Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் கால்களை ஆரோக்யமாக பராமரிக்க
5 posters
Page 1 of 1
உங்கள் கால்களை ஆரோக்யமாக பராமரிக்க
கால்களுக்குப் பலத்தைத் தருவதற்கும் எலும்புகளை வலுவாக்கவும் தினமும் உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் அவசியம்.
எலும்புக்குள் இருக்கும் திசுக்கள் நன்றாக வளர்வதற்கு வைட்டமின் டி தேவை. உடலுக்குச் சூரிய ஒளி படாமல் இருத்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலுக்குப் போதிய அசைவுகள் இல்லாமல் போவது போன்றவற்றால் எலும்பு, மூட்டு தேய்மானம் ஏற்படும்.
அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், காலணி அணியாமல் நடப்பவர்கள் போன்றவர்களுக்குக் காலில் வெடிப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.
பித்தவெடிப்பு
வெடிப்புகள் வராமல் பஞ்சுபோல் பாதம் மிருதுவாக இருக்க, பீர்க்கை நாறிலிருந்து ப்யூமிக் கற்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தினமும் கால்களைத் தண்ணீரில் ஊறவைத்து ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் செய்வதன் மூலம் கடினமான தோலை எளிதில் மிருதுவாக்க முடியும். பித்த வெடிப்புகளையும் குணமாக்கிக்கொள்ளலாம்.
கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் தேய்க்கலாம். கால்களை நன்றாகத் துடைத்துவிட்டு மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வதுபோல் தடவ வேண்டும்.
உள்ளங்காலில் வெடிப்பு வந்திருந்தால் சோரியாசிஸ்தானா என்று உறுதி செய்து அதற்குரிய சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
ஒரு சின்ன போத்தல் கிளிசரினில் நான்கு துளி எலுமிச்சைச் சாறைவிட்டு நன்றாகக் கலக்கி மூடி வைத்துவிட வேண்டும். இதைத் தினமும் இரவில் தூங்கப்போகும் முன்பு பாத வெடிப்புப் பகுதியில் தேய்த்து வர வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாகும்.
கால்களில் அதிக வெடிப்பு இருந்தால், இரவு தூங்குவதற்கு முன்னர் வாசலின் (அ) பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, சாக்ஸ் அணிந்துகொண்டு உறங்கச் சென்றால் வெடிப்பு நீங்கிப் பாதம் மிருதுவாகும்.
முட்டி கருமை
கால் முட்டி போட்டுத் தொழுவது, கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டு நெடுநேரம் கணனி முன்பு இருப்பது போன்ற காரணங்களால் அந்த இடங்களின் இயல்பான நிறம் மாறி கருத்துவிடும். கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து உட்காரலாம்.
ஆலிவ் எண்ணெயை தினமும் தடவினால் கருமை மாறும். பயத்த மாவைப் பாலுடன் கலந்து பூசி 5 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
குதிகால் வலி
இளம் பெண்கள் பென்சில் ஹீல்ஸ் போடுவதால் கால் எலும்பு, தசைப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். குதிகால் வலியால் சாதாரணமாகக்கூட நடக்க முடியாமல் போகும்.
ஒரே மாதிரியான உயரம் இருக்கக் கூடிய ஹீல்ஸ் அணியலாம். அதுவும், குறைந்த நேரம் மட்டுமே குதி உயர்ந்த காலணிகளை அணிய வேண்டும். எப்போதும் காலணி அணிந்து நடப்பது நல்லது.
காலில் உண்டாகும் வியர்வையைக் காலணி உள் வாங்கிக் கொள்ளும். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே பயன்படுத்த வேண்டும். இதனால், உடல் புத்துணர்வுடன் இருக்கும். காற்றோட்டம் உள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும்.
ஜிம்முக்குப் போகும் பழக்கமுள்ளவர்கள் அங்கே குளிக்கும்போது குளியல் அறை செருப்பு அணியாமல் குளிக்கக் கூடாது. இதனால், தொற்று நோய் பரவும் ஆபத்து உண்டு.
உணவு / பயிற்சி
பால், கீரை, எள், சீஸ், பனீர் சிறிய வகை மீன்களில் கால்சியம் அதிகம் உள்ளது. பாலக்கீரையில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது. உணவுப்பழக்கம், நடைப் பயிற்சி, மூட்டு மற்றும் தசைகளை அசைப்பதற்கான உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே எலும்பை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

கவியருவி ம. ரமேஷ்- கணினி கவிஞன்
- Posts : 278
Join date : 08/08/2011
Similar topics
» கால்களை பராமரிக்க சில டிப்ஸ்
» உங்கள் கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க
» நவீன உடை அணியும் பெண்களே, உங்கள் கால்களை அழகாக வைத்திருக்க வேண்டாமா? அதற்கான டிப்ஸ்...
» உடலை எப்போதும் ஆரோக்யமாக வைக்க சில குறிப்புகள்
» உங்கள் மனதை சிந்திக்க வைக்கும் உங்கள் கண்ணீர் துளிகளை உதிர வைக்கும் ''''ராவண தேசம்'''' விரைவில் உங்கள் பார்வைக்கு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum