Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மூலநோய் ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
மூலநோய் ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?
'பூச்சி மருந்து தாங்கோ' எனக் கேட்டார் அந்த நடுத்தர வயதுடைய பெண்மணி.
'ஏன்' எனக் கேட்டபோது 'மல வாசலில் அரிக்கிறது' என்றார்.
[You must be registered and logged in to see this image.]
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
[You must be registered and logged in to see this image.]
மல வாசலில் அரிப்பிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என எண்ணினேன்.
"படுக்கையில் கிடந்து கீழாடைகளை அகற்றுங்கள் குதவாயிலைச் சோதிக்க வேண்டும்"
சும்மா பூச்சி மருந்தைத் தந்து அனுப்பிவிடாமல் மலவாயிலைச் சோதிக்க வேண்டும்
என்கிறாரே மனம் புழுங்கினார் அவர். ஆனால் பரிசோதித்துப் பார்த்தபோது நான்
நினைத்தது போலவே அவருக்கு மூலநோயின் அறிகுறிகள் தெரிந்தன.
மூலநோய் என்றால் என்ன?
[You must be registered and logged in to see this image.]
உணவுக் கால்வாயின் முடிவில் இருக்கும் மலவாயிலில் சிறிய வீக்கங்கள்
இருப்பதையே மூலநோய் என்கிறார்கள். உண்மையில் இவை வெறும் வீக்கங்கள் அல்ல.
சவ்வுகளும் சிறுஇரத்தக் குழாய்களும் இணைந்தவையாகும். இவை இயற்கையாகவே
எல்லோரது மலவாயிலில் இருந்தபோதும் வீக்கமடையும்போதே நோயாகிறது.
இது ஏற்படக் காரணங்கள் எவை?
இரண்டு முக்கிய பிரிவுகள்
மூலநோயில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.
[You must be registered and logged in to see this image.]
இருந்தபோதும் மருத்துவர்கள் ஒன்று முதல் நாலு நிலைகளாக மூலநோயைப் பிரித்துவைத்து அதற்கேற்ப மருத்துவம் செய்வார்கள்.
அறிகுறிகள்
நோயை நிர்ணயிக்க
நோயை நிர்ணயிக்க மருத்துவருக்கு பொதுவாகப் பரிசோதனைகள் தேவைப்படாது.
[You must be registered and logged in to see this image.]
சிகிச்சை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
'ஏன்' எனக் கேட்டபோது 'மல வாசலில் அரிக்கிறது' என்றார்.
[You must be registered and logged in to see this image.]
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
- சென்ற மாதம்தான் பூச்சி மருந்து சாப்பிட்டிருந்தார்.
- அவர் மாத்திரமின்றி முழுக் குடும்பமுமே சாப்பிட்டிருந்தது.
- காலில் மண்படாமல் மாடி வீட்டில் வசிக்கும் அவருக்கு குடற் புழுக்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
[You must be registered and logged in to see this image.]
மல வாசலில் அரிப்பிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என எண்ணினேன்.
"படுக்கையில் கிடந்து கீழாடைகளை அகற்றுங்கள் குதவாயிலைச் சோதிக்க வேண்டும்"
சும்மா பூச்சி மருந்தைத் தந்து அனுப்பிவிடாமல் மலவாயிலைச் சோதிக்க வேண்டும்
என்கிறாரே மனம் புழுங்கினார் அவர். ஆனால் பரிசோதித்துப் பார்த்தபோது நான்
நினைத்தது போலவே அவருக்கு மூலநோயின் அறிகுறிகள் தெரிந்தன.
மூலநோய் என்றால் என்ன?
[You must be registered and logged in to see this image.]
உணவுக் கால்வாயின் முடிவில் இருக்கும் மலவாயிலில் சிறிய வீக்கங்கள்
இருப்பதையே மூலநோய் என்கிறார்கள். உண்மையில் இவை வெறும் வீக்கங்கள் அல்ல.
சவ்வுகளும் சிறுஇரத்தக் குழாய்களும் இணைந்தவையாகும். இவை இயற்கையாகவே
எல்லோரது மலவாயிலில் இருந்தபோதும் வீக்கமடையும்போதே நோயாகிறது.
இது ஏற்படக் காரணங்கள் எவை?
- முக்கிய காரணம் மலம்போகும்போது முக்கி வெளியேற்றுவதேயாகும்.
- மலச்சிக்கல் மற்றொரு முக்கிய காரணமாகும்
- நீண்ட நேரம் மலங் கழிப்பதற்காகக் குந்தியிருப்பது.
- நார்ப்பொருள் உள்ள உணவுகளை போதியவு உண்ணாமை.
- மலக்குடலில் ஏற்படும் சில கிருமித்தொற்றுகளும் காரணமாகலாம்.
- ஈரல் சிதைவு நோயின்போதும் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.
- பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.
- அதேபோல வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் தோன்றலாம்.
இரண்டு முக்கிய பிரிவுகள்
மூலநோயில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.
- உள்மூலம். இங்கு மூலவீக்கம் வெளிப்படையாகத் தெரியாது. உள்ளேயே
இருக்கும். மலத்துடன் இரத்தம்போவதை வைத்து ஊகிக்கலாம். ஆயினும் மருத்துவர்
மலவாயில் பரிசோதனை செய்தே இதை நிச்சய்படுத்த முடியும். - வெளிமூலம். இது மலவாயிலுக்கு வெளியே தள்ளிக்கொண்டிருக்கும். சில
தருணங்களில் தானாக உள்ளே சென்று பின்னர் மலங் கழிக்கும்போது அல்லது
முக்கும்போது வெளியே தள்ளும்.
[You must be registered and logged in to see this image.]
இருந்தபோதும் மருத்துவர்கள் ஒன்று முதல் நாலு நிலைகளாக மூலநோயைப் பிரித்துவைத்து அதற்கேற்ப மருத்துவம் செய்வார்கள்.
அறிகுறிகள்
- ஆரம்ப நிலையில் வீக்கம், வலி போன்ற வெளிப்படையான அறிகுறிகள் பொதுவாக இருப்பதில்லை.
- மலத்தோடு இரத்தம் போகலாம். இறுகிய மலம் வீங்கமடைந்துள்ள இரத்தநாளங்களை உராசுவதால் இவ்வாறு இரத்தம் கசியலாம்.
- அத்தோடு மலத்தோடு சளி போலவும் கழியக் கூடும். மூலவீக்கம் காரணமாக
மலக்குடல் உற்பக்கமாக உறுத்தலுற்று இழுபடுவதால் அதிலிருந்து நீர்போலக்
கசிவு ஏற்படும். இதுவே மலத்துடன் சளிபோல வெளியேறும். - மலவாயிலில் அரிப்பு ஏற்படுவது கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை.
மேலே கூறியதுபோல சளிபோலக் கசிவதானது மலவாயிலை ஈரலிப்பாக வைத்திருக்கும்.
இதுவே அரிப்பிற்கு வித்திடும். - மூலவீக்கம் மலவாயிலுக்கு வெளியே இறங்கினால் மட்டுமே கட்டி தெரியும்.
பலருக்கு மலங் கழிக்கும்போது வெளியே வந்து, பின்னர் தானாகவே உள்ளே
சென்றுவிடும். சிலர் தமது விரல்களால் தாமாகவே தள்ளி உள்ளே செலுத்துவதும்
உண்டு. ஒரு சிலரில் அவ்வாறு செல்லாமல் வலியெடுத்து மருத்துவரை
நாடவேண்டியும் ஏற்படலாம். - மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது ஒரு சிலரில் இருக்கலாம்.
நோயை நிர்ணயிக்க
நோயை நிர்ணயிக்க மருத்துவருக்கு பொதுவாகப் பரிசோதனைகள் தேவைப்படாது.
- கண்களால் பார்த்தும், குதத்தினுள் விரலை வைத்து பரிசோதித்தும் நிச்சயப்படுத்துவார்.
[You must be registered and logged in to see this image.]
- வேறுநோய்கள் காரணமாக இருக்கலாம் என எண்ணினால் Proctoscopy, Sigmoidoscopy போன்ற பரிசோதனைகள் மூலம் மலக்குடலையும் அதற்கு மேலுள்ள உணவுக் கால்வாயையும் பரிசோதிக்கக் கூடும்.
சிகிச்சை
- சிகிச்சையைப் பொறுத்தவரையில் மிக முக்கிய விடயம் மலத்தை முக்கிக் கழிக்காதிருத்தலாகும்.
[You must be registered and logged in to see this image.]
- நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளான பழவகைகள், அதிகளவு காய்கறிகள், இலை
வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும். தவிடு நீக்காத அரிசி, குரக்கன்
போன்றவற்றிலும் இது அதிகமுண்டு.
[You must be registered and logged in to see this image.]
- போதியளவு நீராகாரம் எடுக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
- மலம் மிகவும் இறுக்கமாக இருந்தால் Lactulose போன்றதும், நார்ப்பொருள் அதிகமுள்ள மலம் இளக்கிகளும் உதவும்.
- மலம் கழிக்கும்போது வலி இருந்தால் அதைத் தணிப்பதற்கான கிறீம் வகைகள் உள்ளன. அவற்றை மருத்துவ ஆலோசனையுடன் பூசிக்கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]
- ஊசி மூலம் போன்ற Phenol மருந்துகளை அவ்விடத்தில் ஏற்றி கரையச் செய்யும் Sclerotherapy மற்றும் Rubber band ligation முறை போன்றவை சத்திரசிகிச்சையல்லாத முறைகளாகும்.
- Hemorrhoidectomy, Stapled hemorrhoidectomy போன்ற பல வகை சத்திர சிகிச்சை முறைகளும் உண்டு. இவற்றை மருத்துவர் நோயின் தன்மைக்கு ஏற்ப செய்வார்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
Similar topics
» பொடுகு என்றால் என்ன ?பொடுகு ஏன் வருகிறது? பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
» நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» ரோஜாச்செடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum