TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

3 posters

Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by KAPILS Wed Jan 02, 2013 1:20 pm

ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்த லட்சியம் நிறைவேறுகிறதோ இல்லையோ… நாட்கள் மட்டும் கடந்து கொண்‌டே போகும். தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலரது புத்தாண்டு லட்சியங்கள் என்‌‌னென்ன என்பது பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் இது:-

ஹன்சிகா : 2012 ஒரு நல்ல வருஷமா இருந்தது. நிறைய படங்களில் நடித்தேன். 2013 இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்கணும், இப்போது கைவசம் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் இருக்கு, ரசிகர்கள் எப்பவும் என்னை கொண்டாடுற மாதிரி நிறைய நல்ல படங்கள் செய்யணும். மேலும் எல்லார்கிட்டயும் அன்பு செலுத்தி, விலங்கினமா இருந்தா கூட, கருணை காட்டி, மனிதர்கள், மனிதர்களை துன்புறுத்தாத நிலைய வரணும். இந்த 2013 ஒரு நல்ல வருஷமா எல்லார்க்கும் அமையணும்.

திரிஷா: பெரும்பாலும் புதுவருஷத்தில நான் எந்த கொள்கையும் எடுத்துக்கிறதில்லை. ஏன்னா என்னால் கடைபிடிக்க முடியாது. இந்த 2012 என் அப்பா இறப்பு எனக்கு ஒரு பேரிடி, இன்னும் என்னால் வெளில வரமுடியல. இந்த வருஷம் நான் எந்த தமிழ் படத்திலும் நடிக்கல. ஆனா, இப்ப நான் 4 தமிழ் படங்கள் ஒத்துட்டிருக்கேன். முதலில் சமர் வெளிவர போகுது. ஜீவா படம், ரவி படம் இப்படி நிறைய இருக்கு. நிறைய கதைகள் ரோல்கள் செய்துட்டேன், இனி கொஞ்சம் வித்தியாசமான கதையா இருந்தா நல்லா இருக்கும்னு நம்புறேன். எனக்காக ஒரு இடம் தமிழ் சினிமாவில் எப்பவும் இருக்கும். அதற்கான உழைப்பை கொடுக்க நான் தயார் தான்.

பானு : இதுவரையில் எனக்குனு எந்த திட்டமும் வைத்துக் கொள்வது இல்லை. இன்வால்வ்மென்ட் இல்லாமலே இருந்தேன். உடம்பை பற்றியோ, காஸ்ட்யூம், மேக்கப் இப்படி எதிலம் கவனம் செலுத்த மாட்டேன். ஒரு நடிகையா என்னை எப்பவுமே உணர்ந்தது இல்லை. எது நடத்தாலும் அது நல்லதுனே நினைப்பேன். ஆனா 2013ல் என்னை முழுவதுமா மாற்றிக்கனும்னு முடிவு பண்ணிருக்கேன். ரொம்ப கோவம் வரும், அதான் என் மைனஸ், இது எல்லாம் மாற்றி சிறந்த நடிகையா, ரசிகர்கள் எப்பவும் பேசுற மாதிரி படங்கள் பண்ணனும் என்பது தான் இப்போதைக்கு என் ஆசை.

கஸ்தூரி : இந்த வருஷம் நான் ரொம்ப பிரச்சனைகளை சந்திச்சிட்டேன். மறதி, அஜாக்ரதை, இப்படி கவனக்குறைவா இருந்ததால் பல பிரச்னைகளை சந்திச்சேன். ஆனா, 2013 இதெல்லாம் மாற்றி, புது தொடக்கமா இருக்கும்னு நம்புறேன். ஒரு பொறுப்பான பெண்ணா இருக்கனும்னு நினைக்கிறேன். கன்னாபின்னானு வெயிட் போட்டுட்டேன், மொத்தத்தில் என்னை நான் மாற்றிக் கொள்ளும் வருஷம் 2013.

கார்த்திகா : பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழலில் தான் நாம் இருக்கோம், இந்த 2012 நமக்கு பல பாடங்களை உணர்த்தியிருக்கு. ஒரு சோகமான நிலையில் தான் நான் தள்ளப்பட்டு இருக்கேன். இனி நாம் ஒவ்வொரு பெண்களும் சுதந்திரமாக பாதுகாப்பான நிலையில் வாழ சபதம் எடுப்போம். இந்த வருஷம் எல்லோருக்கும் நல்லபடியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வேதிகா : ஒவ்வொரு வருஷமும் ஆரம்பத்தில் புது வருஷடத்திற்கு சபதம் எடுப்போம். அப்புறம் அதை மறந்திடுவோம். எனக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளாக எடுத்து கொண்டு இன்று நாம் இந்த உலகத்தில் இருக்கோம் அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி என் வேலைகளை தொடங்குவேன். எதிர்காலத்தில் நிச்சயம் எனக்கான வருஷமா பிளான் பண்ணி வேலை பார்க்கணும். 2013 நல்லபடி அமைய வேண்டும் என்கிறார் வேதிகா.

அனுயா : இந்த வருஷம் நிறைய சாதிக்கணும், நிறைய படங்கள் பண்ணனும். எனக்கான வேலைகளையும் கொஞ்சம் பிளான் பண்ணி வெற்றி பெற வேண்டும் என்கிறார் அனுயா.

பூஜா : போன வருஷம் நான் ரொம்ப கடினமாக வேலை பார்த்திருக்கேன், ஓடிட்டே இருந்தேன். கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கல. இந்த வருஷம் கொஞ்சம் வொர்க் பிளான் பண்ணி ரெஸ்ட் கிடைக்கும் போது எடுக்கணும். 2012-ஐ விட 2013 இன்னும் நல்ல நல்ல வருஷமா அமைய விரும்புகிறேன் என்கிறார் பூஜா.

பிரசாந்த் : 2012 கொஞ்சம் நல்ல வருஷமா அமைந்தது. 2013 இன்னும் அடுத்த ஸ்டெப்பா இருக்கும், தமிழில் வந்த நான் படத்தை, இந்தியில் ஆரம்பிக்கிறோம். இதற்காக நிறைய மெனக்கெடலில் உள்ளேன். மொத்தத்தில் 2013, எல்லாருக்கும் அமைதியும், சந்தோஷமும், வெற்றியும் கிடைக்கும் வருடமா அமையனும்னு கடவுளை வேண்டுகிறேன்.

ஆதி : இதுவரை வித்தியாசமான வேடங்களில் ஏற்று நடித்ததில்லை, அதனால் இந்தாண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை உள்ளது. அதுதவிர சினிமாவில் இன்னும் நிறைய ‌கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. கூடவே இந்த 2013ம் ஆண்டில் எனக்கான ‌வாழ்க்கை துணையையும் தேடப்போகிறேன் என்கிறார் ஆதி.

ஸ்ரீகாந்த் : கடந்த 2 வருடமாக ஜிம்க்கே போகாமல் எனது உடல்எடை கண்ணாபின்னாவென்று கூடிவிட்டது. இந்தாண்டு முக்கிய கொள்கையாக ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்க போகிறேன் என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty Re: தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by அருள் Wed Jan 02, 2013 4:01 pm

கபில் உங்களின் சபதம் என்ன
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty Re: தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by KAPILS Wed Jan 02, 2013 10:09 pm

அனைவரும் எல்லாவித நலன்களும் பெற்று வாழ வேண்டும் மற்றும் வறுமை இல்லாமல் போக வேண்டும் ,இயற்கை சீற்றம் ஏதும் நிகழ கூடாது ............
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty Re: தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by மாலதி Wed Jan 02, 2013 10:17 pm

இதில் நம் சபதம் ஒன்றும் இல்லை இயற்கை மனது வைத்தால் மட்டும் தான் சாத்தியம் ...நல்ல எண்ணம் வாழ்த்துக்கள் உங்களின் நல்ல எண்ணத்திற்கு தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty Re: தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by KAPILS Wed Jan 02, 2013 10:56 pm

ஆச்சரியம்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்… Empty Re: தமிழ் திரை நட்சத்திரங்களின் புதிய ஆண்டிற்க்கான சபதங்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum