TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அதிக வெயிலில் உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை சிறுநீரகக் கற்களை தோற்றுவிக்கும்

Go down

 அதிக வெயிலில் உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை சிறுநீரகக் கற்களை தோற்றுவிக்கும்  Empty அதிக வெயிலில் உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை சிறுநீரகக் கற்களை தோற்றுவிக்கும்

Post by KAPILS Sat Dec 08, 2012 8:49 am

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்.. அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள்.


ஆனால், சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் எனச் சிறுநீரக மண்டலத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம்.

சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?

பல்வேறு காரணங்கள். சுற்றுச்சூழல், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு என மூன்று வகையாகப் பிரிக்கலாம். உதாரணமாகச் சுற்றுச்சூழல் என்றால், நீங்கள் குடிக்கும் தண்ணீரில் குளோரைடு அதிகமாக இருந்தால், உங்களிடத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். பழக்கவழக்கம் என்றால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதையோ, சிறுநீர் கழிக்காமல் இருப்பதையோ சொல்லலாம். குடும்ப வரலாறு என்றால், மரபியல் தொடர்ச்சி. சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்னைகள் இருக்கும். சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை.

இதற்கு என்னதான் சிகிச்சை?

சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது என்று கண்டறிந்துவிட்டால், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்துவிடலாம். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை, மருந்து, மாத்திரைகள் மூலமாகவே கரைத்துவிடலாம். பெரிய கற்களுக்கு வேறு மாதிரியான சிகிச்சைகள் உள்ளன.

வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)

இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்பட்டு கல் உடைக்கப்படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை இந்த முறையில் அகற்றலாம். ஆனால், கல் உடைக்கப்படும்போது அதன் சிதறல்கள் வேறு எங்கேனும் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.

துளை மூலம் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)

ஒருகாலத்தில் பெரிய சிறுநீரகக் கற்களை அகற்ற ஓப்பன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக வந்தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அளவுக்கு மேல் உள்ள கற்களை வெளியே எடுக்கும் முறை இது.

பிறப்பு உறுப்பு வழியே கற்களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):

எந்த அறுவைச் சிகிச்சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழியாக குழாய் போன்ற கருவியைச் செலுத்தி லேசர் கற்றைகள் மூலம் கற்களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்லிய டெலஸ்கோப் துணையுடன் சிறுநீரகத்தின் உள் அமைப்பைக் கணினியில் பார்த்துக்கொண்டே செய்யப்படும் சிகிச்சை இது என்பதால், துல்லியமான சிகிச்சை உத்தரவாதம். நோயாளிக்குத் துளி ரத்தச் சேதம்கூட இந்த முறையில் ஏற்படாது என்பது கூடுதல் நன்மை.

சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும். கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.

சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும். ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» highbp(உயர் ரத்த‍ அழுத்த‍த்தின்போது) நமது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் – நேரடி காட்சி – வீடியோ
» உடலில் ஏற்படும் சூட்டை குறைக்க :
» உடலில் ஏற்படும் சோர்வு களைப்பை போக்க வேண்டுமா?
» பிரசவத்திற்கு பின்னர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றின் தீர்வுகளும்
» உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum