குழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை
ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும்
இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக் கதிகமான உடல் எடையும்,
31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அபயாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம்
மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே
உள்ள உடற்பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த
நகரங்களான டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் முக்கியமாக பணக்கார
வர்க்கத்தினரிடையே நடத்திய கணக்கெடுப்பின்படி உடற்பருமன் குழந்தைகளிடையே
அதிகரித்துக் கொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது. எடை அதிகரிப்பின் முதல்
அறிகுறி பிறப்பு எடை, பெற்றோரின் உடற்பருமன் முக்கிய காரணமாக
கருதப்படுகிறது.

ஒழுங்கான உணவு உண்ணும் பழக்கம் இல்லாததாலும், ஒழங்கற்று சக்தியை செலவு
செய்வதாலும் அளவுக்கதிகமான உடல் எடை உருவாகிறது. நமது முன்னோர்களின்
'பொருளாதாரப் பெருக்கம்' (Thrifty Genotype) என்பதின்படி உணவு நமது அடிபோஸ்
திசுக்களில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது ஆற்றல் அளிக்கிறது. எவ்வாறு
உணவு சேமிக்கப் பட்டு பஞ்சத்தின் போது மக்களுக்கு வழங்கப்படுமோ அவ்வாறு.
விஞ்ஞான துறையில் வளர்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பங்கள் சுத்தமான உணவு
வழங்குவது மட்டுமல்லாது, ஒரு நிலையில் பேரழிவையும் ஏற்படுத்தும்.


ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்:

ஆடம்பரமான விளம்பரங்கள் மக்களை கவர்ந்து, விலை
அதிகமான, ஆற்றல் அதிகம் தரும் உணவு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு, சாதாரண
மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள்
குறைந்த அளவு மட்டுமே தரும் உணவுப் பொருட்களை உண்ண வைக்கின்றனர். இது தவிர
இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.

அதிக உடல் உழைப்பில்லாத வேலை உடற்பயிற்சியின்மை

அதிகமான நேரம் திரையின் முன், தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியின் முன் அமர்வது, குறைந்த அளவு வெளி வேலைகளைச் செய்வது.

அளவுக்கதிகமான உடல் எடை என்பது உடல் பொருள் அட்டவணையை பொறுத்து
கணக்கிடப்படுகிறது. 85-94% என்பது வயதிற்கு பாதகமான சதவீதமாக
கருதப்படுகிறது. 95% மேல் அளவுக்கதிகமான உடல் எடையாக கருதப்படுகிறது.

முதன்முதலில் குழந்தையின் அளவுக்கதிகமான உடல் எடை கணக்கெடுப்பின்போது
உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்ப பழக்கவழக்கங்கள் ஆகியவை கருத்தில்
கொள்ளப்படுகிறது. ஏனெனில் வெற்றிகரமான மருத்துவ முறைகளுக்கு இந்தப்
பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் காரணங்கள். குழந்தையின் வளர்ச்சி
பதிவேடு, உடல் பரிசோதனை மற்றும் பிறபரிசோதனை கணக்கில் கொள்ளப்படுகிறது. இது
தவிர ஹார்மோன்கள் மற்றும் மரபணு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அளவுக்கதிகமான உடல் எடையுள்ளவர்களில் 50% கீழ் வயதிற்கேற்ற
உயரமில்லாதவர்கள் ஹார்மோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

உலக அளவில் வேறுபட்ட ஆய்வுகள் நடத்தியதில் உடற்பருமனால்
குழந்தைப்பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் இருதய நோய்கள் வருவதற்கு
வாய்ப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவங்களில் ஏற்படும் உடற்பருமனை சீர்செய்யும் வழிமுறைகள்:

எடையை குறைப்பதை விட எடையை பராமரித்தல் முதல்
லட்சியம். எடை குறைவு மிக மெதுவான செயலாக இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு
0.5 கிலோ வீதமாக 10% எடையை குறைத்தல் என்பது முதல் லட்சியமாக விவரிக்கக்
கூடியதாக இருக்க வேண்டும். இந்த எடை குறைப்பு குறைந்தது 6 மாத காலம்
பராமரிக்கப்பட வேண்டும். வெற்றிகரமான எடைகுறைப்பு மற்றும் எடை
பராமரிப்புக்கு முக்கியமான வாழ்வு முறை மாற்றம், அதிகப் படியான உடல்
உழைப்பு மற்றும் உணவு, உடற் பயிற்சி, செய்முறை மாற்றங்கள், மருத்துவ
மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் பொருள் அட்டவணை(BMI) மற்றும் ஒரு வருடத்திற்கான உடல் பொருள் அட்டவணையை
பயன்படுத்தி உடனடியான எடை அதிகரிப்பையும், அடிபோஸ் சேமிப்பும்
கணக்கிடப்படுகிறது.

செய்முறை மாற்றங்கள் எடுத்துக்காட்டாக உடல் உழைப்பில்லாத வேலையை குறைத்தல்,
உடல் உழைப்பை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கைவிடுதல்,
குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை அதிகரித்தல்.

உணவுப் பழக்க வழக்கங்கள் ஆலோசனை:

1-3 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை
குறைக்க வேண்டும். 1-6 வயது உள்ள குழந்தைகளுக்கு 4-6 Oz மற்றும் 7-18 வயது
வரை உள்ள குழந்தைகளுக்கு 8-12 Oz பழரசம் ஒரு நாளைக்கு கொடுக்கலாம். 2
வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல்
தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த
கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு
மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு
800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்:

உணவின் போது, குழந்தைகளை தண்டிக்கக் கூடாது. உணவு உண்ணும் போது மகிழ்ச்சியாக பேச வேண்டும்.
பரிசுப் பொருளாக உணவுப் பொருளை உபயோகப்படுத்தக் கூடாது.
உணவு விஷயத்தில் பெற்றோர்கள், சகோதர்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்க
வேண்டும். புதிய உணவுப் பொருளையும், சரிவிகித உணவையும் உண்ண வேண்டும்.
உணவு பலநேரங்களில் வழங்கப்பட வேண்டும். முதலில் விருப்பமில்லாத உணவுப்
பொருட்களை பலமுறை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள வெறுப்புகளை உடைத்து விட
வேண்டும்.
குறைந்த அடர்த்தியுள்ள உணவுப் பொருள் குழந்தைகளின் ஆற்றலைச் சமப்படுத்தியுள்ளன.
குழந்தைகளின் விருப்பத்தை தடுப்பது ஆசையை குறைப்பதற்கு பதிலாக தூண்டி விடும்.
குழந்தைகளின் புது உணவுப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்ச்சியை வரவேற்க வேண்டும்
குழந்தைகளை 'தட்டைக் கழுவு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

உடல் உழைப்பு:

2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி
மற்றும் கணிப் பொறி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2-18
வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தொலைகாட்சி காண
வேண்டும். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதை தவிர்க்க
வேண்டும். குழந்தைகள் கணிப்பொறியில் வீட்டுப் பாடம் செய்தவதற்கு மட்டுமே
அனுமதிக்க வேண்டும். உணவு மற்றும் உடல் உழைப்புடன் மருந்துகளும் உடல்
எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.

உடற்பருமன் வராமல் தடுக்கும் முறைகள்:

கர்ப்ப காலத்தில்

கர்ப்பமாவதற்கு முன் உடல் பொருள் அட்டவணையை சமப்படுத்துதல்.
புகைப்பிடித்தலை தவிர்த்தல்.
அளவான உடற்பயிற்சி.
கர்ப்பகால சர்க்கரை நோயில், சர்க்கரை அளவை சமப்படுத்துதல்.
பிறந்த பின்பும், 3 மாதம் வரை தாய்ப்பால். ஒரு வயது வரை உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் தருவதை தள்ளிப் போடுதல்.

குடும்பங்களில்

குறிப்பிட்ட இடம், நேரத்தில் சாப்பிடுதல்.
நேரம் தவறாமல் சாப்பிடுதல்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
சின்னத் தட்டு மற்றும் கிண்ணம் உபயோகித்தல்..
தேவையில்லாத இனிப்பு, கொழுப்பு மற்றும் பானங்களை தவிர்த்தல்.

பள்ளிக்கூடங்களில்

இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை தடை செய்தல்.
உடற்கல்வி, உணவியல், அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல்.
குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறைபற்றி கற்பித்தல்.
வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற்கல்வி கற்பித்தல்.

சமுதாயத்தில்

குடும்பத்தினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளை எல்லா
வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதிகப்படுத்துதல். எவ்வாறு சுகாதாரமான
உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென கற்பித்தல்.

மரபியல் மற்றும் செயலியல் காரணங்களை விவரித்தல்

குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடையை அதிகரிக்க முயற்சித்தல்.
உடற்பருமனை நோக்கி உழைத்து, அதன் அங்கீகாரத்தை அதிகரித்து, செலவு செய்த
பணத்தை திருப்பி அதற்கான மருத்துவ செலவுக்கு உபயோகப்படுத்துதல்.

உற்பத்தியாளர்கள்

வயதிற்கேற்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கேற்றவாறு கொண்டு வருதல்.
சுகாதாரமான உணவுப் பொருட்கள் பற்றிய விளம்பரம் மூலம் காலை மற்றும் நேரம் தவறாமல் குழந்தைகளை சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்துதல்.

அரசாங்கம் மற்றும் நல சங்கங்கள்

உடற்பருமனை நியாயமான நோயாக வகைப்படுத்துதல். சிறந்த வாழ்க்கையை மேற்கொள்ள நல்வழியில் நிதி ஒதுக்க வேண்டும்.

அரசு சத்துணவு அளிக்க நிதி வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு உடற்கல்வி அளிக்க கூடுதல் உதவி நிதி அளிக்க வேண்டும்.

நகர வரையாளருக்கு இரு சக்கர வாகனங்கள், வழிபாதை ஆகியவை அமைப்பதற்கு நிதி உதவி அளித்தல்.

துரித உணவு பற்றி விளம்பரங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சென்றடையாமல் தடுக்க வேண்டும்.

பச்சை நிற உணவு உங்கள் வாழ்வை வளமாக்கும்.