TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி

Go down

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி Empty பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி

Post by Tamil Thu Mar 07, 2013 5:39 pm

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி










பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி 480158_336718113116352_1027351874_n

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி 601972_336718223116341_1687797005_n
பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்திக்
கொள்ள கருணாநிதி எண்ணுகிறார். அதனால் மார்ச் 12ல் பொது வேலை நிறுத்தத்தை
அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,


உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, சிங்கள இனவாத அரசால்
நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப்படுகொலையும், அம்மக்களுக்குத் தொடரும் விவரிக்க
இயலாத துன்பங்களும், மனிதகுலத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றன.
இளந்தளிர் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை, தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள
தமிழ் மக்களின் இதயத்தைப் பதறச் செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டில் இருந்தே, சிங்கள
அரசுக்கு, முப்படை ஆயுதங்களைக் கொடுத்தும், இந்தியத் தளபதிகளை அனுப்பி
ஆலோசனை தந்து, மிக நவீனமான ரடார் உள்ளிட்ட போர்ச்சாதனங்களை வழங்கி,
யுத்தத்தை இயக்கியது. அதனால்தான், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள்
கொல்லப்பட்டனர்.

உலகின் பல நாடுகள் போரை நிறுத்தும்படி இலங்கை
அரசை வற்புறுத்தியும், இந்திய அரசு ஒப்புக்குக் கூட, யுத்த நிறுத்தத்தைக்
கோரவில்லை. மாறாக, ‘அது எங்கள் வேலை அல்ல’ என்று, திமிராகக் கூறியது.


அந்த மத்திய அரசில் பதவிகளை அனுபவித்துக் கொண்டே, ‘மைய அரசின் கொள்கைதான்
இதில் எங்கள் கொள்கை’ என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.


2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், அதே மே மாத
இறுதியில், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், சிங்கள அரசைப் பாராட்டி,
அக்கிரமமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ததில், இந்திய அரசு முக்கியப்
பங்கு வகித்தது.

கடந்த ஆண்டு, மனித உரிமைக் கவுன்சிலில், அமெரிக்க
அரசால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கையின் சிங்கள
அரசாங்கம், உலகத்தை ஏமாற்றுவதற்காக மோசடியாக அறிவித்த, கற்றுக்கொண்ட
பாடங்கள் நல்லிணக்க ஆணையம் – எல்எல்ஆர்சி என்ற ஆணையத்தின் பரிந்துரைகளை
நிறைவேற்ற வேண்டும் என்ற ஏமாற்று வேலைக்குத்தான் வழி வகுத்தது.


2010 ஆம் ஆண்டு, ஐ.நா. அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு,
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிக்க,
பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றது.


ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், 2013 பெப்ரவரி 11ம் நாள் தாக்கல் செய்த
அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்கு
இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து, உலகம் அறிவதற்கு சுதந்திரமான புலன்
ஆய்வு விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும்; அங்கு நடந்தது வெறும் போர்க்குற்றம் அல்ல
சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்த தமிழ் இனப்படுகொலை ஆகும். இந்த இனக்கொலை
குறித்து, சுதந்திரமான பன்னாட்டுப் புலன் ஆய்வு விசாரணை நடத்த, ஐ.நா.வின்
மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானிக்க வேண்டும்.


ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு என்பது, சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைவது
மட்டும்தான்; தீர்வு ஆகும். அதற்கான விடியலை நோக்கித்தான், உலகெங்கும்
தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், குரல் எழுப்பவும் போராடவும் வேண்டும்.


2009 ஆம் ஆண்டு, வீரத்தியாகி முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட
ஜனவரி 31ம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர்
பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில்
ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம்
மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர்
மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும்,
இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாத பாடுபட்ட, அன்றைய முதல்
அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, இப்போது, மார்ச் 12ல் பொது வேலை
நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்கா கொண்டு வருகின்ற
ஆதரித்து பொது வேலை நிறுத்தம் என்கிறார். அமெரிக்கா கொண்டு வர இருப்பதாகச்
சொல்லப்படும் தீர்மானத்தில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற
சொல்லோ கருத்தோ அறவே கிடையாது;

இலங்கையின் மனித உரிமை மீறல்களைக்
கண்டிக்கின்ற வாசகமும் கிடையாது. சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான
கோரிக்கையும் கிடையாது. முதலில் வெளிவந்த தீர்மானத்தில் இருந்த சித்திரவதை
என்ற சொல்லைக் கூட, பின்னர் அமெரிக்கா நீக்கி விட்டது.

மனித உரிமை
ஆர்வலர்களும், சுதந்திரமான நீதித்துறை குறித்த ஆய்வாளர்களும்,
பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, மக்கள் காணாமல் போதல்,
சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்கிறவர்களும், இலங்கைக்குள்
தாராளமாகச் செல்வதற்குக் கேட்கும் வேண்டுகோள்களைப் பரிசீலிப்பது குறித்து,
சிங்கள அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறது.


மேலும், இலங்கை அரசாங்கத்தோடு ஆலோசித்து, அதன் ஒப்புதலோடுதான், மனித உரிமை
ஆணையர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இலங்கை அரசு
அமைத்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.


அதுமட்டும் அல்ல, மனித உரிமைகள் ஆணையர் இதுபற்றிய அறிக்கையை, மனித
உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும் என்று
கூறுகிறது.

நம் தொப்புள் கொடி உறவுகள் ஆன ஈழத்தமிழர்களின்
குழந்தைகள், தாய்மார்கள், ஆயுதம் ஏந்தாத, போரில் ஈடுபடாத பொதுமக்கள் என
இலட்சக்கணக்கில் படுகொலை செய்த சிங்கள அரசு, உலகத்தை ஏமாற்றுகின்ற மாய்மால
வேலைகளுக்கு உடந்தையாக, இந்தியாவின் மத்திய அரசு இன்றுவரை செயல்பட்டு
வருவதற்கு, அசைக்க முடியாத ஆதாரங்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன.


2008-09ல், ஈழத்தமிழர் படுகொலைக்கு, முழுக்க முழுக்க உடந்தையாக இருந்து
செயல்பட்ட இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், ஈழத்தமிழரைக் காக்கவும்,
முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தபோது,
தமிழகத்தில் பிரளயமென எழ வேண்டிய கொந்தளிப்பைத் தடுப்பதற்கு, என்னென்ன
சூழ்ச்சிகள் தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டதோ, அதே வேலைதான் இப்போதும்
நடக்கிறது.

கொலைகார ராஜபக்சவை, நேற்றுவரை இந்தியாவுக்கு வரவழைத்து
விருந்து வைத்துப் பாராட்டி, உலகத்தின் கண்களில் இந்தியாவின் காங்கிரஸ்
அரசு மண்ணைத் தூவுகிறது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க
வேண்டும் என தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும்கூட, இந்திய அரசு
இலங்கையோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டே வருகிறது.

தமிழக
மீனவர்கள் 500 பேர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு
உள்ளனர். அதனைத் தடுக்கத் தவறிய இந்திய அரசு, எந்தவிதக் கண்டனமும்
தெரிவிக்காமல், இலங்கைக் கடற்படையோடு ஒப்பந்தமும் போட்டு இருக்கின்றது.


தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக, சிங்கள அரசின் மீது,
நியாயமான ஆத்திரமும், தமிழர்கள் குறித்த வேதனையும், வேகமாக வளர்ந்து
வருவதால், நீதிக்கான பாதைக்கு வழிகாட்டாமல், மக்களைத் திசைதிருப்புகின்ற
முயற்சியில், இந்தியாவின் காங்கிரஸ் அரசு, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்
தி.மு.க.வைப் பயன்படுத்துகிறது.

அமெரிக்கத் தீர்மானம் என்பது, தமிழர்களுக்கு நீதிக்கு வழி அமைக்கும் தீர்மானம் அல்ல.


ஈழத்தமிழர் இனக்கொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை
நடைபெற, மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று, அதன்
உறுப்பு நாடுகளான, 47 நாடுகளின் அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து
இருந்தோம். அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதற்குத்தான், தமிழக
மக்களும், உலகு வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒருமித்து எழ
வேண்டும்.

இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு,
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களும், விடுதலைப்புலிகளும், இரத்தத்தைச் சிந்தி,
உயிர்களைத் தந்ததெல்லாம் சிங்களவனோடு அடிமை வாழ்க்கை நடத்த அல்ல.
உரிமைகளுக்காக அவனிடம் பிச்சை கேட்டு, அவனது ஆதிக்கத்தில் வாழ்வதற்காக
அல்ல.

தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களவன் வெளியேற்றப்பட்டு,
சிறைகளில் வதைபடும் தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, பொலிசும், இராணுவமும்
அகற்றப்பட்டு, உலக நாடுகள் மேற்பார்வையில், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான
பொது வாக்கெடுப்பு நடத்திடச் செய்வது ஒன்றுதான், ஈழத்தமிழர்களுக்கு
நிரந்தரமான நீதியை வழங்கும் என்பதை, எள்ளளவும் மலிவான அரசியல் லாப நோக்கம்
இன்றி, தன்னலம் அற்ற கடமை உணர்வோடு, தமிழக மக்களின் மேலான கவனத்துக்குத்
தெரிவிக்கின்றேன்.
என்று கூறியுள்ளார்.

: வைகோ
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி Empty Re: பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார் கருணாநிதி

Post by Tamil Thu Mar 07, 2013 6:59 pm

நார்வே - 'விடுதலை புலிகள்' தீவிரவாதிகள் அல்ல என தடைய நீக்கிய நாடு..

கனடா - 'விடுதலை புலிகள்' ஆதரவாளர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிய நாடு ..

லண்டன் - 'விடுதலை புலிகள்' அமைப்பை ஆதரிக்கும் ஒரு நாடு..

பிரான்ஸ் - 'விடுதலை புலிகள்' க்கு அங்கீகாரம் அளித்து, பிரபாகரனின் படத்தை தன்னாட்டு தபால் அஞ்சலில் சேர்த்த நாடு

இந்தியா - 'விடுதலை புலிகள்' தீவிரவாதிகள் என்று அறிவித்த நாடு, அதற்க்கு தமிழர்களையும் தலையசைக்க வைத்து முட்டாளாக்கிய நாடு

#இதில் உண்மையான தீவிரவாத நாடு எது???
#என்னாட்டு மக்களை 'முட்டாளாகவும், சுய மரியாதை அற்றவர்களாகவும், சுய நலம் மிக்கவர்களாகவும்' ஆக்கிய ஒரே சொல் 'இந்தியன்'
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி அரசியல் லாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார்: சீமான்
» அரசியல் நாகரிகம் கருதி கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» மது மயக்கத்தில் செக்ஸ் – பெண்களிடம் பெருகிவரும் நாட்டம்
» ஐ.நாவை அமவதித்தால், ஆதரவை வாபஸ் பெறவேண்டிவரும்! : இலங்கைக்கு எச்சரிக்கும் சீனா,ரஷ்யா
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum