TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் : ரஜினிகாந்த்

Go down

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் : ரஜினிகாந்த் Empty நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் : ரஜினிகாந்த்

Post by ஜனனி Sun Dec 30, 2012 5:25 pm

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் : ரஜினிகாந்த் Rajinikanth

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பற்றி எழுதப்பட்ட ‘ப.சிதம்பரம் ஒரு
பார்வை’ என்ற புத்தகத்தின் வெளியீடு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.


விழாவுக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு
விருந்தினராக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். விழாவுக்கு
வந்தவர்களை, கவிஞர் இலக்கியா நடராஜன் வரவேற்றார். விழாவில், ‘ப.சிதம்பரம்
ஒரு பார்வை’ புத்தகத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட,
ப.சிதம்பரத்தின் தாய் லட்சுமி ஆச்சி பெற்றுக்கொண்டார்.

விழாவில்
பேசிய கருணாநிதி சிதமபரத்தின் அடுத்த பதவி என்னவாக இருக்கும் என்று பூடகம்
வைத்தே பேசினார். உலகநாயகன் கமல்ஹாசனும் ப.சிதம்பரம் வகித்துவந்த பதவிகள்,
வகிக்கப் போகும் பதவிகள் குறித்துப் பேசினார். அடுத்து பேசிய ரஜினிகாந்த்
நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் என்றார். இவர்கள் பேசிய
விரிவான உரை :

கருணாநிதி :

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் : ரஜினிகாந்த் Rajini_Kanth
என்
இதயத்தில் இடம்பெற்ற ஒரு சிலரில் ஒருவர் ப.சிதம்பரம் ஆவார். 1984-ம் ஆண்டு
மத்திய அரசில் துணை அமைச்சரானார். பின்னர், உள்துறை இணை அமைச்சர், வர்த்தக
அமைச்சர், நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர், 2012-ம் ஆண்டு ஆகஸ்டு முதல்
நிதி அமைச்சர், அடுத்து என்ன அமைச்சர் என்பதை உங்கள் கையலியே
எடுத்துக்காட்டுகிறது.

வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக
வேண்டும் என்று முன்னாள் பேசியவர்கள் கூறினார்கள். அது வேட்டி கட்டிய
தமிழனா? அல்லது சேலை கட்டிய தமிழரா? என்பதை நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள். தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, முதலில் தி.மு.க.வுடன்
கூட்டணி அமைத்தது. அதில் பெரும் பங்கு வகித்தவர் சோ, மறைமுக பங்கு
வகித்தவர் ரஜினிகாந்த்.

ப.சிதம்பரம் ஒரு புத்தகத்தில், வாணிபத்தால்
எந்த நாடும் அழிந்து போனதில்லை என்று பெஞ்சமின் பிராங்கிளின்
கூறியிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒரு நாட்டின்
வளர்ச்சிக்கு வாணிபமே முக்கியம் என்பதை ப.சிதம்பரம் அழுத்தமாக
கூறியிருந்தார். வாணிபம் இந்தியாவில், தமிழகத்தில் வலிமைபெற வேண்டும் என்று
அண்ணா, காமராஜர் போன்றோர் விரும்பினார்கள். அதையே ப.சிதம்பரமும்
விரும்புகிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது.

அண்ணா வெளியிட்ட
அறிக்கையில், நாம் சேது சமுத்திர திட்டத்தை உருவாக்க வேண்டும். அதனால்
கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். தமிழன்
நலன் பேணும் அனைவரும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற குரல் கொடுப்பார்கள்.

தமிழகம்
முழுவதும் 27-3-1967-ல் அண்ணா எழுப்பிய குரல், சேது சமுத்திர திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும், தூத்துக்குடி துறைமுக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
என்பதாகும். அதை காமராஜர் வரவேற்றார். இப்போதுள்ள நிலையில் சேது சமுத்திர
திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், 1200 கிலோ மீட்டர் தூரம்
இலங்கையை சுற்றி வரவேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால், சுற்றி வர
வேண்டியது இருக்காது. ஆனால், அந்த திட்டம் இன்றும் கிடப்பில்
போடப்பட்டுள்ளது.

அப்போது, தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல்
அறிக்கைகளில் எல்லாம், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
என்று கூறப்பட்டுவந்தது. தமிழனுக்கு உள்ள தலையெழுத்து, அன்று சேது சமுத்திர
திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதியாக கூறியவர்கள் எல்லாம், இன்று அந்த
திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்துகிறார்கள். இது சாபக்கேடாகும்.

சேது
சமுத்திர திட்டத்தால் வாணிபம் பெருகும். வியாபாரம் செழிக்கும்.
பொருளாதாரம் வளரும். எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சோனியாகாந்தி
முன்னிலை வகித்தார். ஆனால், திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. திட்டம்
நிறைவேறினால் தமிழனுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். அந்த திட்டத்தை தனது
67-வது பிறந்தநாளில் நிறைவேற்றி தருவதாக ப.சிதம்பரம் உறுதி அளிக்க வேண்டும்
என்றார்.

ரஜினிகாந்த் :

1995-ஆம் ஆண்டு
முதல் முதல் ப.சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி
அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய
சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஏழைகள் பணக்காரர்களாக வேண்டும்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக கூடாது. அவர்கள் ஏழைகளாகவும்
மாறக்கூடாது. நடுத்தர மக்களையும் காப்பாற்ற வேண்டும். இவற்றையெல்லாமெப்படி
கொண்டு நடத்துவது எப்படி என ப.சிதம்பரத்துக்கு தெரியும்.

டெல்லியில்
யார் ராஜாவாக வந்தாலும், நம்பிக்கையான நண்பர் வட்டத்தில் இருப்பவர்
ப.சிதம்பரம். அவருக்கு தெரியாமல் எந்தச்சட்டமும், திட்டமும் டெல்லியில்
வராது. இது உண்மை. நமது இளைய சமுதாயமும், மாணவ சமுதாயமும்
அரசியல்வாதிகளுக்கு எதிராக, சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்க
ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் என்பது
ப.சிதம்பரத்துக்கு தெரியும்.

அதற்கு முன்பு அரசியல் வாதிகள்
விழித்துக்கொள்ளாவிட்டால் நாட்டில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அதுவும்
அவருக்கு தெரியும். என்னுடைய ரசிகர்களை போல நீங்களும் அரசியலுக்கு
வரக்கூடாது என ப.சிதம்பரம் என்னிடம் கேட்பார். நான் அரசியலுக்கு வந்தால்
அது தனி வழியாக இருக்கும் என்பது அவருக்கும் தெரியும் என்றார்.

கமல்ஹாசன் :

ப.சிதம்பரம் இன்னும் செய்ய வேண்டிய சாதனைகள் பல இருக்கின்றன. மத்திய
நிதி அமைச்சர் என்கிற முக்கிய பொறுப்பில் அவர் இருக்கிறார். அடுத்து
முக்கிய பொறுப்பு அவருக்கு வரக்கூடும் என்கிறார்கள். வரவேண்டும் என்று நான்
ஆசைப்படுகிறேன். அதை சொல்லும் உரிமை எனக்கு உண்டு. இது எனது ஆசை.
நிறைவேற்றுங்கள் என்றார்.

விழாவிற்கு கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷம்மி கபூரின் ஒவ்வொரு அசைவுக்கும் நான் ரசிகன் – ரஜினிகாந்த் உருக்கம்
» புழுதிபுயல் வந்தால் எப்படி இருக்கும் ..படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்
» டாஸ்மாக் மதுக்கடை சந்திலும் இருக்கும் கோவிலிலும் இருக்கும் இன்று ???????PHOTO
» நான் தலைமறைவாகவில்லை: போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு
» நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டும்:சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum