Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இறுதி வரை பால் தாக்கரேவின் நிழல் போல் இருந்த ஆறு மெய்ப் பாதுகாவலர்களும் ஈழத் தமிழர்கள்! - விகடன் தகவல்
Page 1 of 1

"மராட்டியம் மராட்டியருக்கே வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை"
என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், "தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத்
தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்" என்றார். பாபர் மசூதி இடிப்பை
முன்னின்று நடத்திய அரசியல் கட்சிகள் அடையாளம் மறைத்துப் பின்வாங்க,
"ஒருவேளை சிவசேனா இடித்து இருந்தால், நான் பெருமை அடைகிறேன்" என்ற வர்.
"இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்துக்கள் தற்கொலைப் படையினராக மாற
வேண்டும்� என்று கர்ஜித்தவர், தனது பேத்தி நெகா, ஒரு முஸ்லிமை மணந்தபோது
முன்னின்று வாழ்த்தினார். "கடவுள் இல்லாமல் உலகம்இயங்காது" என்று சொன்ன
தீவிர சைவ சித்தாந்த ஆத்திகர், தனது மனைவி மீனா இறந்தபோது, மேஜை மீது
இருந்த கடவுள் படங்களைச் சிதறடித்து, "கடவுளே இல்லை" என்று கோபம்
காட்டியவர்.
இப்படித் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு
பக்கத்தையும் முரண்கள், சர்ச்சைகள், அதிரடிகளால் நிரப்பிய பால் தாக்கரே,
கடந்த 17-ம் தேதி தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டதை நம்ப முடியாமல்
தவிக்கிறார்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்கள்!
போக்குவரத்து
வசதிகள் நிரம்பியிராத அந்தக் காலகட்டத்தில் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரைக்
கோடிப் பேர் திரண்டது கின்னஸ் ரெக்கார்டு. ஆனால், எந்த ஆட்சிப்
பொறுப்பிலும் நேரடியாக உட்காராத தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த 20 லட்சம்
பேர் கூடியதும் ஒரு ரெக்கார்டுதான்.
�மண்ணின் மைந்தன்� முழக்கத்தை
முன்னி றுத்தி பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் செய்த அதிரடிகளால்
மகாராஷ்டிரத்தில் வசித்த வேற்று மாநிலத்தவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்.
ஆனால், 80-களுக்குப் பிறகு
தமிழகத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிறுவனர் தாணுலிங்க நாடார் உள்ளிட்ட
தமிழ்ப் பிரமுகர் களுடன் தாக்கரேவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. இதற்கு
இடையே தாக்கரேவின் கல்லூரி நண்பரான இலங்கையைச் சேர்ந்த சிவஞான சுந்தரம்,
சச்சிதானந்தம் ஆகியோர் இலங்கையில் தமிழர்களுக்கு நிகழும் கொடுமை களை
தாக்கரேவிடம் விவரித்தனர்.
அதன் பிறகுதான் - 1985-க்குப் பிறகு -
தமிழர்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் தாக்கரே. அதற்கு முன்பெல்லாம்
ஆண்டுக்கு ஆறேழு முறையேனும் பம்பாயின் தாராவி, மாதுங்கா உள்ளிட்ட தமிழர்
வாழ் பகுதிகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள், அதன் பிறகு மடமட வெனக்
குறைந்து ஒருகட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. இதனால் மும்பையின் பெரும்
பான்மைத் தமிழர்கள் சிவசேனா தொண்டர்கள் ஆகினர்.
இந்தியா அமைதிப்
படையை இலங்கைக்கு அனுப்புகையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர், ஒருமுறை
அத்வானி துணை பிரதமராக இருந்தபோது, 'காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க
விடுதலைப் புலிகளை அழைத்து வர வேண்டும்� என்றார்.
தாக்கரேவுக்கு
மகாராஷ்டிர அரசு சார்பாகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டா லும், இறுதிவரை அவரது
நிழல் போலவே இருந்த ஆறு மெய்க்காப்பாளர்களும் ஈழத் தமிழர்கள்.
மராட்டிய இந்துக்களைத் தாண்டியும் தாக்க ரேவை ரசித்தவர்கள் ஏராளம். ஆனால்,
அவரோ தன்னை அந்தச் சின்ன வட்டத்துக்குள் குறுக்கிக் கொண்டதுதான் துயரம்.
தென்னிந்தியர்கள் மீதான வெறுப்பில் தொடங்கி இப்போதைய வட இந்தியர்கள் மீதான
வெறுப்பு வரையிலான இனவெறி விதைகளை மராட்டியர்களிடம் விதைத் ததில்
சிவசேனாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மும்பைக் கலவரமும்
முஸ்லிம்கள் மீதான சிவசேனாவின் தாக்குதல்களும் தாக்கரேவின் வரலாற்றில்
விழுந்த கரும்புள்ளிகள். ஆனால், எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள்
சூழ்ந்திருந்தாலும் பால் தாக்கரேவின் மறைவைத் தாங்க மாட்டாமல் கதறி
அழுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள்!
-(நன்றி விகடன்)-

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தூக்கிலிடப்பட்ட கசாப் இறுதி சடங்கிற்கு செலவு ரூ. 9,500- சிறையில் இருந்த போது ரூ. 28 கோடி: ஆர்.டி.ஐ.தகவல்
» ஆனந்த விகடன் ஜுனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழுமத்தின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானார்..........
» ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த வெள்ளைக்காரப் பெண்.
» பங்கு மார்கெட் சரிவது போல் சரிகிறது தமிழர்கள் கலாச்சாரம் பண்பாடுகள்.
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரச அனுமதியோடு சென்னையில் ஒன்று கூடும் ஈழத் தமிழர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum