Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள்
2 posters
Page 1 of 1
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள்
எம்.ஜி.ஆர் MGR
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Last edited by mmani on Sun Feb 17, 2013 7:24 am; edited 1 time in total
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
சிவாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சிவாஜி கணேசன்...
இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம்.
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள்
இருப்பார்கள்.
ஆனால், அனைத்து
நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில
துளிகள்....
இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம்.
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள்
இருப்பார்கள்.
ஆனால், அனைத்து
நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில
துளிகள்....
சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! | |
நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! | |
1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு! | |
சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை! | |
கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்! | |
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே! | |
தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி! | |
திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்! | |
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!. | |
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! | |
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்! | |
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்! | |
ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்! | |
விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்! | |
சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்! | |
'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி! | |
படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்! | |
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி! | |
விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்! | |
தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்! | |
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன! | |
அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை! | |
பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக! | |
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்! | |
கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!. |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
சந்திரபாபு பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சந்திரபாபு... தமிழன் சந்தோஷ பாபு.
ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக்
கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக்
கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்! | |
பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட.... கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்! | |
கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா. தபேலா தாழு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்! | |
காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே! | |
சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது! | |
மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸீக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா! | |
முதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்! | |
புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது! | |
ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை! | |
எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி. ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான் சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலை படவும் இல்லை! | |
'புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்க்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு' என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்! | |
ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்! | |
'குங்குமப் பூவே கொஞ்சம் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்! | |
எஸ். எஸ் வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். 'நான் தீக் குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்! | |
சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரி’ படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது! | |
எழுந்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு', ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை! | |
ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநால் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்! | |
நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல', அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்! | |
மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம்லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்' என்றவர்! | |
'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும் போது, 'ஓ ஜீசஸ்! என்று சொல்லியபடிதான் நுழைவார்! | |
ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட., உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ.... உற்சாகமானபொழுது அது! | |
'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்! | |
நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் 'தேடித் தேடிப் பழகிய வந்தாலும் கூட 'எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்! | |
'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா! | |
'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமாவில், சீர்திருத்தங்கள்,
நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில்
சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில்
சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய! | |
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா! | |
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்! | |
ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்! | |
'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்! | |
ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன! | |
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்! | |
நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதிவைப்பார்! | |
எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்! | |
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்! | |
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு! | |
எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்! | |
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது! | |
'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான் சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்! | |
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்! | |
'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது. 'எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் 'என்றார்! | |
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பிவை! | |
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்! | |
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி' என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்! | |
''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்! | |
தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். ''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா'' என்பது அவரது அழுத்தமான கருத்து! | |
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா! | |
'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! | |
''சுட்டாள்.... சுட்டான்.. சுட்டேன்'' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது! | |
''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
என்.எஸ். கிருஷ்ணன்...
தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை
தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே! | |
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்! | |
ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்! | |
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது! | |
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்! | |
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார். | |
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்! | |
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்! | |
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார். | |
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்! | |
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்! | |
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்! | |
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்! | |
''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக! | |
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். | |
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்! | |
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்! | |
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்! | |
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார். | |
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்! | |
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா! | |
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்! | |
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
நாகேஷ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி
இறங்கும் குரல் ஜாலம்.. தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி
உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!....
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
கவுண்டமணி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல
கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது.
கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...
கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது.
கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...
· `சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. | |
· கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! | |
· பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்! | |
· அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்! | |
· கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்’ என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்! | |
· மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! | |
· இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. | |
· கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் –கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! | |
· உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்! | |
· திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைந்திருக்கிறார் கவுண்டமணி! | |
· சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! | |
· கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்! | |
· புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி! | |
· ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்! | |
· கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்! | |
· கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!’ என்பார் | |
· ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு! | |
· ஷீட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்! | |
· கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்’ என்பார்! | |
· எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது! | |
· டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்! | |
கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்! | |
`மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்! | |
· சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்! | |
· ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
விஜயகாந்த் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் ! | |
வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்! | |
ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை ! | |
எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் ! | |
தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது ! | |
பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது ! | |
விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் ! | |
இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் ! | |
நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு ! | |
‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் ! | |
விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் ! | |
வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் ! | |
செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்! | |
இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ ! | |
கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் ! | |
திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி ! | |
முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு ! | |
சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் ! | |
ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் ! | |
விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்! | |
ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் பரிசாக ஆடி க்யூ 7 என்ற 45 லட்சம் மதிப்பு உள்ள காரை ஆண்டாள் அழகர் கல்லூரியின் சார்பாக வழங்கி இருக்கிறார் மைத்துனர் சுதிஷ் ! | |
ஹிந்தியில் தர்மேந்திரா, அமிதாப், தெலுங்கில் என்.டி.ஆர்.சிரஞ்சீவி,மகேஷ்பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், சங்கர் நாக், மலையாளத்தில் சத்யன் படங்கள் என்றால் விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும்.சத்யனின் ‘கரை காணா கடல்’ அவருக்கு மிகவும் பிடித்த படம் ! | |
எங்க வீட்டுப் பிள்ளை படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து இருக்கிறார் விஜயகாந்த். இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணிப்பதில் சந்தோஷப்படுவாராம் ! | |
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி ! | |
பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் ! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
விக்ரம் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல், ‘பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை’, தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ்,பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் கேட்டுவிட்டுத்தான் தூங்குவார் ! | |
வெளியூர் படப்பிடிப்புக்குப் போனால், அந்தந்த வட்டார ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அவர்களோடு இரண்டு மணி நேரமாவது இருந்து பேசி விட்டு,ஒரு காபியாவது குடித்துவிட்டுத்தான் வருவார்! | |
பள்ளிப் படிப்பு முழுவதும் ஏற்காடு மாண்ட்ஃபோர்டு ஸ்கூலில், அதனால் ஆங்கில நாடகங்களில் நிறைய நடித்த அனுபவமும் உண்டு. காலேஜ்.... தமிழ் ஹீரோக்களைத் தயாரிக்கும் லயோலா ! | |
போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். விருந்தினர்களை, நண்பர்களை புகைப்படம் எடுத்து பிரிண்ட் போட்டுத் தந்து அசத்துவார். இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு புகைப்படக் கண்காட்சி நடித்த ஆர்வமாக இருக்கிறார் ! | |
எப்பவும் பிடித்த கலர் கறுப்பு. கார்களின் வண்ணமும் அதுதான். மிகவும் வேண்டிய விழாக்களுக்குச் செல்லும்போது, அதற்கு மிகவும் தகுந்த மாதிரி யோசித்துத்தான் உடைகள் அணிவார் ! | |
பண்ணைத் தோட்டத்தில் காட்டுப் பூனை, வாத்து, வான்கோழி, நண்டுகள் என வெரைட்டியாக, ஆசை ஆசையாக வளர்க்கிறார். விடுமுறை கிடைத்தால், தோட்டத்துக்குக் குடும்பதோடு பறந்து விடுவார் ! | |
இரண்டு செல்போன்கள் வைத்திருக்கிறார். அவ்வளவு நண்பர்கள். அத்தனை பேருக்கும் ஞாபகம்வைத்துப் பதில் அளிப்பார் ! | |
நகைகளின் மீது ஆர்வமே இல்லை. அதிசயமாய் என்றைக்காவது அடையாளமே தெரியாமல் மெல்லிசாய் தங்கச் சங்கிலி மின்னும்.மிகவும் வேண்டிய ஒருவர் பரிசளித்த கல் மோதிரம் மட்டும் விரலில் இருக்கும் ! | |
எப்போதும் பிடித்தது பழைய சாதம். பொரியல், கருவாட்டுக் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, நாக்கு மீன் வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் தான் விக்ரமுக்குச் சாப்பாடே இறங்கும் ! | |
விக்ரமின் செல்லப் பெயர் கென்னி. இந்தப் பெயரில் நீங்கள் கூப்பிட்டால், உடனே திரும்புவார். ஒரு ஹாய், கையசைப்பு, ஒரு புன்னகை இலவசம் ! | |
ஏகப்பட்ட இசைக் கருவிகளை வாசிப்பார். ஆரம்பத்தில் இருந்து இசையில் பிரியப்பட்டு இருக்கிற விக்ரமுக்குப் பிடித்த கம்போஸர்....யானி ! | |
மணி ஸ்பைக்கி, கொக்கோ, காரா....இவை விக்ரம் ஆசையாக வளர்க்கும் நாய்களின் பெயர்கள். மாயா,மிஸ்பி, இவை அவர் செல்லமாக வளர்க்கும் கிளிகள். இதில் மாயா‘ஓ’ போடு பாடலை உச்சரிக்கும் ! | |
பெசன்ட் நகரில் வீடியோ கடை, பழக்கடை இப்படி எங்காவது விக்ரம் மாதிரி யாராவது தென்பட்டால், ஆச்சர்யப்பட வேண்டாம். அது அவரேதான். ஸ்டார் என்ற பந்தா இல்லாமல், அவரே இறங்கி பர்சேஸ் செய்வார் ! | |
ஆதரவற்றவர்களுக்கான இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவுகிறார். இவரது பிறந்த நாளுக்குக் குவிகிற ரசிகர்களில், இதய சிகிச்சை செய்துகொண்டு மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும் ! | |
விக்ரமின் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்கள். அவருடைய கை வண்ணம்தான். இப்பவும் அவுட்டோர் போனால் இயற்கை தரும் அபூர்வமான இடங்களை வண்ணத்தில் கொண்டுவந்து விடுவார் ! | |
நேஷனல் அவார்டு வாங்கிய அன்று எந்த பார்ட்டி, படாடோபம் இல்லாமல், வீட்டில் குடும்பத்தோடு இருந்த வித்தியாசமானவர் விக்ரம் ! | |
விக்ரமுக்குப் பிடித்த நடிகர், ராபர்ட் டி நீரோ. பிடித்த நடிகை, ஜுலியா ராபர்ட்ஸ்,எல்லோர் மாதிரியும் நடித்துக் காட்டி அசத்துவார் ! | |
ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி எனச் சரளமாக உரையாடுவார். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதும் பழக்கமும் உண்டு ! | |
மகனின் பெயர் துருவா, மகள் அக்ஷிதா, இரண்டு பேருமே படிப்பில் சூரப்புலிகள், இருவருக்கும் இங்கிலீஷ் டீச்சர் விக்ரம் தான் ! | |
அதிர்ஷ்டமல்ல, தன்னம்பிக்கை மட்டுமே கைகொடுக்கும் என்பதை எப்போதும் நம்புவார் ! | |
விக்ரமின் செல்போன் ரிங்டோனாக இப்பவும், ‘மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே’ என சாமுராய் பாடல் தான் ஒலிக்கும். இன்னொரு போனில் ‘எக்ஸ் கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி’ ! | |
விக்ரம் தன் நண்பர்களை, டைரக்டர்களை சந்திக்கிற இடம், அடையார் பார்க் ஷெராட்டனின் லாபியில் தான் ! | |
‘கிங்’ என்றுதான் தன் கணவரை மனைவி ஷைலா செல்லமாக அழைப்பார் ! | |
ஜப்பானிய உணவு வகைகளை மிகவும் பிரியப் பட்டுச் சாப்பிடுவார். தென்னக உணவுகளைத் தவிர, விக்ரம் விரும்பும் உணவுவகை இதுதான் ! | |
விக்ரமின் இதரப் பெயர்கள் சீயான், கென்னி, ஜான் கென்னடி, அவரது அதிகாரபூர்வமான வெப்சைட்டில் இருக்கும் பெயர் விக்ரம் கே.வினோத் ! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
அஜீத் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமா வட்டாரத்தில் ‘மிஸ்டர்.ஸ்டைலிஷ்’, ‘கிராண்ட் ஓப்பனிங்
மாஸ்டர்’, ரசிகர்களுக்கு செல்லமாக ‘தல’....‘அசல்’ நாயகன் அஜீத் பற்றிய அமர்க்கள
அணிவரிசை இதோ....
அஜீத்தின் மொபைலுக்கு அழைத்தால் அவர் குழந்தை அனோஷ்கா மழலைக் குரலில் பாடியிருக்கும் ‘ஜன கண மன’ பாடல்தான் ரிங்டோனாக ஒலிக்கும் ! | |
தீவிரமான சாய்பாபா பக்தர். கார்,பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்து விட்டுதான் பயன்படுத்துவார் ! | |
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக்கொள்வார்.பெரும்பாலான வலது கைக் காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை ! | |
முதன் முதலில் ஆசைப்பட்டு வாங்கிய கார் எக்ஸ்ப்ளோரர்.வண்டி எண் TCW 650. இன்னமும் அதைப் பிரியமாகப் பாதுகாத்து வருகிறார் ! | |
எங்கேயும், எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட் என அஜீத்தைப் பார்க்க முடியாது. எந்த விழா என்றாலும் அதன் மூடுக்கு ஏற்ப உடைகளைத் தேர்வு செய்து அணிவார் ! | |
சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார் ! | |
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், ‘உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம் !’ எனப் பாசமாக வலியுறுத்துவார் ! | |
உள்ளுர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம் பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும் ! | |
சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார் ! | |
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார். அஜீத் ! | |
ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். ‘கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல !’ என்பார் ! | |
மனைவியை மிக மரியாதையுடன் நடத்துகிற மனிதர்.ஷாலினியைச் செல்லமாக ‘டார்லிங்’ என்றே அழைப்பார் ! | |
தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார்! | |
‘இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?’ என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார் ! | |
பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார்.வீட்டில் மினி நூலகமே உண்டு ! | |
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றை ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்தது நிற்கிறது ! | |
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட், ஷீட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால்.நண்பர்கள் வீட்டில் குவிந்து,பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள் ! | |
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார் ! | |
தங்க நகைகளை விரும்பவே விரும்பாத அஜீத்தின் ஆள்காட்டி விரலில் சமீபமாக ஒரு மோதிரம் மின்னிக் கொண்டு இருக்கிறது. ‘என்ன இது புதுசா?’ என்ற கேள்விக்குச் சிரிப்பு மட்டுமே பதில் ! | |
தன்னைப்பற்றிய செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள் வந்தால்....அந்தப் பத்திரிகை அலுவலகங்களுக்கு அடுத்தநாள் ‘நன்றியுடன் - அஜீத்’ என பொக்கே அனுப்பிப் புன்னகைப்பார் ! | |
படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது ‘கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை’ என்கிறார் ! | |
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர் ! | |
அனோஷ்கா, தந்தையை ‘அஜீத் குமார்’ என்று தான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு ! | |
மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு, விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷ்ன்ஸ் இது ! | |
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். ‘சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு !’ என்பார் ! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
சூர்யா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
பொறுப்புள்ள மகன், பாசக்கணவன்,அன்புள்ள அண்ணன்,சிறந்த நடிகர்........அத்தனைக்கும்
உதாரணமாக இருக்கும் சூர்யாவைப் பற்றி குட்டி க்யூட் தகவல்கள்
பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ்,சிகரெட் எந்தப் பழக்கமுகம் இல்லாதவர் சூர்யா.ஷுட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா,மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார்.கேட்டால், ‘அப்பாவும் இப்படித்தானே இருந்தார் என்பார்! | |
முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுபவர்.நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார் ! | |
காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள்,மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள், மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி, இது தான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா ! | |
ராம்கோபால் வர்மாவின் ஹிந்திப் படத்தில் நடிக்க விருப்பதால், ‘சிங்கம்’ ஷுட்டிங் முடிந்ததும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை ஹிந்தி டியூஷன் படிக்கிறார். வசனங்களைப் புரிந்து கொண்டு அவரே டப்பிங் பேச ஆசைப்பட்டுத் தான் இந்த ஏற்பாடாம் ! | |
பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்களுக்குச் சொந்தக்காரர் சூர்யா. தேசிய வங்கியில் வாங்கிய கடன் முடிந்து, விண்ட் மில் விரைவில் சொந்தமாகப் போகிறதாம் ! | |
துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், ஷுட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார் ! | |
அவரது புதுப் படம் வெளியாகும் போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார் ! | |
சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும் இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா ! | |
30 வருடங்களுக்கு மேலாக சிவகுமார் குடும்பத்தின் டிரைவராகப் பணிபுரிந்து வரும் சண்முகத்தின் மீது சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் மிகுந்த மரியாதை, திருமணம் முடிந்தவுடன் சூர்யா, பிருந்தா ஆகியோர் தம்பதிகளாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அளவுக்கு பாசம் காட்டுவார்கள்! | |
தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார் ! | |
ஸ்கூலுக்கு அடிக்கடி சென்ற 12B பஸ்ஸில் இப்போது ஒரு ஜாலி டிரிப் அடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. ஆனால், ‘வேண்டாம்.....கூட்டம் சேர்ந்து எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும் !’ என்று நண்பர்கள் அவரை அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். ‘ஒரு நாள் உங்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு, ஜாலி டிரிப் அடுத்தே தீருவேன் !’ என்று பந்தயம் கட்டியிருக்கிறார் சூர்யா. | |
10 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்க வேண்டுமென்பது சூர்யாவின் கனவு. இப்போதே ரீ-ரிக்கார்டிங். கதை விவாதம், எடிட்டிங் எனப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறார். | |
உலக சினிமாக்களில் இராணிப் படங்கள் தான் சூர்யா சாய்ஸ். ஷுட்டிங் கேன்சல் ஆனால் அந்தப் படங்கள் தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும் ! | |
வீட்டிலேயே ஜிம் இருக்கிறது. ஹிந்தி ‘கஜினி’யில் அமீருக்கு உடற்பயிற்சியாளராக இருந்த அல்காஸ்தான் இப்போ சூர்யாவுக்கும் கைடு ! | |
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். ‘சினிமா ஸ்டார் ஆயிட்டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல ’ என்பார் ! | |
மகள் தியா ஆங்கிலம், ஹிந்தி என கலந்து கட்டிப் பேசினாலும், சூர்யாவை ‘அப்பா’ என்று தான் அழைக்கிறார் ! | |
அடிக்கடி ரஜினி, கமல் படங்களைப் பார்ப்பார். சமீபமாக‘குருதிப்புனல்’, ‘மூன்று முகம்’ படங்களை அடிக்கடி பார்க்கிறாராம் ! | |
சமீபத்தில் சூர்யா ஆசை ஆசையாக வாங்கிருப்பது ஆடி க்யூ 7 கார். அவரிடம் இருக்கும் நான்கு கார்களின் பதிவு எண்களும் 5005 தான் ! | |
சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. ‘தேவர் மகன்’ படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா ! | |
சூர்யா கௌரவ நடிகராக நடித்த ஒரே படம் ‘ஜுன் ஆர்’. ஜோவின் அன்புக்காக அது. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் ‘குசேலன்’. | |
எல்லோரையும் ‘ஜி’ என்று தான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை ‘அண்ணே’ என்பார் . மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார் ! | |
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் நடந்து கொள்வார் ! | |
செப்டம்பர் 11 அன்று காரைக்குடி ஷுட்டிங்கில் இருந்த சூர்யா, இயக்குநரிடம் அனுமதி வாங்கி, விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து, பகல் பொழுதை வீட்டில் கழித்துவிட்டு, மீண்டும் அன்றிரவே காரைக்குடி ஷுட்டிங்க்குத் திரும்பி விட்டார்.காரணம், அன்றுதான் சூர்யாவுக்கு திருமண நாள். | |
தேசியக் கட்சி நடத்திய சர்வேயில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யாதானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, ‘ஆளை விடுங்க சாமி’ என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார் ! | |
சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் போக கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத் ! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
அமிதாப்பச்சன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
அமிதாப்பச்சன்
பற்றி சுவையான சிறு குறிப்புகள்
அமிதாப்பச்சன்... இந்திய சினிமாவின் ஜகான்
பாலிவுட்டின் பிக் பி. கோபக்கார இளைஞனாகத் திரையுலகில் கால் பதித்து, 40
வருடங்களைக் கடந்த நாயகனின் போர்ட்ஃபோலியோ பயணம்...
பற்றி சுவையான சிறு குறிப்புகள்
அமிதாப்பச்சன்... இந்திய சினிமாவின் ஜகான்
பாலிவுட்டின் பிக் பி. கோபக்கார இளைஞனாகத் திரையுலகில் கால் பதித்து, 40
வருடங்களைக் கடந்த நாயகனின் போர்ட்ஃபோலியோ பயணம்...
பிறந்த நாள், 1942 அக்டோபர் 11, அப்பா ஹரிவன்ஷ் ராய் பச்சன், இந்தியில் பிரபலமான கவிஞர். அம்மா தேஜி பச்சன், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருந்தவர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த வரும் கூட!. | |
இன்குலாப் என்பதுதான் அமிதாப்பின் இயற்பெயர், சுதந்திரப் போராட்ட காலத்தில் `இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற வார்த்தைகள் ஹரிவன்ஷ் ராய் பச்சனை ஈர்க்க, அந்த பெயர் சூட்டினார். அதுவே பிறகு அமிதாப் ஆனது. அதன் பொருள் `அணையாத ஒளி’! | |
1969 –ல் வெளிவந்த `ஸாத் ஹிந்துஸ்தானி’, இவரின் அறிமுகப் படம். படம் வெற்றி பெறவில்லை. ஆனால், சிறந்த புதுமுக நடிகருக்கான முதல் தேசிய விருதை வாங்கினார் அமிதாப்! | |
1973-ல் `சாஞ்சீர்’ படத்தில் நடித்த போது ஜெயபாதுரியுடன் காதல். அதே ஆண்டு ஜீன் 2-ல் திருமணம் நடைபெற்றது. அப்போது அமிதாப் அவ்வளவு பெரிய ஹீரோ அல்ல. ஆனால், ஜெயா.... சூப்பர் ஹிட் ஹீரோயின், ஜெயாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு தான் சினிமாவில் தனக்கு ஏற்றம் கிடைத்தது என்று இன்றும் நம்புபவர் அமிதாப்! | |
அமிதாப் –ஜெயா பச்சன் இருவரும் கணவன் – மனைவியாகவே பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவற்றில் `அபிமான்’, சுப்கே சுப்கே’, `ஷோலே’ ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள்! | |
யாஷ் சோப்ரா இயக்கி, அமிதாப் நடித்த `தீவார்’ படம், இந்தியா டைம்ஸ் வெளியிட்ட `கட்டாயமாகப் பார்க்க வேண்டிய டாப் 25 பாலிவுட் படங்களின்’ பட்டியலில் இன்று வரை முதல் இடத்தில் உள்ளது! | |
1975 ஆகஸ்ட் 15 அன்று வெளியான `ஷோலே’ இன்று வரை இந்திய சினிமாவின் `ஆல் டைம் ரெக்கார்ட்’ சுமார், 160 மில்லியன் அமெரிக்க டாலர் கணக்கில் இதன் வசூல் ஒரு மெகா சாதனை. `இந்த நூற்றாண்டின் படம்’ என்று பி.பி.சி. பாராட்டியது! | |
1973 முதல் 1983 வரை அமிதாப் நடித்து வெளியான அனைத்துப் படங்களும் எகிடுதகிடு ஹிட் தொடர்ந்து ஹிட் கொடுத்ததால், பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ஃப்ராங்க்காய்ஸ் ட்ரூஃபாட் இவரை `ஒன் மேன் இண்டஸ்ட்ரி’ என்று வர்ணித்தார்! | |
அமிதாப், சிறந்த பாடகரும்கூட 1979 –ல் வெளியான `மிஸ்டர் நடவர்லால்’ படத்தில் இவர் சொந்தக் குரலில் பாடல்களைப் பாடினார். இதனால் அந்த ஆண்டு ஃபிலிம் ஃபேர் சிறந்த பின்னணிப் பாடகர் விருது கிடைத்தது! | |
1982 –ல் `கூலி’ படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் இவருக்குக் காயம் ஏற்பட்டது. இவர் குணமடைய உலகம் முழுக்க, சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். ரசிகர்கள். பல மாதங்கள் மருத்துவ மனையில் இருந்து, அதன் பிறகு மீண்டும் நடித்தார். இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் உண்டான விளம்பரமே இந்தப் படத்தை `பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ அடிக்கச் செய்தது! | |
1984 –ல் அமிதாப்பின் அரசியல் வருகை ஆரம்பித்தது. அலகாபாத் தொகுதியில், உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பஹீகுணாவை எதிர்த்துப் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் (68.2%) வெற்றி பெற்றார். நாடாளு மன்ற உறுப்பினராக மூன்று வருடங்கள் இருந்தவர். தன் பதவிகளை ராஜினாமா செய்தார்! | |
`அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (ஏபிசிஎல்) வியாபாரத்தில் தோல்வி அடைந்த சமயம். நண்பர் அமர்சிங் உதவி செய்தார். அந்த கைமாறுக்காக அமர் சிங்கின் சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தார். இவர் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனார்.! | |
தொடர்ந்து படங்கள் தயாரித்து அவை தோல்வி அடைந்த நிலையில் கனரா வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாமல், தன் `ப்ரதீக்ஷா’ வீட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதில் இருந்து மீள இவருக்குக் கைகொடுத்தது. `கெளன்பனேகா க்ரோர்பதி’ டிவி. தொடர்! | |
4 தேசிய விருதுகள், 13 ஃபிலிம் ஃபேர் விருதுகள் இவர் கிரெடிட்டில் ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு இதுவரை அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இவருடையது தான். இவர் பெற்ற விருதுகள், அங்கீகாராங்களைவைத்தே தனியாக ஒரு 25 பட்டியல் போடலாம், அவ்வளவு விருதுகள்! | |
லண்டனில் `மேடம் டுஸாட்ஸ்’ மெழுகு மியூஸியத்தில் இவரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பெருமைக்கு உரிய முதல் ஆசிய நடிகர் இவர்! | |
`விஜய்’ என்பது இவருக்கு மிகப் பிடித்த கேரக்டர் பெயர், இந்தப் பெயரில் இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறார்! | |
இவர் ஒரு `ஐஸோமேனியாக்’, தினமும் அதிகாலை 3 முதல் 5 மணி வரைதான் தூங்குகிறார். இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி எப்படி இவ்வளவு உழைக்கிறார் என்று அனைவரும் அதிசயிப்பார்கள்! | |
குர்தா பைஜாமா இவர் விரும்பி அணிகிற ஆடைகள், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் `மோன்ட் பிளாங்க்’ என்ற பேனா நிறுவனம். இவருக்கு என்றே தனியாக பேனா தயாரித்துப் பரிசு அளிக்கும்! | |
கார்கள் மீது இவருக்கு ஆர்வம் 11 கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன போர்டிகோவில், `லெக்சஸ்’ என்ற புல்லட்ப்ரூஃப் கார்தான் இவர் விரும்புவது. `நான்தான் கார் ஓட்டுவேன்’ என்று அடம்பிடிப்பார்! | |
ஒரு நிமிடத்துக்கு 7,000 ரூபாய் சம்பாதிக்கிறார். பிளான்ட் ஹாலிவுட் ரெஸ்டாரன்ட்டைத் திறந்து வைத்தபோது ஹாலிவுட் நடிகர் ஃப்ரூஸ் வில்லீஸ் இப்படி கமென்ட் அடித்தார். `ஹாலிவுட் ஸ்டார்களைக் காட்டிலும் பெரியவர் அமிதாப்! | |
ஷீட் அவுட் லோக்கன்ட்வாலா’ படத்துக்காக 5 மணி நேரத்தில் 23 ஸீன்களுக்கு டப்பிங் பேசியது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது! | |
பிப்ரவரி 2010-ல் அமிதாப்பை குஜராத்தின் பிராண்ட அம்பாசிடராக நியமித்தார். நரேந்திரமோடி. `அமிதாப் ஒரு மகா நாயகன், நான் ஒரு சாதாரண மனிதன்’ என மோடி `வித்தை’ செய்தது அப்போது பா.ஜ.க-வினர் இடையே பெரும் சலசலப்பை உணடு பண்ணியது! | |
அமிதாப்புக்கு ஸ்வேத்தா, அபிஷேக்பச்சன் என்று இரண்டு குழந்தைகள். ஸ்வேத்தாவின் கணவர் நிகில் நந்தா. இவர் எவர்கிரீன் `ஷோமேன்’ ராஜ் கபூரின் மகள் வழிப் பேரன். அபிஷேக் பச்சன் ஜஸ்வர்யா ராயைக் கைப்பிடித்து உலகறிந்த விஷயம் இந்தியாவின் மிகப் பிரபலமான நட்சத்திரக் குடும்பம்! | |
ராஜீவ்- சோனியா திருமணத்தின்போது சோனியாவைக் கன்னிகாதானம் செய்துவைத்தே அமிதாப்பின் அன்னைதான். அந்த அளவுக்கு இரண்டு குடும்பங்களும் நெருக்கம். ராஜீவ் காந்தியால் தான் அமிதாப் அரசியலுக்கு வந்தார். ஆனால், போஃபர்ஸ் ஊழலில் ராஜீவின் பெயர் அடிபடவே, அவரைவிட்டு விலகினார். அந்தக் கடுப்பை இன்று வரையிலும் வைத்திருக்கிறது ராஜீவ் குடும்பம்! | |
`நீ நினைப்பது எல்லாமே நிகழ்ந்துவிட்டால் அது நல்லது. அப்படி நடக்காவிட்டால், அது சிறந்தது!’ அமிதாப் தன் நண்பர்களுக்கு உதிர்க்கும் தத்துவம் இது!. |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
ஆர்யா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
கடவுளோ... காமெடியோ..`பார்யா!’ என்று அசத்துவது
ஆர்யா ஸ்டைல், ஒளிரும் பழுப்பு நிறக் கண்களோடு சிரிக்கும் ஆர்யா வசம்தான்
`சாக்லேட் பாப்’, ஸ்வீட் ராஸ்கல்’, `எலிஜிபிள் பேச்சிலர்’ என்று பட்டாம்
பூச்சிகளின் பட்டங்கள். `பாஸ்’ என்று நண்பர்களின் தோள் உரசியதிலும் இப்போ
பார்ட்டி ஆல் ஏரியா ஹிட்!.
ஆர்யா ஸ்டைல், ஒளிரும் பழுப்பு நிறக் கண்களோடு சிரிக்கும் ஆர்யா வசம்தான்
`சாக்லேட் பாப்’, ஸ்வீட் ராஸ்கல்’, `எலிஜிபிள் பேச்சிலர்’ என்று பட்டாம்
பூச்சிகளின் பட்டங்கள். `பாஸ்’ என்று நண்பர்களின் தோள் உரசியதிலும் இப்போ
பார்ட்டி ஆல் ஏரியா ஹிட்!.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், 1980-ம் வருடம் டிசம்பர் 11-ம் தேதி பிறந்தவர் ஆர்யா. அப்பா உமர், அம்மா ஜமீலா, மகனுக்கு வைத்த பெயர் ஜம்வுத், அரபியில் `போர் வீரன்’ என்று பொருள். சினிமாவுக்காக ஆர்யா ஆனார். ஷாகீர், ராஸி என்று இரு தம்பிகள். | |
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தது குடும்பம், சென்னை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி, வண்டலூர் கிரசன்ட் இன்ஜினீரிங் கல்லூரியில் படிப்பு, கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான ஆர்யாவின் தேர்ச்சி 78 சதவிகிதம்! | |
தமிழ் தெரியாத காரணத்தால், பள்ளிப் பருவத்தில் அதிகம் பேச மாட்டார். பேசினாலும் ஆங்கிலம்தான். பின்னாளில் தமிழில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டாலும், இன்னமும் பார்ட்டிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது! | |
விமான பொம்மைகள் வாங்கி விளையாடுவதுதான் பொழுதுபோக்கு. பைலட் ஆக வேண்டும் என்பது அப்போதைய லட்சியமாம்! | |
ஆர்யாவின் அப்பா ஒரு கால்பந்து வீரர். பையனுக்கும் அதன் மீது பிரியம், நான்கு வயதில் இருந்து விளையாடப் பழகிவிட்டார். இப்போதும் ஃபுட்பால் பிரியர்! | |
நண்பர்களோடு அமெரிக்கா சென்று செட்டிலாகும் திட்டத்தை இரட்டைக் கோபுரத்தாக்குதல் காலி செய்துவிட்டது. முஸ்ஸிம் என்பதால் ஆர்யாவைத் தவிர, மற்றவர்களுக்கு அமெரிக்க விசா கிடைக்க, நண்பர்கள் பறந்துவிட்டார்கள்.தற்காலிகமாக மாடலிங் பக்கம் ஒதுங்கினார்! | |
மாடலிங் போட்டோ பார்த்து `உள்ளம் கேட்குமே’ பட வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் ஜீவா. அப்போதுதான் ஜம்வுத் என்ற பெயரை ஆர்யா ஆக்கினார் ஜீவா! | |
`உள்ளம் கேட்குமே’ வெளியாகத் தாமதம் ஆனதால், ஆர்யாவின் முதல் படமாக முந்திக்கொண்டது `அறிந்தும் அறியாமலும்’, அடாவடி அண்ணனாக `குட்டி’ என்கிற கேரக்டரில் நடித்த ஆர்யாவுக்கு முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் `சிறந்த அறிமுக நடிகர் விருது கிடைத்தது! | |
ஐந்து வருடங்களில் 12 தமிழ்ப் படங்கள். `மாயக் கண்ணாடி’, `சிவா மனசுல சக்தி’, `காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய மூன்று படங்களில் கெளரவ வேடம். `வருடு’ என்ற தெலுங்குப் படத்தில் அல்லு அர்ஜீனாவை எதிரிக்கும் வில்லனாக நடித்து இருக்கிறார்! | |
ஃபுட்பால் தவிர, சைக்கிளில், ரன்னிங் இரண்டுமே அதற்குரிய நுணுக்கங்களோடு புரொஃபஷனலாகத் தெரியும்! | |
வெள்ளிக் கிழமை நடக்கும் ஜீம்மா தொழுகையை மிஸ் பண்ணவே மாட்டார். ரம்ஜான் மாதத்தில் தவறாமல் நோன்பு இருப்பார்! | |
அன்றும், இன்றும் பிடித்த நடிகை.... கஜோல், அடுத்ததாக, சிம்ரன், நடிகர்களில்.... ஷாரூக் கான்! | |
ஜீன்ஸ்,டி-ஷர்ட் பிடித்த உடை பெரும்பாலும் சிவப்பு- கறுப்பு கலவையிலேயே ஆடைகள் இருக்கும்! | |
இயக்குநர் விஷ்ணுவர்தன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, விஷால், ஜீவா, பரத், அப்பாஸ் என சினிமாவிலும் நண்பர்கள் அதிகம், பில்லியர்ட்ஸ் ஆடுவது ஆர்யாவின் மாதாந்திரப் பழக்கங்களில் ஒன்று! | |
சென்னை அண்ணா நகரில் Sea Shell என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார் ஆர்யாவின் தந்தை உமர். அடிக்கடி அங்கே விசிட் அடித்து வாடிக்கையாளர்களிடம் ஜாலியாகப் பேசுவார் ஆர்யா! | |
அம்மா ஜமீலா செய்யும் பிரியாணி, ஆர்யாவின் சினிமா நண்பர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம், ஞாயிற்றுக் கிழமை ஆர்யா வீட்டில் இருந்தால், பிரியாணிக்காகவே நிறைப் பேர் படை எடுத்து வருவார்கள். அத்தனை பேருக்கும் சளைக்காமல் பிரியாணி பரிமாறி சிரிப்பார் ஜமீலா! | |
எந்த விஷயத்தையும் ஆர்வமாகக் கற்றுக் கொள்வார். `ஓரம்போ’ படத்துக்காக் ஆட்டோ டிரைவர் உதவியுடன் ஒரே இரவில் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டவர்! | |
காதல் திருமணம்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆர்யா. அவரது கிசுகிசுப் பட்டியல்... பத்மப்ரியா, பூஜா,நிலா,ஏமி ஜாக்சன் என்று தொடர்ந்துகொண்டே இருக்கிறது. `சிக்ஸ்த் படிக்கிறப்போ ஒரு பொண்ணு மேல க்ரஷ். அது அப்பவே முடிஞ்சிருச்சு. அதுக்கு அப்புறம் எத்தனை லவ்னு இதுவரை எண்ணலை பாஸ்!’ என்று பளிச் பதில் சொல்வார்! | |
சச்சின், மரடோனா,ரொனால்டோ,லயோனல் மெஸ்ஸி,மைக்கேல், ஜீமேக்கர் என ஆர்யாவின் ரோல் மாடல்கள் அனைவருமே விளையாட்டுத் துறைப் பிரபலங்கள். ஒரே ஒரு விதிவிலக்கு... இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! | |
`Nothing is impossible’ ஆர்யாவுக்குப் பிடித்த வாசகம். `ஒரு விஷயத்தில் இறங்கினால்தான்,அதை செய்ய முடியுமா,முடியாதான்னு தெரியும். இறங்காமேலேயே வேடிக்கை பார்க்கிறது நமக்குப் பிடிக்காது!’ என்பார் அடிக்கடி! | |
பாம்பு என்றால் படை நடுங்குமோ இல்லையோ... தொடை நடுங்குவார் ஆர்யா. இருட்டு என்றாலும் பயம் ஜாஸ்தி. இருட்டில் தனியாகச் செல்ல நேர்ந்தால் பயத்தில் கண்களை மூடிக் கொள்வாராம்! | |
அடிக்கடி கழுத்தில் கைவைத்து வானம் பார்த்து யோசிப்பது ஆர்யா ஸ்டைல்! | |
ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு பெரும்பாலும் பைக்கில் சென்றுவிடுவார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சந்து பொந்து வழியாக கட் அடித்துச் செல்வதில் இருக்கும் த்ரில், ஏ.சி காருக்குள் கிடைக்காது என்பது காரணம்! | |
டிஸ்கொதே பார்ட்டி கொண்டாடும் ஆர்யாவைப் பார்க்க `பார்க்’ அல்லது திருவான்மியூர் le waterina ஹோட்டல்களுக்குச் செல்ல வேண்டும்! | |
``பிடிவாதம்தான் என் கெட்ட குணம் ஒரு முடிவு எடுத்துவிட்டால், என்ன இழப்பு வந்தாலும்... அதைச் செய்துபார்க்க ஆரம்பித்துவிடுவேன். இந்தக் குணத்தால், பல விஷயங்களை இழந்து இருக்கிறேன், இருந்தாலும் என்னால் மாற முடியவில்லை!’’- தன்னுடைய நெகட்டிவ் பக்கம் பற்றி ஆர்யா சொல்வது இதுதான்! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
பாக்யராஜ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
இந்திய சினிமாவின்
'திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன்.
'மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
'திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன்.
'மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்த தேதி – ஜனவரி 7. இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு கடைசித் தம்பி! | |
முதல் வகுப்பையே அவரது தாத்தா கட்டாயத்தின் பேரில் இரண்டு தடவை படித்தார். பி.யூ.சி ஃபெயில் ஆன பிறகு, சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்! | |
இதுவரை இயக்குநராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'மெளன கீதங்கள்’, 'தூறல் நின்னு போச்சு’, 'முந்தானை முடிச்சு’, 'அந்த 7 நாட்கள்’ போன்ற படங்களின் திரைக்கதைகள் அபாரமானவை! | |
'16 வயதினிலே’, 'கிழக்கே போகும் ரயில்’, 'சிகப்பு ரோஜாக்கள்’ படங்களில் சிறு வேடங்களில் நடித்த பாக்யராஜை, 'புதிய வார்ப்புகள்’ ஹீரோவாக அறிமுகம் செய்தவர் அவரது குரு பாரதி ராஜா! | |
'புதிய வார்ப்புகள்’ படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா’ என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க, அப்பா-அம்மா உயிரோடு இல்லை!’ என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் பாக்யராஜின் அம்மா. இன்னும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டும் பாக்யராஜீக்கு! | |
ஏவி.எம்.நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக் கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, 'முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது! | |
இயக்குநர் ஆவதற்கான முயற்சிகளின்போது அறிமுகமான நடிகை பிரவீணா. அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் நோயுற்று இறந்துவிட்டார் பிரவீணா! | |
'ராஜா’ எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா அளித்த 'ஆர்’ எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜ் விரலில் மின்னும் இடையில் அந்த மோதிரம் தொலைந்துபோக அதே டிசைனில் மோதிரம் அளித்த பூரிணிமா! | |
பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்.மூத்த மகன் சாந்தனு தமிழ், மலையாள சினிமாக்களின் அங்கீகாரத்துக்கு உழைத்துக்கொண்டு இருக்கிறார் 'பாரிஜாதம்’ படத்தில் அறிமுகமான மகள் சரண்யா, தற்போது நகைகள் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறார்! | |
பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை கருமாரி அம்மன் கோயிலில் நடத்திவைத்தவர் எம்.ஜி.ஆர். கூடவே இருந்து ஆசீர்வதித்தவர் சிவாஜி. இரண்டு திலகங்களுக்கு சேர்ந்து அபூர்வமாக நடத்திய திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்! | |
தேனிலவு செல்லக்கூட நேரம் இல்லாமல் பரபரப்பாக இருந்தவர். வருடங்கள் கழித்து தன் குழந்தை, மைத்துனரோடு பெரிய பட்டாளமாகச் சென்று தேனிலவு கொண்டாடியதை இன்றும் சிலாகித்து ரசிப்பார்! | |
தமிழகத்தின் மிகப் பெரிய தியேட்டர் மதுரை தங்கம். அங்கு 100 நாட்கள் ஓடிய படம் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ அதற்குப் பிறகு, 100 நாட்கள் ஓடிய படம் பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு’! | |
'ஆக்ரி ராஸ்தா’, 'பாபா தி கிரேட்’, 'மிஸ்டர் பச்சாரா’ என மூன்று இந்திப் படங்கள் இயக்கி உள்ளார். இவருடைய பல திரைக்கதைகளை இந்திப் படங்களில் நடித்து ஸ்டார் அந்தஸ்து எட்டியவர் அனில்கபூர்! | |
திருமணப் பரிசாக எம்.ஜி.ஆர் வழங்கிய ஆள் உயரக் குத்துவிளக்குகள் இரண்டு பாக்யராஜ் வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. அதை எம்.ஜி.ஆரே பாக்யராஜ் வீட்டில் இறக்கிவிட்டு, வரவேற்புக்கு வந்தாராம்! | |
”நான் 'சுட்டு’ எடுத்த படம் 'வீட்ல விசேஷங்க’ மட்டும்தான், மற்றபடி எல்லா படங்களும் என் சொந்தக் கற்பனை!’’ என்பார் துணிச்சலாக! | |
'மன்ற முரசு’ இதழின் ஆண்டு விழாவில், பாக்யராஜ்தான் என்னுடைய கலை வாரிசு!’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது, அரசியல் அரங்கில் பெரும் அதிரிச்சி அலைகளை உண்டாக்கின! | |
சினிமாவின் நெருங்கிய நண்பர், ரஜினி! திடீரென்று கிளம்பி எங்கேனும் நல்ல ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்கள்! | |
பிரவீணா, ரதி, ஊர்வசி, ராதிகா, சுமதி, பூர்ணிமா, சரிதா,அஸ்வினி, ஷோபனா, சுலக்ஷணா, பிரகதி, ராதா, பானுப்ரியா,ரோகிணி,ஜஸ்வர்யா,நக்மா என ஏராளமான நடிகைகளோடு ஜோடியாக நடித்த இயக்குநர்- நடிகர் இவராகத்தான் இருப்பார்! | |
கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் இல்லை. திருமண நாள் அன்று மட்டும் தவறாமல் கருமாரி அம்மன் கோயிலுக்குச் செல்வார்! | |
பாக்யராஜ் படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தது 'தூறல் நின்னு போச்சு’, 'டார்லிங் டார்லிங்’ படத்தில் வில்லனை நீ அடிச்சிருக்கணும்!’’ என்று அவரிடம் குறைபட்டாராம் எம்.ஜி.ஆர்! | |
நடிக்க ஆசைப்பட்டு வந்த பார்த்திபனை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தார் பாக்யராஜ். அவரது புகழ் பெற்ற சிஷ்யர்களில் பாண்டியராஜன், லிவிங்ஸ்டனும் உண்டு! | |
ஒரு முறை ராஜ்கபூரிடம், பாக்யராஜை அறிமுகம் செய்து இருக்கிறார் போனிகபூர், 'உன்னைத் தெரியுமே, 'டார்லிங் டார்லிங்’ பார்த்திருக்கேன். சூப்பர்!’ என்று ராஜ்கபூர் சொன்னபோது, நெகிழ்ந்து இருக்கிறார் பாக்யராஜ்! | |
பாக்யராஜ் இசையமைப்பாளராகவும் ஆறு படங்கள் பணியாற்றியிருக்கிறார். 'ஆராரோ ஆரிரரோ’ படத்தில் இவர் இசையில் உருவான 'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்’ பாடல் ஜானகியின் மனம் கவர்ந்த பாடல், அதற்காக ஜானகி பரிசளித்த பேனாவை ஞாபக அடுக்கிலும், அலமாரி அடுக்கிலும் பாதுகாத்துவைத்திருக்கிறார் பாக்யராஜ்! | |
பாக்யராஜீக்கு மிகவும் இஷ்டமான வகுப்பு ஆசிரியர் பெயர் சண்முகமணி, அவரை நினைவு கூரும் விதமாகத்தான் 'புதிய வார்ப்புகள்’, 'சுந்தர காண்டம்’ எனத் தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆசிரியருக்கு 'சண்முகமணி’ என்று பெயர் சூட்டுகிறார். அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட அந்த ஆசிரிருடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் பாக்யராஜ்! | |
சிவாஜியை வைத்து 'தாவணிக்கனவுகள்’ இயக்கித் தன் தாகத்தைத் தணித்துக்கொண்டார். ஆனாலும், நண்பர் ரஜினிகாந்த்தை வைத்து முழு திரைப்படம் இயக்கியது இல்லை என்ற ஆதங்கம் இப்போதும் உண்டு. இன்னும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் பாக்யராஜ்! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
மனோரம்மா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
ஜில்ஜில்
ரமாமணியாக கொஞ்சியவரை, இன்று தமிழகமே ஆச்சி செல்லம் கொஞ்சுகிறது.
இந்திய அளவில் இவருக்கு நிகர் இவர் என்று ஒப்பீடு செய்ய முடியாத வெகு
சிலருள் மனோரமாவுக்கு ஓர் இடம் உண்டு தவச்செல்வியின் பெர்சனல்
பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...
ரமாமணியாக கொஞ்சியவரை, இன்று தமிழகமே ஆச்சி செல்லம் கொஞ்சுகிறது.
இந்திய அளவில் இவருக்கு நிகர் இவர் என்று ஒப்பீடு செய்ய முடியாத வெகு
சிலருள் மனோரமாவுக்கு ஓர் இடம் உண்டு தவச்செல்வியின் பெர்சனல்
பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...
· 1939 –ல் மனோரமா பிறந்த ஊர் ராஜமன்னர்குடி. பெற்றோர் காசிகிளாக்குடையார்-ராமாமிர்தம்மாள். | |
· பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள், பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்தால் `ஆச்சி’ என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது. ஆனால் ஆச்சி, முக்குலத்தோர் வகையைச் சேர்ந்தவர்! | |
· 1952 –ல் மேடை ஏற்றப்பட்ட `யார் மகன் நாடகம்தான் ஆரம்பம். `அந்தமான் கைதி’ மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம், நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்! | |
· அறிஞர் அண்ணா எழுதிய `வேலைக்காரி நாடகத்திலும், அவரோடு `சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’, `ஓர் இரவு’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய `உதயசூரியன்’ நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்! | |
· முதல் சினிமா `மாலையிட்ட மங்கை’, நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300 –க்கு மேல். இதனால் `கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் மணோரமா. இவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணாதாசன்! | |
· மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய வித்தகி! | |
· `கண் திறந்தது’ படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனோடு திருச்செந்தூர் கோயிலில் திருமணம். ஒரே ஒரு மகன் பூபதி! | |
· அணாண், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதல்வர்களோடு நடித்த பெருமை உடையவர்! | |
· உணவுக் கட்டுப்பாடு ஆச்சிக்கு அதிகம் செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாது. புதன், ஞாயிறு கண்டிப்பாக அசைவம் உண்டு. | |
· நெருங்கிய தோழிகளான எம்.என்.ராஜம், ஸ்ரீப்ரியா, இருவரும் ஆச்சியின் உடல் நலத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அடிக்கடி ஆச்சியைச் சந்திப்பவர்கள் கமல், ரஜினி! | |
· இப்போதும் மகன் முதற்கொண்டு வீட்டில் செல்லமாகக் கூப்பிடுவது `பாப்பா’, ரசிகர்களுக்கு `ஆச்சி’. உடன் நடிக்கும் நடிகளுக்கு `அம்மா’! | |
· முருகனின் அடிமை, அறுபடை வீடுகளும் அவ்வளவு இஷ்டம். தன் அம்மாவின் சிறு வயது வேண்டுதலுக்காகச் சமீபத்தில் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி வந்தார்! | |
· கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆச்சிக்கு கெளரக டாக்டர் பட்டம் அளித்துள்ளது. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் தமிழக அரசு கலைமாமணி விருதும் அளித்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டுள்ளன! | |
· மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை `சகோதரன்’ என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணேசன் இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, `அண்ணே’ என்று தான் அழைப்பார் ஆச்சி! | |
· தன் டாடா சியாரா காரில் செல்லும்போது, `மெள்ளப் போ, மெள்ளப் போ` என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்! | |
· பின்னணிப் பாடகிகள் அளவுக்கு இனிய சாரீரம், இவரை அடிக்கடி பாடச் சொல்பவர்களிடம் கூச்சப்பட்டுக்கொண்டே, ``என்ன பெரிசா பாடுறேன். பி.சுசீலா அம்மா குரல் என்னுது’’ என்பார்! | |
· ஆச்சி, நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் `தில்லானா மோகனாம்பாள்’ ஆச்சிக்கே பிடித்தது `சின்னக் கவுண்டர்’, `நடிகன்’, ஒரு துளி விரசம் இல்லாமல் `நடிகன்’ படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்’ என்பார்! | |
· பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் ஆழ்ந்துவிடுவார். படித்தது. மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாது எதுவும் இல்லை! | |
· மனச் சோர்வு இருந்தால் கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார். | |
· அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டுவார்! | |
· சமீபத்தில் மூட்டுவலியால் அவதிப்பட்டு காலில் ஆபரேஷன் செய்து குணம் பெற்று, நடமாடத் துவங்கியிருக்கிறார்! | |
· `ஆச்சி இண்டர்நேஷனல்’, `அல்லி ராஜ்யம்’, `காட்டுபட்டிச் சத்திரம்’ என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்! | |
· இவரது நடிப்புத் திறமை, நாடகக் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன், ஈ.வி.கே சம்பத், கண்ணதாசன் போன்றோர் பேசியதை இன்னமும் மனதில் சேமித்துவைத்துள்ளார் ஆச்சி! | |
· `வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன், பேசலாமா’ என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல் சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்! | |
· எஸ்.எஸ்.ஆரில் ஆரம்பித்து இன்றைய இளம் நடிகர்கள் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கும் ஓரே தமிழ்க் கலைஞர் இவர்தான். இதைச் சொல்லும்போது ஆச்சியின் முகத்தில் புன்னகை புதுக் கவிதை எழுதும்! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
ஐஸ்வர்யா ராய் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
ஐஸ்வர்யா ராய் பச்சன்... அபார அழகு தேவதை! தகுதியும் திறமையும் அழகாகச்
சங்கமித்த ஹைக்கூ கவிதை பசையாக இழுக்கும் பச்சைக் கண்கள்தான் இன்று உலக
அழகின் உச்சம்!
சங்கமித்த ஹைக்கூ கவிதை பசையாக இழுக்கும் பச்சைக் கண்கள்தான் இன்று உலக
அழகின் உச்சம்!
மங்களுரில் 1973-ம் வருடம் நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய் ஒரே ஒரு அண்ணன் ஆதித்யா ராய்! | |
அப்பா, அண்ணன் இருவரும் கடற்படையில் பணி புரிந்தவர்கள். இதனால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஐஸ்,`என் அம்மாவின் உற்சாக ஊட்டல்தான் என் இப்போதைய சாதனைக்குக் காரணம்’ என்பார்! | |
தேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது தான் ஐஸ்வர்யாவின் லட்சியம். ஆனால், ஆர்க்கிடெக்ட் படிக்கும்போதே, மாடலிங் வாய்ப்புகள் குவிய, அழகுப் புயல் அப்படியே திசை திரும்பிவிட்டது! | |
கேமலின் நிறுவன விளம்பரத்தில் முதன்முதலில் ஐஸ் நடித்தபோது, அவருக்கு வயது ஒன்பது, பகுதி நேர புகைப்படக்காரன தனது ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக அந்த விளம்பரத்தில் நடித்தார்! | |
பள்ளி நாட்களில் டான்ஸ், டிராமா என ஏரியா வாரியாக வெளுத்துக்கட்டினாலும், கணக்கில் ஐஸ்வர்யா கொஞ்சம் வீக்,`நீ எல்லாவற்றிலும் சிறந்தவள் என்று என்னால் சொல்ல முடியாது’ என்று அவருடைய கணித ஆசிரியை சொன்னதை இன்றுவரை,மறக்க வில்லை ஐஸ், அன்று முதன் இன்று வரை, கடுமையான விமர்சனங்களுக்கு ரொம்பவே மனம் வருந்துவார்! | |
1994 `மிஸ் இந்தியா’ போட்டியில் சுஷ்மிதா சென் அழகிப் பட்டம் வென்றார். அதில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடம். அதே வருடத்தில், உலக அழகிப் போட்டியில் இன்னும் தைரியம், நம்பிகை சேர்த்து கலந்துகொண்டார் ஐஸ். உலக அழகிப் பட்டத்தோடு மிஸ் போட்டோஜெனிக் பட்டமும் ஐஸ் வசம்! | |
ஐஸ்வர்யாவின் 21-வது பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது `உலக அழகிப் பட்டம்’! அழகி கிரீடம் சூடிய உடன், அரங்கில் இருந்து அனைவரும் தத்தமது மொழிகளில் `பிறந்த நாள் வாழ்த்து’ பாடிய பெருமை இவரைத் தவிர, வேறு அழகிகளுக்குக் கிடைக்கவில்லை! | |
`மற்ற நாட்டுப் போட்டியாளர்கள் `இந்தியர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள், துளியும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள்’ என்று மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள். அதைப் பொய்யாக்கும் வேகம்தான் உலக அழகிப் பட்டம் பெற எனக்கு உத்வேகம் ஏற்படுத்தியது!’ என பேட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவார் ஐஸ்வர்யா! | |
மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்க்ரீம் தவிர்ப்பவர். நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம்! | |
1997-ல் மணிரத்னத்தின் `இருவர்’ படம்தான் சினிமாவுக்கு ஐஸின் அறிமுகம். அதே ஆண்டு பாபிதியோலுடன் ஐஸ் நடித்த முதல் இந்திப் படமான `Aurpyar Ho Gaya’ செம ஃப்ளாப். ஆனாலும், `சிறந்த புதுமுகம்’ விருது வென்றார் ஐஸ்! | |
1999-ல் இவர் நடித்து வெளியான `Hum Dil De Chuke Sanam’ ஃபிலிம்பேர் விருது பெற்றுத் தந்தது. `அழகு பொம்மை’ அடையாளம் உடைத்து `திறமையும் நிரம்பியவர்’ என்று முதல் அழுத்த முத்திரை பதித்தார்! | |
இளவரசி டயானாவுக்குப் பிறகு காதல், திருமணச் செய்திகளுக்காக பத்திரிகையாளர்கள் அதிகமாகப் பின் தொடர்ந்து ஐஸ்வர்யாவை என்கிறார்கள்! | |
கர்னாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகக் கற்றவர். தொடர்ந்து பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார். சினிமாக்களில் ஐஸ்வர்யாவின் பரத அசைவுகள் அனைத்தும் சொந்த முனைப்புதான்! | |
ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ் பயன்படுத்தும் மாய்சரைஸர்.... சுத்தமான பசும் பால்! | |
17 ஆயிரம் வெப்சைட்டுகள் ஐஸ்வர்யாவுக்காகத் தங்கள் தளத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கி இருக்கிறது இவருக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை ஆக்கிரமித்து இருப்பவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்! | |
2004-ல் `டைம்ஸ்’ பத்திரிகை, உலக அளவில் மக்களை ஈர்த்த அழகுப் பெண்களில் ஐஸ்வர்யாவையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது! | |
2005-ல் பார்பி நிறுவனம், இங்கிலாந்தில் ஐஸ்வர்யா ராயைப் போல் தோற்றம்கொண்ட பார்பி பொம்மைகளை விற்பனைக்கு வெளியிட்டது. ஒரே நாளில் எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இன்றும் அந்த கலெக்ஷன் பொம்மைகளுக்கு ஏக டிமாண்ட் உண்டு! | |
அமெரிக்காவின் பிரபல `ஒப்ரா வின்ஃப்ரே ஷோவில் கலந்துகொண்ட முதல் இந்திய நடிகை ஐஸ்தான். அந்த ஷோவில், நீங்கள் மிக விரைவாக சேலை கட்டிக்கொள்வீர்களாமே!’ என்று ஓப்ரா கேட்க, பதில் சொல்லவில்லை ஐஸ்வர்யா, ஒரு சேலையை நான்கே நிமிடங்களில் ஓப்ராவுக்கு அணிவித்து அப்ளாஸ் அள்ளினார்! | |
லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூஸியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகுச் சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான்! | |
இவரிடம் உள்ள வாட்ச்சுகளை வைத்து ஒரு கண்காட்சியே நடத்தலாம். அவ்வளவு பெரிய கலெக்ஷன். இவர் பிராண்ட் அம்பாஸடராக இருக்கும் Longines வகை வாட்ச்களின் ஆரம்ப விலையே ரூ 18 ஆயிரம்! | |
`குரு’ பட ஷீட்டிங் சமயம், ஹோட்டல் லாபியில் ஐஸ் நின்று கொண்டு இருந்தார். கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து அப்போது காதலைச் சொன்னார் அபிஷேக்பச்சன். தன்னைவிட, மூன்று வயது இளையவரான அபிஷேக் பச்சனுக்கு உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராய்! | |
சமீபத்திய பேட்டி ஒன்றில், `என் அப்பாவைப்போல இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை!’ என்று பூரித்தார் அபிஷேக் பச்சன். அடுத்த நொடியே, `ஆனால், இதற்கு ஐஸ்வர்யா ஈடுபாடு காட்டவில்லை!’ என்று தன் வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார்! | |
நிஜ வாழ்வில் ஐஸ்வர்யா, அபிஷேக் கெமிஸ்டரி அபாரமாக இருந்தாலும், நிழல் பதிவான `குரு’ மற்றும் `ராவணா’வில் அது எடுபடவில்லை என்பது தம்பதிகளுக்கே சற்று வருந்தம்தான்! | |
எத்தனையோ விளம்பரங்கள், சினிமாக்களில் உடல் மறைக்கும் நகைகள் அணிந்து நடித்து இருந்தாலும், தங்கத்தின் மீது ஒரு துளிகூட விருப்பம் இல்லாதவர்! | |
தன் நீலம் கலந்த பச்சை விழிகளே தனது இத்தனை புழுக்கும் காரணம் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா! |
தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் | நன்றி ஆனந்த விகடன் |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள்
மீதி நாளை தொடரும் ........................
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள்
நன்றி .............தொடரட்டும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» .P .B .ஸ்ரீனிவாஸ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» மனிதர்களை பற்றிய சிறு குறிப்புகள்
» வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» .P .B .ஸ்ரீனிவாஸ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
» மனிதர்களை பற்றிய சிறு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum