Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாசாவின் 10 மிக முக்கிய சாதனைகள்!!!...
Page 1 of 1
நாசாவின் 10 மிக முக்கிய சாதனைகள்!!!...
நாசாவின் 10 மிக முக்கிய சாதனைகள்!!!...
[You must be registered and logged in to see this image.]
1957 ஆம் ஆண்டு முதலாவது செய்மதி (Satellite) ரஷ்யாவால் ஏவப்பட்ட
ஸ்புட்னிக் (Sputnik) ஆகும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவுக்கிடையே குளிர் யுத்தம் (Cold War) எனும் அரசியல் சதுரங்கமும்
மறைவில் விண்வெளிப் போட்டியும் நடைபெற்றது.அதாவது விண்வெளி ஆராய்ச்சியில்
சாதனைகளின் பட்டியலில் ரஷ்யா ஆரம்பத்தில் அமெரிக்காவை விட முன்னிலையில்
இருந்தது என்று தான் சொல்ல வ
ேண்டும். இவை
சாதனைகளின் முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப் படுத்தினால், சிறிது
அதிர்ச்சி ஏற்படும் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நம்பர் 1 என்று
சொல்லத்தக்க பல முக்கிய சாதனைகள் ரஷ்யாவினுடையதே. அவையாவன,
1.முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (1957)
2.முதல் விண்வெளி செய்மதி (ஸ்புட்னிக் - 1)
3.விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் லைகா எனும் நாய் (ஸ்புட்னிக் -2)
4,பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் மனிதன் (வொஸ்டொக் 1 எனும் விண்கலத்தில் சென்ற யூரி ககாரின்)
5.பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் பெண் (வொஸ்டொக் 6 இல் சென்ற வலென்டினா டெரெஸ்கோவா)
6.விண்வெளியில் நடந்த முதல் மனிதர் ( வொஸ்கொட் 2 இல் சென்ற அலெக்ஸெய் லெயோனோவ்)
7. சந்திரனில் மோதிய முதல் விண்ணுபகரணம் (லூனா 2)
8.சந்திரனில் இருந்து பெறப்பட்ட முதலாவது படம் (லூனா 3)
9.சந்திரனில் இறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் (லூனா 9)
10.முதல் விண் வண்டி
11.முதல் விண்வெளி ஆய்வகம்
12. கிரகங்களுக்கு செல்லத்தக்க முதல் விண்கலம்
இனி நாசாவின் சாதனைகளையும் அவை குறித்த சிறு குறிப்புக்களையும் பார்ப்போம் - (10 ஆவது இடத்திலிருந்து 1 ஆவது வரை)
10.எக்ஸ்புளோரர் 1 (Explorer 1) - அமெரிக்காவின் முதலாவது செய்மதி (1958)
ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்மதியின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் JPL
ஆய்வு கூடம் உடனடியாக வடிவமைத்த செய்மதி. இது பூமியின் வளிமண்டலத்துக்குள்
புகும் காஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) குறித்து ஆய்வு நடத்தியது. சுமார்
56 000 தடவை பூமியைச் சுற்றி வலம் வந்த இச் செய்மதி 1970 இல் பூமியின் வளி
மண்டலத்துக்குள் புகுந்து எரிந்து சாம்பலானது.
9.ஹபிள் விண் தொலைக்காட்டி - (Hubble Space Telescope 1990)
பூமியில் இருந்து விண்ணை அவதானிக்கும் போது முகில் கூட்டங்கள் மற்றும்
வளிமண்டலம் என்பன பிரபஞ்சத்தின் தோற்றத்தை தெளிவாக அவதானிக்க இடைஞ்சல்
செய்து வந்தன. இதற்குத் தீர்வாக விண்ணில் ஒரு தொலைக்காட்டியை பூமியின்
சுற்றுவட்டப்பாதையில் நிறுவி விண்ணை அவதானித்தால் என்ன எனும் கேள்வியில்
எழுந்த முயற்சியின் பலனாக ஒரு ஏவுகணை மூலம் 1990 ஆ ஆண்டில் விண்ணில்
நிறுவப்பட்ட தொலைக் காட்டியே 'ஹபிள்'
8.சந்திரா எக்ஸ்-ரே தொலைக்காட்டி (Chandra X-ray Observatory 1999)
1999 ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரா தொலைக்காட்டி எக்ஸ்-ரே
கதிர்களைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தைத் துல்லியமாகப் படம் பிடிக்க வல்லது.
இதன் மூலம் கருந்துளை (Black Hole) ஒன்றில் விண்பொருட்கள் ஒரு
செக்கனுக்குள் மறைவதைக் கூடப் படம் பிடிக்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது. இத் தொலைக் காட்டி பிரபஞ்ச வெளியில் அதிகபட்சமாக 10
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைக் கூட பதிவு செய்துள்ளது
இதன் திறமைக்கு சான்றாகும்.
7.வியாழனுக்கு அனுப்பப்பட்ட பயனீயர் 10 செய்மதி - (Pioneer 10 - 1972 - 1997)
சென்றடைவதற்கு மிகக் கடினம் என்று கருதப்பட்ட விண்கற்களின் பட்டை
(Asteroid Belt) ஐயும் தாண்டி வியாழனுக்கு அருகே சென்று அதைப் படம் பிடித்த
பயனீயர் 10 என்ற இச் செய்மதிக்கு 2 சிறப்புக்கள் உள்ளன.
1,இச்செய்மதி ஏவப்பட்ட 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமியிலிருந்து வேற்றுக்
கிரகங்களுக்குப் பயணிக்கக் கூடிய எந்த ஒரு செய்மதியும் தயாரிக்கப்
படவில்லை.
2.மனிதனால் ஏவப்பட்ட செய்மதிகளில் சூரிய
குடும்பத்தையும் தாண்டி மிக அதிக தூரம் பயணித்து இன்னமும் பயணித்துக்
கொண்டிருக்கும் ஒரே செய்மதி இதுதான். வியாழனைத் தாண்டிச் சென்ற இச்செய்மதி
2003 ஆம் ஆண்டு தனது இறுதி சிக்னலை அனுப்பிய போது பூமியிலிருந்து 12.2
பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் சென்று கொண்டிருந்தது.
6.அப்போலோ 13 - (Apollo 13 - 1970) - தப்பிப் பிழைத்த சந்திர விண்கலம்
நாசாவால் சந்திரனுக்கு 1970 ஏப்ரல் 11 ஆம் திகதி செலுத்தப் பட்ட
இவ்விண்கலம் 55 நிமிடங்கள் கழித்து அதன் எஞ்சின்கள் பழுதடைந்து வெடித்துச்
சிதறிய பின்னரும் மிகவும் ஆச்சரியத்தக்க விதத்தில் இது பசுபிக் கடலில்
இறங்கி அதில் பயணித்த விஞ்ஞானிகள் உயிர் தப்பினர். இவர்களை காப்பாற்ற நாசா
எடுத்துக் கொண்ட சிரத்தை ஒரு சாதனை எனக் கருதப்படுகின்றது.
5.மறுபடி பாவிக்கக் கூடிய விண்கப்பல் (The Space Shuttle - 1972)
அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனால் 1972 இல் அறிவிக்கப் பட்ட இச்செயற்திட்டம் 9
வருட கடின உழைப்புக்குப் பிறகு 1981 இல் கை கூடியது. மறுபடி பாவிக்கக்
கூடிய முதலாவது விண்கப்பலாக கொலம்பியா விண்ணில் ஏவப்பட்டு சாதனை
நிகழ்த்தப்பட்டது. இவ் விண்கப்பல் நாசாவின் செயற்திட்டங்களுக்கான செலவைக்
குறைத்ததுடன் புதிய தொழிநுட்பமாகவும் எடுத்து நோக்கப் பட்டது.
4.சர்வதேச விண்வெளி நிலையம் - (ISS- International Space Station - 1998)
விண்வெளியில் தங்கி வானிலை ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாகக் கட்டம் கட்டமாக
விண்ணில் நிறுவப் பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணி
1998 இல் ஆரம்பித்து 2010 இல் நிறைவுற்றது
3.செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்வண்டி பாத்ஃபைன்டர் - (Pathfinder 1996-1997)
வேற்றுக் கிரகம் ஒன்றில் மோதாமல் பாதுகாப்பாகத் தரையிறங்கி ஆய்வு செய்து
படங்கள் அனுப்பிய முதலாவது விண் உபகரணம் (விண்வண்டி) பாத்ஃபைன்டர் ஆகும்.
1996 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு 309 மில்லியன் மைல்கல் பயணித்து
1997 இல் இது செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடைந்தது. இவ் விண்வண்டியின்
ஆராய்ச்சியின் பயனாக வானியலாளர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குள்
செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
2.ஃப்ரீடம் 7 விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கர் - (Freedom 7 - The First American in Space 1961)
விண்ணில் பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் அலன் செபர்ட் ஆவார். மே 5
1961 இல் நாசாவால் விண்ணுக்கு செலுத்தப் பட்ட விண்கலமான ஃப்ரீடம் 7 இல்
இவர் பயணித்தார். இவரது பயணம் மிகக் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது. மிகச்
சிறிய காரணங்களுக்காக சுமார் 24 மணித்தியாலம் தாமதித்தே இவ் விண்கலம்
விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1.அப்போலோ 11 நிலவில் கால் தடம் பதித்த நாசா - (Apollo 11 - 1969)
இன்று மனித இனம் சாதித்த அறிவியல் முன்னேற்றங்களில் மிக முக்கியமான ஒன்று
நிலவில் மனிதன் கால் தடம் பதித்த இந்நிகழ்வு. விண்வெளியில் முதல்
அமெரிக்கராக அலன் செபர்ட் பயணம் செய்து 20 நாட்கள் கழித்து இத்திட்டம்
பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க மக்களுக்கு
அறிவித்தார். 8 வருடங்கள் கழித்து 1969 இல் இச்சாதனையை நிகழ்த்திக்
காட்டினார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.
இதற்கு முன் 1967 இல்
திட்டமிடப்பட்டிருந்த அப்போலோ 1 விண்கலம் விபத்துக்கு உள்ளாகி அதில்
பயணித்த 3 வீர்ர்களும் பலியாகியிருந்தனர். எனினும் இரு வருடங்கள் கழித்து
அப்போலோ 11 திட்டமிட்ட படி நிலவில் இறங்கி அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ரோங்
நிலவில் கால் தடம் பதித்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார். இன்றைய
அறிவியல் யுகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நாசாவின் ஸ்காலர்ஷிப்பை வென்ற இந்திய பெண்!
» நாசாவின் தலையில் கொட்டிய அமேசன் நிறுவனம்.-காணொளி-
» இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!
» செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரியை கண்டுபிடித்தது நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம்
» ஒரே போட்டி... பல சாதனைகள்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum