Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மதியாதார் தலைவாசல்....
Page 1 of 1
மதியாதார் தலைவாசல்....
2008
நவம்பர் 26-ம் தேதி மும்பையில் கடல்வழியாக நகருக்குள் நுழைந்த பத்து
பாகிஸ்தான் தீவிரவாதிகள், 6 அமெரிக்கர் உள்பட 166 பேரைக் கொன்ற
சம்பவத்தில் தொடர்புடையவரான டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை
நடத்துவது குறித்து அமெரிக்க அரசுக்கு இந்திய அரசு கடிதம் எழுதவுள்ளது.இந்தக்
கடிதம் எழுதும் நிலைமை எதனால் ஏற்பட்டது என்றால், இந்தியாவில் உள்ள
அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர், புது தில்லியில் வெளியிட்ட
அறிக்கையில், ஹெட்லியிடம் இந்தியா விசாரணை நடத்துவது பற்றி அமெரிக்கா
எந்த முடிவும் எடுக்கவில்லை. இனிமேல்தான் இதுகுறித்து அமெரிக்காவின்
நீதித்துறை முடிவு மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்ததால், தற்போது
கடிதம் எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டின்
அரசியல் சட்டப்படி, இந்த வழக்கு நடைபெறும் சிகாகோ நகர
நீதிமன்றத்திடம், அமெரிக்க நீதித்துறை அனுமதி பெற்ற பிறகுதான் இந்திய
அதிகாரிகள் ஹெட்லியிடம் நேரடியாக விசாரிப்பது குறித்து முடிவுக்கு
வரமுடியும் என்கிறார்கள்.தற்போது அமெரிக்கச் சிறையில் இருக்கும்
ஹெட்லி, தனக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம் என்றும், தன் குற்றங்களை
ஒப்புக்கொள்வதாகவும், வேண்டுகோள் ஒப்பந்த மனுவை நீதிமன்றத்தில்
அளித்துள்ளார். பாகிஸ்தானிய அமெரிக்கரான ஹெட்லி இந்த மனுவில், அமெரிக்க
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்பட்டு வெளிநாட்டவர்களின்
விசாரணைக்கு-எழுத்து மூலமாகவோ அல்லது விடியோ கான்பரன்ஸிங் மூலமோ அல்லது
நேரடியாக அங்கு கொண்டு செல்லப்பட்டோ விசாரிக்க- தான் ஒப்புக்கொள்வதாகத்
தெரிவித்துள்ளார்.அதனால்தான், இந்திய உள்துறை அமைச்சரும் மிகவும்
நம்பிக்கையுடன், ஹெட்லியிடம் விசாரணை நடத்த முடியும் என்று
தெரிவித்தார். மேலும், தேசியப் புலானாய்வு முகமையும் 2008 நவம்பர்
மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் ஹெட்லி மீதான குற்றப்பத்திரிகையைத்
தயார் செய்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவில் உள்ள
அமெரிக்கத் தூதர், ஹெட்லியிடம் இந்தியா விசாரிப்பது பற்றி இன்னும்
முடிவாகவில்லை என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்த அறிக்கை?
ஏனென்றால், வாஷிங்டனில் அமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான திட்டங்கள்
குறித்த அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம்,
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை (அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்
மட்டும்?) கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தானின் பங்கு ஆகியவை உள்ளிட்ட
முக்கிய விஷயங்கள் பேசப்படும் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
குரேஷியின் மனம் குளிர்வதற்காக இத்தகைய அறிவிப்பை தில்லியில்
வெளியிடுகிறார், இந்தியாவின் அமெரிக்கத் தூதர். அமெரிக்காவும்
தன் பங்குக்கு, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும்
இருதரப்பாகத் தீர்வுகாண வேண்டும்; இரு தரப்பும் அழைத்தால் மட்டுமே
அமெரிக்கா இதில் தலையிடும் என்றும் சொல்கிறது. அதாவது, பாகிஸ்தான் மனம்
குளிர வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் அமெரிக்கா பேசும்,
எப்படிவேண்டுமானாலும் அறிக்கை வெளியிடச் செய்யும் என்கிற நீண்டநாள்
சந்தேகம் மேலும் வலுக்கிறதே...6 அமெரிக்கர் உள்பட 166 பேர்
கொல்லப்பட்ட இந்தத் தீவிரவாதச் செயலில் 12 குற்றச்சாட்டுகளை ஹெட்லி
ஒப்புக்கொண்டாகிவிட்டது. தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன்
ஹெட்லியின் தொடர்பு, மும்பைத் தாக்குதல் குறித்த சதித்திட்டம்,
தீவிரவாதப் பயிற்சி முகாம்களில் பங்குகொண்டது, கடல்வழியாக தீவிரவாதிகளை
அனுப்பியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஹெட்லி ஒப்புக்கொண்ட
நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா மீது உண்மையிலேயே அக்கறை
இருக்குமானால், இவரிடம் விசாரணை நடத்த வாருங்கள் என்றல்லவா அழைத்திருக்க
வேண்டும். உங்கள் விருப்பம் என்ன? என்றல்லவா இந்தியாவிடம் கேட்டிருக்க
வேண்டும்?மரண தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்திருக்கும் ஹெட்லி,
இத்தகைய வேண்டுகோள் ஒப்பந்தத்தை அளித்ததன் காரணமே, அமெரிக்க உளவுத்
துறைக்கு வேண்டிய பல்வேறு தகவல்களை அவர் அளித்துள்ளதால்தான் என்றும்,
ஆகவே அவர் அளித்த தகவல்களுக்குப் பிரதிபலனாக அவரை மரண தண்டனையிலிருந்து
காப்பாற்ற அவர்கள் செய்துள்ள ஏற்பாடுதான் நீதிமன்றத்தில் ஹெட்லி
அளித்துள்ள மனுவுக்குக் காரணம் என்றும் ஒருசில தரப்பில் சந்தேகம்
எழுப்பப்பட்டுள்ளது.இந்தச் சந்தேகம் உண்மை என்கிறபட்சத்தில்,
இந்தியா என்னதான் வழக்குத் தொடுத்தாலும், நேரிலோ, விடியோ
கான்பரன்ஸிங் மூலமோ பல ஆண்டுகளுக்கு வழக்கை நடத்தினாலும், ஹெட்லிக்கு
மரண தண்டனை கிடைக்காது. அமெரிக்கச் சட்டத்தின்படி அவருக்கு சிறை தண்டனை
கிடைக்கலாம். இந்தியா மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பாவின்
சதித்திட்டம் பற்றி அளித்த தகவல் ஹெட்லி கொடுத்ததுதான், ஹெட்லி ஒரு
டபுள் ஏஜன்ட் (இருவருக்கும் உளவாளி) என்று நல்ல பெயர் கிடைத்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை
நடத்த அனுமதிக்கும் என்றும், பதிலுக்கு மும்பைத் தாக்குதலில்
இந்தியாவில் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதியிடம் விசாரணை நடத்த அமெரிக்கா
இந்திய அரசிடம் அனுமதி கோரும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால், அமெரிக்காவுக்கு கஸôப் போன்ற நபர்கள் ஒரு பொருட்டே அல்ல.
மும்பைத் தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்களை வேண்டுமானால், போனால்
போகட்டும் என்று தருவார்களே தவிர, ஹெட்லியை நேரடியாக விசாரிக்க
அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை. அனுமதித்தாலும் அதில் பயன்
இருக்கப்போவதில்லை.அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியா நட்பு நாடு,
பாகிஸ்தான் நட்புக்கும் மேலான நாடு! இதை நமது ஆட்சியாளர்கள் புரிந்தும்
புரியாததுபோல இருப்பதுதான் புதிராக இருக்கிறது.பலவீனமாக
இருப்பதைவிட நாம் பலவீனமானவர்கள் என்று நாமே நம்மைப் பலவீனப்படுத்திக்
கொள்வதுதான் இந்திய வெளிவிவகாரத்துறையின் மிகப்பெரிய பலவீனம்!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum