Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதுமையை தடுக்கும் பலாப்பழம்
2 posters
Page 1 of 1
முதுமையை தடுக்கும் பலாப்பழம்
முதுமையை தடுக்கும் பலாப்பழம்
மா, பலா, வாழை என முக்கனிகளில்
ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின்
சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும்,
அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும்
காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம்
முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து,
புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல்
தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை
குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து
இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை
சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது
வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க,
பலாப்பழம் உதவுகிறது.
அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த
அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு
சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும்
சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள
விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.
மா, பலா, வாழை என முக்கனிகளில்
ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின்
சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும்,
அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும்
காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம்
முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து,
புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல்
தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை
குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து
இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை
சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது
வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க,
பலாப்பழம் உதவுகிறது.
அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த
அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு
சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும்
சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள
விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: முதுமையை தடுக்கும் பலாப்பழம்
[You must be registered and logged in to see this image.]
சவுதிஅரேபியாவில் பேரிச்சை மரங்கள் அதிகம். ஒருமுறை நண்பர்களுடன் இந்த
பேரிச்சை மரங்களை பற்றி பேசி கொண்டிருக்கும் போது நமது ஊரில் உள்ள
பனை மரத்தை பற்றிய பேச்சு வந்தது. அப்போது நான் பனை மரத்தில்
இரண்டு வகைகள் உண்டு. ஒரு வகை பூ தான் பூக்கும் அதில் நொங்கு
கிடைப்பது இல்லை என்றும், மற்றொரு வகையில் தான் நொங்கு கிடைக்கும் என்று
சொன்னேன்.
என்னுடன் இருந்த நண்பர்களில் சிலருக்கு இந்த இரண்டு வகைகளை பற்றி தெரிந்திருக்க வில்லை.
அதில் ஒருவர் கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம்
பிடித்தார். அவங்களை எல்லாம் ஒரு வழியாக சமாதான படுத்துவதற்குள்
போதும் போதும் என்று ஆகி விட்டது.. இந்த பனை மரம் ஒன்றிலேயே இவ்வளவு
குழப்பமா? அப்படியானால் எனக்கு தெரிந்த சில மரங்களில் உள்ள
வகைகளை சொன்னால்? உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும்
ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பலாப்பழம் அனைவரும் அறிந்ததே... அதில் எனக்கு இரண்டு வகைகள்
தெரியும். எங்கள் ஊரில் பலாப்பழத்தை வழக்கு சொல்லாக சக்கை என்று
அழைப்பது உண்டு.
1)வருக்கை சக்கை(பலாப்பழம்)
2)கூழன் சக்கை(பலாப்பழம்)
இதில் முதல் வகையை மட்டும் தான் நகரங்களில் நான் பார்த்து
இருக்கிறேன். இந்த வகையில் உள்ள சுளைகளை தான் தனியாக எடுத்து
பாக்கட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். இதன் சுளைகள் கொஞ்சம்
அடத்தியாக இருக்கும்.
இரண்டாவது வகை பலாப்பழத்தை எங்கள் ஊரை தவிர எங்கும் பார்த்து
இல்லை. இந்த பலாப்பழம் பழுத்து விட்டால் நாம் நமது கைகளின்
பலத்தால் இதை பிளக்க முடியும். ஆனால் முதல் வகையை எவ்வளவு நன்றாக
பழுத்தாலும் கைகளினால் பிளக்க முடியாது. ரெம்ப கடினமாக இருக்கும்.
கத்தியால் தான் வெட்ட முடியும்.
[You must be registered and logged in to see this image.]
பழுத்த கூழன் சக்கையின் சுளையை வருக்கை சக்கையின் சுளையை போல்
தனியாக எடுக்க முடியாது. கூழன் சக்கையின் சுளைகள் பகுதி திட
நிலையில் இருக்கும். இதை நீங்கள் கையில் எடுத்து வாயில் வைத்தால் நூல்
போல் இழுக்கும். இதன் சுவை முதல் வகையை விட தித்திப்பாக இருக்கும்.
பல் இல்லாத முதயவர்கள் இந்த வகையை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பலாப்பழத்தின் மணம் அதிக வாசனை திறன் கொண்டது. நமது
வீட்டின் பக்கத்தில் உள்ள நான்காவது வீட்டில் பலாப்பழம் வெட்டினால்
கூட நமது வீட்டில் அதன் வாசனை தெரிவித்து விடும். எனவே பக்கத்து
வீட்டு காரர்களுக்கு தெரியாமல் இதை சாப்பிட முடியாது.
இதே பலாப்பழத்தின் வேறு சில ரகங்களும் நான் பார்த்திருக்கிறேன்.
அயினி சக்கை என்று அழைக்கப்படும். இது பலாப்பழத்தை போல் இருக்கும்.
ஆனால் அளவு மிக சிறியதாக இருக்கும். இது சிறிது புளிப்பு சுவையுடையது.
இந்த மரம் பெரும்பாலும் வீடுகள் கட்டுவதற்கு பயன்படும். எங்கள்
ஊரில் இந்த மரத்தின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு தனி மவுசு
உண்டு.
கறி சக்கை என்று அழைக்கப்படும் ஒரு ரகத்தையும் பார்த்து இருக்கிறேன்.
இதுவும் பார்பதற்கு பலாப்பழத்தை போல், ஆனால் சிறிய அளவில்
இருக்கும். இதை சமையல் பண்ண பயன்படுத்துவார்கள்.
[You must be registered and logged in to see this image.]
சீத்தாப்பழம்இதிலும் இரண்டு வகைகள் உள்ளது. பாஞ்சி பழம் என்று எங்கள் ஊரில்
அழைக்க படும். ஒரு வகை இனிப்பு சுவை உடையது. இது தான் அதிகமாக
நகரங்களில் பார்க்க முடிகிறது. இது மாவு போன்று சுவைப்பதற்கு
தித்திப்பாக இருக்கும்.
இரண்டாவது வகை புளிப்பு சுவையுடையது. இதன் மேல் தோலில் முட்கள்
காணப்படும். இது இனிப்பு சீத்தாப்பழத்தை விட சிறிது பெரிதாக
இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்
» முதுமையை தடுக்கும் தண்ணீர்..! தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது!
» நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம்
» பலாப்பழம் பற்றிய தகவல்..!
» பலாப்பழம் பற்றிய தகவல்.........!!
» முதுமையை தடுக்கும் தண்ணீர்..! தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது!
» நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம்
» பலாப்பழம் பற்றிய தகவல்..!
» பலாப்பழம் பற்றிய தகவல்.........!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum