Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்"
Page 1 of 1

யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த
மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத
கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை
அதிர்ச்சியளிக்கின்றது.
யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின்
மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின்
கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும்
நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன.
வடக்கில் உள்ள முன்னாள்
போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த
முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் படையினரால் மேலும் மேலும்
தங்களுக்குள்ளே ஒரு உளவியல் போராட்டத்தினையே நடாத்திக் கொண்டு வருகின்றனர்.
நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கம் பெண்களிற்கு மட்டுமல்ல.
தற்போது ஆண்கள் பலரிடமும் கேள்விகளாக தொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம், தமிழ்ப் பெண்களை தற்போது குறிவைத்துள்ள
இராணுவத்தினரைப் பற்றிய சிந்தனைகள் தான். வெளியில் சொல்ல முடியாமலும்,
சொல்வதானால் பழிக்கு ஆளாக வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பல பெண்கள் பல
பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்து
வருகின்றமையை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது திட்டமிட்டு
சிதைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த
காலங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் மீறமுடியாதவைகளாக இருந்தன. மீறினால்
நேரடியாகவே மறைமுகமாகவே தண்டனைகள் வலுவாக இருந்தன. ஆனால் இன்று ஆறாத
ரணங்களோடு வாழ்க்கையினைக் கொண்டு நடத்தும் தமிழ்ச் சமூகத்தை சிங்கள
மேலாதிக்க அரசாங்கம் எவ்விதத்திலெல்லாம் அடிமைப்படுத்த முடியுமோ
அதையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்கிறது.
தமிழர்களின் தாயகப்
பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த சாதாரண
மக்கள், அரசியல் ரீதியாக வழி நடத்திய தமிழ்த் தலைவர்களின் காலத்திலும்,
தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் காலத்திலும்,
தங்களுடைய கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், மரபுகள் வழக்காறுகள் ஆகியவற்றை
மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி இராணுவக்
கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே வாழ்ந்தனர். ஆனால்
ஆயுத ரீதியாக எப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ, அன்றிலிருந்து
தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை
விரட்டியடிக்க சமூக சீரழிவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வன்புணர்வுக்குள்ளாக்கியும்,
பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டும் இராணுவத்தினர் தங்களது
இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பிணம் தின்னும் கழுகுகளைப் போலவே அவர்கள்
செயற்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இது முடிந்துவிட்ட பின், மீண்டும்
இளம் பெண்களை குறிவைத்திருப்பது வேதனைக்குரியது. ( இதற்கு சில பெண்கள்
உடன்படுகின்றமை அதைவிட வெட்கக்கேடு)
யாழ்ப்பாணத்தில் தற்போது
அதிகமான பாடசாலைச் சிறுமிகளை தங்களது வலையில் சிக்க வைக்கும் இராணுவத்தினர்
வயது வித்தியாசமின்றி திருமணம் செய்யவும் துடிக்கின்றனர். ஒரு புறம் காதல்
லீலைகள் நடந்தேற, மறுபுறம் திருமணம் முடிப்பதில் தீவிர முயற்சிகள்.
அவ்வாறு திருமணம் செய்வதற்காக பொய் சான்றிதழ்களை உருவாக்குவதில் தீவிரமாக
இறங்கியுள்ளனர்.
இரவு பகலாக நடமாடும் தமிழர்களின் பகுதிகளின்
நடமாடும் படையினர் அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பார்வை கழுகைவிட
மோசமானதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம், யாராலும்
தங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனைகள் மேலோங்கி இருப்பதுதான்.
அதாவது, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்துவிட்டு, வேறொரு சிங்களப்
பெண்ணை திருமணம் செய்யலாம். இல்லையேல் வேறு பெண்களை காதலிக்கலாம். (எத்தனை
பெண்களென்றாலும்) காரணம், திருமணம் முடித்தது தமிழ்ப் பெண்ணை. அவளாலோ
இல்லை, அவள் சார்பாகவோ யாரும் கேட்க முடியாது. கேட்கவும் வேறு நபர்கள்
முன்வர மாட்டார்கள். சிங்கள அரசின் பார்வையில் தமிழினம் ஒரு ஒடுக்கப்பட்ட
சிறுபான்மை இனம் என கருதப்படுவதனால்.
அது மட்டுமல்ல, யுத்தத்தில்
ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த சிங்கள அரசு, தமிழ்
இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறு சிங்கள இராணுவம் திட்டமிட்டு
தமிழ்ப் பெண்களை திருமணம் முடித்து, தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களப்
பரம்பலை உருவாக்கலாம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தங்களது
தொழில் நிமித்தம் யாழ். மாவட்டத்தில் ஏனைய படைகள் இருப்பதனால், அவ்
இராணுவத்தினர் நீண்ட காலங்களாக தம் குடும்பங்களைப் பிரிந்து தங்கி
வாழ்வதனால் அவர்களின் இச்சைக்காக தமிழ்ப் பெண்களை நாடுவதனால் திருமணம்
செய்யும் ஆசை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு, யாழில் கலாசார
சீரழிவுகளும் கூடவே இள வயது கர்ப்பங்களும் அதிகரிக்கின்றன.
இதனால் வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எந்த
நேரமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார
நிர்ப்பந்தம், இளவயதுக் கர்ப்பம் போன்ற சம்பவங்களால் பாதிப்புற்ற பெண்கள்,
நீதி கேட்கவோ, அல்லது சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை
பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு
தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றமையே உண்மை.
இவ்வருடம்
ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கும்
ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டமை யாவரும் அறிந்த
விடயமே. இதுவே யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது
திருமண ஆசைக்கான தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம்.
இவ்வாறு எமது
பண்பாட்டுக் கோலங்கள் சிதைக்கப்பட்டு, தாயகத்தின் மக்கள் தொகைச் சமநிலையை
மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல என்பதனை உறுதி
செய்துவிடும் என்பதே நிதர்சனம்.
புவிலக்ஸி —

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» எம் குல தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராம்க்கு மன்னிப்பு.
» "பேய் பிடித்ததாக கூறி தமிழ் பெண்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சிங்களப்படைகள்"
» தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
» இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum