TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு

2 posters

Go down

தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு  Empty தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு

Post by sakthy Tue Oct 30, 2012 2:57 am

தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு ...02.11.2007
தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு  53875719

இந்தச் செய்தியை விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் 02.11.2007 ல் வெளியிடுகிறது.

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.......................................

நாடுகள் வேறுபாடு இன்றி, உலகத் தமிழர்களின் அனைவரின் கண்களிலும் கண்ணீர். அந்த ஒப்பற்ற வீரனின் தியாகம் மட்டுமல்ல, முகத்தில் எந்த நேரமும் ஒளியாய் ஒலிக்கும் அந்த சிரிப்பு மாறாத,மறக்க முடியாத,அந்த சிரிப்பின் கவர்ச்சி பகைவரையும் கட்டிப் போடும் சக்தி பெற்றிருந்தும் கூட, சிங்களக் கொலைகாரர்களை கட்டிப் போடவில்லை.அவரின் வீர விடுதலை வரலாற்றை, நடந்து வந்த பாதையை விடுதலைப் புலிகள் வெளியிடுகின்றனர். அந்த வீரனின் சரித்திரம் இதோ..................

1984 ஆம் ஆண்டு முதல்...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். 1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்,காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.

"ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
…........................................
உண்மையின் அழகும் அழகின் உண்மையும் இரண்டறக்கலக்கும் இடத்தில் உன்னதத்தை தரிசிக்க முடியும் என்பர். தமிழ்ச்செல்வனைக் கண்டோர் உள்ளங்களில் ததும்பி வழியும் உணர்வு இதுவாகத்தான் இருக்க முடியும்.
வீரம் செறிந்த, தியாகம் நிறைந்த, தமிழீழப் போராட்ட வரலாற்றில் , அந்தப்போராட்டத்தின் அரசியல், சமுக, பண்பாட்டுக் கோலங்களின் திரட்சியாகவும் தமிழீழ மக்களின் அன்பின் உருவமாகவும், இவை யாவற்றையும் தன்னுள்ளே வரித்துக்கொண்ட நவீன தமிழ் இராசதந்திரியாகவும் வலம் வந்த ஒரு உன்னதமான மனிதனை இழந்து தவித்தது தமிழ் இனம். இந்த ஒளி விளக்கை சமாதானத்தின் மேசையில் சந்தித்து அணைத்துவிட முடியாதநிலையில் சிங்களத்தின் வக்கிரம் அந்த வீரன் மேல் தன் குருரத்தை அன்று காட்டியது.

தமிழச்செல்வன் எடுத்த அவதாரங்களில் அவனது இராசதந்திர அவதாரம் கிருஸ்ணபகவானுக்கே சவால்விடுவதாக இருந்ததாக அன்று கூறினார்கள்.

சொல்லின் செல்வனான இந்த மனிதன், இராசதந்திரமான கேள்விகளுகளுக்கு பதில் அளிக்கும் போது கையாண்ட சொல்சிக்கனம், சொல்லால் சொல்ல விரும்பாதவற்றை தன் உடம்பின் லாவண்ணியத்தால் காட்டிநின்ற பாவனைகள், கண்கள் செய்த மாயங்கள், நேர்கொண்ட பார்வை, சிரிப்பது கண்களா அல்லது அடுக்கிய பற்களா எனக் கூறமுடியாத நிலை. யாவற்றிற்கும் மேலாக இவன் தாங்கி நின்ற அந்தக் கைத்தடி இருக்கிறதே, அது தடியா அல்லது வென்று பகை கெடுக்க அவன் கையில் வேலா, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அந்த மேசையின் எதிரிலும் நடுவிலும் இருந்தோர் தமிழ்ச்செல்வன் என்னும் பெயரை சொல்லியபோதே அந்தப் பெயரின் சக்தி தமிழர்தரப்பில் எத்துணை மின்அலைகளைப் பாய்ச்சி வலுவூட்டியிருக்கும் என இப்போது எண்ணமுடிகிறது.

அந்த உன்னதமான தமிழ்ச்செல்வன் என்ற வீரத் தமிழ் மறவனுக்கு வீர வணக்கத்தை மரியாதையுடன் செலுத்துவோம்.

Dr John Whitehall is a pediatrician, who works as the Director of Townsville Hospital's Neonatal Unit. John has also saved the lives of children all around the world, doing humanitarian work in often violent and dangerous places. He has worked in the Tamil Homeland in the island of Sri Lanka and pays his tribute to S. P. Thamilchelvan, the political head of the Tamil people.

இது அன்று தேசியத் தலைவர் சொன்னது...........................

"தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது... நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான்."

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? - மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்...
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு  Empty Re: தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலரப்போகும் தமிழீழத்தின் சிரிப்பு

Post by மாலதி Tue Oct 30, 2012 7:22 am

வீரவணக்கம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum