Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..
2 posters
TamilYes :: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1
கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..
கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ
(cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான
கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது
கட்டாயம.
இங்கே நான் கருப்பையில் வருகின்ற கட்டிகள் பற்றி ஒரு இடுகையிடுகிறேன்.
கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக
ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி
அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.
இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்ன?
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும்
கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள்
இருக்கலாம்.
தனியாக ஏற்பட்ட ஒரு கட்டி
கருப்பையில் பல கட்டிகள்
இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?
இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை
எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த
கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை
வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே
தெரியாமல் போய் விடுகின்றது.
இது புற்று நோயா?
இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி
பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது.
இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.
இது எத்தனை வயதளவில் ஏற்படும்?
பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.
இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?
நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை
ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும்
அறிகுறிகள் ஏற்படலாம்.
குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?
ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு
கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே ) இருக்கும் போது குழந்தை
சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.
ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு .மற்றும் இந்தக் கட்டிகள்
இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும்
அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும்
கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.
இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?
சில வேளைகளில்.
குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக
பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை)
மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.
இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?
ஸ்கேனிங் மூலம்
இதற்கான மருத்துவ முறைகள் என்ன?
இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.
இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy).
குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப்
பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

- மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
- அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு
- அடிவயிறு வீங்குதல்
- அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
- நாரிப் பகுதியின் அடிப்பகுதியில் நோ ஏற்படுதல்
குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?
ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு
கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே ) இருக்கும் போது குழந்தை
சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.
ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு .மற்றும் இந்தக் கட்டிகள்
இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும்
அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும்
கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.
இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?
சில வேளைகளில்.
குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக
பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை)
மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.
இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?
ஸ்கேனிங் மூலம்
இதற்கான மருத்துவ முறைகள் என்ன?
இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.
இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy).
குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப்
பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..
அறிய தகவல் நன்றி!
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» கருப்பை நார்த்திசுக் கட்டிகள் கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?
» காலை நேர காய்ச்சல் (morning sickness) : பெண்கள் அறியவேண்டியது.
» கருப்பை கோளாரா?
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
» சீழ்க் கட்டிகள் வெயிலில் தொல்லை தரும் நோய்
» காலை நேர காய்ச்சல் (morning sickness) : பெண்கள் அறியவேண்டியது.
» கருப்பை கோளாரா?
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
» சீழ்க் கட்டிகள் வெயிலில் தொல்லை தரும் நோய்
TamilYes :: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum