TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!

2 posters

Go down

லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!! Empty லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!

Post by mmani Thu Feb 21, 2013 9:32 pm

லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!
லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!! Laptop10
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து
வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு
அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும்
கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல்
வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.
டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப்
கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால்,
அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும்
நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத்
தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு
வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக்
பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு
டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப்
பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப்
கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக்
குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும்
எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய
சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து
வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.


அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில்
இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன.
பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த
எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம்
உருவாகிறது.

லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும்
நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும்
வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப்
பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற
முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால்,
வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக லேப்டாப்பில்
ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த
வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம்
செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால்,
உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில்
பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச
வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம்
திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும்
சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர்
புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய
தளத்தில் கொண்டிருக்கலாம்.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம்
வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க
வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம்
விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.


பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம்
உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி
இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த
நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ்
அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத்
தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப்
கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை
ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள்
அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை
லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது.
இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம்
தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து
இயக்குவதும் தவறு.

இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து
இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப்
பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது
எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால்,
வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில்
வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக
வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க
வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம்
வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால்,
வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!! Empty Re: லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!

Post by அருள் Fri Feb 22, 2013 7:25 am

நன்றி .............. லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!! 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum