாட்சி காணத்தவறாதீர்கள் !!!!
» முறைகேடு, சொத்து குவிப்பு புகார் எதிரொலி! ஜெகன் வீட்டில் சிபிஐ ரெய்டு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum