TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jul 11, 2024 1:06 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

3 posters

Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by ஜனனி Tue Mar 12, 2013 7:34 am

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Sunhealth26

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம்
வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து
திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக்
கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து,
தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில்
விற்கும் "காஸ்ட்லி ஸ்கிரப்பர்"களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.

வைட்டமின் "டி" குறைபாட்டை சரிகட்டுங்களேன்!

காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி,
மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி
உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு
வாருங்கள்.

வைட்டமின் "டி" சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் "டி" சத்து கிடைக்கும்;
உணவு வகைகள் மூலம் வைட்டமின் "டி" சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு
செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!

கண்கள் சோர்வடையாமல் இருக்க:

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க
ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான
விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி
பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை
நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து,
அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும்
தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

கோடை
காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு
வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக்
கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த
இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு
பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.

ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல்
இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச
வேண்டும்.

கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில்
தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில்
பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by தமிழன் Tue Apr 16, 2013 1:45 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by logu Sun Apr 28, 2013 6:14 am

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? 28284 அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by logu Sun Apr 28, 2013 6:19 am

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம்
வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து
திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக்
கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து,
தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில்
விற்கும் "காஸ்ட்லி ஸ்கிரப்பர்"களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.

வைட்டமின் "டி" குறைபாட்டை சரிகட்டுங்களேன்!

காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி,
மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி
உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு
வாருங்கள்.

வைட்டமின் "டி" சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் "டி" சத்து கிடைக்கும்; உணவு
வகைகள் மூலம் வைட்டமின் "டி" சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு
செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!

வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்
போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள்
மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை.

குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை
குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12
மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த
மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத்
தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது.

தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில்
செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க
குடை பயன்படுத்தலாம்.

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது.
சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை
உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம்
ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.
கண்கள் சோர்வடையாமல் இருக்க:

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க
ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான
விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி
பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை
நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து,
அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும்
தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில்
கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக்
கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே
குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால்
உடலுக்கு இதம் கிடைக்கும்.

ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல்
இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச
வேண்டும்.

கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில்
தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில்
பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by logu Mon May 27, 2013 10:23 pm

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? 917304 அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum