TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ம. ரமேஷ் கவிதைகள்

+4
அருள்
Tamil
ஜனனி
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 17, 2013 8:44 pm

• அழகின் ரகசியம்

நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

• இக்காலமும் பொற்காலம்

அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்

• தெளிவு கொள்

பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஜனனி Thu Jan 17, 2013 9:03 pm

வணக்கம் ரமேஷ்...கவிதை அருமை ..தொடர்ந்து எழுதவும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Tamil Fri Jan 18, 2013 7:46 am

ஆட்டோகாரனுக்கு

'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 18, 2013 7:46 pm

• உண்மை

கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by அருள் Fri Jan 18, 2013 8:04 pm

சூப்பர் ம. ரமேஷ் கவிதைகள் 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by logu Sat Jan 19, 2013 7:58 am

கவிதைகளுடன் அதற்கான படங்களை இணைத்தால் நன்றாக இருக்கும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 21, 2013 5:53 am

• சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்

வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by அருள் Mon Jan 21, 2013 7:09 am

கண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .....பெற்றோர்களை பார்த்து கொள்ளுங்கள்
ம. ரமேஷ் கவிதைகள் 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 22, 2013 7:39 pm

• படைப்பாளனிடம் ஒரு கேள்வி

இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மாலதி Tue Jan 22, 2013 9:23 pm

ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?......இதுதான் பதில் அருமை

ம. ரமேஷ் கவிதைகள் 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 23, 2013 7:41 pm

• கேளுங்கள் சொல்லப்படும்

விபத்தில் சிக்குண்டவரிடம்
வேலையின்றித் திரிபவரிடம்
ஏன்
காதலில் தோற்றவரிடம் கூட
வலியைப் பற்றிக் கேட்காதீர்கள்
முதியோர் இல்லத்தில்
போய் கேளுங்கள்
வலி சொல்லப்படும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by அருள் Wed Jan 23, 2013 8:51 pm

முதியோர் இல்லத்தில்
போய் கேளுங்கள்
வலி சொல்லப்படும்................................உண்மை

ம. ரமேஷ் கவிதைகள் 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 25, 2013 9:46 am

• நடைப் பிணங்கள்

அடிப்பட்டுத் துடிக்கிறான்
எல்லோரும் விரைகிறார்கள்
அவரவர் அலுவலுக்கு...
ஒரு நடைப்பிணம்
அருகில் சென்றது
நகை பணம்
அபகரித்துச் சிரித்தது
சைரன் ஒலி கேட்ட போது
மெதுவாக
அவன் உயிர்
பிரியத் தொடங்கியது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மாலதி Sat Jan 26, 2013 10:45 am

ம. ரமேஷ் கவிதைகள் 917304 ம. ரமேஷ் கவிதைகள் 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 7:28 am

• மெளனமாய் இறைவன்

வேல் குத்தி
அலகு குத்தி
உண்ணா நோன்பிருந்து
மொட்டையிட்டு
நீ
படைத்த உடம்பை
வதைத்துக் கொண்டவனுக்கு
அப்படி என்ன
பெரியதாகக் கொடுத்துவிட்டாய்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by அருள் Tue Jan 29, 2013 1:17 pm

ம. ரமேஷ் கவிதைகள் 28284 ம. ரமேஷ் கவிதைகள் 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 30, 2013 7:27 am

• முடிவு தேடும் தொடக்கம்!

ஏழு திணைகளாய்...
கடையெழு வள்ளல்களாய்...
வல்லரசுகள் தோன்றும்.
வேந்தரும் அரசருமாய்
அரசியல்வாதிகளுக்கு
ஊராட்சிகள் மாவட்டங்கள்
தனித்தனி நாடுகளாக்கப்படும்.
கப்பம் கட்டுவார்கள்...
விபச்சாரிகள் மீண்டும்
தேவதாசிகளாய்ப் போற்றப்படுவர்...
நக்கீரன் பாட்டில்
எந்தக் குற்றமும் இருக்காது...
முப்படைகளுக்குப் பதிலாக
அணுகுண்டு வீச்சுகள்...
உண்மைக் காதல் கொண்ட
ஓர் ஆண்
ஒரு பெண்ணைத் தவிர
பாம்பும் இறந்திருக்கும்...
இருவரும் ஆடையின்றித் திரிவார்கள்
விலக்கப்பட்ட கனியென்று
எதுவும் இல்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 7:12 am

• விபச்சாரி உண்மை பேசுகிறாள்

இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்.
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 2:47 pm

• கண்டது கனவு

நேற்று இரவின் காலையில்
இந்தியா வல்லரசாகி இருந்தது.
சுவிஸ் வங்கியிலிருந்து
கறுப்பு பணம் திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக வங்கியிடம்
கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக் குடித்தனங்களில்
விவாகரத்து வழக்குகள்...
காதல் போர்வைக்குள்
காம விளையாட்டுகள்...
அரசியல்வாதிகள்
தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்...
எல்லோர் கையிலும் துப்பாக்கி...
நீதிமன்றம்
மனித இன படுகொலைக்கு மாற்றாக
பறவை, விலங்கு சுட்டதற்கு
மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது...
திரைப்படம், தொலைக்காட்சி
ஆடையை முற்றும் துறந்த
நவீன கலாச்சாரத்தை
போதனை செய்து
‘நாமே குழந்தை
நமக்கேன் குழந்தை’ என்றது.
நான்
கலைந்த ஆடையை
உடுத்திக்கொண்டு எழுந்தேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 06, 2013 5:28 am

• இந்தியா

ஒரு வேகத்துக்காக
மாட்டை அடிக்கும்
வண்டியோட்டி...
தலையில் கொட்டி
திறமையை அடக்கும்
பெற்றோர்...
வல்லரசிற்கு
நடைபோடும்போது
அரசியல் ஓட்டுக்காக
இலவசங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by logu Wed Feb 06, 2013 7:40 am

ம. ரமேஷ் கவிதைகள் 254248 ம. ரமேஷ் கவிதைகள் 254248
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 11:10 am

• திருமணம்
காலையில் வரும்
அரசியல்வாதிக்கு
நள்ளிரவில் தயாராகும்
சாலைகள்போல
6 - 7.30 முகூத்தத்திற்காக
நீயும் தயாராகிறாய்
சடங்காயிருந்த
திருமணம்
அரசியல் விழாக்களாகி விட்டதால்
கலாச்சார வேகத்தில்
திருமணத்தின் புனிதமும்
கெட்டுவிட்டது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by அருள் Thu Feb 07, 2013 12:43 pm

ம. ரமேஷ் கவிதைகள் 135634 ம. ரமேஷ் கவிதைகள் 135634 ம. ரமேஷ் கவிதைகள் 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 9:49 am

• கவிப்பேரரசு வைரமுத்துவே!
நவீன பெண்கள்
சமையலரைக்கும்
கட்டியலரைக்கும் இடையே
ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிட வில்லை
சீரியல்களின் இடைவேளைகளில்
சமையலரைக்கும்
தொலைக்காட்சி அறைக்கும்
ஓடி ஓடி ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிடுகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by mmani Mon Feb 18, 2013 2:52 pm

சீரியல்களின் இடைவேளைகளில்
சமையலரைக்கும்
தொலைக்காட்சி அறைக்கும்
ஓடி ஓடி ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிடுகிறார்கள்.
ம. ரமேஷ் கவிதைகள் 254248
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum