Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விஸ்வரூபத்தின் பின்னணி சினிமா அரசியல் இதுதானா?
Page 1 of 1
விஸ்வரூபத்தின் பின்னணி சினிமா அரசியல் இதுதானா?
[color=#800000“மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில்
எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன் உண்மையில்
மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும் காரணம் என்னவென்றால்
கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட மாத குழந்தைக்கு
இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம் கொடூரமான முறையில் கொலை செய்த
கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி
அல்ல மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது இவனது பெண்டாட்டியையோ,
மகனையோ மகளையோ அண்ணனையோ தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது
கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானா அல்லது கொலை
செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா என்பது இவனது
வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும்.[/color]
எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதாரத்தின்
அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று சொல்ல திராணியற்ற ஈனப்பிறவியான
மிருகபுத்திரனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்றும் அவனுக்கு எய்ட்ஸ் வருவதற்கு
காரணம் அவனது அம்மாதான் என்றும் பலபேருடைய தொடர்பினால் அவனது அம்மாவிற்கு
வந்த எய்ட்ஸ் நோய் அவனுக்கும் தொற்றிக்கொண்டது என்றும் இணையதளத்தில்
எழுதியிருந்தார்கள் அதை நாங்கள் அப்படியே நம்பவில்லை உனக்கு எய்ட்ஸ் உள்ளதா
என்பதை சோதித்துப்பார்த்த மருத்துவர்கள் சொன்னால்தான் அந்த மருத்துவ
அறிக்கை வந்தால்தான் நம்புவோம் இதுதான் சரியான நிலைப்பாடு அதுபோல்
ஆய்வு செய்தா இந்த முடிவை நீ எடுத்தாய் ”
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் இணையதளத்தில், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனை விமர்சித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள கட்டுரை குறித்து ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ ! என்ற கட்டுரையில் படித்துக் கொள்ளுங்கள்.
ஒரு குழந்தையைக்
கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒரு 17 வயது
பெண்ணுக்கு, கழுத்தை வெட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து
மனுஷ்யப் புத்திரன் எழுதியதற்காகத்தான் இப்படி ஒரு கட்டுரை.
இந்த
பின்னணியில்தான், கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள்
தெரிவித்து வரும் எதிர்ப்பைப் பார்க்க வேண்டும். விஸ்வரூபம் என்ற
திரைப்படம் கமலஹாசனின் கனவுத் திரைப்படம். ஏறக்குறைய 80 கோடி முதலீட்டில்
எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம், தன்னை ஹாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைக்க
வேண்டும் என்று எடுக்கப்பட்ட படம்.
கமலுக்கும்
சர்ச்சைகளுக்கும் நெருக்கமான உறவு உண்டு. கமல் தலையை சொறிந்தால் கூட,
கமலஹாசன் தலையைச் சொறியலாமா என்று விமர்சனம் எழும். வசூல் டாக்டர்
எம்பிபிஎஸ் என்று படத்தின் பெயர் வைக்கப்பட்டதற்கு, நீதிமன்றம் சென்று,
அந்தப் பெயரை மாற்றினார்கள். விருமாண்டி திரைப்படத்தின் முந்தைய பெயரான
சண்டியர் என்று பெயர் வைத்ததற்காக, திரைப்படத்தின் ஷுட்டிங் தொடங்கும் நாள்
அன்றே, இது தலித்துகளை மன்னிக்கவும், தேவேந்திர குல வேளாளர்களை (தலித்
என்றால் போனில் திட்டுவார்கள்) இழிவு படுத்துகிறது என்று கூறி,
தலித்துகளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, குடிசையில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஏழை மருத்துவர் கிருஷ்ணசாமி எழுப்பிய பிரச்சினை காரணமாக,
அந்தப் படத்தின் ஷுட்டிங் நடந்த தேனி மாவட்டத்துக்கு சென்று தகராறு
செய்தார். இதனால் கமல் அந்தப் படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றி,
ஷுட்டிங்கை அரங்குக்கள் எடுக்க வேண்டியதாயிற்று.
தன் திரைப்படங்களால் ஏற்படும் சர்ச்சைகளை தனது வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியசாலி கமல்ஹாசன்.
கலைஞானி, சிறந்த
நடிகர், இலக்கியவாதி, இயக்குநர் என்பதையெல்லாம் தாண்டி, கமல் ஒரு
வியாபாரி. திரைப்படத் துறையில் விளம்பரத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க
முடியாது. இரண்டு கோடி ரூபாய் செலவு செய்து, எப்எம், ஹோர்டிங்,
செய்தித்தாள், டிவி, இணையதளம் என்று செய்யும் விளம்பரத்தை, ஒரு
திரைப்படத்தினால் ஏற்படும் சர்ச்சை செலவில்லாமல் ஏற்படுத்தித் தரும். தன்
திரைப்படம் வெளியாகும் நேரத்தில், நான் அரசியலுக்கு வருவதைப் பற்றி, கடந்த
15 ஆண்டு காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் எப்போது என்பதை ஆண்டவன்
முடிவு செய்வார் என்று ரஜினி பேசுவதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.
தன் படத்தில் சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக, எல்லை மீறவும் கமல்
தயங்கமாட்டார் என்பது உண்மையே.
விஸ்வரூபம் குறித்து
சர்ச்சையை ஏற்படுத்தினால், அது தனது டிடிஎச் வியாபாரத்திற்கு மிகப்பெரிய
விளம்பரமாக அமையும் என்று கருதி கமல் வெளியிட்ட ட்ரெயிலர்தான் அவருக்கு
பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த ட்ரெயிலரில், இடம் பெற்றிருந்த
காட்சிகள், இஸ்லாமிய அமைப்பினருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்த
அமைப்புகள் கிளப்பிய பிரச்சினை இத்திரைப்படத்தை தடை செய்யும் அளவு
சென்றிருக்கிறது.
வழக்கம் போல, தன்
திரைப்படங்கள் குறித்து ஏற்படும் சர்ச்சையை வைத்து, தன் வியாபாரத்தை
அபிவிரித்தி செய்யும் உத்தியை கடைபிடித்து வந்த கமலுக்கு விஸ்வரூபத்தில்
அதே உத்தி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. டிடிஎச்சில் திரைப்படத்தை
முதலில் வெளியிடுவதில் ஏற்பட்ட தகராறு, அவரது உத்திக்கான தோல்வி. ஜனவரி
10 அன்று இத்திரைப்படம் டிடிஎச் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக
இருந்தது. ஜனவரி 11 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால்
திரைப்பட உரிமையாளர்கள் ஏற்படுத்திய சிக்கலால் இப்படத்தின் வெளியீடு ஜனவரி
25 என்று தள்ளிப் போனது.
ஜனவரி 25 அன்று
தியேட்டர்களில் முதலில் வெளியாகும் என்று முடிவான பின்னர், ஜனவரி 21 அன்று,
இஸ்லாமிய அமைப்புகளுக்கு இத்திரைப்படத்தைத் திரையிட்டுக் காண்பித்தார்
கமல். அதற்குப் பிறகு, ஜனவரி 23 அன்று உள்துறைச் செயலாளரிடம் இஸ்லாமிய
அமைப்புகள் புகார் தெரிவித்த பிறகு, ஜனவரி 23 அன்று மாலையே இத்திரைப்படத்தை
தடை செய்து உத்தரவிட்டார் சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜ்.
இஸ்லாமிய
அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இத்திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாகவே
காண்பித்ததே, கமலின் சர்ச்சையை ஏற்படுத்தும் உத்தி. தியேட்டர்
வெளியீட்டுக்கு முன்பாக, இஸ்லாமிய அமைப்புகளிடம் திரைப்படத்தை காண்பித்த
கமல், டிடிஎச் ரிலீசுக்கு முன்பாக அவ்வாறு திரையிடவில்லை என்பதை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அமைப்புகளை
பொருத்தவரை, உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்த அமைப்புகள் மட்டும் 24.
தலித் அமைப்புகள், மற்ற சாதி அமைப்புகளில் உள்ள மோதல், உட்கட்சிப் பூசல்,
போட்டி பொறாமைகள் போல, இஸ்லாமிய அமைப்புகளில் இவை அத்தனையும் உண்டு.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது முதல், தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து
செய்வது வரை, இந்த அமைப்புகள் எதற்கும் சளைத்ததில்லை. ரத்த தானம், இலவச
ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றை செய்யும் அதே நேரத்தில் கட்டப்பஞ்சாயத்து
செய்வதும் இருந்தே வருகிறது. காவல்துறையினர் துணையோடே இந்தக்
கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு
கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் உதவி
கிடைக்கிறது. இதற்கு காவல்துறையினர் உடந்தையா என்றால் இல்லை. இது போன்ற
கட்டப்பஞ்சாயத்துகளில் உதவி செய்வதன் மூலம், தேவையற்ற சட்டம் ஒழுங்கு
பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு, இந்த அமைப்பினர் உரிய நேரத்தில்
உதவுவார்கள் என்ற உறவுப் பிரச்சினை காரணமாகவே இது நடைபெறுகிறது.
இந்த
அமைப்புகளுக்குள் நடக்கும் கடும் போட்டி காரணமாக, யார் உண்மையான இஸ்லாமியத்
தலைவர், எந்த அமைப்பு சமுதாயத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது, எந்த
அமைப்பு இஸ்லாமிய மக்களின் மத்தியில் செல்வாக்காக இருக்கிறது, எந்த
அமைப்பின் பின்னால் முஸ்லீம் மக்கள் அணி திரள்வார்கள், என்பதில் இந்த
அமைப்புகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
அதனால் எப்போது எதை
வைத்து பிரச்சினையை உருவாக்கலாம் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள்.
யாராவது ஒருவர், கறிக்கடை பாயிடம், “என்ன பாய் எலும்பு நெறய்ய
போட்டுட்டீங்க” என்று உரத்த குரலில் பேசிவிட்டார் என்றால், இஸ்லாமிய
சமுதாயத்தை இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இழிவு படுத்தி விட்டார்
என்று பிரச்சினை செய்து, அதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடும்
அளவுக்கு, இந்த அமைப்புகளுக்குள் போட்டி நிலவுகிறது.
ஆனால் இது போல எந்த
அமைப்புகளோடும் சேராமல், தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருக்கும்
ஒரு முஸ்லீம் பிரிவு சென்னையிலேயே உள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக
இருக்கும். தாவூதி போரா என்று ஒரு முஸ்லீம் பிரிவு சென்னையில் உண்டு. இந்த
முஸ்லீம்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எந்த முஸ்லீம்
அமைப்புடனும் சேர மாட்டார்கள். பெண் கொடுப்பது, பெண் எடுப்பது எல்லாமே இந்த
போரா முஸ்லீம் வகைக்குள்தான். இவர்கள் சென்னையில் பாரிமுனைப் பகுதியில்
மட்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த
முஸ்லீம்கள், நரேந்திர மோடிக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள் என்பது
ஆச்சர்யமான செய்தி.
முஸ்லீம்
அமைப்புகளுக்குள் இருக்கும் இத்தனை போட்டி மனப்பான்மையும் கடந்து,
விஸ்வரூபம் விவகாரத்தில் எப்படி ஒற்றுமையாக சேர்ந்து செயல்படுகிறார்கள்
என்பது புதிராக இருக்கும். இதற்கு இதன் பின்னணியில் நடந்த விவகாரங்களை
பார்க்க வேண்டும்.
அதிமுக அரசு
பதவியேற்ற பிறகு, தூங்கி வழிந்து கொண்டிருந்த ஜெயா டிவி
சுறுசுறுப்படைந்தது. சுறுசுறுப்படைந்தது என்றவுடன், பரபரப்பாக செய்தி
போடுகிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். வழக்கமாக சினிமா தொடர்பான
நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரைப்படங்களை கேடி சகோதரர்கள் அல்லது, கலைஞர்
டிவிக்கு விற்றுக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள், தங்கள் திரைப்படங்களை ஜெயா
டிவிக்கு விற்றால் அம்மாவின் அருளாசியைப் பெறலாம் என்று தவம் கிடந்தனர்.
ஜெயா டிவியின் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக கவனித்து வந்தவர்,
டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா. சசிகலா மற்றும் மன்னார்குடி மாபியா
உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். மன்னார்குடி மாபியா உறுப்பினர்கள்
வெளியேற்றப்பட்ட பிறகு, ஜெயா டிவியின் மொத்த பொறுப்பையும் கவனிக்கும்
பொறுப்பு, ஜெயா டிவியின் செய்திப் பிரிவு துணைத் தலைவராக இருந்த சுனில்
வசம் வந்தது. ஜெயலலிதாவுக்கு வேறு யாரையும் நம்ப வழியில்லாததால், ஜெயா
டிவியின் மொத்த நிர்வாகத்தையும் சுனிலிடம் வழங்கினார்.
கே.பி.சுனில்
இல்லஸ்ட்ரேட்டட்
வீக்லியின் தென்னிந்திய செய்தியாளராக இருந்தவர். இந்த சுனில் யாரென்றால்,
டெலி ஜும் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பவர். இந்த
டெலி ஜும் என்ற நிறுவனம்தான் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ஜாக்பாட்
நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஜெயா டிவியின் அரங்கம், ஜெயா டிவியின்
கேமராமேன்கள், ஜெயா டிவியின் எடிட்டர்கள், ஜெயா டிவியின் ஒலி நிபுணர்கள்
என்று ஜெயா டிவியின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, ஒரு
நிகழ்ச்சியை தயாரித்து, அதை ஜெயா டிவிக்கே கடந்த 10 ஆண்டுகளாக விற்று
வருபவர்தான் சுனில். ஜெயலலிதாவை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
இவரைப்போன்ற நபர்களை நம்பி இருக்க வேண்டிய தனிமையில் இருக்கிறார்.
புதிய திரைப்படங்கள்
வாங்குவதற்கான பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் சுனில்
வசம் வருகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்களோடு சுனில் பேச்சுவார்த்தை
நடத்தி ஜெயா டிவிக்கு படம் வாங்குவதற்கு அவருக்கு உதவியாக உள்ளே
நுழைந்தவர்கள் யார் தெரியுமா ? தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும்…. வேறு
யாரும் அல்ல… கேடி சகோதரர்களின் கைத்தடிகளாக இருந்த சக்சேனா மற்றும்
அய்யப்பன். சக்சேனாவும் அய்யப்பனும், கேடி சகோதரர்களிடமிருந்த அவர்கள்
விசுவாசத்தை இடம் மாற்றி விட்டார்கள் என்று பலரும் தப்பாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்றைக்குமே கேடி சகோதரர்களுக்குத்தான்
விசுவாசமாக இருப்பார்கள்.
இந்த இருவருடனும்
சென்னையில் உள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு நடைபெறுகிறது.
டீல் என்னவென்றால், ஒரு திரைப்படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குவது.
உதாரணமாக ஒரு படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்ப ஒன்றரை கோடியைத் தயாரிப்பாளர்
கேட்டால், இரண்டு கோடிக்கு வாங்கியதாக ஜெயா டிவிக்கு கணக்கு எழுதுவது.
ஒன்றரை கோடி பணத்தைக் கொடுத்து, படத்தை வாங்கி விட்டு, ஜெயா டிவி கணக்கில்
இரண்டு கோடி செலவு வைத்து, 50 லட்சத்தை சுனில், சக்சேனா மற்றும் அய்யப்பன்
பங்கு போட்டுக் கொள்வது. இதுதான் டீல். சரி… சென்னை மாநகர காவல்துறையால்
கைது செய்யப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட சக்சேனாவுக்கு சுனில் எதற்காக உதவ
வேண்டும் ? பணம் மட்டும் காரணமா என்றால் இல்லை. சக்சேனாவை ஜெயலலிதாவின்
நற்பார்வைக்கு மாற்றி, அவர் மீதான வழக்குகளை ஊற்றி மூடுவதற்கு கை மாறாக,
கே.பி.சுனிலின் மகனை ஹீரோவாகப் போட்டு, சக்சேனா திரைப்படம் தயாரிக்க
வேண்டும். அப்படி ஒரு ஏற்பாட்டின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும்
திரைப்படம்தான் “சண்டப்படம்” இத்திரைப்படத்தில் சுனிலின் மகன்தான் ஹீரோ.
கே.பி.சுனிலின் மகன்
ஆனால் சுனிலுக்கே தெரியாமல், சக்சேனாவும் அய்யப்பனும் கேடி
சகோதரர்களுக்காக தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். முக்கியமான படங்களை
ஜெயா டிவி வாங்கி விட்டால், சன் டிவி போணியாகாது என்பதால், கேடி
சகோதரர்களுக்கு விசுவாசமாக வேலை செய்தார்கள் சக்சேனாவும், அய்யப்பனும்.
எப்படியென்றால், ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர், ஜெயா டிவியில்
ஒளிபரப்புவதற்கு மூன்று கோடி ரூபாய் கேட்கிறார் என்றால், அந்தப் படத்தை ஒரு
கோடிக்கு கேட்பது. தயாரிப்பாளர் அதிர்ந்து போவார். ஒரு கோடிக்கெல்லாம்
தர முடியாது என்பார். ஒரு கோடிக்கு கொடுத்தால் கொடுங்கள், இல்லையென்றால்
முடியாது என்பார் சக்சேனா. வேறு வழியில்லாத தயாரிப்பாளர் நேராக சன்
டிவிக்கு செல்வார். மூன்று கோடி படத்தை அவர்கள் ஒன்றரை கோடிக்கு
கேட்பார்கள். ஒரு கோடிக்கு ஒன்றரை கோடி பரவாயில்லை என்று, வேறு
வழியில்லாமல் தயாரிப்பாளர் விற்றுத் தொலைப்பார். இப்படி, இன்றும் கேடி
சகோதரர்களுக்காகவே உள்குத்து வேலையில் ஈடுபட்ட வருபவர்கள்தான் அய்யபனும்,
சக்சேனாவும்.
இப்படி இருந்த சக்சேனாவையும் அய்யப்பனையும்
இப்படி ஆக்கினார் சுனில்
இப்படி நாளொரு
மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, கே.பி.சுனிலின் தாண்டவங்கள் அரங்கேறி
வந்தபோதுதான், விஸ்வரூபத்தின் ஒளிபரப்பு உரிமை குறித்து பேசப்படுகிறது.
இந்த உரிமை குறித்த பேச்சு, முதன் முதலாக, கமல்ஹாசன் ஜெயலலிதாவை
சந்தித்தபோது நடைபெறுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் சிறப்பாக
வந்திருக்கிறது என்று கமல்ஹாசன் சொன்னபோது, ஜெயலலிதா கேஷுவலாக படத்தின்
ஒளிபரப்பு உரிமையை நம்ம சேனலுக்கே கொடுத்திடுங்களேன்.. இது சம்பந்தமா
சுனில் கிட்ட பேசுங்க என்று சொன்னதாக தெரிகிறது.
இது குறித்து
கமலிடம் பேசிய சுனில், வழக்கம் போல அடிமாட்டு விலைக்கு படத்தைக் கேட்டதாகத்
தெரிகிறது. நாசூக்காக அதைத் தவிர்த்த கமல், விஜய் டிவிக்கு அப்படத்தின்
உரிமையை உரிய விலைக்கு விற்றிருக்கிறார். இதையடுத்து, தன்னிடம் முதல்வர்
ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எங்கே கோபமாகிவிடப் போகிறாரோ என்று
நினைத்த சுனில், எவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்றாலும், கமல் விஸ்வரூபத்தை
விற்க மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா கடுமையான
கோபமடைந்திருந்த நேரத்தில்தான், ப.சிதம்பரத்தைப் பற்றிய புத்தக வெளியீட்டு
விழா நடைபெறுகிறது. ஒரு விழாவில் பேசுகிறோம் என்ற அடிப்படையில், உயர்வு
நவிற்சியில், கமல்ஹாசன் “வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம் வரும்
சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று பேசுகிறார். கமல்ஹாசன்
இப்படிப் பேசியதோடு போயிருந்தால் விஷயம் முடிந்திருக்கும். அடுத்து
மைக்கைப் பிடித்த தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், “ வேட்டி கட்டிய தமிழன்
ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர்.
அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை
அளித்துள்ளீர்கள்!'' என்று பேசினார்.
“அம்மாதான்
இந்தியாவுக்கே வழிகாட்டி… அம்மாவின் ஆளுகையில் ஒட்டு மொத்த இந்தியாவும்
வரும் நாள் தொலைவில் இல்லை. அம்மா சென்றால் டெல்லியே நடுங்கும், அம்மா
டெர்ரர்,” என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து பேசி வருவதை அப்படியே உண்மை
என்று நம்பிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…. “அதுவும்
என்னா ஒரு நக்கலு…. சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் விடை
அளித்துள்ளீர்கள்” இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்….
ஒரு தலைமைத் தேர்தல்
ஆணையரையே ஓட ஓட விரட்டியவர், சொல்பேச்சைக் கேட்காத ஐஏஎஸ் அதிகாரி மீது
ஆசிட் வீசியதை ரசித்தவர், வயதில் மூத்தவர்களை காலில் விழச்செய்து கண்டு
இன்புறுபவர். இப்படிப்பட்டவரிடம் ஒரு சாதாரண திரைப்பட நடிகர் முரண்டு
பிடித்தால் என்ன ஆகும்…. ? விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்டதுதான் ஆகும்.
2014 தேர்தலை மனதில்
வைத்து இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்று ஜெயலலிதா இப்படிச்
செய்கிறார் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஜெயலலிதா இப்படியெல்லாம்
தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பவரா என்ன ? இப்படியெல்லாம் தெளிவாகச்
சிந்தித்தால் ஜெயலலிதா நல்ல அரசியல்வாதியாகி விடுவாரே…. 1991ம் ஆண்டு
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கரசேவையை ஆதரித்துப் பேசியவர்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை வெட்டிப்
படுகொலை செய்த நரேந்திர மோடியோடு இன்றும் நட்புப் பாராட்டுபவர். இந்து
சனாதன தர்மங்களைத் தூக்கிப் பிடிப்பவர். இந்த ஜெயலலிதாவுக்கா
சிறுபான்மையினரின் உணர்வு குறித்த அக்கறை ? உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு
இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருந்தால், 10 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள்
சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளன்று விடுவித்திருக்க வேண்டும். கோவை குண்டு
வெடிப்பு வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்று, தன் இரு சிறுநீரகங்களும்
செயலிழந்த நிலையில் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் அபுதாகிர் என்ற
கைதியை, தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சொல்லி
நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்தபோதும், அந்த உத்தரவை அமல்படுத்தாமல்
இருப்பவர்தான் ஜெயலலிதா. இவருக்கா சிறுபான்மையினர் மீது அக்கறை…. ?
ஜெயலலிதா இந்தப்
படத்தை தடை செய்திருப்பது, முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்காக
மட்டுமே. இதே திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி
வாங்கியிருந்தால், இப்படி நடந்திருக்குமா என்ன ?
சரி.. இஸ்லாமிய
அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்க்கின்றன. நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள்
என்ன செய்ய வேண்டும்… ? என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் ?
இஸ்லாமிய
அமைப்புகளின் இந்த நிலைப்பாட்டை முழு மனதோடு, முழு மூச்சோடு, கடுமையாக
எதிர்த்து முறியடிக்க வேண்டும். இது ஒரு அப்பட்டமான பாசிசம். இன்று இதை
நாம் அனுமதித்தால் எதைப்பற்றித் திரைப்படம் எடுத்தாலும் இந்த மத
அடிப்படைவாதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உருவாகும். எந்த
விஷயமானாலும், கடவுள் உட்பட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.
தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் உலகம் இருந்தபோது, விவிலியத்திற்கு எதிராகப்
பேசுபவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலிலும், உலகம் உருண்டை என்று
ஒருவன் உரத்துச் சொன்னான். முதலில் வானத்தைப் படைத்தார், பின்பு பூமியைப்
படைத்தார், பின்பு வெளிச்சத்தை படைத்தார் பின்பு பகலென்றும், இரவென்றும்
பிரித்து வைத்தார். பிறகு தன் விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை உருவி,
ஏவாளைப் படைத்தார் என்று கூசாமல் புளுகியதை, இது பொய், என்று Origin of
Species என்று ஆராய்ச்சி நூல் எழுதினான் ஒருவன். ஆகையால் இஸ்லாமிய மதமும்
விமர்சனத்திற்கு உட்பட்டதே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கமல்ஹாசன் எல்லா
இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறார், இதனால் இந்தப்
படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள்,
ஒரு இந்து ஆயுத வியாபாரி ஒருவனோடு கூட்டு சேர்ந்து நாசவேலைகளில்
ஈடுபடுகிறார்கள் என்று சித்தரித்து கமல்ஹாசன் விஷமத்தனமாக எடுத்த படம்,
உன்னைப் போல் ஒருவன். அதன் இந்தி மூலத்தில் இல்லாத விஷமத்தனங்களை கமல்
தமிழில் செய்திருந்தார். ஆனால் அந்தப் படம் குறித்து எந்த இஸ்லாமிய
அமைப்பும் வாய்த் திறக்கவில்லை.
விஸ்வரூபத்தைப்
பொறுத்தவரை, அது தாலிபான் தீவிரவாதிகளைப் பற்றிய திரைப்படம் என்று
தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின்
கூட்டாளிகள், இந்தியாவிலும் இருப்பதாகவும், அவர்களைக் கண்டுபிடித்து கமல்
அழிப்பதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கமலின் சிறப்புத்
திரையிடலில் திரைப்படம் பார்த்து விட்டு வந்த தோழர் ஒருவரிடம் உங்களுக்கு
அந்த படத்தில் என்ன பிரச்சினை என்று கேட்டபோது, “தொழுகை நடத்தி விட்டு
சென்று ஒருவன் குண்டு வைக்கிறான். குண்டு வைத்து விட்டு, மீண்டும் தொழுகை
நடத்துகிறான். இது தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை அவமதிக்கிறது” என்றார்.
தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் என்ன நாத்தீகர்களா ? மத
நம்பிக்கை இல்லாமல் புரட்சி பேசுபவர்களா…. ? மனித வெடிகுண்டாக மாறி குண்டு
வைக்கும் ஒரு இஸ்லாமியன், கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டுதானே குண்டு
வைக்கிறான் ? சாகும் முன்பு, அல்லாஹூ அக்பர் என்றுதானே கூறுகிறான் ?
தாலிபான்கள் வெளியிடும் வீடியோக்களில், கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டுதானே
கொலை செய்கிறார்கள்…. ? பிறகு குண்டு வைப்பவன் தொழுகை நடத்துவதைக்
காட்டாமல், நாத்தீகம் பேசுகிறான் என்றா காட்ட முடியும் ?
இந்தியாவில்
அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் காட்டுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறது என்கிறார். இந்தியாவில்
இது வரை வெடித்த அத்தனை குண்டுகளும், இந்தியாவில் உள்ள எந்த முஸ்லீமின்
உதவியும் இல்லாமல் நடத்தப்பட்டதா ? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் ?
மனிதநேயம் கொண்ட
கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கும் இதே இடத்தில், மூளைச்சலவை
செய்யப்பட்ட ஒரு சில தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான,
கசக்கும் உண்மை. இள வயதில், மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, தவறான பாதையில்
போகும் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உங்கள் கடமை மட்டுமல்ல,
அது நமது கடமை. அதை விடுத்து, இந்தியாவில் தீவிரவாதமே கிடையாது என்று
பேசுவது, நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புகுத்திக் கொள்வது
போன்றது…. அல்லது விஷமத்தனமானது.
பாப்ரி மசூதி என்று
இடிக்கப்பட்டதோ, அன்றே இச்சமுதாயம் இஸ்லாமியர்களாகவும், இந்துக்களாகவும் மத
அடிப்படையில் பிளவுபட்டு விட்டது. இந்தியாவெங்கும் முஸ்லீம்
குடியிருப்புப் பகுதிகளும், இந்துக் குடியிருப்புப் பகுதிகளும் தனித்தனியே
உள்ளன. இந்த பிளவை சரிசெய்யவும், மீண்டும் இச்சமுதாயத்தில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தவுமே, மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் தொடர்ந்து முயற்சி
செய்து வருகின்றனர். அந்த முயற்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையே,
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் எழுப்பும் எதிர்ப்பு.
இந்து
சனாதனவாதிகளும், வலதுசாரி வெறியர்களும் மட்டுமே எல்லா இஸ்லாமியர்களும்
தீவிரவாதிகள் என்று விஷம் கக்குவார்கள். ஆனால், சாதாரணமாக நமது அன்றாட
வாழ்வில் சந்திக்கும் நபர்கள், எல்லா இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக
ஒருபோதும் பார்க்க மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் போன்ற
திரைப்படங்களுக்கு இஸ்லாமியர்கள் காட்டும் எதிர்ப்பே, மற்றவர்களிடமிருந்து
அவர்களை அந்நியப்படுத்தும். சாதாரண மக்களுக்கு, இந்துத்துவா குறித்தும்
கவலையில்லை, இஸ்லாத் குறித்தும் கவலையில்லை. நல்ல திரைப்படத்தை பார்த்து
ரசித்து விட்டு, “அருமையா எடுத்துருக்கான் அல்லது, சரியான மொக்கைப்பா”
என்று ஒரே வார்த்தையில் விமர்சித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச்
செல்லும் மக்களே இங்கு பெரும்பான்மையினர். இந்த மக்கள்
பெரும்பான்மையினராக இருப்பதால்தான், மார்க்கெட்டுகளிலும், மக்கள் கூடும்
இடங்களிலும் வெடிகுண்டு வைத்து, பெண்களையும், குழந்தைகளையும் கொல்லும்
நபர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும், சமூக அமைதி சற்றும் கெடாமல் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
குண்டு ஏன்
வெடிக்கிறது…. குஜராத்தில் என்ன நடந்தது தெரியுமா ? கோவையில் காவலர்
செல்வராஜ் கொலைக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா ? என்ற வாதங்கள்
அயோக்கியத்தனமானவை. ஒரு சராசரி குடிமகனுக்கு, குஜராத்தில் என்ன நடந்தது
என்பது பற்றி அக்கறையில்லை. அவன் கண் முன்னால், நடக்கும் குண்டு வெடிப்பு
பற்றி மட்டுமே கவலை. அதனால்தான், ஒருவன் குண்டு வைத்தால், பத்து
அப்பாவிகளைக் கைது செய்து, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தால் கூட,
“இருக்கட்டுமே… என்ன இப்போ” என்று அக்கறையில்லாமல் பேசுகிறான். அப்படி
அக்கறையில்லாமல் பேசுபவனிடம், அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் இருக்கிறார்கள்,
வருடக்கணக்கில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள், தண்டனை பெற்று
பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள், அவர்களின் மனித உரிமைகளுக்காக
குரல் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் குரல் கொடுத்து
வருகிறார்கள். அத்தகைய நடுநிலையாளர்களை விலகிச் செல்லும் வேலையைத்தான்
இஸ்லாமிய அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன.
எதற்காக அரசோடு
சண்டையிட வேண்டுமோ, அதற்காக இந்த அமைப்புகள் சண்டையிடாமல் சமரசம் செய்து
கொண்டு, ஜெயலலிதா மற்றும் காவல்துறையின் சதிக்குப் பலியாகி, விஸ்வரூபத்தை
எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
கடந்த சட்டமன்றக்
கூட்டத்தொடரின் போது, மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர்
ஜவாஹிருல்லா சட்டசபைக்குச் சென்றபோது அவர் கார் பழுதடைந்துள்ளது. அதனால்
அவர் நடந்து சட்டசபைக் கூட்டத்தொடருக்குச் சென்றபோது, அவரை ஒரு
இன்ஸ்பெக்டர் வழி மறித்து பொதுமக்கள் வரிசையில் வருவது போல வரச்
சொல்லியிருக்கிறார். ஜவாஹிருல்லா, நான் ஒரு எம்.எல்.ஏ என்று சொல்லியும்,
போய்யா என்று சொல்லியிருக்கிறார். கூட்டத்தொடருக்கு தாமதமாகி விட்டது
என்று பேராசிரியர் நடக்க எத்தனிக்கையில், அவர் நெஞ்சில் கை வைத்து
தள்ளியிருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். அவர் மீது பேராசிரியர் அளித்த
புகாரை, வாபஸ் பெறச் சொல்லி, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்
பிறகு, அந்தப் புகாரை வலியுறுத்தவில்லை ஜவாகிருல்லா….
பேராசிரியர் ஜவாஹிருல்லா
ஒரு எம்.எல்.ஏ என்று
சொல்லியும் தன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட்
செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி போராட்டம் நடத்தியிருக்க
வேண்டுமா வேண்டமா ? அங்கே சமரசம் செய்து கொண்டு விட்டு, விஸ்வரூபத்துக்கு
எதிராக போராட்டம்.
இவர்கள்
பரவாயில்லை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் மிக மிக சிறப்பான மனிதப் பண்போடு
மனுஷ்ய புத்திரனை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கும் அமைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை
திருவல்லிக்கேணி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கைது செய்வதற்காக இரவு
நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்று, தகாத முறையில் நடந்து
கொண்டுள்ளனர். பெண்களிடம், மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதைக்
கண்டித்து, இந்த அமைப்பினர் கடந்த மாதம் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தை
முற்றுகையிட்டனர்.
அந்த முற்றுகைப்
போராட்டத்தின் போது கலந்து கொண்ட பெண்கள் உள்ளித்த அனைவரும் கைதாக தயாராக
இருந்தனர். அமைதியான முறையில், சற்றும் வன்முறைக்கு இடம் கொடுக்காத
வகையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது, பவனீஸ்வரி என்ற ஒரு
முட்டாள் காவல்துறை துணை ஆணையர் உத்தரவால் கடுமையாக தடியடி நடத்தியது
காவல்துறை. அப்போது அந்த இடத்தில் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற
உதவி ஆணையர் தன் தடியை தாறுமாறாக சுழற்றியதால் மூன்று பேருக்கு எலும்பு
முறிவு ஏற்பட்டது.
இந்த தடியடிக்கு
காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு
முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு.
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் போராட்டத்தைக் கைவிடும்படி
கேட்டுக் கொண்டதால், தேவையற்ற முறையில் தடியடி நடத்திய அந்த துணை ஆணையரையோ,
இணை ஆணையரையோ இட மாறுதல் கூட செய்யாத நிலையில் தன் போராட்டத்தைக் கைவிட்ட
அமைப்புதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒரு
துரும்பைக் கூட கிள்ளிப்போட துப்பில்லாத தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான்
விஸ்வரூபம் படத்தை ஓட விடமாட்டோம் என்று இறுமாப்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: விஸ்வரூபத்தின் பின்னணி சினிமா அரசியல் இதுதானா?
இஸ்லாமில்
மது அருந்துவது பாவம். அதைத் தடை செய்ய போராட்டம் நடத்துங்கள்,
கோர்ட்டுக்குப் போங்கள். டாஸ்மாக் கடைகளின் மீது கல்லெறியுங்கள். அதற்கு
அனைத்து தரப்பு பொதுமக்களும் உங்களுக்கு ஆதரவு தருவார்களே...
சிந்திப்பார்களா இஸ்லாமிய சகோதரர்கள்...?
மது அருந்துவது பாவம். அதைத் தடை செய்ய போராட்டம் நடத்துங்கள்,
கோர்ட்டுக்குப் போங்கள். டாஸ்மாக் கடைகளின் மீது கல்லெறியுங்கள். அதற்கு
அனைத்து தரப்பு பொதுமக்களும் உங்களுக்கு ஆதரவு தருவார்களே...
சிந்திப்பார்களா இஸ்லாமிய சகோதரர்கள்...?
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி
» சினிமா ஏரியாவில் அரசியல் -கனிமொழி, அழகிரி வருகை!
» தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? விஸ்வரூபத்தின் விளையாட்டு !
» சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா ?
» இலங்கையும் இந்தியாவும் சொல்லும் சிவில் நிர்வாகம் இதுதானா?
» சினிமா ஏரியாவில் அரசியல் -கனிமொழி, அழகிரி வருகை!
» தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? விஸ்வரூபத்தின் விளையாட்டு !
» சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா ?
» இலங்கையும் இந்தியாவும் சொல்லும் சிவில் நிர்வாகம் இதுதானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum