TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு

Go down

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு Empty பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு

Post by அருள் Tue Mar 05, 2013 9:19 pm


பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு Firefox

பிரவுசர் வழியே
இணையம் தேடுகையில், நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை
நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப
தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.





இதனைத் தடுத்து
நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே
பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ,
டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன.





இருந்தாலும்
நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு
வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும். அந்த வகையில், பயர்பாக்ஸ் பிரவுசர்
தரும் வழிகளை இங்கு காணலாம்.





பயர்பாக்ஸ்
பிரவுசரில் கூடுதல் பாதுகாப்பு வழிகள் இருந்தாலும், அவை தானாக அமையாமல்,
நாம் தேடி அமைக்கும் வகையில் உள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரிலும், நாம் தரும்
தகவல்கள், மொஸில்லா மற்றும் கூகுள் நிறுவன பிரவுசர்களுக்குச் செல்லும்
வகையில் கட்டமைப்பு உள்ளது.





ஆனால், இது
கட்டாயம் இல்லை. மாற்றி அமைக் கலாம். இருப்பினும், இந்த தகவல்கள் பிரவுசரை
மேலும் பாதுகாப்பாக, எளிதாக, பயனுள்ளதாக அமைக்க உதவுகின்றன. கெடுதல்
விளைவிக்கும் இணைய தளங்களைத் தடுக்கப் பயன் படுத்தப்படுகின்றன என்பதனை யும்
நினைவில் கொள்ள வேண்டும்.








பின் தொடராதே:




பயர்பாக்ஸ்
பிரவுசர், நாம் செல்லும் இணைய தளங்களுக்கு "என்னைப் பின் தொடராதே'
(donottrack) என்ற கட்டளையை அனுப்பலாம். ஆனால், மாறா நிலையில், பிரவுசரில்
இது இயக்கப் படவில்லை. எனவே நாம் தான் இயக்கி அமைக்க வேண்டும்.





பயர்பாக்ஸ் மெனு
சென்று, அதில் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில்
Privacy என்ற ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது Privacy பிரிவு
கிடைக்கும்.





இதில் “Tell
websites I do not want to be tracked” என இருக்கும் இடத்தின் முன் உள்ள
செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைத்து, இயக்கத்தினை அமைக்கவும். இதே வசதி,
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஆப்பிள் சபாரி ஆகிய பிரவுசர்களில்
தரப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் குரோம் பிரவுசரில், ஏனோ, இது தரப்படவில்லை.








தேடல் வழிகாட்டல்கள்:




பயர்பாக்ஸ் தன்
தேடல் கட்டத்தில் அமைக்கும் தேடல் சொற்களின் ஒவ்வொரு எழுத்தையும், மாறா
நிலையில் அமைத்துள்ள சர்ச் இஞ்சினுக்கு அனுப்புகிறது.





இவற்றைப்
பெற்றுக் கொண்ட சர்ச் இஞ்சினும்,தேடல் குறித்த சில ஆலோசனைகளையும் தருகிறது.
இதனைத் தடுக்கலாம். சர்ச் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து, அதில் Show
Suggestions என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.








பாதுகாப்பான இணைய உலா:




பயர்பாக்ஸ்
பிரவுசர், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிராக (phishing and
malware) கூகுள் குரோம் பயன்படுத்திடும் அதே தொழில் நுட்பத்தினைப்
பயன்படுத்துகிறது. 30 நிமிடத்திற்கு ஒரு முறை, கூகுள் தளத்திலிருந்து,
கெடுதலான இணைய தள முகவரிகளைப் பெற்று, அவற்றிலிருந்து நம்மைப்
பாதுகாக்கிறது.





இந்த தளங்களில்
ஒன்றை நீங்கள் அணுக முயன்றால், பயர்பாக்ஸ், உங்களைப் பற்றிய தகவல்களையும்,
தள முகவரியினையும் கூகுள் தளத்திற்கு பயர்பாக்ஸ் அனுப்புகிறது. கூகுள்
தளத்தினை மீண்டும் சோதித்து, அதன் கெடுதல் தன்மையை உறுதி செய்கிறது. உங்கள்
கம்ப்யூட்டரில் கூகுள் அமைத்துள்ள குக்கீஸ்களும் இவற்றுடன் அனுப்பப்
படுகின்றன.





இதன் மூலம்,
கெடுதல் விளை விக்கும் இணைய தளங்கள் வழியாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள
பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குப் போய்ச் சேர்வது தடுக்கப்படுகின்றன.
ஆனால், இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இதனையும், Privacy பிரிவு
மூலம் தடுத்துவிடலாம்.








குக்கீஸ்:




Privacy
பிரிவில், “Firefox will” என்பதில் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ்
குக்கீஸ் குறித்து மாற்றங்கள் செய்திட “Use Custom Settings for History”
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பல விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள், பல்வேறு
இணைய தளங்கள் மூலம், தர்ட் பார்ட்டி குக்கீஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தி,
உங்களுடைய பெர்சனல் தகவல்களைக் கைப்பற்றுகின்றன.





இவற்றைத் தடுக்க
Accept thirdparty cookies என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை
எடுத்துவிடவும். இது சில இணைய தளங்களைப் பார்க்கையில் பிரச்னை தரலாம். அந்த
வேளையில் மீண்டும் இந்த பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி இயக்க
வேண்டும்.





குக்கீஸ்களை
மொத்தமாக நீக்கிவிட்டால், சில இணைய தளங்களைக் காணவும், அவற்றிலிருந்து
தகவல்களைப் பெறுவதும் சிரமமாகிவிடும். எனவே, குக்கீஸ்களை மொத்தமாகத் தடை
செய்வதனைக் காட்டிலும், பிரவுசரை மூடுகையில் அவற்றை நீக்குமாறு
செய்துவிடலாம்.





பின்னர்,
தளங்களைப் பார்க்கையில் அவை தரும் குக்கீஸ்களை ஏற்றுக் கொள்ளலாம். இவையும்
பிரவுசரை மூடுகையில் நீக்கப்படும். எனவே நமக்கு பிரச்னை ஏற்படாது.
ஏனென்றால், இந்த இணைய தளங்கள், உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும் குக்கீஸ்
புரோகிராம்களில் இருந்து உங்களைப் பற்றிய முழு விபரங்களை அமைத்துவிடும்.





இதனைத் தடுக்க,
“Clear history when Firefox closes” என்பதனை டிக் செய்து செட்டிங்ஸ்
பட்டனை அழுத்தவும். அடுத்து Cookies and any other type of data you want
Firefox to automatically delete என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.








கிராஷ் அறிக்கை, செயல்பாடு தகவல்:




பயர்பாக்ஸ்
பிரவுசரில் கிராஷ் ஏற்படுகையில், அந்த சூழ்நிலை குறித்து அறிக்கை ஒன்று
தயார் செய்து, அது மொஸில்லா நிறுவன பயர்பாக்ஸ் சர்வருக்கு அனுப்பப்படும்.
பிரவுசர் செயல் பாடு குறித்த அறிக்கையும் இதே போல அனுப்பப்படும். மொஸில்லா
இந்த அறிக்கைகளைப் பயன்படுத்தி, பிரவுசர் செயல்பாட்டில் ஏற்படும்
பிரச்னைகளை சரி செய்கிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் செயல்திறனை அதிகரிக்கவும்
வழி கிடைக்கிறது.





ஆனால், இந்த
கிராஷ் குறித்த அறிக்கைகளை, பயர்பாக்ஸ் தானாக அனுப்புவதில்லை. நம்மிடம்
கேட்டுக் கொண்டு அனுமதி கிடைத்த பின்னரே அனுப்புகிறது. Advanced பிரிவில்
உள்ள Submit crash reports என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக்
அடையாளத்தை எடுத்துவிட்டாலும், கிராஷ் ரிப்போர்ட் அனுப்பவா என்ற கட்டம்
கிடைக்கும். ஆனால், அதனை அனுப்ப இயலாத வகையில் அது மாற்றப்பட்டிருக்கும்.





இதே போல Submit
performance data என்ற ஆப்ஷன், பயர்பாக்ஸ் பிரவுசர், தன் செயல்பாடு குறித்த
அறிக்கைகளை, நாம் அறியாமலேயே பின்புலத்தில் இருந்து மொஸில்லாவுக்கு
அனுப்புகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum