TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எல்லோருக்கும் சோறுபோடுமா இயற்கை விவசாயம்? -சங்கீதா ஸ்ரீராம்

Go down

எல்லோருக்கும் சோறுபோடுமா இயற்கை விவசாயம்? -சங்கீதா ஸ்ரீராம் Empty எல்லோருக்கும் சோறுபோடுமா இயற்கை விவசாயம்? -சங்கீதா ஸ்ரீராம்

Post by Tamil Sat Jan 26, 2013 8:00 am

எல்லோருக்கும் சோறுபோடுமா இயற்கை விவசாயம்?
-சங்கீதா ஸ்ரீராம்

பாழாய்ப்போன விளைநிலங்களுக்கு வளத்தை ஊட்டப் பல்லாயிரம் டன் கணக்கில் தழை
உரமும் மாட்டுச் சாணமும் தேவைப்படுமே! அத்தனை தழைப் பொருளுக்கு எங்கேபோவது?


‘குப்பை’ என்று கருதி வைக்கோலையும் மற்ற தழைப் பொருட்களையும் எரிக்கும்
பழக்கத்தை நிறுத்துவது முதல் படி. அருகிலுள்ள குளம், குட்டைகளில்
பூதாகரமாகப் பரவி வளர்ந்துவரும் வெங்காயத் தாமரை, நெய்வேலிக் காட்டா மணக்கு
போன்ற தாவரங்களை நிலங்களில் கொண்டுவந்து குவித்து மாட்டுச் சாணக் கரைசலைத்
தெளித்தால், மக்கி எருவாகும். நீர்நிலைகள் கோடைக் காலங்களில் வற்றும்போது
படுகைகளிலிருந்து வளமான வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தலாம். மான் காது,
கருவேலம் போன்ற வேகமாக வளரக்கூடிய மரங்கள், காடுகளாய் வளர்ந்து நிற்கும்
வேலிக்காத்தான் கிளைகள் ஆகியவற்றை நிலங்களுக்குக் கொண்டுவந்து, கரையான்களை
வளர்த்துப் பொடியாக்கி அல்லது மண்ணில் புதைத்துத் தழைப் பொருளைச்
செலவில்லாமல் கூட்டலாம். சணப்பு, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரத்
தாவரங்களையும் பல தானியங்களைச் சேர்த்தும் மண்ணில் வளர்த்து, மடக்கி உழுது
ஊட்டம் சேர்க்கலாம். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், குணபசலம், மீன் அமிலம்,
அமிர்தக் கரைசல் போன்ற தாவர, மாமிசக் கரைசல்களை உபயோகித்து நுண்ணுயிர்களை
உடனடியாகப் பெருக்கி மண்ணில் செயலற்றுக் கிடக்கும் பிரம்மாண்டமான உயிர்
உரத் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கிவைக்கலாம். உயர்த்தப்பட்ட படுகைகள்
மற்றும் சுழல் தோட்டம் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கிய
எருவையும் தண்ணீரையும் அடர்த்தியாகப் பயன்படுத்திச் சேமித்து நல்ல
விளைச்சலைப் பெறலாம். ஏக்கர் நிலத்துக்கு, ஒரு மாட்டின் சாணத்தைக்கொண்டு
கரைசல்களைத் தயாரித்து நிலத்தை வளமாக்கலாம் என்று
செய்துகாண்பித்திருக்கிறார்கள்.
ஏன், மாட்டுச் சாணமே இல்லாமல் புளித்த மோர், பலன் தரும் நுண்ணியிரிகள் (EM
- Effective Microorganisms) போன்றவற்றை மட்டுமே வைத்தும்கூட மேல்மண்ணை
வளமாக்க முடியும். இவையனைத்தையும் சிரத்தையாகச் செய்தால் வெற்றி நிச்சயம்!

தனிப்பட்ட பண்ணைகளில் இத்தகைய உத்திகளைக் கடைப் பிடிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த கிராமங்களில் இதைச் செய்ய முடியுமா?

ஆந்திரப் பிரதேசம் பலத்த குரலில் ‘முடியும்!’ என்று பதிலளிக்கிறது.
ஹைதராபாத்திலிருந்து 80 கி.மீ. வடக்கே உள்ள எனாபாவி என்னும் கிராமம்
மொத்தம் 182 ஏக்கர் விளைநிலத்தையும் 51 குடும்பங்களையும் கொண்டது. ரசாயன
இடுபொருட்களை வாங்கிக் கட்டுப்படியாகாமல் விவசாயிக்கு ஏகப்பட்ட கடன்,
ஆரோக்கியக் குலைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இந்தியாவின் எல்லாக்
கிராமங்களையும் போலவே எனாபாவியும் பசுமைப் புரட்சியின் மாயச் சுழலில்
சிக்கித் தவித்தது. ஓரிரு விவசாயிகளிலிருந்து தொடங்கி 2006க்குள் மொத்த
ஊரும் ரசாயனங்களைத் தூக்கி எறிந்தது. இதற்குத் துணைபுரிந்த Centre for
Sustainable Agriculture (CSA) எனும் தொண்டு நிறுவனம், படிப்படியாக 45
கிராமங்களுக்கு இந்த மாற்றத்தைக் கொண்டுசென்றது. இந்த அமோக வெற்றியைக் கண்ட
ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 3,000 கிராமங்களுக்கு (17,00,000 லட்சம்
ஏக்கருக்கு, இது மாநிலத்தின் விளைநிலத்தில் 5% ஆகும்) இதைக் கொண்டு
சென்றுள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், 2014க்குள் 50% நிலத்தை
இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்பது இந்த மாநில அரசாங்கத்தின்
இப்போதைய இலக்கு.

இந்த முயற்சியின் பலனாக, ஒட்டுமொத்தக்
கிராமங்களும் பல வகைகளில் முன்னேறியுள்ளன. மூன்று மாநிலங்களில் மேற்கொண்ட
ஆய்வின்படி, எந்தக் கிராமத்திலும் பூச்சிக்கொல்லி விஷத்தால்
மருத்துவமனையில் யாரும் சேர்க்கப்படவில்லை. மண் வளம், பயிர் நலம்
ஆகியவற்றில் கவனம் செலுத்தியதால் பூச்சிகளின் தாக்கம் பெருமளவு
குறைந்துவிட்டது. மண் அதிகமான நீரைத் தக்கவைத்துக்கொண்டதால், வறட்சிக்
காலத்தைச் சேதமில்லாமல் எளிதாகக் கடக்க முடிகிறது. நிலத்தடி நீர்மட்டம்
அதிகரித்துள்ளது. பலவகையான பாரம்பரிய ரக விதைகள் பாதுகாக்கப்பட்டுப்
புழக்கத்தில் வந்துள்ளன. வருமானம் பெருகி விவசாயிகள் கடன்களை அடைத்து,
அடமானம் வைத்த பொருட்களை மீட்டுள்ளனர்.

ஆனால் ரசாயனத்துக்குப்
பழகிய நிலத்தை இயற்கை முறைக்கு மாற்றினால், விளைச்சல் முதலில் சரிந்து பழைய
விளைச்சல் வரக் குறைந்தது மூன்றாண்டுகள் ஆகுமாமே!

இது போன்ற
கணக்கையெல்லாம் பொதுமைப்படுத்த முடியாது! நிலத்தின் நிலைமையைப் பொறுத்து
தான் சொல்ல முடியும். ஆனால் மிகவும் மோசமான நிலத்தைக்கூடச் சில மாதங்களிலே
வளமிக்க மண்ணாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் பல
உள்ளன. 2004 டிசம்பரில் தாக்கிய சுனாமி, இந்திய, கிழக்காசிய நாடுகள்
பலவற்றில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் உப்பை வாரிக் கொட்டிச்
சென்றது. பயிர்கள், பனைமரங்கள் என அனைத்தும் அதன் தாக்கத்தால்
கருகிப்போயின. ஆனால் செலவற்ற பல முறைகளைக் கையாண்டு, இயற்கை விஞ்ஞானி
நம்மாழ்வார், ரேவதி ஆகியோரின் குழு மேற்கொண்ட (மேலே பட்டியலிட்டுள்ள)
மேல்மண் வளப்படுத்தும் உத்திகள் மூலம் நாகை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான
ஏக்கர் நிலங்களில் ஆறே மாதங்களில் நெல்லில் நல்ல விளைச்சலைப் பார்க்க
முடிந்தது. இந்த வெற்றியை அடுத்து, புயலாலும் சுனாமியாலும்
தாக்குதலுக்குள்ளான இந்தோனேசியா, இலங்கை, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேச
அரசாங்கங்கள் சேதமான பல லட் சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்பதற்காக
இவர்களை அழைத்தனர். எதிர்பார்த்தாற்போல, சில மாதங்களிலே பழைய விளைச்சலைக்
கொண்டு வந்து காட்டியுள்ளனர். ‘விளைச்சல் குறைந்தது!'’ என்று
புகார்செய்யும் விவசாயிகளின் அனுபவத்திலும்கூட, ரசாயன இடுபொருட்களுக்கான
செலவு குறைந்ததால் லாபம் நிச்சயம் அதிகரித்ததுதான் உண்மை. இயற்கை
விவசாயத்துக்கு மாறியதால் நஷ்டம் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு இயற்கை விவசாயம் சோறுபோட முடியுமா?

2008 அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (United
Nations Environment Program - UNEP) வெளியிட்ட அறிக்கையில் “இயற்கை
விவசாயம் உலகிற்குத் தேவையான உணவை அளிக்கும். அது மட்டுமல்ல. வளரும்
நாடுகளில் வளர்ந்துவரும் பட்டினிப் பிரச்சினையைச் சமாளிக்க அதுதான் ஒரே
வழி!” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 24 ஆப்பிரிக்க நாடுகளில் 114
வேளாண் திட்டங்களை அலசி ஆராய்ந்த இந்த அமைப்பு, “இயற்கை அல்லது பெருமளவு
இயற்கை சார்ந்த விவசாய நடைமுறைகள் விளைச்சலை 100 சதவீதத்துக்கும் மேல்
பெருக்கியுள்ளன!” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பு
(WHO), FAO, GEF, UNDP, UNESCO, உலக வங்கி ஆகிய நிறுவனங்கள் கூட்டாக நிதி
உதவி செய்த, 400 வல்லுநர்கள் மேற்கொண்ட வளர்ச்சிக்கான அறிவியல்,
தொழில்நுட்பம், விவசாய அறிவு குறித்த சர்வதேச மதிப்பீடு (International
Assessment of Agricultural Knowledge, Science and Technology for
Development - IAASTD) என்னும் சர்வதேச ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது:
“வளர்ந்து வரும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்கவும்
சமூகக் கொந்தளிப்பையும் சுற்றுச் சூழல் நாசத்தையும் தவிர்க்கவும்
விரும்பினால் ஏழைகளுக்கும் பட்டினி கிடப்பவர்களுக்கும் உதவும் வகையில்
உலகின் உணவு உற்பத்தி முறைகள் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும்.
பயிர் சுழற்சிமுறை, இயற்கை விவசாயம் ஆகியவற்றைப் பயன்படுத்த உணவு
உற்பத்தியாளர்கள் முயல வேண்டும். சிறுவிவசாயிகள் விஷயத்தில் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.”

இயற்கை விவசாயம் மேற்கொள்ள நிறைய உடலுழைப்பு தேவைப்படுமே! இன்றைய நிலவரத்தில் கூலியாட்களுக்கு எங்கே போவது?

இயற்கை விவசாய உத்திகள் அதிக ஆள் பலத்தையும் நேரத்தையும் கோருபவை என்பது
முற்றிலும் உண்மைதான். இந்த வாதத்தைக் கேட்கும்போது, “தொலைக்காட்சிப்
பெட்டி முன் செலவிடும் நேரத்தில் கொஞ்சம் நிலத்தில் செலவிட்டால்
நிலத்துக்கும் உடல்நலத்துக்கும் நல்லதுதானே!” என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆனால் உண்மை நிலவரத்தைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ஒரு விஷயம்
புலப்படும். சிறுவிவசாயி ஒருவர் தன் நிலத்தைக் குடும்பத்தாரின் உதவியை
மட்டுமே கொண்டு இயற்கை விவசாயத்திற்குப் படிப்படியாக மாற்ற முடியும்!
தொடக்கத்தில் தேவையாக இருக்கும் நேரமும் உழைப்பும் மண்வளம் அதிகரிக்க
அதிகரிக்கப் படிப்படியாகக் குறைந்துகொண்டேவரும். ஒரு கட்டத்தில், வேலையே
இல்லாமல், இடுபொருட்களே இல்லாமல் விதைகளை விதைத்து அறுவடையை மட்டும்
செய்துகொண்டிருக்கலாம். இதைச் செய்துகாட்டியிருக்கும் இயற்கை விவசாயிகள்
சிலர் இருக்கிறார்கள். எதிர்காலத்துக்காக என்று கூறிக்கொண்டு எதையெதையோ
பணயம்வைக்கும் நாம், அந்தப் பட்டியலில் உடலுழைப்பையும் சேர்த்துக்கொண்டால்,
அது நம்மை ஏமாற்றாமல் பலனளிக்கும்.

இந்த உத்திகள் எல்லாம் சிறுவிவசாயிகளின் பண்ணைகளுக்குச் சரி. ஆனால் பெரிய பண்ணைகளுக்கு ஒத்துவருமா?

கிட்டத்தட்ட ஒத்துவராது என்றே சொல்லிவிடலாம். அதனால் என்ன பிரச்சினை? சிறு
சிறு பண்ணைகளை ஊக்குவித்து, அவற்றின் மூலம் நம் உணவுத் தேவையைப்
பூர்த்திசெய்துகொள்வோமே! “பெரிய அளவிலான உற்பத்தி நமக்குத் தேவையில்லை.
பெருந்திரளான மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதே நமக்குத் தேவை!” (We need
production by the masses, not mass production) என்று காந்தியடிகள்
கூறியது இதைத்தான். ஐ.ஏ.ஏ.எஸ்.டி.டி. அறிக்கையில் உலக நிபுணர்கள் கூறுவதும்
இதைத்தான். “சிறிய பண்ணைகள்மீதுதான் அமெரிக்க விவசாயத் துறை பெருமளவில்
கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இவை உணவுப் பொருள்களை உற்பத்தி
செய்வதுடன், பொருளாதார, சமூகச் சுற்றுச்சூழல்ரீதியான நன்மைகளையும்
அளிக்கின்றன” என்று அமெரிக்க வேளாண் துறை அறிவித்து அதைச் சட்டமாகவே
ஆக்கியதும் இதைத்தான். உணவுக்கு முதலிடம் (food first) என்னும் உலக
நிறுவனம் சிறிய பண்ணை விவசாயத்தின் செயல்பாடுகளும் பலன்களும் என்னும் தனது
அறிக்கையில் சிறுபண்ணைகளின் ஆறு முக்கியமான அனுகூலங்களை விளக்குகிறது. அவை
வருமாறு:

1. பன்முகத்தன்மை: சிறிய பண்ணைகள் பயிரிடும் முறைகள்,
நிலப்பகுதிகள் முதலான அம்சங்களில் வித்தியாசமான தன்மைகளைத் தன்னகத்தே
கொண்டவை. பல தன்மைகளைக் கொண்ட பண்ணைக் கட்டமைப்பு பல்லுயிர்ப்
பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

2. சுற்றுச்சூழல்: பொதுவாக சிறுநிலங்களில் நிலவளம், நீர்வளம், உயிரினங்கள் போன்ற இயற்கை வளங்கள் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன.

3. அதிகாரப்பரவல் மற்றும் சமூகப் பொறுப்பு: நில உரிமை பரவலாவதன் விளைவாகக்
கிராமப்புற மக்களுக்கும் சமமான பொருளாதார வாய்புகள் உருவாகின்றன. தங்கள்
தேவைகளுக்காக உள்ளூர் வர்த்தகங்களையும் சேவைகளையும் சார்ந்திருக்கும்
விவசாயிகளின் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
சமூகத்தின் நலனில்தான் தன் நலனும் அடங்கியிருக்கிறது என்னும் உணர்வு
ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதற்குப் பிரதி உபகாரமாக, விவசாயிகளுக்குப்
பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமலிருக்கும் பொறுப்புணர்வு நில
உரிமையாளர்களிடையே ஏற்படக் கூடும்.

4. இயற்கை வேளாண்மை பற்றிய
அறிவைப் பாதுகாத்தல்: குடும்பப் பண்ணைகள் மூலம் வேளாண்மைத் திறன்கள் அடுத்த
தலைமுறைக்கு எளிதாகக் கைமாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.


5. உணவுப் பொருள்களுடன் நெருக்கமான தொடர்பு: நுகர்வோரும் உற்பத்தியில்
ஈடுபடச் சிறிய பண்ணைகள் வாய்ப்பளிக்கின்றன. இதன் மூலம் இயற்கையுடனான உறவைப்
புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.

6. நிலைத்த பொருளாதாரத்தின்
அடித்தளம்: காந்தியடிகள், குமரப்பா விளக்கியதுபோல வளமான சிறுவிவசாயப்
பண்ணைகளும் அவற்றைச் சார்ந்த தொழில்களுமே நம் நாட்டின் நிலைத்த பொருளா
தாரத்தின் அடித்தளமாக அமையும். அதனால் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புக்காக
வந்து சீரழியும் பல கிராமவாசிகளை நல்லபடியாகத் தங்கள் ஊர்களுக்குத்
திருப்பி அனுப்பிவைத்து, தங்கள் சிறுநிலங்களை இயற்கை விவசாயத்துக்கு
மாற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

நல்ல விதைகளுக்கு எங்கே போவது?

சஹஜ சம்ருத்தா, க்ரீன் ஃபவுண்டேஷன், அன்னதானா (கர்நாடகா), சி.ஐ.கே.எஸ்.
(தமிழ்நாடு), திம்பக்து கலெக்டிவ், Centre for Sustainable Agriculture,
Deccan Development Society (ஆந்திரப் பிரதேசம்), தனல் (கேரளம்) போன்ற
தொண்டு நிறுவனங்கள் சிறுவிவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான
ஊக்கத்தையும் உதவியையும் நல்ல முறைகளில் அளித்துவருகின்றன. இவர்கள்
அனைவரும் கவனம் செலுத்தும் சமூக விதை வங்கிகளில் தரமான பாரம்பரிய விதைகளை
மீட்டெடுத்துச் சேமித்து விநியோகம் செய்துவருகின்றன.

இயற்கை விவசாய இயக்கத்தில் நுகர்வோரின் பங்கு என்ன?

“சமூகம் ஒன்றிணைந்த ஒரு கூட்டமாக வலுப்பெறும் வகையில் நுகர்வோருக்கும்
உற்பத்தியாளருக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்!” என்று
கூறிச் சென்ற ஜெ.சி. குமரப்பாவின் ஆசைப்படி, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து
நிறுவனங்களுமே ஈடுபட்டிருக்கும் மற்றொரு பணி, ‘இயற்கை விளைபொருள் விற்பனை’.
சிறு இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களைப் பரஸ்பரம்
வாங்கிக்கொள்ளுமாறு இந்த அமைப்புகள் பார்த்துக்கொள்கின்றன. உபரியாக
இருப்பவற்றை நகர்ப்புறங்களில் சந்தைப்படுத்தவும் உதவுகின்றன. இயற்கை உணவை
யார் விற்றாலும் வாங்கிக்கொள்ளும் நுகர்வோராக மட்டும் இருப்பது ஓர்
அணுகுமுறை. ஆனால் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களின்
கடைகளில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பொருட்கள் வாங்கினால்,
நகர்ப்புறத்தினர் இயற்கை வேளாண்மை இயக்கத்தில் ஈடுபாட்டை ஆழமாக்கலாம்.
பேராசையால் விவசாயிகளை அடக்கி ஆளும் சதியில் இறங்கியிருக்கும் பெரிய
நிறுவனங்களின், அரசாங்கங்களின் கொள்கைகளை மாற்றியமைக்க நாம் குரல் கொடுக்க
வேண்டும். விளைநிலங்களைக் கூறுபோட்டு விற்கும் நில வர்த்தகப் (real estate)
பொருளாதாரத்தில் முடிந்தவரை பங்கேற்காமல் விலக வேண்டும். இவை நம்
எதிர்காலத்தை நம் கையில் எடுத்துக்கொள்ளும் திசையில் எடுக்கும் மிகவும்
அவசியமான, மிகப் பெரிய முதல் படி.

சென்ற கட்டுரையில்
விமர்சிக்கப்பட்ட கல்வி முறையைப் பற்றியும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக
வேண்டும். பாடப்புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கேள்வி கேட்காமல் உள்வாங்கும் தகவல்
நுகர்வோராக நம் குழந்தைகளை வளர்க்காமல், கல்வி என்னும் தளத்தில்
பங்கேற்பாளராக ஆக ஊக்குவிக்க வேண்டும்; நமது கல்வி முறையை,
விமர்சனப்பூர்வமான சிந்தனாமுறையை ஊக்குவிக்குமாறு மாற்றியமைக்க வேண்டும்
என்பது தெளிவாகிறது.

முடிவாக நம் இயற்கை விவசாயிகள் கையாண்டு
வரும் பஞ்சகவ்யம், ஒற்றை நாற்றுமுறை, பயிர்சுழற்சி போன்ற உத்திகள் மட்டும்
நம்மை நம் நெருக்கடியிலிருந்து காப்பாற்றப் போவதில்லை. மனித இனம் அழிவின்
பாதையிலிருந்து விலகி வாழ்வின் பாதைக்குத் திசைதிரும்ப முதன்மையாகச் செய்ய
வேண்டியது வேறொன்று உள்ளது. இயற்கை வேளாண்மையின் உலகுக்கே தந்தையாக
விளங்கும் மசானோபு ஃபுகுவோகா தாத்தா இதை அழகாகக் கூறிச் சென்றிருக்கிறார்.
“ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாவதற்கு முன்பு அவர்கள் தத்துவவாதிகளாக வேண்டும்!”

நன்றி - காலச்சுவடு இணையம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum