Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கேரளாவின் தொடரும் துரோகம்!
Page 1 of 1
கேரளாவின் தொடரும் துரோகம்!
சோலையெல்லாம் பாலை
கேரளாவின் கன்னிகா துரோகம்! |
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஊருக்கு ஊர் மேடை போட்டு விமர்சித்து வருகிறார் வைகோ. இந்நிலையில், அந்த அணைக்குச் செல்லும் நீர் ஆதாரங்களில் ஒன்றான செண்பகவல்லி அணைக்கட்டுப் பகுதிக்கு வைகோவால் அனுப்பி வைக்கப்பட்ட ம.தி.மு.க. குழுவினர், அங்கிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வரக்கூடிய கால்வாயில் ஏற்பட்டிருக்கும் உடைப்பால், நீர் முழுவதும் கேரளப் பகுதிக்கே போய்க் கொண்டிருப்பதாக ஷாக் கொடுக்கிறார்கள்! நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது செண்பகவல்லி அணைக்கட்டு. 1733-ல் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரு தரப்பினரும் இணைந்து இந்தத் தடுப்பணையைக் கட்டி முடித்தனர். ஒப்பந்தப்படி, இங்கிருந்து ஒரு பகுதி நீர் முல்லை பெரியாறுக்கும், மற்றொரு பகுதி தமிழக எல்லைக்கும் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்து விட்டது. இதனால், தமிழகப் பகுதிக்கு நீர்வரத்து முழுமையாக நின்று போய் விட்டதால், 30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இதை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள சூழலில்தான், வாசுதேவநல்லூர் தொகுதியின் ம.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சதன் திருமலைக்குமார் தலைமையில் ஒரு குழு, அணைக்கட்டு குறித்த தகவல்களைத் திரட்டி வந்திருக்கிறது. மலைப் பயணத்தை முடித்துக்கொண்டு, வனத் துறை அலுவலகத்தில் சற்று ஓய்வாக இருந்த சதன் திருமலைக்குமாரை சந்தித்தோம். ''செண்பகவல்லி அணை இருக்கும் பகுதி முதலில் தமிழக எல்லைக்குள்தான் இருந்துச்சு. ஆனால், 20 வருஷத்துக்கு முன்பு வனத் துறையினர் எல்லை பிரித்தபோது இந்த அணை இருக்கும் பகுதி, பெரியாறு புலிகள் காப்பக எல்லைக்குள் போயிருச்சு. அணை கட்டப்பட்டு 277 வருஷம் முடிஞ்சும், அந்தக் காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்றவற்றை அரைத்துக் கட்டியிருப்பதால் இன்னும் உறுதியா இருக்கு. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர 1,450 மீட்டர் தூரத்துக்கு கன்னிகா மதகு என்ற கால்வாய் கட்டியிருக்காங்க. அதில்தான் கேரள எல்லைக்குள் இருக்கும் கால்வாயில் 30 மீட்டர் தூரத்துக்கு வெள்ளத் தால் உடைப்பு ஏற்பட்டிருக்கு. அதை சரிப்படுத்த மேற்கொள்ளும் நடவ டிக்கைகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. அதனால், சிவகிரி முதல் சாத்தூர் வரையிலான 30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் வறண்ட பூமியா மாறிப்போச்சு...'' என்றவர், தொடர்ந்து, ''இந்தக் கால்வாயின் உடைப்பை சரிப்படுத்த 1985-ல் முயற்சி நடந்துச்சு. அதுக்காக 10.5 லட்சம் செலவாகும்னு எஸ்டிமேட் போடப்பட்டு தமிழகத்தின் சார்பாக ஐந்தேகால் லட்சம் கொடுக் கப்பட்டது. எனினும், கேரள அரசாங்கம் உடைப்பை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, 2006-ல் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துருச்சு. 2007-ல் சட்டமன்றத்தில், 'இந்த கால்வாய் உடைப்பை சரிசெய்து, நீர்வரத்து இல்லாததால் புதர் மண்டிப் போயிருக்கும் கால்வாயை தூர் வாரணும்'னு நான் பேசினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலை. கேரள அரசைப் பொறுத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலையோரத்தில் இருக்கும் பகுதிகளுக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்து, தமிழகத்தின் மலையோரப் பகுதிகளைப் பாலைவனமாக்க நினைக்குது. மற்றொரு பக்கம் ஆற்று மணலைக் கொள்ளையடித்து அங்கே கொண்டு போறவங்களுக்கு ராஜமரியாதை கொடுக்குது. இதனால் விவசாயத்தை நம்பி யிருக்கும் மக்கள் நஷ்டப்பட்டு, விளைநிலங்களை விற்கும் முடிவுக்கு தள்ளப் படுறாங்க. அதையும் கேரளாக்காரர்களே அடிமாட்டு விலைக்கு வாங்குவதால், கேரள அரசின் திட்டமிட்ட சதியாகவே இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. இங்கிருந்து காய்கறி, பால், இறைச்சி, மின்சாரம்னு எல்லாத்தையும் வாங்குறவங்க, நமக்கு உரிய தண்ணீரை மட்டும் தர மறுப்பது என்ன நியாயம்? அதனால்தான் கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மே 28-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்!'' என்றார். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க-வின் நெல்லை மாவட்டச் செயலாளர் சரவணன் நம்மிடம், ''இந்தப் பகுதிக்கு 1989-ல் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகனை அழைத்து வந்த வைகோ, விவரங்களை நேரில் விளக்கினார். அதையடுத்து, உள்ளாறு நீர்த்தேக்கத் திட்டம் அமைக்கப் பரிசீலனை நடந்துச்சு. ஆனால், நீர்வரத்தை கேரளா முடக்கி விட்டதால், இந்தத் திட்டத்தைக் கைவிட்டுட்டாங்க. கால்வாய் உடைப்பை நாம் சீர்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமா இருக்கும் கேரள வனத் துறை, அந்த இடத்துக்கு பக்கத்திலேயே வாட்ச் டவருடன் கூடிய முகாம் அமைச்சிருக்காங்க. அங்கே போறதுக்கு கேரள எல்லை வழியாகப் பாதை இல்லாததால், வாசுதேவநல்லூர் வழியாத்தான் அவங் களே போய்க்கிட்டு இருக்காங்க. கால்வாய் உடைப்பு குறித்து நாங்க திரட்டி வந்திருக்கும் தகவல்களை தலைவர் வைகோவிடம் கொடுப்போம். அடுத்த முறை அவரும் நேரடியா வந்து உடைப்புப் பகுதியை பார்வையிடறதா சொல்லியிருக்கார்...'' என்றார். வனத் துறை ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, ''நாங்க கன்னிகா மதகு கால்வாய் பகுதிக்குப் போனால்கூட கேரள வனத் துறையினர் எரிச்சலோடுதான் பாக்கறாங்க. ம.தி.மு.க. குழுவினர் அணைக்கட்டு பகுதிக்குப் போயிட்டு வந்த விஷயம், இந்நேரம் பழங்குடியின மக்கள் மூலமாக கேரள வனத் துறைக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் தெரிஞ்சிருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல கேரள அதிகாரிகள் அங்கே வந்து, சில நாட்கள் முகாமிட்டுருவாங்க. இந்த கால்வாய் மட்டுமில்லீங்க... சொக்கம்பட்டி என்ற கிராமத்துக்கு மேலே இதே மலையில் 'கிருஷ்ணாபுரம் மேல்பாகம்' என்ற தடுப்பணை, கேரள எல்லைக்குள் இருக்கு. அந்த அணையின் மதகு தூர்ந்து தமிழகத்துக்கு வந்துகிட்டிருந்த நீர்வரத்தும் நின்னுபோச்சு. இதெல்லாம் பார்த்தும், தெரிஞ்சும் நாங்க எதுவும் செய்ய முடியாம இருக்கோம்!'' என்று விரக்தியுடன் பேசினார்கள். 'நாம் எல்லோரும் இந்திய மக்கள்' என்ற கோஷத்தை ஒருபுறம் உரக்கச் சொல்லிக்கொண்டே, அடுத்த மாநிலத்துக்காரன் வயிற்றில் அடிக்கிற அக்கம் பக்கத் துக்காரர்களை என்னவென்று சொல்ல! | |
|
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் – ரவி பல்சோகர்
» கேரளாவின் சண்டே மேளம்
» முழுவதும் எழுத படிக்க தெரிந்த கேரளாவின் கண்ணூர் மாவட்டம்
» கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்? முன்னாள் தலைமை பொறியாளர் தகவல்
» முல்லை பெரியாறு - கேரளாவின் அவசரசட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்.
» கேரளாவின் சண்டே மேளம்
» முழுவதும் எழுத படிக்க தெரிந்த கேரளாவின் கண்ணூர் மாவட்டம்
» கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்? முன்னாள் தலைமை பொறியாளர் தகவல்
» முல்லை பெரியாறு - கேரளாவின் அவசரசட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum