Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காவிரி நீர் பாசனப் பகுதி: 8 லட்சம் ஏக்கரை 11 லட்சம் ஏக்கராக அதிகரித்துக் கொண்ட கர்நாடகம்
Page 1 of 1

டெல்லி: கர்நாடகம் 8 லட்சம் ஏக்கர் பரப்பில் தான் விவசாயத்துக்கு தான்,
காவிரி நீரை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்துக்குத்
தண்ணீரைத் தராமல் 11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்துக்கு நீரைப்
பயன்படுத்திவிட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் புகார் கூறியுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி
தமிழகம் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இன்றும்
தொடரவுள்ளது.
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில்
உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன்
பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கிய உடன் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் கூறுகையில்,
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு
உள்ள சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. டிசம்பர்
மாதத்துக்குள் அந்த பகுதிக்கு தண்ணீர் போய் சேராவிட்டால் அனைத்து சம்பா
பயிரும் கருகி விடும்.
ஜனவரி மாதம் தண்ணீர் திறந்து விடுவது பற்றி
முடிவு எடுக்கலாம் என்ற கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அதற்குள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி விடும். கர்நாடகா 2 போகம்
சாகுபடி செய்து அறுவடை முடித்து விட்டது. ஆனால், காவிரியில் தண்ணீர்
திறந்து விடாததால், தமிழ் நாட்டில் ஒரு போகம்கூட சாகுபடி செய்யப்படவில்லை.
மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. இதை வைத்து சம்பா பயிரை காப்பாற்ற முடியாது.
காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் செப்டம்பர் மாதம்
வரை 37 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட்டிருக்க வேண்டும்.
ஆனால், விடவில்லை. அந்த பாக்கி நீரைக் கூட நாங்கள் கேட்கவில்லை. 30
டி.எம்.சி. தண்ணீர்தான் இப்போது கேட்கிறோம்.
கர்நாடகா தனது பயிரிடும்
பரப்பை அதிகரித்து, அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்திக்கொண்டு விட்டது.
ஆனால், தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை கர்நாடகம் எண்ணிப்பார்க்காமல்
நடந்துகொள்கிறது. காவிரி நதி நீர் தீர்ப்பாயம், ஏற்கனவே ஒரு உத்தரவு
பிறப்பித்திருந்தது. இதன்படி, 8.4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு
மட்டுமே, அணைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த கர்நாடகாவுக்கு, தீர்ப்பாயம்
அனுமதி அளித்திருந்தது. ஆனால், கர்நாடகா அரசு, தற்போது 11.6 லட்சம் ஏக்கர்
விவசாயத்துக்கு காவிரி நீரை பயன்படுத்தியுள்ளது.
பருவமழை குறைந்ததால்
கர்நாடகாவில் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு
தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் நான்கு அணைகளில் உள்ள காவிரி
நீர் முழுவதையும், கர்நாடகம் பயன்படுத்தும்போது, தமிழகத்துக்கு அதிலிருந்து
சிறிதளவு நீரைக் கூட திறந்து விட மறுப்பது நியாயமற்ற செயல்.
மேலும்
கர்நாடகம் தனது அணைகளில் சட்ட விரோதமாக தண்ணீரை தேக்கி வைத்துள்ளது. அதில்
இருந்து எங்களுக்குரிய தண்ணீரை திறந்துவிட மறுப்பது சட்ட விரோதம். தமிழ்
நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடாவிட்டால், தமிழகத்தின் உணவு
பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத்தில் ஒரு போக விளைச்சல்
கூட நடக்கவில்லை. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் அடுத்தடுத்த
விளைச்சல்களுக்கு, தண்ணீரை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தில் அறுவடை
காலமும் முடிந்துவிட்டது. அடுத்த அறுவடை காலத்துக்காக தண்ணீர் தேவை என்று
சேமித்து வைத்து இருப்பதாக கர்நாடகம் கூறுவது சரியல்ல. இந்த வாதத்தை
நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஆகவே, காவிரியில் உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர்
திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார் வைத்தியநாதன்.
தமிழக அரசு வழக்கறிஞரின் வாதத்தை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான
மூத்த வழக்கறிஞர் அனில் திவான் வாதிடுகையில், காவிரி கண்காணிப்பு குழுவின்
உத்தரவுப்படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறோம்.
ஆனால் இப்போது திறந்து விடுவதற்கு கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு
இல்லை.
எங்கள் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று தமிழக அரசு
உணர்ச்சி இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமானதாகவும், இரக்கத்தை
ஏற்படுத்தும் வகையிலும் அரசு மாற்ற முயற்சிக்கிறது. இதை நீதிமன்றம்
அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் உணர்ச்சி வயப்பட்டு முடிவு
எடுக்கக்கூடாது. இது இரு மாநில விவசாயிகள் தொடர்பான பிரச்சனை. இதை கவனமாக
கையாள வேண்டும். முறையான, நடைமுறைகளைக் கடைப்பிடித்தே முடிவு எடுக்க
வேண்டும் என்றார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடமுடியாது என்று
கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவதால், நேற்றும் வழக்கு விசாரணை
முடியவில்லை. இதைத்தொடர்ந்து புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணிக்கு வழக்கு
விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 2 நாள்களுக்கு மட்டுமே காவிரி நீர்: கர்நாடகம் பிடிவாதம்
» காவிரி விவகாரம்: பிரதமரிடம் முறையிட கர்நாடகம் முடிவு
» காவிரியில் தினமும் 2,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகம் ஒப்புதல்
» காவிரி நீர்: கர்நாடகத்திடம் ஆவணங்கள் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
» ஒரு வழியாக தமிழகம் வந்தது காவிரி நீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum