TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

2 posters

Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by Tamil Wed Feb 13, 2013 7:49 pm

சரோஜினி நாயுடு... ஆந்திராவில் வசித்த வங்காள குடும்பத்தில் பிறந்தார் இவரின் தந்தை ஒரு கல்லூரியை உருவாக்கி
ஹைதரபாத் நகரத்தில் அதன் முதல்வராக இருந்தார். இவரை ஒரு அறிவியல்
மேதையாக்க அவர் விரும்பினார். ஆனால், இவரின் உள்ளமோ கவிபாடுதலில்
திளைத்தது.

மிகசிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி எனும்
கவிதையை இயற்றினார். அதைப் படித்து பார்த்து பிரமித்த ஹைதராபாத் நிஜாம்,
இவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினார். இங்கிலாந்திற்கு கணிதம் படிக்க
போனவர், அங்கேயிருந்த இயற்கையின் வனப்பு இவரை ஆட்கொள்ள அற்புதமான கவிதைகள்
எழுதினார்.

அதைப் படித்து பார்த்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ்
முதலிய ஆங்கிலேய எழுத்தாளர்கள் வியந்தார்கள். ஆங்கில மொழி தாய்மொழியாக
இல்லாத அவரின் கவித்துவம் அவர்களை பிரமிக்க வைத்தது. உடல்நிலை சரியில்லாமல்
போக கணிதத்தை கைகழுவி நாடு திரும்பினார்.

இவரின் கவிதைகளை
பார்த்து அரசு கெய்சரி ஹிந்த் எனும் பட்டத்தை தந்தது. கோகலேவின் அழைப்பை
ஏற்று விடுதலைப் போரில் பங்கு கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு
கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன் பட்டத்தை திரும்பத் தந்தார்.


கடந்த 1925-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். இந்திய பெண் ஒருவர்
காங்கிரசின் தலைவரானது அதுவே முதல் முறை. அவரை காந்தி இந்தியாவின்
கவிக்குயில் என அழைத்தார். நேரு இந்திய தேசியத்தின் உதயத்தாரகை என
புகழ்ந்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களில்
பங்குகொண்டு சிறை சென்றார். கவிதைகள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார்.
'கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர்
அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால்
தீப்பந்தத்துடன் அநீதியை அழிக்க அவன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட
முடியாது" எனச் சொன்னவர் அவர்.

இலையுதிர்கால கீதம்

இதயத்தில் இன்பம் தேங்குதலைப்போல
மேகங்களைப் பற்றித் தொங்கி ஆடுகிறது அஸ்தமனம்
பொற்புயல் போல மேகக்குஞ்சங்கள் மினுங்க,
உருகிய அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
மேகத்தை காற்று வன்மையாக உலுக்குகிறது
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் மென்குரலின் நாதம்
என் இதயம் கனவுகளால் களைப்பால்
கவலையால் தனிமையால் படபடத்து உதிர்கிறது
இலைகளாய் எதற்காகக் கடந்ததை
எண்ணித் துயருற வேண்டும் நான்?

- பூ.கொ.சரவணன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty Re: இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by mmani Tue May 14, 2013 6:33 am

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று இன் றைக்கும் நாம் பேசியும்,
எழுதியும் வருகிற சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் அதற் கொரு
வாழும் உதாரணமாக இருந்தவர் சரோஜினி நாயுடு.

பிறப்பால் சரோஜினி
நாயுடு அல்லர். அவரது தந்தையார் ஒரு வங்காளி பிராமணர். டாக்டர் அகோரநாத்
சட்டோபாத்தியாயா என்பது அவர் பெயர். பெரிய கல்வியாளர். வேதம், உபநிடதங்கள்,
ஆகமம் ஆகியவற்றில் முறையான படிப்பும், பயிற்சியும், தேர்ச்சியும்
கொண்டவர். தவிர விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர். மாணவர் சமூகத்துக்கு
ஏதாவது செய்வதே தன் லட்சியம் என்று மிக இளம் வயதிலேயே முடிவு செய்துகொண்டு
அதன்படியே அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை
நிறுவிய வர். ஆகவே சரோஜினியின் இளம் பருவம் முழுவதும் ஹைதரா பாத்திலேயே
கழிந்தது.

பெரிய குடும்பம். நான்கு பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள்,
அகோரநாத் துக்கு. வசதியான குடும்பம் என்பதால் சரோஜினிக்கு இளம் வயதுகள்
பிரச்சினை ஏதுமில்லாமலேயே கழிந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழ
மொழி சரோஜினி விஷயத்தில் பொய்யாகி விட்டது. பள்ளியில் எப்போதும் முதல்
மாணவியாகவே விளங்கினாள். படிப்பில் படு கெட்டி. அதேசமயம் அந்தச் சிறு
வயதிலேயே சரோஜினிக்குக் கவிதை எழுதும் ஆர்வமும் உண்டாகி விட்டது. தமது
கணக்கு வாத்தியாரைப் பற்றியெல்லாம் கவிதை எழுதி பள்ளியில் இயல்பாக ஒரு
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தாள் சரோஜினி.

கொஞ்ச நாள்தான் அவள்
ஹைதராபாத்தில் படித்தது. அவளது தந்தை, தன் மகள் சென்னைக் குப் போனால்
படிப்பில் மேலும் சிறக்கலாமே என்று நினைத்து, தனியாக ரயிலேற்றி அனுப்பி
விட்டார். பன்னிரெண் டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றி
கண்டவர் சரோ ஜினி. அதுவும் சாதாரண வெற்றி இல்லை. மாநிலத்திலேயே முதல்
மாணவி. ஆகவே மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவளது தந்தை.

1895-ம்
வருடம் லண்டன் போய்ச் சேர்ந்த சரோஜினி, அங்கே கிங்ஸ் கல்லூரியில் கணிதம்
படிக்கச் சேர்ந்தார். அது அவளது அப்பாவின் விருப்பம். ஆனால் சரோஜினிக்கு
அப்போது கணிதத்தைக்காட்டிலும் கவிதையில் தான் அதிக ஆர்வம் இருந்தது.
இங்கிலாந்தின் தட்ப வெப்பம், பசுமை, நளினமான வாழ்க்கை முறை இதெல்லாம்
அன்றைக்கு அவரது கவிதை ஆர்வத்தை மேலும், மேலும் தூண்டிய விஷயங்கள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty Re: இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by mmani Tue May 14, 2013 6:34 am

சும்மா
மானே, தேனே என்று எழுதிக் கொண்டிராமல் சரோஜினி உருப்படியான கவிதைகள்
எழுதியதைக் கண்ட சில ஆங்கில எழுத் தாளர்களும், கவிஞர்களும் சரோஜினியின்
கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரவும் உதவி செய்தார்கள்.
அவர்களுக்கெல் லாம் என்ன பிரமிப்பு என்றால், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்
கொள்ளாத ஒரு பெண், இப்படி இங்கிலீஷ கவிதைகளில் வெளுத்து வாங்குகிறாளே
என்பதுதான். ஆயிரம், ஆயிரத் தைந்நூறு வரிகளில் கூட அவரது சில கவிதைகள்
அமைந்திருந்தன. அதேசமயம் நறுக்குத் தெரித்த மாதிரி நாலு வரிகளிலும் அவரால்
தம் கருத்துக்களை வெளியிட முடிந்தது.

கவிதைப்புத்தகம் வெளியாகி,
நல்ல வரவேற்பும் பெற்ற பிறகு தொடர்ந்து தன்னால் கணக்குப் பாடங்களைப் படிக்க
முடியும் என்று சரோஜினிக்குத் தோன்றவில்லை. தோதாக அப்போது குளிர்காலம்
வந்துவிட, 1898-ல் சரோஜினிக்கு உடம்புக்கு முடியாமல் போய் விட்டது.
நோயுற்றதைக் காரணமாகச் சொல்லி விட்டு நேரே ஹைத ராபாத்துக்குக் கிளம்பி
வந்துவிட்டார். அப்போ கணக்கு? அவ்வளவு தான்!

சரோஜினியின் தந்தைக்கு
மகளின் விருப்பம் புரிந்தது. சரி, பெண் கவிதை எழுதிக் கொண்டு இருக்கட்டும்
என்று பெருந்தன்மையாக விட்டு விட்டார். ஆனால் சரோஜினி கவிதை எழுதிய நேரம்
போக மிச்ச நேரத்தில் கொஞ்சம் காதலும் செய்தார்.

ஹைதராபாத்தில்
அப்போது வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு
ஈர்ப்பு ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே
திருமணமாகி, மிக இளம் வய தில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு
டாக்டர்.

எப்படிப் பார்த்தாலும் சரோஜினிக்கு ஆசாரமான பிராமண குலத்
தாருக்கு இந்தக் காதல் கசமுசா ஒத்து வராது என்பது நிச்சயம். எத்தனை
டிஸ்குவாலிஃபிகேஷன்கள்! நாயுடு. ஏற்கனவே திருமணமான வர். பிரம்ம சமாஜத்தைச்
சேர்ந்தவர். அத்தகைய ஒருவரோடு காதல், ஹும். அதெல்லாம் முடியாது சும்மாகிட
என்று சொன்னார்கள் சரோஜினியின் குடும்பத்தினர்.

ஆனால் அன்றைய
தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த
சமூகப் பிரச்சினை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கண்டார் சரோஜினி. கேவலம்,
சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என்று பொங்கி எழுந்து விட்டார்.
அவரது அதிர்ஷடம், உற்றார், உறவினர்கள் என்ன சொன்ன போதும் அவரது தந்தை,
சரோஜினியின் விருப்பத்துக்குக் குறுக்கே நில்லாததால் அந்தப் புரட்சித்
திருமணம் வெற்றிகரமாக நடந்தேறி யது. பிரம்மசமாஜ முறைப்படி நடந்த திருமணம்
அது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty Re: இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by mmani Tue May 14, 2013 6:35 am

தேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணம் அது. சரோஜினிக்கு ஹைதராபாத்
நிஜாம் சமஸ்தானத் தில் வசித்துக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருப் பது கஷடமாக
இருந்தது. நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்க,
கணவரை யும் பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பம்பாய்க்கு
ரயிலேறி விட்டார். அவரது தந்தையைப் போலவே கணவரான கோவிந்தசாமி நாயுடுவும்
அவரை முழுவதும் புரிந்துகொள்ளக்கூடியவராக அமைந்தது மிகப்பெரிய விஷயம்.

தமது
எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் அவர் ஏராளமான மக்கள் மத்தியில்
சுதந்திரக் கனவை ஊதி வளர்த்துக் கொண்டிருந்தார். நம்மூரில் மகாகவி பாரதி
செய்த வேலையை அன்று அங்கே சரோஜினி செய்தார். பம்பாயில் இருந்த காலத்தில்
சரோஜினி தேவிக்கு குருவாக அமைந்தவர்கள் ரொம்பப் பெரிய ஆசாமிகள். பாலகங்காதர
திலகர், கோபாலகிருஷண கோகலே, முகம்மதலி ஜின்னா போன்ற காங்கிரஸ் இயக்கப்
பெருந் தலை வர்களின் நிழலில் அரசியல் பாடம் கற்றார் சரோஜினி. தோதாக
அன்னிபெசண்ட் அப் போதுதான் இந்தியா வந்து ஹோம்ரூல் இயக்கப் பணிகளில்
தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார். சரோஜினிக்கு ஒரு நல்ல சப்போர்ட் கிடைத்த
மாதிரி ஆகி விட்டது. தன்னைப் போல் இன்னொரு பெண்மணி!

காந்தியடிகள்
இந்தியா திரும்பியதும் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறை அதிகரித்து
விட்டதாகச் சொல்லி, மகாத்மாவை மீண்டும் தென்னாப்பிரிக்கா வரும்படி
அழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் அங்கே வந்தால் என்னென்ன செய்ய
முடியுமோ, அதையெல்லாம் சரோஜினி நாயுடு செய்வார் எஎன்று சொல்லி, தன் சார்பாக
சரோஜினியைத் தென் னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் மகாத்மா காந்தி.

சரோஜினி
நாயுடு தென்னாப்பிரிக்கா சென்றதும் முதலில் மாம்பஸா என்கிற இடத்தில் நடந்த
காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். கேட்போர் ரத்தம்
கொதிக்கும்படி அமைந்திருந்தது அவர் பேச்சு. ஆங்கில அரசின் அராஜகங்களை மிக
அழகான ஆங்கிலத்தில் அவர் அடுக்கடுக்காக எடுத்து வைத் ததைக் கேட்டு
அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளே அவரது ஆங் கிலப் புலமை கண்டு வியந்த தாகச்
சொல்லுவார்கள்.

தென்னாப் பிரிக்க இந்தி யர்களுக்கு சரோஜினி
நாயுடுவைத் திரும்ப அனுப்பவே மனமில்லை. ஆனாலும் அவருக்கு காந்தி வேறு பல
வேலைகளை வைத்துக்கொண்டு ரெடியாகக் காத்திருந்தார். காங்கிரசின் கொள்கை
பரப்புச் செயலாளர் பணியை சரோஜினி நாயுடு ஏற்று நடத்திய லாவகம் இன்று வரை
பேசப்படுகிற ஒரு விஷயம். தென் னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட
சுற்றுப் பயணங்கள், ஆற்றிய உரைகளெல்லாம் காங்கிரஸ் சரித்திரத்தில் மிக
முக்கியமான அத்தியாயங்கள். காங்கிரசின் செயற்குழு உறுப் பினராக, கொள்கை
பரப்புச் செயலாளராக, தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பில்
இருந்தாலும் சரோ ஜினியின் அர்ப்பணிப்பிலும், ஈடுபாட்டிலும், பணிகளிலும்
வித்தி யாசமே இருந்ததில்லை. தேசமும் கவிதையும் அவரது இரு கண் களாக இருந்தன.


தேசம் சுதந்திரமடைந்தபோது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்திய ஆட்சி
அமைந்தது. மாநில கவர்னர்களை நியமிக்கத் தொடங்கியபோது அன்றைக்கு மாபெரும்
மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) யாரை
கவர்னராக்கலாம் என்று பேச்சு வந்தது. சரோஜினி நாயுடுவின் பேரைத் தவிர வேறு
யார் பேரையும் யாராலும் அப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

அவர்
பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. நம்ப முடியாத அளவுக்கு சாதித்தவர்.
பெண் உரிமை பெண் சுதந்திரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் நயா பைசா
பிரயோஜனமில்லை. நமது சுதந்திரம் என்பது நம்மிடம்தான் இருக்கிறது. 1879
பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி நாயுடு, 1949 மார்ச் 2-ம் தேதி
காலமானார். நிறைவாழ்வுதான். ஆனால் வயதினால் மட்டுமல்ல
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty Re: இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by mmani Tue May 14, 2013 6:36 am











இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Images?q=tbn:ANd9GcQWFI1Z8R30Xhf136J6mLUe7ojYPg7kXjmCuWboqCbtHOJM5FJD
சரோஜினி நாயுடு என அழைக்கப்படும் சரோஜினி சட்டோ பத்யாயா "பாரதிய
கோகிலா'' (இந்தியாவின் நைட்டிங் கேல்) என் அழைக்கப்படுபவர். இவர்
ஒருபிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார்.





ஹைதாராபாத்தில் (ஆந்திரா) ஒரு வங்காளக் குடும்பத்தில் மூத்த மகளாக
சரோஜினி நாயுடு (பிப். 13, 1879) ஆண்டு பிறந்தார். இவரது தந்தை
விஞ்ஞானியாகவும் தத்துவ வியலாளராகவும், கல்வியாளராகவும் விளங்கிய அகோர்
நாத் சடோ பத்யாயா; தாய் பரத சுந்தரி.

தமது வெளிநாட்டுப் படிப்பு
முடிந்து தாயகம் திரும்பிய அகோரநாத், ஹைதராபாத் நிஜாம் மன்னர் ஆதரவுடன்
அங்கே ஒரு கல்லூரியைத் தொடங்கி அதன் முதல்வரானார். அக்கல்லூரி பின்னாளில்
நிஜாம் கல்லூரி ஆனது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், கல்வியறிவு பெற
வேண்டும், எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன்
மகளிர் கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.

சரோஜினியின் தாயார் வரதசுந்தரி, வங்காள மொழியில் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர், இனிய குரலில் பாடக்கூடியவர்.

சரோஜினிதேவி
பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கினார். சென்னைக்குச் சென்று
மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்ந்து பயின்று, தமது பன்னிரெண்டார் வயதில்
மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். சரோஜினிக்குத்
திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படிப்பு பாதிக்கப்பட்டது. அவரது தந்தை
தமது மகள் அறிவியலாளராக வேண்டுமென்று மிகவும் விரும்பினார். ஆனால்,
சரோஜினி கவிதை இலக்கியம் படைப்பதில் ஆர்வம் கொண்டார். கவிதைகள் எழுத
ஆரம்பித்தார். 'ஏரியின் அழகி' என்னும் தலைப்பில் 1300 அடிகள் கொண்ட முதல்
கவிதையை படைத்தார்.

ஹைதராபாத்தில் புகழ் பெற்று விளங்கிய டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடுவும், சரோஜினியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால்,
சரோஜினியின் தந்தை அதற்கு உடன்படவில்லை, எனவே ஹைதராபாத் நிஜாம்
ஆலோசனைப்படி சரோஜினியை இங்கிலாந்து நாட்டிற்கு மேல் படிப்பு படிக்க
அனுப்பிட முடிவு செய்தனர். லண்டன் நகருக்கு 1895-ஆம் ஆண்டு சென்றடைந்த
சரோஜினி, அங்குள்ள 'கிங்ஸ் கல்லூரி'யில் சேர்ந்து கணிதம் பயின்றார்.
பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். சரோஜினிக்கு,
பல்கலைக் கழக வகுப்பறைகளைவிட, இங்கிலாந்து நாட்டின் எழில் ததும்பி வழிந்த
மலைப் பகுதிகளும், கோதுமை வயல்வெளிகளும், பசுமை நிறைந்த தோட்டங்களும்,
கொட்டும் அருவிகளும், சலசலத்து ஓடும் ஆறுகளும், வானமும், பூமியும்,
பறவைகளும் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ஒவ்வொன்றையும் ரசித்த சரோஜினி,
கணிதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாடநோட்டுகளில் கவிதைகளை எழுதிக்
குவித்தார்.
இவரது ஆங்கிலக் கவிதைகளைப் படித்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட்
கோஸ் எனும் இரு ஆங்கில எழுத்தாளர்கள் வியந்தனர். மேலும், ஆங்கிலத்தைத்
தாய்மொழியாகக் கொள்ளாத ஓர் இந்தியப் பெண் கவிதை உத்தியிலும்,
சொல்லாட்சியிலும் வெகு சிறப்பாக ஆங்கிலக் கவிதை எழுதுகிறாளே என்று
பாராட்டியதுடன், சரோஜினியின் கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர
உதவினார்கள். அவரது கவிதைத் தொகுப்பு சரோஜினிக்கு இங்கிலாந்தில் ஏராளமான
ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

சரோஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
1898-ஆம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். சரோஜினியின் காதல்
திருமணத்திற்கு அவரது காதலரான டாக்டர் கோவிந்தராஜுலுவின் சாதியும் தடையாக
இருந்தது. சரோஜினியின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, 1898-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி
சரோஜினி – டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு திருமணம் எவ்வித சடங்களுமின்றி
நடைபெற்றது.

சரோஜினி நாயுடு அவர்கள் கவிதை துறைக்காக
பலபாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதை களில் அழகான
வார்த்தைகள்_இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும்முடியும். 1905 ம் ஆண்டு
அவரது முதல்பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்ற பெயரில்
வெளியிடபட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டன. தி பேர்ட் ஆஃப்
டைம் (1912) மற்றும் தி புரோக்கன் விங் (1917) பின்னர் அவரது தி விஸார்டு
மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
1961 ம் ஆண்டு அவரது மகள் பத்மஜா, வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை தி
ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

இவரது கவிதைத்
தொகுப்புகளில் , இந்திய நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு
முதலியவைகள் பற்றி ஏராளமாக குறிப்பிட்டுள்ளார். இவரது கவிதைகளில் வரும்
வருணனைகள், கருத்துக்கள், கவிதைநடை, கவிதை நயம், ஓசைநயம், கவிதை அழகு,
உவமைகள், உருவகங்கள் முதலியவற்றைக் கண்ட மகாத்மா காந்தி இவரை 'இந்திய
நைட்டிங்கேல்' என்னும் பட்டமளித்துப் பாராட்டினார்.

இங்கிலாந்து
நாட்டு அரசாங்கம் சரோஜினியின் கவிதைகளைப் பாராட்டி 'கெய்சரி ஹிந்த்'
என்னும் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. முதன் முதலில் இந்தப் பதக்கத்தைப்
பெற்ற ஆண் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், அவருக்குப்பிறகு சரோஜினி.

சுரோஜினியின்
உரைவீச்சு மிக அற்புதமானது. இவரது சொற்பொழிவுத் திறனைக் கண்டு வியந்த
மாபெரும் தேசியத் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலே 1902-ஆம் ஆண்டு அரசியலுக்குக்
கொண்டு வந்தார்.

"பொதுமக்களுக்கு எட்டாத தூரத்திலிருந்து கொண்டு
கருத்துக்களையும், கவிதைகளையும் எழுதுவதைவிட, கீழே இறங்கி வந்து தன்
தாய்நாட்டிற்குச் சேவை செய்வதே சிறந்தது" - என்று கூறி சரோவினியை அரசியலில்
ஈடுபடுத்தினார். அதனால் கோகலேயை அரசியலில் தமது முதல் குருவாகவும்,
மகாத்மா காந்தியைத் தமது அறிவுரையாளராகவும் ஏற்றுக்கொண்டார்.
சரோஜினி
இதியாவின் பல மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தேச விடுதலை,
பெண்ணுரிமை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை முதலியவைகள் குறித்து மக்களிடம்
விரிவாக பரப்புரை செய்தார்.

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Images?q=tbn:ANd9GcS49LgumNcKBZrqGqnnt08zr71ck0jo2Snk9iS0twJ1gwpEx0vMசரோஜினி
தமது எழுச்சி மிக்கக் கவிதைகள் மூலம் மக்களிடையே சுதந்திரக் கனலை
மூட்டினார். தமிழகத்தில் சுந்திர உணர்வையும், எழுச்சியையும் தமது
கவிதைகளில் ஏற்படுத்தி மகாகவி பாரதி செய்த மகத்தான பணியை அன்று அங்கே
சரோஜினி மேற்கொண்டார். பாலகங்காதர திலகர், முகமதலி ஜின்னா, அன்னிபெசன்ட்
அம்மையார் முதலிய அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்
சரோஜினி. ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மகாத்மாகாந்தி நடத்திய அத்தனை
போராட்டங்களிலும் கலந்து கொண்டார் சரோஜினி.

தென்னாப்பிரிக்காவில்
மகாத்மாகாந்தி செய்த வெற்றிகரமான செயல்களைப் பாராட்ட லண்டனிலிருந்த
இந்தியர்கள் 1914-ஆம் ஆண்டு கூட்டங்கள் நடத்தினார்கள். அக்கூட்டங்களில் சரோஜினி பங்கேற்று மகாத்மா காந்தியின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டிப் பேசினார்.


லக்னோவில், 1918-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற காங்கிரஸ்
கூட்டத்தில் சரோஜினியை ஜவகர்லால் நேரு முதன் முதலாகச் சந்தித்தார்.
சரோஜினியின் பேச்சில் கவரப்பட்ட நேரு, 'கல்லூரி நாட்களில் நான் கொண்ட
தெளிவற்ற எனது சோசலிசக் கொள்கைகள் சரோஜினியின் பேச்சின் பின்னணியில்
மூழ்கிவிட்டன' என்றார். மேலும், அவர் சரோஜினியை, 'இந்திய தேசியத்தின்
உதயதாரகை' என்று புகழ்ந்துரைத்தார்.
மகாத்மா காந்தியடிகள் உப்புச்
சத்தியாகிரகம் செய்தபோது தண்டிக்குச் சென்று உப்பு எடுத்தார். சரோஜினி,
காந்தியின் அறைகூவலின்படி, தர்சணா உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
முன்பு போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தர்ணா செய்தார். பின்னர்
சிறையில் அடைக்கப்பட்டார்.


சரோஜினி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, இளைஞர்கள் சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென அறைகூவல் விடுத்தார். அவரது உணர்வுப்
பூர்வமான உரை இளைஞர்களின் இதயங்களில் ஊடுருவிப் பதிந்தன. சரோஜினியின்
ஆவேசப் பேச்சு, இளைஞர்களை எரிமலையாக்குவதைக் கண்டு ஆங்கிலேயே அரசு அஞ்சி
நடுங்கியது.

"ஒரு கவிஞர் மென்மையான மனத்துடன் மக்கள் மத்தியில்
சமாதான கீதம் பாடுவதை விட்டு, நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் புரட்சியைத்
தூண்டுவது நியாயமே இல்லை" என்று ஆங்கிலேய அரசு குற்றம் சாட்டியது.

"கவிஞர்
என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர்
அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால்
தீப்பந்தத்துடன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது" - என்று
பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார் சரோஜினி.

ஜாலியன் வாலாபாக்
படுகொலையைக் கண்டித்து, சரோஜினி மிகுந்த கோபத்துடன், பஞ்சாபில் நடந்த
படுகொலைகளுக்கும், வெறிச்செயலுக்கும் அரசாங்கம் பரிகாரம்
தேடவில்லையென்றால், அரசாங்கம் எனக்குக் கொடுத்த 'கெய்சரி ஹிந்த்' பதக்கம்
தேவையில்லை என்று கடிதம் எழுதி, அத்துடன் பதக்கத்தையும் லண்டனுக்குத்
திருப்பி அனுப்பிவிட்டார். அதைத்தொடர்ந்து இந்தியர் பலரும் அரசாங்கம்
தங்களுக்குத் தந்திருந்த பட்டங்களையும், பதக்கங்களையும் பதவிகளையும்
உதறியெறிந்தார்கள்.

கான்பூரில் 1925-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், சரோஜினி இந்திய தேசிய காங்கிரசின் முதல்
பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடு சுதந்திரம் பெற்றவுடன்
உத்திரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றார். மார்ச் 2, 1949
அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தர். அவருக்கு பத்மஜா, ஜெயசூர்யா, ரந்தீர்
மற்றும் லீலாமணி என நான்கு குழந்தைகள் இருந்தன . பின்னர் அவரது மகள் பத்மஜா
மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.

நன்றி ; சந்தானம் UK
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday! Empty Re: இன்று - பிப்.13 : கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்!Today - Feb .13: Sarojini Naidu's birthday!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 18: திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.. பொதுவாழ்வில் தூய்மையாகவும், அப்பழுக்கற்ற தலைவராகவும் வாழ்ந்து காட்டிய திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று..
» புரூஸ் லீ பிறந்த தினம் இன்று!
» ஜி.யு.போப் நினைவு தினம் (பிப்-12) இன்று..!
» இந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட தினம் (பிப்.18-1911) இன்று..!
» தமிழுக்கு தொண்டாற்றிய அற்புதர் ராபர்ட் கால்டுவெலின் 200 வது பிறந்த தினம் ..The 200th birthday of Robert Caldwell tontarriya

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum