TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்!

Go down

கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்!  Empty கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்!

Post by மாலதி Fri Nov 23, 2012 12:37 pm

கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்!


மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் ரகசியம்
காக்கப்பட்டது எப்படி என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆர்தர்
ரோடு சிறை மற்றும் எரவாடா சிறையில் உள்ள அதிகாரிகள் மூலம் சேகரித்த
தகவல்கள் வருமாறு:



கசாப்
அனுப்பிய கருணை மனுவை கடந்த 5ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
நிராகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு பைலை அனுப்பினார். வெளிநாட்டு
பயணத்தை முடித்து திரும்பிய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, 8 ம்
தேதி காலை பைலை பார்த்து உடனே கையெழுத்திட்டு, மகாராஷ்டிர அரசுக்கு
அனுப்பினார். மகாராஷ்டிர அரசு ஆலோசித்து, நவ. 20, 21 தேதிகளில்
சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நாள் தூக்கு நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தது.

ஆர்தர் ரோடு சிறையில் கடந்த திங்கள் கிழமை காலை முதலே பரபரப்பு
அதிகரித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவிர யாருக்கும் விவரம்
தெரியவில்லை. அன்று இரவு 9 மணிக்கு கசாப் தூக்கு நடவடிக்கைக்கு ஆபரேஷன்
எக்ஸ் என பெயரிடப்பட்டது. யார் யார் கசாப்பை அழைத்து செல்லும் பயணத்தில்
பங்கேற்பது என்பதை மும்பை போலீஸ் கமிஷனர் முடிவு செய்தார். அதன்படி, ஆறு
வாகனங்களில் அதிரடிப்படையினர் உட்பட 17 அதிகாரிகள் கசாப்பை பாதுகாப்பாக
அழைத்துச்செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

நள்ளிரவில்
நிசப்தத்தை கிழிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஒன்றன்
பின் ஒன்றாக 6 போலீஸ் வாகனங்கள் சீறிக் கிளம்பின. ஏதோ அவசர பார்சல் தான்
செல்கிறது என்று அங்குள்ள போலீசார் நினைத்தனர். வழக்கமாக அந்த நேரத்தில்
செல்லும் என்பதால் யாருக்கும் வித்தியாசமாக தோன்றவில்லை. 20 ம் தேதி
அதிகாலை 2 மணியளவில் புனே எரவாடா சிறை வளாகத்துக்குள் ஆறு வாகனங்களும்
நுழைகின்றன. 3 மணி வரை நடைமுறைகள் முடிந்து, கசாப், தனிமை சிறையில்
அடைக்கப்பட்டான்.

அன்று காலை 10 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுவது
குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பபட்டது.
அவர்களும் அதை பெற்றதாக பதில் தகவல் அனுப்பினர். செவ்வாய் கிழமை முழுக்க
கசாப் பெரிதாக பதற்றம் காட்டவில்லை. வழக்கமாக முணுமுணுக்கும் இந்தி சினிமா
பாடல்களை பாடிக்கொண்டிருந்தான். வெளியில் இருந்து சாப்பாடு வேண்டுமா?
பிரியாணி வேண்டுமா என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். ஆனால், சிறை சாப்பாடு
போதும் என்று கூறிவிட்டான்.

மறுநாள் புதன் அதிகாலை பான்சி யார்டு
சிறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தான் தூக்கு மேடை உள்ளது.
மேடை அருகே உள்ள இருட்டறையில் அவன் தங்க வைக்கப்பட்டான். காலை 5.20க்கு
உயர் அதிகாரிகள் வந்தனர். தாசில்தார் ஷிர்கேயும் வந்தார். கசாப் அறைக்கு
சில உயர் அதிகாரிகள் மட்டும் சென்றனர். ஆறு மணி அளவில் அவனுக்கு டாக்டர்கள்
பரிசோதனை செய்தனர். 52 கிலோ எடை உள்ளதாக மருத்துவ அறிக்கையில்
குறிப்பிடப்பட்டது.

சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அதிகாரிகள்
கேட்டனர். மசாலா டீ வேண்டும் என்றான். இரண்டு டம்ளர் டீயை வாங்கி
குடித்தான். இதன் பின், தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்ல நான்கு போலீசார்
வந்தனர். கை, கால்கள் கட்டப்பட்டன. முகம் கறுப்பு துணியால் மூடப்பட்டது.
காலை 7.25 மணி வரை அறையிலேயே கசாப்பை காக்க வைத்தனர். அதற்குள் தடை ஆணை
வருகிறதா என்று பார்க்கத்தான். அதன்பின், அவனை நான்கு போலீசார் அழைத்துச்
சென்றனர்.

தூக்கு மேடைக்கு போக சில படிகள் சாய்வாக ஏற வேண்டும்.
அதில் ஏறுவதற்கு போலீசார் கையை தூக்கி உதவினர்.அப்போது மட்டும், என்
தாய்க்கு சொல்லி விட்டீர்களா என்று கேட்டான். ஆம் என்று அதிகாரிகள்
தலையசைத்தனர். அவன் இருந்த அறையிலும், தூக்கு மேடை முன்பு அவன் வந்த
பின்னும் மரண தண்டனை வாரன்ட் படிக்கப்பட்டது. பின், அதில் தாசில்தாரிடம்
கையெழுத்து வாங்கப்பட்டது. அவர்தான் இதற்கு சாட்சி.

சரியாக
7.30க்கு தூக்கு மேடை கீழே பலகை நகர்த்தப்பட்டு, கசாப் உடல் கயிற்றில்
தொங்கியது. 7.45 மணி வரை கயிற்றில் தொங்கியது அவன் உடல். பின், டாக்டர்கள்
பரிசோதித்து விட்டு, இறந்து விட்டதாக உறுதி செய்தனர். அதன் பின் அவன் உடல்
கீழே இறக்கி வைக்கப்பட்டது. அவன் உடலை புதைக்க, அருகேயே ஆறு குழிகள்
வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு குழியில் 9 மணிக்கு அவன் உடல்
இறக்கப்பட்டது.

உள்ளூரில் இருந்து மவுல்வி ஒருவர் அழைக்கப்பட்டு,
மத முறைப்படி அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தூக்கு முடிந்தபின் தான்,
முதல் நாள் ஷிப்டுக்கு வந்த சிறை போலீசார் அத்தனை பேரும் வெளியேற
அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது
என்று உத்தரவு போய்விட்டது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டோ சங்கரின் கடைசி நிமிடங்கள்...
» சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: விக்கிலீக்ஸ் அம்பலம்!
» அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி : உச்ச நீதிமன்றம்
» மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பின் தூக்கை நிறைவேற்ற அதற்குரிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
» ப்ரம்ம(பரம) இரகசியம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum